17 வயது சிறுமிக்கு திருமணம்

17 வயது சிறுமிக்கு திருமணம் நடந்தது.சிறுமியின் பெற்றோர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
17 வயது சிறுமிக்கு திருமணம்
Published on

விருதுநகர்

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அம்மன் கோவில் பட்டி தெருவை சேர்ந்தவர் கள் ஜோதி என்ற மரியசாமி-விஜயலட்சுமி தம்பதியினர். இவர்களது 17 வயது மகளுக்கும், ஏ.பி.டி. புது தெருவை சேர்ந்த விஜய் (31) என்பவருக்கும் கடந்த 20-ந்தேதி திருமணம் நடந்துள் ளது.

இதைத்தொடர்ந்து மணமக்கள் மறுவீட்டிற்காக பெண் வீட்டிற்கு வந்துள்ள னர். அப்போது தனக்கு திருமணம் பிடிக்கவில்லை என கூறி சிறுமி பெற்றோரு டன் வாக்குவாதம் செய்து உள்ளார். ஆனால் பெற்றோர் அவரை சமரசப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். இதனால் ஊர்நல அலுவலர் மேரி ராசாத்தியிடம் சிறுமி புகார் செய்தார். அதன்பேரில் அவர் இதுகுறித்து விசா ரித்து சிவகாசி அனைத்து மகளிர் போலீஸ் நிலை யத்தில் புகார் செய்தார். போலீசார் குழந்தை திருமண தடுப்பு சட்டத்தின் கீழ் சிறுமியை திருமணம் செய்த விஜய், அவரது பெற்றோர் முனீஸ்வரன் -சந்திரா, சிறுமியின் பெற்றோர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com