search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிரபாஸ்"

    • நடிகர் பிரபாஸ் தற்போது நடித்து வரும் திரைப்படம் 'புராஜெக்ட் கே' (Project K).
    • இந்த படத்தில் முக்கிய பிரபலங்கள் பலர் நடிக்கின்றனர்.

    இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் 'புராஜெக்ட் கே' (Project K). இந்த படத்தில் பிரபாஸ்,  தீபிகா படுகோனே, அமிதாப் பச்சன், கமல், திஷா பதானி, உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். சயின்ஸ் ஃபிக்சன் படமாக உருவாகும் இப்படத்தை வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது.




    'புராஜெக்ட் கே' படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ இன்று காலை 1.30 மணிக்கு வெளியானது. அதன்படி, இப்படத்திற்கு 'கல்கி 2898- ஏடி' (KALKI 2898-AD) என படக்குழு தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து கிளிம்ப்ஸ் வீடியோவை வெளியிட்டுள்ளது. மேலும்  இதில் நடிகர் பசுபதி முக்கிய கதாபாத்திரத்தில் இடம்பெற்றுள்ளார்.




    இந்நிலையில் இப்படத்தில் கமலின் கதாப்பாத்திரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தில் கமல் வில்லனாக நடிப்பதாக கூறப்படுகிறது. மேலும் நெகடிவ் ரோல் இல்லாமல் பாசிட்டிவ் ரோல் கிடையாது. ஒரு படத்திற்கு நெகடிவ் ரோல் முக்கியமானது என்று கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • நடிகர் பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'புராஜெக்ட் கே'.
    • இப்படத்தில் அமிதாப் பச்சன், கமல், திஷா பதானி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

    இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் 'புராஜெக்ட் கே' (Project K). இந்த படத்தில் நடிகர் பிரபாஸ் கதாநாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக தீபிகா படுகோனே நடிக்கிறார். 





    மேலும், இதில் அமிதாப் பச்சன், கமல், திஷா பதானி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். சயின்ஸ் ஃபிக்சன் படமாக உருவாகும் இப்படத்தை வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது.




    'புராஜெக்ட் கே' படத்தின் தீபிகா படுகோனேவின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டிருந்தது. இந்நிலையில் இப்படத்தின் கதாநாயகனான பிரபாஸின் போஸ்டரை படக்குழு வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளது. இந்த போஸ்டர் லைக்குகளை குவித்து வைரலாகி வருகிறது.


    இப்படத்தின் முதல் கிளிம்ப்ஸ் வீடியோ ஜூலை 21ம் தேதி இந்தியாவில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

     


    தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான லோகேஷ் கனகராஜ் கதையை பிரபல நடிகர் நிராகரித்ததாக கூறப்படுகிறது.
    மாநகரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். அதன்பின் கைதி, மாஸ்டர் படங்களை இயக்கி தனக்கான இடத்தை பிடித்தார். தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குனராக வலம் வரும் லோகேஷ் கனகராஜ் தற்போது கமல், விஜய் சேதுபதி, பகத் பாசில், சூர்யா, நரேன், அர்ஜுன் தாஸ், காளிதாஸ் ஜெயராம், நடிப்பில் இன்று வெளியாகியுள்ள விக்ரம் திரைப்ப்டத்தை இயக்கி அனைவரின் பாராட்டுக்களையும் பெற்று வருகிறார்.

    லோகேஷ் கனகராஜ் - பிரபாஸ்
    லோகேஷ் கனகராஜ் - பிரபாஸ் 


    இந்நிலையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ், தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான பிரபாஸிடம் கதை கூறியதாகவும் இதனை அவர் நிராகரித்ததாகவும் கூறப்படுகிறது. இப்படத்தின் கதை சாதரணமாக இருப்பதாக கூறி இதனை நிராகரித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
    ×