ராஜமௌலி இயக்கத்தில் டேவிட் வார்னர் - வைரலாகும் வீடியோ

ஆர் ஆர் ஆர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்ததாக அவரின் 29 ஆவது படத்தின் வேலைகளில் ஈடுப்பட்டு வருகிறார்.ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரரான டேவிட் வார்னருடன் விளம்பர படத்தில் இணைந்து நடித்துள்ளார்.
ராஜமௌலி இயக்கத்தில் டேவிட் வார்னர் - வைரலாகும் வீடியோ
Published on

பாகுபலி மற்றும் ஆர் ஆர் ஆர் போன்ற மிகப்பெரிய படங்களை இயக்கியவர் ராஜமௌலி. ஆர் ஆர் ஆர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்ததாக அவரின் 29 ஆவது படத்தின் வேலைகளில் ஈடுப்பட்டு வருகிறார்.

ராஜமௌலி  தற்பொழுது ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரரான டேவிட் வார்னருடன் விளம்பர படத்தில் இணைந்து நடித்துள்ளார்.

அதில் டேவிட் வார்னரிடம் அவர் விளையாடும் மேட்சைப் பார்க்க டிக்கெட் டிஸ்கவுண்ட் கேட்கிறார். அதற்கு அவர் கிரெட் ஆப் இருந்தால் கிடைக்கும் என கூறுகிறார். அதற்கு ராஜமௌலி  அது இல்லை என்றால் என்ன செய்வது என கேட்கிறார். அதற்கு டேவிட் வார்னர் அவருக்கு ஒரு உதவி செய்யுமாறு கேட்கிறார்.

அதற்கு பிறகுள்ள காட்சிகள் மிக நகைச்சுவையாக காட்சி படுத்தப்பட்டுள்ளது. டேவிட் வார்ன்ர் நம் இந்திய சினிமாவில் நடித்து இருந்தால் எப்படி இருக்கும் என காட்சி படுத்துயுள்ளனர். இந்த விளம்பர படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com