தனது நீண்ட நாள் காதலனை கரம் பிடித்தார் எமி ஜாக்சன்

2010 ஆம் ஆண்டில் மதராசப்பட்டினம் திரைப்படத்தில் நடித்து கதாநாயகியாக அறிமுகமாகினார் நடிகை எமி ஜாக்சன். எமி ஜாக்சனுக்கு ஏற்கனவே ஜார்ஜ் என்பவருடன் திருமணமாகி ஒரு மகன் இருக்கிறார்.
தனது நீண்ட நாள் காதலனை கரம் பிடித்தார் எமி ஜாக்சன்
Published on

2010 ஆம் ஆண்டில் மதராசப்பட்டினம் திரைப்படத்தில் நடித்து கதாநாயகியாக அறிமுகமாகினார் நடிகை எமி ஜாக்சன். அப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஏக் தீவானா தா, தாண்டவம், தங்க மகன், கெத்து, தெறி மற்றும் பல வெற்றிப் படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

எமி ஜாக்சன் மற்றும் அவரது காதலனான எட் வெஸ்ட்விக் கடந்த ஜனவரி மாதம் நிச்சயதார்த்தம் செய்துக் கொண்டனர்.

எமி ஜாக்சனுக்கு ஏற்கனவே ஜார்ஜ் என்பவருடன் திருமணமாகி ஒரு மகன் இருக்கிறார். சில காரணத்தினால் அவர்களுக்கு ஒத்துப்போவாதலால் விவாகரத்து செய்துக் கொண்டனர்.

இந்நிலையில் 2022 ஆம் ஆண்டு எமி, எட் வெஸ்ட்விக்கை காதலிக்க தொடங்கினார். எட் ஒரு பிரபலமான பிரிட்டிஸ் நடிகராவார். நீண்ட நாட்கள் காதலர்களாக வலம் வந்த இந்த ஜோடி இன்று திருமணம் செய்துக் கொண்டனர்.

இதுக்குறித்து எமி அவரது திருமண புகைப்படங்களை இன்ஸ்டகிராமில் பதிவிட்டுள்ளார். அதில் இருவரும் அழகான வெண்மையான கவுன் மற்றும் கோட் சூட் கையில் பூங்கொத்துடன் காணப்படுகின்றனர். இப்புகைப்படம் தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com