search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    ராணாவையும் திரிஷாவையும் சேர்த்து வைப்பேன் - பிரபாஸ்
    X

    ராணாவையும் திரிஷாவையும் சேர்த்து வைப்பேன் - பிரபாஸ்

    சரிப்பட்டு வராததால் திரிஷாவுடனான காதலை முறித்துக் கொண்டதாக ராணா கூறிய நிலையில், ராணாவையும், திரிஷாவையும் சேர்த்து வைப்பேன் என்று பிரபாஸ் கூறினார். #Prabhas #RanaDaggubati #Trisha #Rajamouli
    பாகுபலி படத்தில் நடித்ததன் மூலம் இணைந்த பிரபாசும், ராணாவும் அந்த படத்துக்கு பின்னர் நெருங்கிய நண்பர்களாகிவிட்டனர். தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களான இருவரும் இன்னும் திருமணம் செய்துகொள்ளாமல் காலத்தை கடத்தி வருகிறார்கள்.

    பிரபாஸ் அனுஷ்காவுடனும், ராணா திரிஷாவுடனும் சிலகாலம் கிசுகிசுக்கப்பட்டவர்கள். இருவரில் யார் முதலில் திருமணம் செய்துகொள்வார் என்பது தெலுங்கு சினிமாவின் பெரிய கேள்வியாக இருந்து வந்தது.

    ராணாவும், திரிஷாவும் ஒரு படத்தில் இணைந்து நடித்த போது நெருக்கமானார்கள். பட விழாக்களுக்கு சேர்ந்தே வந்தார்கள். இருவரும் காதலிப்பதாக கிசுகிசுக்கள் பரவின. திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்பட்டது. இதுகுறித்து திரிஷா கருத்து சொல்லாமல் இருந்தார். ராணாவிடம் கேட்டபோது நட்பாகத்தான் பழகுகிறோம் என்று மறுத்து வந்தார்.

    எனினும் இருவரையும் இணைத்து தொடர்ந்து கிசுகிசுக்கள் வந்த வண்ணமாகவே இருந்தது. இந்த நிலையில் நடிகர்கள் பிரபாஸ், ராணா, இயக்குனர்கள் ராஜமவுலி ஆகியோர் கரண் ஜோஹருடன் டி.வி நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டனர். இதில் திரிஷாவுடனான காதல் பற்றி ராணாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது.



    அதற்கு பதில் அளித்த ராணா, எனக்கு திரிஷா 10 வருடங்களுக்கு மேலாக தோழியாக இருந்தார். அவர் எனது நீண்ட நாள் தோழி. கொஞ்ச காலம் அவரை காதலிக்கவும் செய்தேன். பின்னர் சரிப்பட்டு வராது என்பதை உணர்ந்து காதலை முறித்துக் கொண்டேன்.’’ என்றார். 

    பிரபாஸ் பேசும்போது, ‘‘ராணாவையும் திரிஷாவையும் நான் சேர்த்து வைப்பேன் என்றார். அனுஷ்காவுடன் கிசுகிசுக்கப்படுவது பற்றி கேட்ட போது, எனக்கும் அனுஷ்காவுக்கும் காதல் என்று வெளியாகும் தகவலில் உண்மை இல்லை’’ என்றார்.

    இருவரில் யார் முதலில் திருமணம் செய்துகொள்வார் என்ற கேள்விக்கு, பிரபாசுக்கு முன்பே ராணா தான் திருமணம் செய்துகொள்வார் என்று ராஜமவுலி கூறி இருக்கிறார். #Prabhas #RanaDaggubati #Trisha #Rajamouli

    Next Story
    ×