search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "married"

    • 60 வயதான ஏரண்ணா அதிகளவில் நிலம் வைத்துள்ளார். இவரது மனைவி சமீபத்தில் இறந்துவிட்டார்.
    • ஏரண்ணா அனுஸ்ரீயை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து அவரது குடும்பத்தினரிடம் பெண் கேட்டார்.

    பெங்களூரு:

    சமீபகாலமாக வயதான தொழிலதிபர்கள், பிரபலங்கள் சிலர் இளம் வயதுடைய பெண்களை திருமணம் செய்யும் நிகழ்வுகள் ஆங்காங்கே நடந்து வருகிறது.

    அந்த வகையில் கர்நாடகத்தை சேர்ந்த 60 வயது முதியவர் ஒருவர் 30 வயது பெண்ணை திருமணம் செய்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    சிக்கபள்ளாப்பூர் மாவட்டம் சிட்லகட்டா தாலுகாவில் உள்ள மேலூர் கிராமத்தை சேர்ந்தவர் ஏரண்ணா. 60 வயதான இவர் அதிகளவில் நிலம் வைத்துள்ளார். இவரது மனைவி சமீபத்தில் இறந்துவிட்டார்.

    இந்நிலையில் ஏரண்ணாவின் மகனும், மகளும் அவரை கவனிக்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் 2-வது திருமணம் செய்ய முடிவெடுத்தார்.

    அதன்படி ஏரண்ணா, தனக்கான வரனை தேடினார். அப்போது மராட்டிய மாநிலம் சோலாப்பூரை சேர்ந்த அனுஸ்ரீ (30) என்ற பெண்ணை அவருக்கு பிடித்து போனது. அனுஸ்ரீ தனது கணவரை பிரிந்த நிலையில் மகனுடன் தனியாக வாழ்ந்து வந்துள்ளார்.

    இதையறிந்த ஏரண்ணா அனுஸ்ரீயை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து அவரது குடும்பத்தினரிடம் பெண் கேட்டார். அவர்களும் இந்த திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தனர்.

    இதையடுத்து அப்பே கவுடனஹள்ளி பகுதியில் உள்ள கோவிலில் வைத்து ஏரண்ணா-அனுஸ்ரீ திருமணம் எளிமையாக நடந்தது. இருவரும் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர்.

    இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதைப்பார்த்த பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதில் சிலர், வயதை காரணம் காட்டி இந்த திருமணத்தை தவிர்த்திருக்கலாம் எனவும், சிலர் ஏரண்ணா தனது வயதிற்கேற்ப வேறு பெண்ணை மணம் முடித்திருக்கலாம் எனவும் கூறி உள்ளனர்.

    இதுபோன்ற பல கருத்துக்களால் திருமண புகைப்படம் சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. 

    • 17 வயது சிறுமிக்கு திருமணம் நடந்தது.
    • சிறுமியின் பெற்றோர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி அம்மன் கோவில் பட்டி தெருவை சேர்ந்தவர் கள் ஜோதி என்ற மரியசாமி-விஜயலட்சுமி தம்பதியினர். இவர்களது 17 வயது மகளுக்கும், ஏ.பி.டி. புது தெருவை சேர்ந்த விஜய் (31) என்பவருக்கும் கடந்த 20-ந்தேதி திருமணம் நடந்துள் ளது.

    இதைத்தொடர்ந்து மணமக்கள் மறுவீட்டிற்காக பெண் வீட்டிற்கு வந்துள்ள னர். அப்போது தனக்கு திருமணம் பிடிக்கவில்லை என கூறி சிறுமி பெற்றோரு டன் வாக்குவாதம் செய்து உள்ளார். ஆனால் பெற்றோர் அவரை சமரசப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். இதனால் ஊர்நல அலுவலர் மேரி ராசாத்தியிடம் சிறுமி புகார் செய்தார். அதன்பேரில் அவர் இதுகுறித்து விசா ரித்து சிவகாசி அனைத்து மகளிர் போலீஸ் நிலை யத்தில் புகார் செய்தார். போலீசார் குழந்தை திருமண தடுப்பு சட்டத்தின் கீழ் சிறுமியை திருமணம் செய்த விஜய், அவரது பெற்றோர் முனீஸ்வரன் -சந்திரா, சிறுமியின் பெற்றோர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • ஆசைகள் காலங்களை கடந்து விட்டாலும் நினைவுகள் ஏதோ ஒரு ஓரத்தில் மனதில் இருக்கத்தானே செய்யும்.
    • 80 வயதை கடந்த என் தாயார் கண்ணீர் வடித்துக்கொண்டு தான் இருக்கிறார்.

    காலா காலத்துல ஒரு கல்யாணத்தை பண்ணி வைத்தால் நல்லா இருப்பான் என்று பலரும் சொல்ல கேட்டிருப்போம். ஆனாலும் ஏதோ ஒரு காரணத்துக்காக திருமணமே வேண்டாம் என்று வாழ்பவர்களுக்கு வாழ்க்கையில் ஏதாவது ஒரு கட்டத்தில் அதை நினைத்து பார்க்க தவறுவதில்லை என்பதுதான் யதார்த்தம்

    இதற்கு திருமாவளவன் மட்டும் விதிவிலக்காகிவிட முடியுமா? திருமணம் செய்யாமல் மணிவிழா கண்டுவிட்ட திருமாவளவன் சமீபத்தில் ஒரு கூட்டத்தில் பேசியபோது, 'ஆயிரக் கணக்கான திருமணங்களை நடத்தி வைத்த எனக்கு திருமண ஆசை வராதா? இப்பவும் என்னை பார்த்ததும் யாருக்காக இப்படி ஓடிகிட்டு இருக்கிறாய் என்று 80 வயதை கடந்த என் தாயார் கண்ணீர் வடித்துக்கொண்டு தான் இருக்கிறார்' என்றார்.

    ஆசைகள் காலங்களை கடந்து விட்டாலும் நினைவுகள் ஏதோ ஒரு ஓரத்தில் மனதில் இருக்கத்தானே செய்யும்.

    • இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் ௩ ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது.
    • கழ்ச்சிக்கு புதுக்கோட்டை வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் கே.கே.செல்ல பாண்டியன் தலைமை தாங்கினார்.

    கந்தர்வகோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அமராவதி உடனுறை ஆபத் சகா ஈஸ்வரர் திருக்கோவிலில் இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் மூன்று ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு புதுக்கோட்டை வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் கே.கே.செல்ல பாண்டியன் தலைமை தாங்கினார். இந்த திருமண விழாவில் கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் சின்னத்துரை, கந்தர்வகோட்டை தெற்கு ஒன்றிய செயலாளர் பரமசிவம், வடக்கு ஒன்றிய செயலாளர் தமிழ் அய்யா,நகரச் செயலாளர் ராஜா ஆத்மா சேர்மன் ராஜேந்திரன் ஊராட்சி மன்ற தலைவர்கள் தமிழ்ச்செல்வி, சிவரஞ்சனி சசிகுமார்,அரவம்பட்டி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தாமரை. பழனிவேலு மற்றும் மணமக்களின் உறவினர்கள் கலந்து கொண்டனர். மணமக்களுக்கு தமிழக அரசின் சார்பில் தலா ஒரு லட்சம் மதிப்பிலான சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டது.


    • புதுக்கோட்டை இந்து அறநிலையத்துறை சார்பில் 5 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது
    • அமைச்சர் எஸ்.ரகுபதி தலைமையேற்று நடத்தி வைத்து, சீர்வரிசை பொருட்களை வழங்கி மணமக்க ளை வாழ்த்தினார்.

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயிலில், இந்து சமய அறநிலையத் துறையின் சார்பில் 5 திருமணங்களை, சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி தலைமையேற்று நடத்தி வைத்து, சீர்வரிசை பொருட்களை வழங்கி மணமக்க ளை வாழ்த்தினார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, நகர்மன்றத் தலைவர் திலகவதி செந்தில், அறங்காவலர் குழுத்தலைவர் தவ.பாஞ்சாலன், கவுன்சிலர் ரமேஷ்பாபு, உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.




    • வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்த புகைப்படத்தை வைத்து இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தேன்.
    • புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவை,

    கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள மாதேகவுண்டன்பாளையத்தை சேர்ந்தவர் 18 வயது இளம்பெண். இவர் பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீசில் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது:-

    எனக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு வடக்கிப்பாளையத்தை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. எனக்கு 16 வயது இருக்கும் போது எனது காதலன் என்னை செங்கல் சூளைக்கு அழைத்து சென்று கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்தார். இதன் காரணமாக நான் கர்ப்பமானேன். இதனையடுத்து 2 வீட்டு பெற்றோரும் சேர்ந்து 2020 ஆண்டு நவம்பர் மாதம் திருமணம் செய்து வைத்தனர்.

    திருமணமான சில மாதங்களிலேயே எனக்கும் எனது கணவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. ஒரு நாள் என்னை அவர் மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்ற போது கோபத்தில் கீழே தள்ளி விட்டார். இதனால் கர்ப்பம் கலைந்தது. மேலும் எனது கணவரின் தாய், தந்தை ஆகியோர் வரதட்சணை கேட்டு கொடுமைபடுத்தினர்.

    இதற்கிடையே நான் 2-வது முறையாக மீண்டும் கர்ப்பமானேன். அப்போது எங்கள் 2 பேருக்கு ஏற்பட்ட தகராறில் தாக்கியதில் 2- வது கர்ப்பமும் கலைந்தது.

    கடந்த 3 மாதங்களுக்கு முன்பு எனது கணவரிடம் கோபித்துக்கொண்டு எனது பெற்றோர் வீட்டில் வசித்து வந்தேன். கணவர் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் எந்த தொடர்பும் இல்லாமல் இருந்தேன்.

    சம்பவத்தன்று எனது செல்போனில் கணவரின் டி.பியை பார்த்தேன். அப்போது அதில் அவர் வேறு ஒரு பெண்ணை திரு மணம் செய்த புகைப்படத்தை வைத்து இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தேன். எனவே என்னை சிறுவயதில் பாலியல் பலாத்காரம் செய்து திருமணம் செய்து ஏமாற்றி விட்டு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்த எனது கணவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த புகாரில் கூறியிருந்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • இந்த திருமணம் மூலம் குறைவில்லா சந்தான பாக்கியமும், கன்னிகா தானம் செய்த பலனும் கிடைக்கும்.
    • இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்த தோடு, மொய் பணமும் எழுதினர்.

    கோவை,

    மரங்களின் ராஜா என்று அழைக்கப்படும் அரச மரத்தை சிவ பெருமானாகவும், மரங்களின் ராணியான வேப்பமரத்தை அம்பாளாகவும், பக்தர்கள் பாவித்து, அரச, வேம்பு மரத்திற்கு திருக்கல்யாணம் செய்து வைத்து வருகின்றனர்.

    அப்படி செய்வதன் மூலம் குறைவில்லா சந்தான பாக்கியமும், கன்னிகா தானம் செய்த பலனும் கிடைக்கும். அத்துடன் மாதம் மும்மாரி மழை பெய்யும். பெண்களுக்கு ஏற்படும் மாங்கல்ய தோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை.

    இப்பலன் அனைவருக்கும் சென்று சேர கோவை நேரு நகர் மேற்கு பகுதியில் உள்ள வள்ளி தெய்வானை சமேத சண்முகநாதர் கோவிலில் அரச, வேம்பு திருக்கல்யாண நிகழ்ச்சியும், ஐம்பொன் விக்ரக பிரதிஷ்டையும் நேற்று நடந்தது.

    கோவில் வளாகத்தில் உள்ள அரச வேம்பு மரத்தின் முன் வேள்விச்சாலை அமைத்து, வேதமந்திரங்கள் முழங்க மங்கல பொருட்கள் சமர்பித்து மஞ்சள் நாணை சிவாச்சாரியார்கள், பொதுமக்கள் அனைவரும் வேப்பமரத்திற்கு அணிவித்தனர். வேப்பமரத்தில் அணிவித்த மலர் மாலைகளை, அரசமரத்திற்கு மாற்றி அணிவித்தனர். தொடர்ந்து சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்த தோடு, மொய் பணமும் எழுதினர்.

    • சிறுமிக்கு வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது.
    • ஆனைமலையை சேர்ந்த வாலிபர் கடத்திச் சென்று திருமணம் செய்தார்.

    கோவை,

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள தொண்டாமுத்தூரை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவருக்கு ஆனைமலையை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. அந்த வாலிபர் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி சிறுமியை கடத்தி சென்றார். பின்னர் அவர் சிறுமியை திருமணம் செய்தார். சிறுமி திடீரென மாயமானதால் அவரை அவரது பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடினர். அப்போதுதான் தங்களது மகளை ஆனைமலையை சேர்ந்த வாலிபர் கடத்திச் சென்று திருமணம் செய்தது தெரிய வந்தது. இது குறித்து அவர்கள் பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திருமணம் செய்து வாலிபரை ஏமாற்றிய பெண் முதல் நாளிலேயே மாயமானார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    ஈரோடு மாவட்டம் ஆய்வுக்கூடல் சக்தி நகரை சேர்ந்தவர் நவநீத கிருஷ்ணன் (35). இவர் சிவகாசியில் மீனம்பட்டியை சேர்ந்த திருமண புரோக்கர் ராணி என்பவர் மூலம் வரன் பார்த்தார்.

    இவர் மூலம் தூத்துக்குடி மாவட்டம் ரிசர்வ் லைன் பகுதியை சேர்ந்த கணபதி என்பவரின் மகள் ஜெயலட்சுமி (28) என்பவரை திருமணத்திற்காக நவநீத கிருஷ்ணன் பெண் பார்த்தார்.

    இதைத்தொடர்ந்து இருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. கடந்த 4 நாட்களுக்கு முன்பு சிவகாசி மீனம்பட்டியில் உள்ள கோவிலில் நவநீத கிருஷ்ணன்-ஜெயல ட்சுமிக்கு திருமணம் நடந்தது. அதன்பின் இருவரும் ஈரோட்டிற்கு சென்றனர்.

    திருமணமான மறுநாள் ஜெயலட்சுமி தனக்கு உடல்நலக்குறைவு இருப்பதாக கூறியுள்ளார். இதையடுத்து நவநீத கிருஷ்ணன் அவரை ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார். அப்போது ஜெயலட்சுமி அங்கிருந்து திடீரென மாயமானார்.

    சிவகாசி மற்றும் தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. திருமணம் செய்து தன்னை ஏமாற்றியதாக நவநீத கிருஷ்ணன் சிவகாசி டவுன் போலீசில் புகார் செய்தார்.

    போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பா.ஜ.க. விவசாய அணி துணை தலைவர் எஸ்.ஆர்.தேவர் இல்ல திருமணம் நாளை நடக்கிறது.
    • காரைக்குடி-செக்காலை ரோடு சுபலட்சுமி மகாலில் திருமணம் நடக்கிறது.

    காரைக்குடி

    பா.ஜ.க. மாநில விவசாய அணி துணை தலைவர் எஸ்.ஆர்.தேவரின் மகள் வழிப்பேரனும் சி.விஜய செந்தில்-வி.எஸ்.மேகலா தம்பதியரின் மகனுமான வி.எஸ்.ராஜா சேதுபதிக்கும், தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் முருகபூபதி தேவர்-ராமுத்தாய் தம்பதியரின் மகள் எம்.ஆர்.ஐஸ்வர்யாவிற்கும் பெரியோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டு உள்ளது.

    இந்த திருமணம் நாளை (புதன்கிழமை) காரைக்குடி-செக்காலை ரோடு சுபலட்சுமி மகாலில் நடக்கிறது. பா.ஜ.க. முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா தலைமை தாங்குகிறார். மாநில தலைவர் அண்ணாமலை திருமணத்தை நடத்தி வைக்கிறார்.

    இதில் சிவகங்கை மாவட்ட தலைவர் மேப்பல் சக்தி, ராமநாதபுரம் மாவட்ட தலைவர் கதிரவன், மாவட்ட பொது செயலாளர் மார்த்தாண்டன், மாநில விவசாய அணி செயற்குழு உறுப்பினர் செந்தூர் பாண்டியன், இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வர சுப்பிரமணியம், பொது செயலாளர் கருப்பு முருகானந்தம்,மாநில விவசாய அணி தலைவர் நாகராஜ், மாநில பொதுச் செயலாளர் பொன்.பாலகணபதி, திரைப்பட இயக்குனர் பேரரசு உள்பட மாநிலம் முழுவதும் இருந்து நிர்வாகிகள், அரசியல் கட்சி நிர்வாகிகள், தொழில் அதிபர்கள் கலந்து கொள்கின்றனர்.

    திருமணத்திற்கான ஏற்பாடுகளை எஸ்.ஆர்.தேவர் குடும்பத்தினர் செய்து வருகின்றனர்.

    • 10-ம் வகுப்பு படித்து முடித்த மாணவிக்கும் கடந்த ஜூன் மாதம் திருவதிகையில் உள்ள ஒரு கோவிலில் திருமணம் நடந்துள்ளது.
    • ஆய்வாளர் வள்ளி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

    கடலூர்:

    பண்ருட்டி அருகே சிறுவத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் பாலு (25), கூலி தொழிலாளி. இவருக்கும், 10-ம் வகுப்பு படித்து முடித்த மாணவிக்கும் கடந்த ஜூன் மாதம் திருவதிகையில் உள்ள ஒரு கோவிலில் திருமணம் நடந்துள்ளது. இது குறித்து பண்ருட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து ஆய்வாளர் வள்ளி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். இதில் சிறுமிக்கு திருமணம் நடந்தது உறுதியானது. இதையடுத்து பாலு, அவரது தந்தை பாக்கியநாதன், தாய் மஞ்சுளா, உறவினர்கள் சங்கர், கோதை ஆகியோர் மீது பண்ருட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நியூசிலாந்து பெண்கள் கிரிக்கெட் அணியின் முன்னணி ஆல்-ரவுண்டர் ஹாலெ ஜென்சனும் ஆஸ்திரேலியாவில் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் ஆடும் வீராங்கனை நிகோலா ஹன்கோக்கும் மோதிரம் மாற்றி திருமணம் செய்து கொண்டனர். #Womencricketers
    கிறைஸ்ட்சர்ச்:

    நியூசிலாந்து பெண்கள் கிரிக்கெட் அணியின் முன்னணி ஆல்-ரவுண்டர் ஹாலெ ஜென்சன். இவர் நியூசிலாந்து அணிக்காக 8 ஒரு நாள் போட்டி மற்றும் இருபது 20 ஓவர் போட்டிகளில் விளையாடி இருக்கிறார். 26 வயதான ஜென்சன், ஒரு ஓரின சேர்க்கை விரும்பி ஆவார். அவரும் ஆஸ்திரேலியாவில் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் ஆடும் 23 வயது வீராங்கனை நிகோலா ஹன்கோக்கும் நெருங்கி பழகி வந்தனர்.

    இந்த நிலையில் அவர்கள் இருவரும் மோதிரம் மாற்றி திருமணம் செய்து கொண்டதுடன், அந்த புகைப்படத்தையும் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளனர். பெண்கள் கிரிக்கெட் உலகில் கடந்த 3 ஆண்டுகளில் இவ்வாறு ஜோடி சேர்ந்த 3-வது ஓரின சேர்க்கை இணை இதுவாகும். #Womencricketers
    ×