என் மலர்

  நீங்கள் தேடியது "SS Rajamouli"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  `பேட்ட' படத்தை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் வேறொரு படத்தில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #Petta #Rajinikanth #KarthickSubbaraj
  கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் `பேட்ட' படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வருகிற 10-ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

  `பேட்ட' படத்தின் பாடல்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கும் நிலையில், சமீபத்தில் வெளியாகிய டிரைலர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. மேலும் ரஜினி ரசிகர்களுக்கு இந்த படம் விருந்தாக அமையும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.  `பேட்ட' படத்தை தொடர்ந்து, ரஜினிகாந்த் அடுத்ததாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். அந்த படம் அரசியல் படமாக இருக்காது என்றும், சூப்பர் ஸ்டார் படத்தில் இடம்பெறும் அம்சங்கள் அனைத்தும் இருக்கும் என்றும் முருகதாஸ் கூறியுள்ளார். ரஜினிகாந்த் தற்போது குடும்பத்துடன் அமெரிக்கா சென்றுள்ளார். ரஜினி சென்னை திரும்பியவுடன் ரஜினி, ஏ.ஆர்.முருகதாஸ் இணையும் படம் தொடங்கவிருக்கிறது.

  இந்த நிலையில், இந்த படத்தை முடித்த பிறகு ரஜினி மீண்டும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. கார்த்திக் சுப்புராஜ் கூறிய வேறொரு கதை ரஜினிக்கு பிடித்திருப்பதாகவும், முருகதாஸ் படத்தை முடித்த பிறகு இந்த கூட்டணி மீண்டும் இணைய திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.  மேலும் இந்த படத்தை முடித்த பிறகு ரஜினி, எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் நடிக்கவிருப்பதாகவும், அந்த படத்திற்கு பிறகு அவர் முழுநேர அரசியலில் கவனம் செலுத்தவிருப்பதாகவும் கூறப்படுகிறது. #Petta #Rajinikanth #KarthickSubbaraj #Rajinikanth167

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பிரபாஸ் நடிப்பில் வெளியான பாகுபலி படத்திற்கு பிலிம்பேர் தென் இந்திய விருதுகள் நிகழ்ச்சியில் ஒரு விருதுகள் கூட கிடைக்கவில்லை என்று பிரபாஸ் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வருத்தம் தெரிவித்து வருகின்றனர். #Prabhas
  பாகுபலி படத்துக்காக பிரபாசுக்கு ஒரு விருது கூட கிடைக்கவில்லையே என்று சமூக வலைதளங்களில் பிரபாஸ் ரசிகர்கள் வருத்தம் தெரிவித்து வருகிறார்கள்.

  பிரபாஸ் ரசிகர்களின் சமூக வலைதள பக்கங்களில் ‘இந்த படத்திற்காக தன்னுடைய திருமணத்தையே தள்ளி வைத்தார். 5 ஆண்டுகள் தன் உழைப்பையும் நேரத்தையும் கொடுத்தார். ஒரு நாளைக்கு 40 முட்டைகள் சாப்பிட்டார்.

  6000 திருமண கோரிக்கைகளை நிராகரித்தார். தோள்பட்டையில் பெரிய காயம் அடைந்தார். அவரது நடிப்பால் இந்த ஒட்டுமொத்த நாட்டுமக்களையே கண்ணீர் விடவைத்தார்.  ஆனால் அவரது நடிப்புக்கும், அர்ப்பணிப்புக்கும் ஒரு விருதுகூட இல்லையா? இங்கே விருதுகள் என்பது அங்கீகரிப்பு இல்லை’ என்று சோகத்துடன் பகிர்ந்து வருகிறார்கள்.

  சமீபத்தில் நடந்த பிலிம்பேர் தென் இந்திய விருதுகள் நிகழ்ச்சியில் பிரபாசுக்கு விருது வழங்கப்படாததே இதற்கு காரணம் என்கிறார்கள். #Prabhas #Baahubali
  ×