என் மலர்

  நீங்கள் தேடியது "Amy Jackson"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சுஜித் இயக்கத்தில் பிரபாஸ் - ஷ்ரத்தா கபூர் நடிப்பில் உருவாகி வரும் ‘சாஹோ’ படத்தில் இசையமைக்கவிருந்த சங்கர்-எஹ்ஸான்-லாய் படத்தில் இருந்து விலகிய நிலையில், ஜிப்ரான் ஒப்பந்தமாகி இருப்பதாக கூறப்படுகிறது.
  பாகுபலி வெற்றியை தொடர்ந்து பிரபாஸ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் ‘சாஹோ’. இந்த படத்திற்கு இசையமைப்பாளர்களாக ஒப்பந்தமாகி இருந்த சங்கர்-எஹ்ஸான்-லாய் படத்தில் இருந்து சமீபத்தில் விலகினர். இதையடுத்து இந்த படத்திற்கு இசையமைக்க வேறு இசையமைப்பாளர்களை படக்குழு தேடி வந்தது.

  இந்த நிலையில், படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஜிப்ரான் பின்னணி இசையை மட்டும் கவனிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. பாடல்களுக்கு வேறு சில இசையமைப்பாளர்களுடன் பேச்சுவார்த்தை நடக்கிறது.  சுஜீத் இயக்கும் இந்த படத்தில் பிரபாஸ் ஜோடியாக ‌ஷ்ரத்தா கபூர் நடிக்கிறார். நீல் நிதின் முகேஷ், அருண் விஜய், ஏமி ஜாக்சன், மந்த்ரா பேடி, ஜாக்கி ஷெராப், லால், மகேஷ் மஞ்ரேக்கர், சங்கி பாண்டே உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

  படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படம் குடியரசு தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 15-ந் தேதி ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

  யுவி கிரியே‌ஷன்ஸ் சார்பில் வம்சி, பிரமோத் இணைந்து தயாரிக்கும் இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகிறது. மதி ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு துபாயில் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஐ, 2.0 படங்களில் நடித்து மிகவும் பிரபலமான எமி ஜாக்சன், கர்ப்ப காலத்திலும் அடிக்கடி போட்டோ, வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
  தமிழில் மதராசப்பட்டினம் படம் மூலம் அறிமுகமானவர் எமி ஜாக்சன். அதனை தொடர்ந்து ஐ, 2.0 என சில படங்களே நடித்த போதும், தமிழின் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்ததால், தமிழில் வேகமாக முன்னேறினார். லண்டனைச் சேர்ந்த எமி 2.0 படத்திற்கு பின் தமிழில் எந்த படமும் ஒப்பந்தமாகவில்லை. 

  மீண்டும் லண்டன் பறந்த அவர் அங்கு ஜார்ஜ் பெனாய்டோ என்ற தொழிலதிபரை காதலிப்பதாக அறிவித்தார். திருமணத்திற்கு முன்பே கர்ப்பமானதாக கடந்த மார்ச் மாதம் எமி அறிவித்தார். இது தமிழ் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து கர்ப்பிணியான எமிக்கும், அவரது காதலருக்கும் சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.   குழந்தை பிறந்த பின்னர் அவர்களது திருமணம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது 22 வார கர்ப்பிணியாக இருக்கிறார் எமி. வரும் செப்டம்பரில் அவருக்கு குழந்தை பிறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமூகவலைதளங்களில் எப்போதும் கவர்ச்சியான புகைப்படங்களை, வீடியோக்களை பதிவேற்றுவதை வழக்கமாகக் கொண்டவர் எமி. தற்போது கர்ப்பமாக இருக்கும் சூழலிலும் அதே போன்ற புகைப்படங்களை அவர் தொடர்ந்து பதிவு செய்து வருகிறார். 

  இந்நிலையில் முதன்முறையாக தனது கர்ப்பம் பற்றி வெளிப்படையாகப் பேசி வீடியோ ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். அதில் அவர், ’நான் கருத்தரித்து 22 வாரங்கள் ஆகிவிட்டது. அதை உறுதிபடுத்தும் விதமாக இந்த வீடியோவை வெளியிடுகிறேன். இவ்வளவு நாட்கள் இது பற்றி உங்களிடம் பேச வேண்டும் என எனக்குத் தோன்றவில்லை. ஆனால், இனி தொடர்ந்து இதுபோன்ற கர்ப்பகால வீடியோக்களை பதிவேற்றுவேன்” என கூறியிருக்கிறார்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சுஜித் இயக்கத்தில் பிரபாஸ் - ஷ்ரத்தா கபூர் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘சாஹோ’ படத்தில் இசையமைப்பதற்கு ஒப்பந்தமான சங்கர்-எஹ்ஸான்-லாய் படத்தில் இருந்து வெளியேறியுள்ளனர்.
  பாகுபலி வெற்றியைத் தொடர்ந்து பிரபாஸ் அடுத்ததாக ‘சாஹோ’ படத்தில் நடித்து வருகிறார். சுஜீத் இயக்கும் இந்த படத்தில் பிரபாஸ் ஜோடியாக ‌ஷ்ரத்தா கபூர் நடிக்கிறார். நீல் நிதின் முகேஷ் வில்லனாக நடிக்கிறார். அருண் விஜய், ஏமி ஜாக்சன், மந்த்ரா பேடி, ஜாக்கி ஷெராப், லால், மகேஷ் மஞ்ரேக்கர், சங்கி பாண்டே உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

  படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், இப்படம் ஆகஸ்ட் 15-ந் தேதி ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்த படத்திற்கு இசையமைக்க இருந்த மூவேந்தர்களான சங்கர்-எஹ்ஸான்-லாய் படத்தில் இருந்து விலகியுள்ளனர். படக்குழு இதனை உறுதிப்படுத்தியுள்ளது.  அவர்களுக்கு மாற்றாக வேறு இசையமைப்பாளரை ஒப்பந்தம் செய்வது குறித்து படக்குழு ஆலோசித்து வருகிறது. யுவி கிரியே‌ஷன்ஸ் சார்பில் வம்சி, பிரமோத் இணைந்து தயாரிக்கும் இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் அதிரடி படமாக உருவாகிறது. மதி ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பை துபாயில் நடத்தியுள்ளனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சுஜித் இயக்கத்தில் பிரபாஸ் - ஷ்ரத்தா கபூர் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘சாஹோ’ படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.
  பாகுபலி வெற்றியைத் தொடர்ந்து பிரபாஸ் அடுத்ததாக ‘சாஹோ’ படத்தில் நடித்து வருகிறார். சுஜீத் இயக்கும் இந்த படத்தில் பிரபாஸ் ஜோடியாக ‌ஷரத்தா கபூர் நடிக்கிறார். நீல் நிதின் முகேஷ் வில்லனாக நடிக்கிறார். அருண் விஜய், ஏமி ஜாக்சன், மந்த்ரா பேடி, ஜாக்கி ஷெராப், லால், மகேஷ் மஞ்ரேக்கர், சங்கி பாண்டே உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

  படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், படம் சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 15-ந் தேதி ரிலீசாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.


  யுவி கிரியே‌ஷன்ஸ் சார்பில் வம்சி, பிரமோத் இணைந்து தயாரிக்கும் இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் அதிரடி படமாக உருவாகிறது. 

  இந்த படத்திற்கு சங்கர்-எஹ்ஸான்-லாய் இசையமைக்கின்றனர். மதி ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கிறார். படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பை துபாயில் நடத்தியுள்ளனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நடிகை ஏமி ஜாக்சனுக்கும் அவரது காதலரான ஜார்ஜ் பனயிட்டோவுக்கும் கிரீசில் உள்ள பிரபல ரெஸ்டாரன்ட் ஒன்றில் வைத்து திருமணம் நடைபெற இருக்கிறது. #AmyJakcson
  ஆர்யாவுடன் `மதராசபட்டினம்‘, விக்ரமுடன் `ஐ’, தனுசுடன் `தங்கமகன்’, ரஜினியுடன் `2.0’ போன்ற படங்களில் நடித்தவர் ஏமி ஜாக்சன். கடந்த ஜனவரி மாதம் ஏமி ஜாக்சனுக்கும், அவரது காதலர் ஜார்ஜ் பனயிட்டோவுக்கும் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது.

  இந்நிலையில் இந்த மாதத்தின் தொடக்கத்தில் இங்கிலாந்தில் அன்னையர் தினம் கொண்டாடப்பட்டபோது தான் கர்ப்பமாக இருப்பதாக ஏமிஜாக்சன் தெரிவித்திருந்தார். அதில் தான் தாய்மை அடைந்திருக்கும் இந்த செய்தியை சத்தம் போட்டு உலகுக்குச் சொல்ல வேண்டும் என்ற அளவுக்கு சந்தோ‌ஷமாக இருப்பதாகத் தெரிவித்திருந்தார்.  இங்கிலாந்தின் முக்கிய தொழிலதிபர்களில் ஒருவரான ஜார்ஜ் பனயிட்டோவும், ஏமி ஜாக்சனும் இணைந்து அவர்களது திருமணத்திற்கான இடத்தை பார்த்து உறுதி செய்துள்ளனர். 2020-ம் ஆண்டு கிரீசில் ஏமி ஜாக்சன் ஜோடி திருமணம் செய்ய உள்ளது. கிரீசில் உள்ள பிரபல ரெஸ்டாரன்டான மிக்கனாஸ் ஐலேண்டில் தான் திருமணம் நடைபெறவிருக்கிறது. 

  அதற்கான ஏற்பாடுகளை ஆரம்பித்துவிட்டதாகவும், திருமணத்திற்கு முக்கிய பிரபலங்களை அழைக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. #AmyJakcson #GeorgePanayiotou

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  எமி ஜாக்சனின் நிச்சயதார்த்தம் மற்றும் கர்ப்பம் அறிவிப்பால் பிரபல இயக்குனரின் படத்தில் நடிக்கும் வாய்ப்பு பறிபோனதாக செய்திகள் வெளியாகியுள்ளது. #AmyJackson
  ரஜினியுடன் 2.0 படத்தில் நடித்த எமி ஜாக்சன் அடுத்தடுத்த பட வாய்ப்புகளுக்காக காத்திருந்தார். அந்த நேரத்தில் இயக்குனர் ராஜமவுலி தான் இயக்கும் ஆர்ஆர்ஆர் படத்தில் வெளிநாட்டு ஹீரோயின் நடிப்பது பற்றி விசாரித்துக்கொண்டிருந்தார். எமியின் பெயரும் அடிபட்டதால் அந்த தகவல் எமி காதுக்கு சென்றது. 

  ராஜமவுலியிடமிருந்து அழைப்பு வரும் என காத்திருந்தவருக்கு ஏமாற்றமே கிடைத்தது. பொறுமை இழந்த எமி, தனது கோடீஸ்வர காதலன் ஜார்ஜ் பனயிட்டுவை திருமண நிச்சயதார்த்தம் செய்துகொண்டதாக அறிவித்தார். அடுத்த சில வாரங்களில் தான் கர்ப்பம் ஆனதாகவும் அறிவித்தார்.   எமியின் நிச்சயதார்த்தம் மற்றும் கர்ப்பம் அறிவிப்பால் ராஜமவுலி தனது எண்ணத்தை மாற்றிக் கொண்டு அந்த கதாபாத்திரத்துக்கு வேறு, ஒரு வெளிநாட்டு நடிகையை ஒப்பந்தம் செய்தார். அவரும் மேக்அப் டெஸ்ட் எடுத்தபிறகு என்னால் முடியாது என்று நழுவிவிட்டார். அவருக்கு பதிலாகத்தான் தற்போது நித்யா மேனன் அல்லது ஷ்ரத்தா கபூர் நடிக்க உள்ளனர். #AmyJackson
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நடிகை ஏமி ஜாக்சன் திருமணத்திற்கு முன்பே கர்ப்பமாகியிருப்பதாக அவரே அறிவித்திருந்த நிலையில், தான் கர்ப்பமானது தனக்கே தெரியாது என்று கூறியிருக்கிறார். #AmyJackson
  நடிகை ஏமி ஜாக்சன் லண்டன் கோடீஸ்வர தொழில் அதிபர் ஜார்ஜ் பனயியோட்டோவை காதலிக்கிறார். இந்த ஆண்டு தொடக்கத் தில் இருவரும் மோதிரம் மாற்றிக் கொண்டு நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர். விரைவில் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளனர்.

  இதற்கிடையில் கடந்த 2 நாட்களுக்கு முன் ஏமி ஜாக்சன் தனது இணையதள பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு தான் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தார். திருமணம் ஆகாத நிலையில் ஏமி ஜாக்சன் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்ததை கண்டு ரசிர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.  தற்போது மற்றொரு அதிர்ச்சி தகவல் வெளியிட்டு இருக்கிறார். அதில்,’நான் கர்ப்பமாக இருப்பது எனக்கே 6 வாரங்களுக்கு தெரியாது. அதன்பிறகு தான் கர்ப்பமாக இருக்கும் வி‌ஷயம் தெரிந்தது.

  இந்த வி‌ஷயம் தெரிந்தவுடன் அதற்கான சிகிச்சை எடுத்து வருகிறேன். மேலும் நான் இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் சுற்றி வருகிறேன். மகனோ அல்லது மகளோ பிறந்தால் என்னுடன் உலகை சுற்றுவார்கள்’ என்று கூறி இருக்கிறார். #AmyJackson #GeorgePanayiotou

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சமீபத்தில் தனது திருமண நிச்சயதார்த்தம் குறித்த அறிவிப்பை வெளியிட்ட ஏமி ஜாக்சன், நிகழ்ச்சி ஒன்றில் பேசிய போது, கல்யாணத்துக்கும் கவர்ச்சிக்கும் தொடர்பு இல்லை என்று கூறினார். #AmyJackson
  2.0 படம் வெளியான பிறகு நிறைய பட வாய்ப்புகள் வரும் என்று எதிர்பார்த்த நடிகை ஏமி ஜாக்சன், தனது காதலை ரகசியமாக வைத்திருந்தார். புதிய பட வாய்ப்புகள் எதுவும் வராததால் ஏமாற்றம் அடைந்தார்.

  எனவே திடீரென்று இங்கிலாந்து தொழிலதிபர் ஜார்ஜ் பனய்யோடோ உடன் நிச்சயதார்த்தம் நடந்ததாக தடாலடியாக அறிவித்தார். பட வாய்ப்புகளுக்காக அடிக்கடி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீச்சல் உடை அணிந்த படங்கள், படு கவர்ச்சி படங்களை வெளியிட்டு வந்த ஏமி ஜாக்சன் திருமண நிச்சயதார்த்தத்துக்கு பிறகும் அதை தொடர்ந்து வருகிறார்.  சமீபத்தில் ஆடை அணி வகுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது படு கவர்ச்சியாக புதுவகை ஆடை அணிந்து வந்தார். இதுகுறித்து ஏமியிடம் கேட்டபோது, ‘அழகிபோட்டி நிகழ்ச்சியில் அழகை வெளிப்படுத்த வேண்டும். கல்யாணம் ஆகப்போகும் நிலையில் இப்படி கவர்ச்சியாக வரலாமா என்றெல்லாம் கேட்கக்கூடாது. அதற்கும் இதற்கும் தொடர்பு இல்லை’ என தெரிவித்திருக்கிறார். #AmyJackson

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஏமி ஜாக்சன் திருமணம் செய்யவிருக்கும் ஜார்ஜ் பனயோட்டுவின் சொத்து விவரம் வெளியாகி இருக்கிறது. #AmyJackson #GeorgePanayiotou
  மதராசப்பட்டிணம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான ஏமி ஜாக்சன் தாண்டவம், தங்கமகன், கெத்து, தெறி, தேவி உள்ளிட்ட படங்களில் நடித்தார். இவரது நடிப்பில் கடைசியாக 2.0 பிரம்மாண்ட படம் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கிறது. தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்துள்ளார். ஹாலிவுட்டில் பிரபலமான சூப்பர் கேர்ள் இணைய தொடரிலும் ஏமி நடித்துள்ளார்.

  இவருக்கும் ஜார்ஜ் பனயோட்டு என்ற தொழிலதிபருக்கும் சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. விரைவில் இருவரும் திருமணம் செய்துகொள்ள இருக்கிறார்கள். 

  சமீபத்தில் ஜார்ஜ் உடன் உதட்டு முத்தம் கொடுத்த புகைப்படத்தை ஏமி வெளியிட்டிருந்தார். அதனைத்தொடர்ந்து இருவருக்குமிடையேயான காதலை உறுதிப்படுத்தினார்.  இதற்கிடையே ஏமி திருமணம் செய்யவிருக்கும் ஜார்ஜ் பனயோட்டுவின் சொந்து விவரம் வெளியாகி இருக்கிறது. அவரது மொத்த சொத்தின் மதிப்பு 400 மில்லியன் பவுண்டுகள் (இந்திய மதிப்பில் ரூ.3 ஆயிரத்து 500 கோடிக்கு மேல்) என்று மதிப்பிடப்பட்டு உள்ளது. #AmyJackson #GeorgePanayiotou 

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஏமி ஜாக்சன் - ஜார்ஜ் பனயோட்டு உடனான காதலை சமூக வலைதளத்தில் வெளிப்படுத்தியுள்ளார். #AmyJackson #GeorgePanayiotou
  2009-ல் நடைபெற்ற இளையோருக்கான உலக அழகிப் போட்டியில் பட்டம் வென்ற ஏமி ஜாக்சன் விஜய் இயக்கிய மதராசப்பட்டிணம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

  தொடர்ந்து தாண்டவம், தங்கமகன், கெத்து, தெறி, தேவி உள்ளிட்ட படங்களில் நடித்தார். இவரது நடிப்பில் கடைசியாக 2.0 பிரம்மாண்ட படம் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கிறது. தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்துள்ளார். ஹாலிவுட்டில் பிரபலமான சூப்பர் கேர்ள் இணைய தொடரிலும் ஏமி நடித்துள்ளார்.

  அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வரும் ஏமி ஜாக்சன், பாலிவுட்டில் சல்மான் கானுடனும், ஹாலிவுட்டில் சில நடிகர்களுடனும் இணைத்து பேசப்பட்டார். சமீபத்தில் ஏமி ஜாக்சன், ஜார்ஜ் என்ற தொழிலதிபருடன் உதட்டுடன் முத்தம் கொடுத்த புகைப்படம் வெளியாகி வைரலாகிய நிலையில், தனது ஜார்ஜ் உடனான காதலை ஏமி உறுதிப்படுத்தியுள்ளார்.  புத்தாண்டு தினமான நேற்று, ஜார்ஜ் உடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்ட ஏமி ஜாக்சன், வாழ்க்கையில் புதிய துவக்கத்தில் கால் பதிக்கிறோம். நான் உங்களை காதலிக்கிறேன். உலகத்திலேயே அதீத மகிழ்ச்சியுடன் நான் இருப்பதற்கு காரணமாக இருப்பதற்காக நன்றி. என்று குறிப்பிட்டுள்ளார்.

  இதன்மூலம் ஏமி ஜாக்சன் - ஜார்ஜ் பனயோட்டு திருமணம் விரைவில் நடைபெற இருப்பது உறுதியாகி இருக்கிறது. #AmyJackson #GeorgePanayiotou 

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் - அக்‌ஷய் குமார் நடிப்பில் வெளியாகி இருக்கும் 2.0 படத்தின் வசூல் ரூ.1000 கோடியை நெருங்கி வருவதால் வசூலில் சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #2Point0 #Rajinikanth
  ரஜினிகாந்த் நடிப்பில் ‌ஷங்கர் இயக்கத்தில் உலகம் முழுவதும் 10000-க்கும் மேலான தியேட்டர்களில் ரிலீசான 2.0 படம் முதல் நான்கு நாட்களிலேயே ரூ.400 கோடி வசூலித்ததாக அறிவிக்கப்பட்டது.

  அடுத்த சில நாட்களிலேயே படம் ரூ.500 கோடி வசூல் என்று அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்புகளுக்கு பின்னரும் படம் தமிழகம் முழுவதும் 398 திரைகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் வெளிநாடுகளிலும் படம் ஓடிக்கொண்டிருக்கிறது.

  இங்கிலாந்து, மலேசியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் வசூல் சாதனையை ஏற்படுத்தி இருப்பதாக தயாரிப்பு தரப்பில் சொல்லப்படுகிறது. சென்னையில் தெலுங்கு, இந்தி மொழிகளிலும் ஓடிக் கொண்டிருக்கின்றது.

  சென்னை மாநகரில் மட்டும் 3-வது வாரமாக சுமார் 80 திரைகளில் 2.0 ஓடிக்கொண்டிருக்கிறது. தற்போது சென்னையில் வசூல் ரூ.30 கோடியை தாண்டிவிட்டதாக சொல்கிறார்கள். சென்னையை பொறுத்த வரை இது சாதனை வசூல் ஆகும். இதற்கு முன்பு கபாலி 3-வது வாரத்தில் சென்னையில் வசூல் செய்த ரூ.18 கோடி சாதனையாக பார்க்கப்பட்டது.

  உலகம் முழுவதும் தமிழ் மொழி பதிப்பில் ரூ.461 கோடியையும் தெலுங்கு, இந்தி பதிப்புகள் சேர்ந்து ரூ.285 கோடியையும் வசூலித்திருப்பதாக கூறுகின்றனர். மொத்த வசூல் ரூ.750 கோடியை கடந்திருப்பதாக கூறுகின்றனர்.  தமிழகத்தில் அரையாண்டு விடுமுறைக்குப் பின்னும், உலக அளவில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறையினாலும் சுலபமாக ரூ.1000 கோடியை தொடும் என நம்பிக்கை தெரிவிக்கிறார்கள். அப்படி தொட்டால், அது இந்திய சினிமாவின் பெரும் சாதனையாக கருதப்படும்.

  2.0 படம் நேற்று வரை தியேட்டர்களில் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது. முக்கியமாக 3டி வசதி கொண்ட தியேட்டர்களில் வேலை நாட்களிலும் கூட்டம் வருகிறது. 2டி பதிப்பை விட 3டி வசதியில் படத்தை பார்க்கவே ரசிகர்கள் விரும்புகின்றனர். எனவே 2டி பதிப்புக்கு வரவேற்பு குறைந்துவிட்டது.

  இந்த வாரம் மட்டும் விஜய் சேதுபதி, தனுஷ், ஜெயம் ரவி, சிவகார்த்திகேயன், விஷ்ணு விஷால் என பெரிய கதாநாயகர்களின் படங்கள் வருகின்றன. 2.0 படம் ஓடிக்கொண்டிருப்பதால் அவர்களின் படங்களுக்கு தியேட்டர்கள் ஒதுக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. #2Point0 #Rajinikanth

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo