சோனம் கபூரிடம் மன்னிப்பு கேட்ட பாகுபலி நடிகர்.. ஏன் தெரியுமா?

'கிங் ஆஃப் கோதா' திரைப்படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது.இதில் நடிகர் டாணா டகுபதி பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.
சோனம் கபூரிடம் மன்னிப்பு கேட்ட பாகுபலி நடிகர்.. ஏன் தெரியுமா?
Published on

இயக்குனர் அபிலாஷ் ஜோஷி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்திருக்கும் திரைப்படம் 'கிங் ஆஃப் கோதா'. ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் வேஃபேரர் ஃபிலிம்ஸ் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது. ஜேக்ஸ் பிஜாய் மற்றும் ஷான் ரஹ்மான் இணைந்து இசையமைக்கும் இப்படத்திற்கு நிமிஷ் ரவி ஒளிப்பதிவு செய்கிறார். இப்படம் ஓணம் அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இதையடுத்து சமீபத்தில் இப்படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நடிகர்கள் நானி மற்றும் ராணா டகுபதி கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய ராணா டகுபதி, "பிரபல இந்தி படம் ஒன்றில் நடிகர் துல்கர் சல்மான் நடித்து கொண்டிருந்த போது பாலிவுட்டின் முன்னணி கதாநாயகி ஒருவர் படப்பிடிப்பிற்கு நடுவே தனது கணவருடன் போனில் பேசிக் கொண்டு ஷாப்பிங் செய்து கொண்டிருந்தார். அதுமட்டுமல்லாமல் அவர் தன் டைலாக்கையும் மறந்து பல டேக்குகளை எடுத்துக் கொண்டார். இதனை பார்த்துக் கொண்டிருந்த துல்கர் சல்மான் மிகவும் அமைதியாக அவர் கேட்கும் டேக்குகளை கொடுத்தார்" என்று கூறினார்.

இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து பலர் சோனம் கபூரை தான் ராணா சொல்கிறார் என்று தகவல்களை பரப்பி வந்தனர். இந்நிலையில், இந்த வதந்திக்கு மறுப்பு தெரிவித்து நடிகர் ராணா தனது சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "நான் சோனம் கபூர் குறித்து கூறியதாக பரவி வந்த செய்தி முற்றிலும் தவறானது. நண்பர்களாக, நாங்கள் அடிக்கடி விளையாட்டுத்தனமான கேலிகளை பரிமாறிக்கொள்கிறோம். எனது வார்த்தைகள் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டதற்கு நான் மிகவும் வருந்துகிறேன். சோனம் மற்றும் துல்கர் இருவரிடமும் எனது மனப்பூர்வமான மன்னிப்பைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த பதிவு தவறான புரிதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என நம்புகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com