பொள்ளாச்சி அருகே சிறுமியை கடத்தி திருமணம் செய்த வாலிபர்

சிறுமிக்கு வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. ஆனைமலையை சேர்ந்த வாலிபர் கடத்திச் சென்று திருமணம் செய்தார்.
பொள்ளாச்சி அருகே சிறுமியை கடத்தி திருமணம் செய்த வாலிபர்
Published on

கோவை,

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள தொண்டாமுத்தூரை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவருக்கு ஆனைமலையை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. அந்த வாலிபர் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி சிறுமியை கடத்தி சென்றார். பின்னர் அவர் சிறுமியை திருமணம் செய்தார். சிறுமி திடீரென மாயமானதால் அவரை அவரது பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடினர். அப்போதுதான் தங்களது மகளை ஆனைமலையை சேர்ந்த வாலிபர் கடத்திச் சென்று திருமணம் செய்தது தெரிய வந்தது. இது குறித்து அவர்கள் பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com