திருமாவளவனின் திருமண ஆசை...

ஆசைகள் காலங்களை கடந்து விட்டாலும் நினைவுகள் ஏதோ ஒரு ஓரத்தில் மனதில் இருக்கத்தானே செய்யும்.80 வயதை கடந்த என் தாயார் கண்ணீர் வடித்துக்கொண்டு தான் இருக்கிறார்.
திருமாவளவனின் திருமண ஆசை...
Published on

காலா காலத்துல ஒரு கல்யாணத்தை பண்ணி வைத்தால் நல்லா இருப்பான் என்று பலரும் சொல்ல கேட்டிருப்போம். ஆனாலும் ஏதோ ஒரு காரணத்துக்காக திருமணமே வேண்டாம் என்று வாழ்பவர்களுக்கு வாழ்க்கையில் ஏதாவது ஒரு கட்டத்தில் அதை நினைத்து பார்க்க தவறுவதில்லை என்பதுதான் யதார்த்தம்

இதற்கு திருமாவளவன் மட்டும் விதிவிலக்காகிவிட முடியுமா? திருமணம் செய்யாமல் மணிவிழா கண்டுவிட்ட திருமாவளவன் சமீபத்தில் ஒரு கூட்டத்தில் பேசியபோது, 'ஆயிரக் கணக்கான திருமணங்களை நடத்தி வைத்த எனக்கு திருமண ஆசை வராதா? இப்பவும் என்னை பார்த்ததும் யாருக்காக இப்படி ஓடிகிட்டு இருக்கிறாய் என்று 80 வயதை கடந்த என் தாயார் கண்ணீர் வடித்துக்கொண்டு தான் இருக்கிறார்' என்றார்.

ஆசைகள் காலங்களை கடந்து விட்டாலும் நினைவுகள் ஏதோ ஒரு ஓரத்தில் மனதில் இருக்கத்தானே செய்யும்.

X

Maalai Malar
www.maalaimalar.com