என் மலர்

  நீங்கள் தேடியது "Rana Daggubati"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பாகுபலி, ஆரம்பம், பெங்களூர் நாட்கள் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் ராணா டகுபதி.
  • ராணா தனது குடும்பத்தினருடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

  பிரபல தெலுங்கு நடிகர் ராணா டகுபதி, தமிழில் ஆரம்பம், பெங்களூர் நாட்கள் ஆகிய படங்களில் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கில் வெளியான பாகுபலி, ருத்ரமாதேவி படங்களில் நடித்தும் பிரபலமானார்.

  பாகுபலி

  பாகுபலி

   

  இந்நிலையில் நடிகர் ராணா தனது குடும்பத்தினருடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் விஐபி வரிசையில் சாமி தரிசனம் செய்தார். ரங்கநாயக மண்டபத்தில் தேவஸ்தானம் சார்பில் வழங்கப்பட்ட தீர்த்த பிரசாதங்களை பெற்றுக் கொண்டு வெளியே வந்த அவருடன் ரசிகர்கள் செல்பி எடுத்து கொண்டுனர்.

   

  செல்போனை பிடுங்கிய ராணா 

  செல்போனை பிடுங்கிய ராணா 

  அப்போது ஒரு ரசிகர் செல்பி எடுக்க முயன்ற போது ஆத்திரம் அடைந்த ராணா அவரின் செல்போனை பிடிங்கினார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சரிப்பட்டு வராததால் திரிஷாவுடனான காதலை முறித்துக் கொண்டதாக ராணா கூறிய நிலையில், ராணாவையும், திரிஷாவையும் சேர்த்து வைப்பேன் என்று பிரபாஸ் கூறினார். #Prabhas #RanaDaggubati #Trisha #Rajamouli
  பாகுபலி படத்தில் நடித்ததன் மூலம் இணைந்த பிரபாசும், ராணாவும் அந்த படத்துக்கு பின்னர் நெருங்கிய நண்பர்களாகிவிட்டனர். தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களான இருவரும் இன்னும் திருமணம் செய்துகொள்ளாமல் காலத்தை கடத்தி வருகிறார்கள்.

  பிரபாஸ் அனுஷ்காவுடனும், ராணா திரிஷாவுடனும் சிலகாலம் கிசுகிசுக்கப்பட்டவர்கள். இருவரில் யார் முதலில் திருமணம் செய்துகொள்வார் என்பது தெலுங்கு சினிமாவின் பெரிய கேள்வியாக இருந்து வந்தது.

  ராணாவும், திரிஷாவும் ஒரு படத்தில் இணைந்து நடித்த போது நெருக்கமானார்கள். பட விழாக்களுக்கு சேர்ந்தே வந்தார்கள். இருவரும் காதலிப்பதாக கிசுகிசுக்கள் பரவின. திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்பட்டது. இதுகுறித்து திரிஷா கருத்து சொல்லாமல் இருந்தார். ராணாவிடம் கேட்டபோது நட்பாகத்தான் பழகுகிறோம் என்று மறுத்து வந்தார்.

  எனினும் இருவரையும் இணைத்து தொடர்ந்து கிசுகிசுக்கள் வந்த வண்ணமாகவே இருந்தது. இந்த நிலையில் நடிகர்கள் பிரபாஸ், ராணா, இயக்குனர்கள் ராஜமவுலி ஆகியோர் கரண் ஜோஹருடன் டி.வி நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டனர். இதில் திரிஷாவுடனான காதல் பற்றி ராணாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது.  அதற்கு பதில் அளித்த ராணா, எனக்கு திரிஷா 10 வருடங்களுக்கு மேலாக தோழியாக இருந்தார். அவர் எனது நீண்ட நாள் தோழி. கொஞ்ச காலம் அவரை காதலிக்கவும் செய்தேன். பின்னர் சரிப்பட்டு வராது என்பதை உணர்ந்து காதலை முறித்துக் கொண்டேன்.’’ என்றார். 

  பிரபாஸ் பேசும்போது, ‘‘ராணாவையும் திரிஷாவையும் நான் சேர்த்து வைப்பேன் என்றார். அனுஷ்காவுடன் கிசுகிசுக்கப்படுவது பற்றி கேட்ட போது, எனக்கும் அனுஷ்காவுக்கும் காதல் என்று வெளியாகும் தகவலில் உண்மை இல்லை’’ என்றார்.

  இருவரில் யார் முதலில் திருமணம் செய்துகொள்வார் என்ற கேள்விக்கு, பிரபாசுக்கு முன்பே ராணா தான் திருமணம் செய்துகொள்வார் என்று ராஜமவுலி கூறி இருக்கிறார். #Prabhas #RanaDaggubati #Trisha #Rajamouli

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பாகுபலி படத்தில் இணைந்து நடித்த பிரபாஸ், ராணா இருவரில் யார் முதலில் திருமணம் செய்து கொள்வார்கள் என்று ராஜமவுலியிடம் கேட்டதற்கு, ராணா தான் என்று அவர் பதிலளித்தார். #Prabhas #RanaDaggubati #Rajamouli
  பாகுபலி படத்தில் நடித்ததன் மூலம் இணைந்த பிரபாசும், ராணாவும் அந்த படத்துக்கு பின்னர் நெருங்கிய நண்பர்களாகி விட்டனர். தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களான இருவரும் இன்னும் திருமணம் செய்துகொள்ளாமல் காலத்தை கடத்தி வருகிறார்கள்.

  பிரபாஸ் அனுஷ்காவுடனும், ராணா திரிஷாவுடனும் சிலகாலம் கிசுகிசுக்கப்பட்டவர்கள். இருவரில் யார் முதலில் திருமணம் செய்துகொள்வார் என்பது தெலுங்கு சினிமாவின் பெரிய கேள்வியாக இருந்து வந்தது.   ராஜமவுலி, ராணா, பிரபாஸ் மூவரும் இணைந்து கலந்துகொண்ட நிகழ்ச்சி ஒன்றில் இந்த கேள்விக்கான பதில் கிடைத்துள்ளது. இருவரில் யார் முதலில் திருமணம் செய்துகொள்வார் என்ற கேள்விக்கு பிரபாசுக்கு முன்பே ராணா தான் திருமணம் செய்துகொள்வார் என்று ராஜமவுலி கூறி இருக்கிறார். இருவருக்கும் நெருக்கமானவர் என்பதால் ராஜமவுலி சொன்னது நிச்சயம் பலிக்கும் என்கிறார்கள். #Prabhas #RanaDaggubati #Rajamouli

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கிரிஷ் இயக்கத்தில் பாலகிருஷ்ணா நடிப்பில் உருவாகும் என்.டி.ஆர். வாழ்க்கைப்படத்தில் தமிழ், தெலுங்கு சினிமாவில் பிரபலமான 9 நாயகிகள் நடிக்கின்றனர். #NTRBiopic #Balakrishna
  ஆந்திராவின் முன்னாள் முதல்வரும், பிரபல நடிகருமான என்.டி.ராமாராவ் வாழ்க்கை வரலாற்று படமாக உருவாகி வருகிறது. பிரமாண்டமாகத் தயாராகும் இந்தப் படத்தில், என்.டி.ஆரின் மகன் நந்தமுரி பாலகிருஷ்ணா, தந்தையின் வேடத்தில் நடிக்கிறார்.

  ‘என்.டி.ஆர். பயோபிக்’ எனத் தற்போது பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில், என்.டி.ஆரின் மனைவி பசவதாரகம் வேடத்தில் நடிக்க வித்யா பாலன் நடிக்கிறார். மறைந்த நடிகை ஸ்ரீதேவி கதாபாத்திரத்தில் ரகுல் பிரீத்திசிங், சாவித்திரி கதாபாத்திரத்தில் நித்யா மேனன், சரோஜா தேவி கதாபாத்திரத்தில் அனுஷ்கா, சவுகார் ஜானகி கதாபாத்திரத்தில் ஷாலினி பாண்டே, ஜெயசுதா வேடத்தில் பாயல் ராஜ்புத், ஜெயப்பிரதா கதாபாத்திரத்தில் ஹன்சிகா, கிருஷ்ண குமாரி வேடத்தில் மாளவிகா நாயர் நடிக்கின்றனர்.

  இதுதவிர, சந்திரபாபு நாயுடு கதாபாத்திரத்தில் ராணாவும், அவருடைய மனைவியாக மஞ்சிமா மோகனும் நடிக்கின்றனர். இப்படி ஒரே படத்தில் 9 முன்னணி நடிகைகள் நடிப்பதால், இப்போதே இந்தப் படத்துக்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.  மேலும் இந்தப் படத்தில் முரளி சர்மா, பிரசாத் ரவுல், நாக சைதன்யா, மகேஷ் பாபு, ராணா டகுபதி, மோகன் பாபு மஞ்சு, ராஜசேகர் போன்றோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள்.

  கிரிஷ் இயக்கும் இந்த படத்தை பாலகிருஷ்ணாவே தயாரிக்கிறார். இரண்டு பாகங்களாக உருவாகும் இந்தப் படத்தின் முதல் பாகம் ஜனவரி 9-ம் தேதி வெளியாகிறது. #NTRBiopic #Balakrishna 

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கிரிஷ் இயக்கத்தில் பாலகிருஷ்ணா நடிப்பில் உருவாகும் என்.டி.ஆர். வாழ்க்கைப் படத்தில் ஜெயப்பிரதா வேடத்தில் நடிகை ஹன்சிகா நடிக்க இருக்கிறார். #NTRBiopic #JayaPrada #Hansika
  இயக்குநர் கிரிஷ் இயக்கத்தில் நடிகரும், முன்னாள் ஆந்திர முதல்வருமான மறைந்த என்.டி.ஆர். வாழ்க்கை திரைப்படமாக உருவாகி வருகிறது. இந்த படத்தில் என்டிஆராக நடிப்பது என்டிஆரின் மகனும், நடிகருமான பாலகிருஷ்ணா. என்.டி.ஆர். மனைவியாக இந்தி நடிகை வித்யா பாலன் நடித்து வருகிறார்.

  மேலும் இந்தப் படத்தில் முரளி சர்மா, பிரசாத் ரவுல், நாக சைதன்யா, மகேஷ் பாபு, ராணா டகுபதி, மோகன் பாபு மஞ்சு, ராஜசேகர் போன்றோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள்.

  படத்தில் என்டிஆருடன் நடித்த நடிகைகளின் கதாபாத்திரங்களும் இந்தப் படத்தில் இடம்பெறுகிறது. ஸ்ரீதேவி வேடத்தில் ரகுல் பிரீத்தி சிங் நடிக்க, சாவித்திரி வேடத்தில் நித்யா மேனன் நடிக்கிறார்.  மேலும், ஜெயசுதா வேடத்தில் பாயல் ராஜ்புத் நடிக்க, ஜெயப்பிரதா வேடத்தில் தமன்னா நடிக்க இருப்பதாகச் செய்திகள் வெளியாகின. ஆனால், இப்போது ஜெயப்பிரதா வேடத்தில் நடிக்க ஹன்சிகா ஒப்பந்தமாகி இருக்கிறார். இந்தப் படத்தின் முதல் பாகம் ஜனவரி 9-ம் தேதி வெளியாகிறது.

  பிரபுதேவாவின் குலேபகாவலி படத்துக்குப் பிறகு நடிகை ஹன்சிகா கைவசம் விக்ரம் பிரபுவின் துப்பாக்கி முனை, அதர்வாவின் 100, மகா என மூன்று படங்கள் தமிழில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. #NTRBiopic #JayaPrada #Hansika

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தெலுங்கில் பிரமாண்டமாக உருவாகும் என்.டி.ஆர். வாழ்க்கை வரலாறு படத்தில் சந்திரபாபு நாயுடுவாக நடிக்கும் ராணாவின் மனைவி வேடத்தில் மஞ்சிமாக மோகன் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. #NTRBiopic #ManjimaMohan
  சிம்புவுக்கு ஜோடியாக ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மஞ்சிமா மோகன். பொதுவாகவே கவுதம் மேனனின் படங்களில் கதாநாயகர்களுக்கு இணையாக கதாநாயகிகளும் பேசப்படுவது வழக்கம். அது இப்படத்தின் வாயிலாக மஞ்சிமா மோகனுக்கும் கிடைத்தது.

  தொடர்ந்து விக்ரம் பிரபுவுடன் சத்ரியன், உதயநிதியுடன் இப்படை வெல்லும் போன்ற படங்களில் நடித்தாலும், அவருக்கான வரவேற்பு அதன்பிறகு பெரிதாக இல்லை. தற்போது அவருக்கு தமிழில் கவுதம் கார்த்திக்குடன் நடிக்கும் தேவராட்டம் படம் மட்டுமே உள்ளது.

  இந்நிலையில் தெலுங்கில் தற்போது உருவாகி வரும் என்.டி.ஆர் வாழ்க்கைப் படத்தில் சந்திரபாபு நாயுடுவாக நடிக்கும் ராணாவுக்கு மனைவியாக நடிக்க பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. மிகவும் பிரமாண்டமான பொருட்செலவில் பல முன்னணி நடிகர்கள் நடிக்க உருவாகி வரும் இப்படத்தில் இணைவதன் வாயிலாக தெலுங்கில் தனது இரண்டாவது படத்தில் நடிக்க உள்ளார் மஞ்சிமா.  ஏற்கனவே அச்சம் என்பது மடமையடாவின் தெலுங்கு பதிப்பான ‘சாகசம் ஸ்வாசகா சகிக்கோ’வின் மூலம் தெலுங்கில் அவர் அறிமுகம் ஆகி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. #NTRBiopic #ManjimaMohan

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பிரபல நடிகரும், முன்னாள் ஆந்திர முதல்-மந்திரியுமான என்.டி.ராமாராவ் வாழ்க்கை வரலாறு படத்தில் சந்திரபாபு நாயுடு கதாபாத்திரத்தில் ராணா டகுபதி நடிக்க இருக்கிறார். #NTRBiopic
  பிரபல நடிகரும், முன்னாள் ஆந்திர முதல்-மந்திரியுமான என்.டி.ராமாராவ் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது. தெலுங்கில் உருவாகும் இந்த படத்தில் என்.டி.ராமாராவ் மகன் பாலகிருஷ்ணா அவருடைய அப்பா என்.டி.ஆர். வேடத்தில் நடிக்கிறார்.

  இந்த படத்தில் என்.டி.ராமாராவின் மனைவி பசவதாரகம் வேடத்தில் வித்யாபாலனும், ஸ்ரீதேவி கதாபாத்திரத்தில் ரகுல் ப்ரீத்தி சிங்கும், சாவித்திரி வேடத்தில் கீர்த்தி சுரேஷூம் நடிக்க இருக்கின்றனர்.

  இந்த நிலையில், தெலுங்கு தேசம் கட்சி தலைவரும், ஆந்திர முதல்வருமான சந்திரபாபு நாயுடு கதாபாத்திரத்தில் ராணா டகுபதி நடிக்க இருக்கிறார். நாயுடு கதாபாத்திரத்தில் நடிப்பதில் பெருமை என்று ராணா அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

  கிரிஷ் ஜகர்லமுடி இயக்கும் இந்த படத்தை, பாலகிருஷ்ணாவே தயாரிக்கிறார். #NTRBiopic


  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பிரபாஸ் நடிப்பில் வெளியான பாகுபலி படத்திற்கு பிலிம்பேர் தென் இந்திய விருதுகள் நிகழ்ச்சியில் ஒரு விருதுகள் கூட கிடைக்கவில்லை என்று பிரபாஸ் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வருத்தம் தெரிவித்து வருகின்றனர். #Prabhas
  பாகுபலி படத்துக்காக பிரபாசுக்கு ஒரு விருது கூட கிடைக்கவில்லையே என்று சமூக வலைதளங்களில் பிரபாஸ் ரசிகர்கள் வருத்தம் தெரிவித்து வருகிறார்கள்.

  பிரபாஸ் ரசிகர்களின் சமூக வலைதள பக்கங்களில் ‘இந்த படத்திற்காக தன்னுடைய திருமணத்தையே தள்ளி வைத்தார். 5 ஆண்டுகள் தன் உழைப்பையும் நேரத்தையும் கொடுத்தார். ஒரு நாளைக்கு 40 முட்டைகள் சாப்பிட்டார்.

  6000 திருமண கோரிக்கைகளை நிராகரித்தார். தோள்பட்டையில் பெரிய காயம் அடைந்தார். அவரது நடிப்பால் இந்த ஒட்டுமொத்த நாட்டுமக்களையே கண்ணீர் விடவைத்தார்.  ஆனால் அவரது நடிப்புக்கும், அர்ப்பணிப்புக்கும் ஒரு விருதுகூட இல்லையா? இங்கே விருதுகள் என்பது அங்கீகரிப்பு இல்லை’ என்று சோகத்துடன் பகிர்ந்து வருகிறார்கள்.

  சமீபத்தில் நடந்த பிலிம்பேர் தென் இந்திய விருதுகள் நிகழ்ச்சியில் பிரபாசுக்கு விருது வழங்கப்படாததே இதற்கு காரணம் என்கிறார்கள். #Prabhas #Baahubali
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பிரபு சாலமன் இயக்கத்தில் விஷ்ணு விஷால் - ராணா டகுபதி இணைந்து நடிக்கும் படத்தின் தமிழ், தெலுங்கு பதிப்பிற்கான தலைப்புகள் வெளியாகி இருக்கிறது. #Kaadan #VishnuVishal #RanaDaggubati
  `கும்கி-2' படத்தை இயக்கி வரும் பிரபு சாலமன், அதேநரேத்தில் `ஹாதி மெரே சாதி' படத்தின் தமிழ், தெலுங்கு பதிப்பையும் இயக்கி வருகிறார். விஷ்ணு விஷால் - ராணா டகுபதி இணைந்து நடிக்கும் இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு மூணாரில் முடிந்துவிட்டது. 

  அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் துவங்கவிருக்கும் நிலையில், படத்தின் தலைப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அதன்படி படத்தின் தமிழ் பதிப்பிற்கு `காடன்' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. அதேபோல் தெலுங்கு பதிப்புக்கு `ஆரண்யா' என்றும் தலைப்பு வைத்துள்ளனர்.   தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் உருவாகும் இந்த படத்தை ஈராஸ் இன்டர்நேஷனல் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இந்தி பதிப்பில் புல்கித் சாம்ராட் நடித்த கதாபாத்திரத்தில் விஷ்ணு விஷால் நடிக்கிறார். இந்த படத்தின் மூலம் விஷ்ணு விஷால் தெலுங்கு சினிமாவிலும் அறிமுகமாகிறார். #Kaadan #VishnuVishal #RanaDaggubati

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பிரபு சாலமன் இயக்கத்தில் கும்கி-2 படத்தில் நடிப்பதாக வெளியான தகவலை மறுத்துள்ள விஷ்ணு விஷால், அவர் நடிக்கும் படம் குறித்த விளக்கத்தையும் அளித்துள்ளார். #VishnuVishal #RanaDaggubati
  பிரபு சாலமன் இயக்கத்தில் கடந்த 2012-ஆம் ஆண்டு வெளியான படம் ‘கும்கி’. இதில் விக்ரம் பிரபு நாயகனாகவும், லட்சுமி மேனன் நாயகியாகவும் நடித்திருந்தார்கள். மேலும், தம்பி ராமையா, ஜோ மல்லூரி, அஸ்வின் ராஜா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதையடுத்து இந்த படத்தின் இரண்டாவது பாகத்தை பிரபு சாலன் உருவாக்கி வருகிறார். 

  கும்கி-2 படத்தில் விஷ்ணு விஷால் நடிப்பதாக சமீபத்தில் செய்திகள் வெளியான நிலையில், விஷ்ணு விஷால் அதனை மறுத்துள்ளதுடன், அதற்கான விளக்கத்தையும் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.   அதில் (நானும்) விஷ்ணு விஷால் - ராணா டகுபதி இணைந்து நடிக்கும் படத்தை பிரபு சாலமன் இயக்கி வருகிறார். தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் உருவாகும் இந்த படம் இந்தியில் வெளியான `ஹாதி மெரே சாதி' படத்தின் தழுவலாகும். ஆனால் அதன் ரீமேக் இல்லை. 

  இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்துவிட்ட கேரளாவில் நடந்து முடிந்துவிட்ட நிலையில், அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் துவங்க இருக்கிறது. இந்த படத்தின் மூலம் விஷ்ணு விஷால் தெலுங்கு சினிமாவிலும் அறிமுகமாகிறார். #VishnuVishal #RanaDaggubati

  ×