என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராஜமெளலி"

    • பான் இந்தியா இயக்குநர் ராஜமௌலி, தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் 29வது படத்தை இயக்கி வருகிறார்.
    • இதில் நடிகை பிரியங்கா சோப்ராவும் நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    பான் இந்தியா இயக்குநர் ராஜமௌலி, தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் 29வது படத்தை இயக்கி வருகிறார்.

    இதில் நடிகை பிரியங்கா சோப்ராவும் நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இந்த படத்திற்காக ரூ.50 கோடி செலவில் பிரம்மாண்டமான காசி நகர செட் ஒன்றை ஐதராபாத்தில் உருவாக்கி படப்பிடிப்பை நடத்தி வருகின்றனர்.VFX மற்றும் CGI தொழில்நுட்பங்கள் முன்னேறி வரும் நிலையில், நம்பகத்தன்மைக்காகவும், படப்பிடிப்புக்காக அடிக்கடி பயணங்களைத் தவிர்க்கவும் ராஜமௌலி இந்த பழைய பாணி செட் அமைக்கும் முறைக்குத் திரும்பி உள்ளதாகக் கூறப்படுகிறது.

    இன்று மகேஷ் பாபு அவரது 50-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனால் படக்குழு ஒரு அப்டேட்டை கொடுத்துள்ளது. அதன்படி படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வரும் நவம்பர் மாதம் வெளியிடவுள்ளதாக அறிவித்துள்ளனர். இதனால் மகேஷ் பாபு ரசிகர்கள் மிகவும் உற்சாகத்தில் உள்ளனர்.

    • ராஜமௌலி இயக்கத்தில் வெளியான திரைப்படம் 'ஆர்ஆர்ஆர்'.
    • இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வசூலை குவித்தது.

    ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான படம் 'ஆர்ஆர்ஆர்'. இப்படம் உலகம் முழுவதும் கடந்த மார்ச் 25-ஆம் தேதி வெளியானது. தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் வெளியான இப்படம் நல்ல விமர்சனங்கள் பெற்றது.


    ஆர்.ஆர்.ஆர்.

    இப்படத்தில் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கான், ஆலியா பட், பிரகாஷ் ராஜ், சமுத்திரகனி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வசூலை குவித்தது. இதையடுத்து இப்படத்தில் இடம்பெற்றுள்ள 'நாட்டு நாட்டு' பாடல் கோல்டன் குளோப் விருதை வென்றுள்ளது. ஆர்.ஆர்.ஆர். படக்குழுவினருக்கு திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.


    ஆர்.ஆர்.ஆர்.

    இந்நிலையில், ஆர்.ஆர்.ஆர். படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்து நடிகர் ரஜினிகாந்த் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "எங்களை பெருமைப்படுத்தியதற்காகவும் இந்திய சினிமாவுக்கான கோல்டன் குளோப் விருதை வீட்டிற்கு கொண்டு வந்ததற்காகவும் கீரவாணி மற்றும் ராஜமௌலிக்கு நன்றி" என்று பதிவிட்டுள்ளார்.



    • இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் வெளியாகி வசூலை குவித்த திரைப்படம் ‘ஆர்.ஆர்.ஆர்’.
    • இப்படத்தின் 'நாட்டு நாட்டு' பாடல் கோல்டன் குளோப் விருதை வென்றது.

    ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான படம் 'ஆர்ஆர்ஆர்'. இப்படம் உலகம் முழுவதும் கடந்த மார்ச் 25-ஆம் தேதி வெளியானது. தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் வெளியான இப்படம் நல்ல விமர்சனங்கள் பெற்றது.


    ஆர்.ஆர்.ஆர்

    இப்படத்தில் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கான், ஆலியா பட், பிரகாஷ் ராஜ், சமுத்திரகனி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பீம் கதாபாத்திரத்தில் ஜூனியர் என்.டி.ஆரும் ராம ராஜு கதாபாத்திரத்தில் ராம் சரணும் நடித்திருந்தனர். இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வசூலை குவித்தது.


    ஆர்.ஆர்.ஆர்

    சமீபத்தில் ஒரிஜினல் பாடல் பிரிவில் இப்படத்தின் 'நாட்டு நாட்டு' பாடல் கோல்டன் குளோப் விருதை வென்றது. இந்நிலையில், அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்த 'கிரிட்டிக்ஸ் சாய்ஸ் அவார்டு' விழாவில் சிறந்த வெளிநாட்டு திரைப்படம், சிறந்த பாடல் ஆகிய பிரிவுகளில் 2 சர்வதேச விருதுகளை இப்படம் வென்றுள்ளது.


    ஆர்.ஆர்.ஆர்

    மேலும், 'ஆர்ஆர்ஆர்' திரைப்படம் தொடர்ந்து சர்வதேச விருதுகளை வென்று வரும் நிலையில் ஆஸ்கார் போட்டியில் வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

    • ஆர்.ஆர்.ஆர். திரைப்படத்திற்கு சமீபத்தில் கோல்டன் குளோப் விருது கிடைத்தது.
    • இந்த நிகழ்ச்சி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது.

    ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான படம் 'ஆர்ஆர்ஆர்'. இப்படம் உலகம் முழுவதும் கடந்த மார்ச் 25-ஆம் தேதி வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்றது. சமீபத்தில் ஒரிஜினல் பாடல் பிரிவில் இப்படத்தின் 'நாட்டு நாட்டு' பாடல் கோல்டன் குளோப் விருதை வென்றது.


    ராம்சரண்

    இந்த நிகழ்ச்சியானது அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்ட நட்சத்திரங்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு வழங்கப்பட்டது. இதில் நட்சத்திர நடிகர்களும் நடிகைகளும் கலைஞர்களும் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ஆடைகளுடன் கலந்து கொள்வார்கள்.


    ராம்சரண்

    இந்த விழாவில் கலந்து கொண்ட தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான ராம்சரண் சிறந்த ஆடை அணிந்து விழாக்களில் கலந்து கொள்ளும் நட்சத்திர நடிகர்களின் பட்டியலில் முதல் பத்து இடத்தில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். இத்தகைய பட்டியலில் இடம் பிடித்திருக்கும் முதல் இந்திய நடிகர் இவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.


    ராம்சரண்

    ராம் சரண் தன்னுடைய நடிப்பில் மட்டுமல்லாமல், கலந்து கொள்ளும் ஒவ்வொரு நிகழ்விலும் பிரத்யேகமான ஸ்டைலுடன் கூடிய ஆடையை அணிவதில் அலாதி விருப்பம் கொண்டவர். கோல்டன் குளோப் விருது வழங்கும் விழாவில் சிவப்பு கம்பள வரவேற்பில் கலந்து கொள்வதற்காக உலக அளவில் புகழ்பெற்ற ஆடை வடிவமைப்பாளரான தருண் தஹிலியானி மற்றும் அவரது குழுமத்தின் தயாரிப்பில் உருவான ரீகல் மினிமலிஸ்ட் ஃபேஷன் பாணியில் வடிவமைக்கப்பட்ட ஆடைகளை அணிந்திருந்தார். அத்துடன் பேஷன் ஆடைகளை அணிவதில் தனித்துவமான அடையாளமாகவும் இவர் திகழ்கிறார்.

    • 95-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
    • இதில், 'ஆர்.ஆர்.ஆர்' திரைப்படத்தின் 'நாட்டு நாட்டு' பாடல் ஆஸ்கர் விருதை வென்றுள்ளது.

    ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான படம் 'ஆர்ஆர்ஆர்'. இப்படம் உலகம் முழுவதும் கடந்த ஆண்டு மார்ச் 25-ஆம் தேதி வெளியானது. தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் வெளியான இப்படம் நல்ல விமர்சனங்கள் பெற்று வசூல் சாதனையும் நிகழ்த்தியது.


    ஆர்.ஆர்.ஆர்

    சமீபத்தில் சிறந்த பாடலுக்கான ஆஸ்கர் இறுதி பட்டியலில் 'ஆர்.ஆர்.ஆர்.' திரைப்படத்தின் 'நாட்டு நாட்டு' பாடல் பரிந்துரைக்கப்பட்டது. இந்நிலையில், இன்று 95-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், சிறந்த பாடல் பிரிவில் ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தின் 'நாட்டு நாட்டு' பாடலுக்கு ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது.

    இதைத்தொடர்ந்து படக்குழுவினருக்கு பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட பலர் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் 'ஆர்.ஆர்.ஆர்.' திரைப்படத்திற்கு வாழ்த்து தெரிவித்து பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.


    ஆர்.ஆர்.ஆர்

    அதில், " ஆஸ்கர் விருது வென்றமைக்கு  கீரவாணி,  ராஜமௌலி மற்றும் ரீ கார்திகி கொன்சால்ஸ் ஆகியோருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். பெருமை மிக்க இந்தியர்களுக்கு எனது வணக்கங்கள்" என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.


    • 95-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா இன்று அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்றது.
    • இதில் ஆர்.ஆர்.ஆர். திரைப்படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு விருது வழங்கப்பட்டது.

    ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான படம் 'ஆர்ஆர்ஆர்'. இப்படம் உலகம் முழுவதும் கடந்த ஆண்டு மார்ச் 25-ஆம் தேதி வெளியானது. தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் வெளியான இப்படம் நல்ல விமர்சனங்கள் பெற்று வசூல் சாதனையும் நிகழ்த்தியது.


    சமீபத்தில் சிறந்த பாடலுக்கான ஆஸ்கர் இறுதி பட்டியலில் 'ஆர்.ஆர்.ஆர்.' திரைப்படத்தின் 'நாட்டு நாட்டு' பாடல் பரிந்துரைக்கப்பட்டது. இதையடுத்து, இன்று 95-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்றது. இதில், சிறந்த பாடல் பிரிவில் ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தின் 'நாட்டு நாட்டு' பாடலுக்கு ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது.


    ஆஸ்கர் மேடையில் சந்திரபோஸ் -எம்.எம்.கீரவாணி

    இதைத்தொடர்ந்து இப்படத்திற்கு பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், நடிகை கீர்த்தி சுரேஷ், ராம் சரணுடன் 'நாட்டு நாட்டு' பாடலுக்கு நடனமாடும் வீடியோவை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்து 'ஆர்.ஆர்.ஆர்.' படக்குழுவிற்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


    • ராஜமௌலி இயக்கத்தில் வெளியான திரைப்படம் 'ஆர்.ஆர்.ஆர்'.
    • இப்படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு சமீபத்தில் ஆஸ்கர் விருது கிடைத்தது.

    ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான படம் 'ஆர்ஆர்ஆர்'. இப்படம் உலகம் முழுவதும் கடந்த ஆண்டு மார்ச் 25-ஆம் தேதி வெளியானது. தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் வெளியான இப்படம் நல்ல விமர்சனங்கள் பெற்று வசூல் சாதனையும் நிகழ்த்தியது.


    நாட்டு நாட்டு (ஆர்.ஆர்.ஆர்)

    இதைத்தொடர்ந்து சமீபத்தில் நடைபெற்ற 95-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் இந்த படத்தில் இடம்பெற்றுள்ள 'நாட்டு நாட்டு' படலுக்கு சிறந்த பாடலுக்கான ஆஸ்கர் விருது கிடைத்தது. இதையடுத்து படக்குழுவினருக்கு அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் என பலர் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.


    பிரபு தேவா பதிவு

    அதுமட்டுமல்லாமல், 'நாட்டு நாட்டு' பாடலுக்கு பிரபலங்கள் பலர் ரீல்ஸ் செய்து சமூக வலைதளத்தில் பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில், நடிகர் பிரபு தேவா நடன கலைஞர்களுடன் இணைந்து இந்த பாடலுக்கு நடனமாடியுள்ளார். இது தொடர்பான வீடியோவை அவர் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். இதற்கு ரசிகர்கள் பலர் லைக்குகளை குவித்து வருகின்றனர்.


    ×