துல்கர் சல்மான் நடிக்கும் காந்தா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

காந்தா படத்தில் ராணா டகுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் மிஸ்டர் பச்சன் திரைப்பட புகழ் பாக்யஸ்ரீ , சுல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார்.
துல்கர் சல்மான் நடிக்கும் காந்தா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
Published on: 

மலையாள சினிமா முன்னணி நடிகர்களுள் ஒருவர் துல்கர் சல்மான். இவர் நடித்து அண்மையில் வெளியான லக்கி பாஸ்கர் படம் மக்களிடையே பெரிய வரவேற்பை பெற்றது.

அடுத்ததாக துல்கர் சல்மான் காந்தா என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை செல்வமணி செல்வராஜ் இயக்கவுள்ளார்.

இப்படத்தில் மிஸ்டர் பச்சன் திரைப்பட புகழ் பாக்யஸ்ரீ, துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்கிறார். இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் மொழிகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தை வேஃபாரர் பிலிம்ஸ் மற்றும் ராணா ஸ்பிரிட் மீடியா நிறுவனம் இணைந்து தயாரிக்கவுள்ளது.

இந்நிலையில், துல்கர் சல்மான் திரைத்துறைக்கு வந்து 13 ஆண்டுகளை நிறைவு செய்ததை கொண்டாடும் விதமாக காந்தா படக்குழு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது.

இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களை துல்கர் சல்மான் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com