என் மலர்

  நீங்கள் தேடியது "Anushka"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நடிகை அனுஷ்கா நடிக்க உள்ள புதிய படம், தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய 4 மொழிகளில் தயாராக உள்ளது.
  தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருப்பவர் அனுஷ்கா. இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த நிசப்தம் படம் தோல்வியடைந்தது. இதனால் இரண்டு வருடங்களுக்கு மேலாக அவர் படங்களில் நடிக்கவில்லை. இதனிடையே நடிகை அனுஷ்கா, திருமணத்துக்கு தயாராகி வருவதாகவும் கிசுகிசுக்கள் பரவி வந்தன.

  இந்த நிலையில், அனுஷ்கா நடிக்க உள்ள 48-வது படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய 4 மொழிகளில் தயாராக உள்ள இந்த படத்தை பி.மகேஷ்பாபு எழுதி இயக்குகிறார். யூவி கிரியேஷன்ஸ் பட நிறுவனம் இப்படத்தை தயாரிக்க உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. 

  அனுஷ்கா, இயக்குனர் பி.மகேஷ்பாபு
  அனுஷ்கா, இயக்குனர் பி.மகேஷ்பாபு

  இதில் நடிக்கும் இதர நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடக்கிறது. படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. இந்த படம் கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதையம்சத்தில் தயாராக உள்ளதாகவும் இதில் அனுஷ்கா மாடர்ன் பெண்ணாக வித்தியாசமான தோற்றத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சைலன்ஸ் என்ற படத்தில் நடித்து வரும் அனுஷ்கா, மாதவனுக்கு அமெரிக்கா செல்வதில் விசா சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
  அனுஷ்கா சைலன்ஸ் என்ற புதிய படத்தில் மாதவனுடன் இணைந்து நடிப்பதாக ஏற்கனவே அறிவிப்பு வெளியாகியிருந்தது. மாதவனுடன் ரெண்டு படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான அனுஷ்கா நீண்ட இடைவெளிக்குப் பின் அவருடன் இணைந்து நடிக்கிறார். 

  இவர்களுடன் ஷாலினி பாண்டே முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஹாலிவுட் நடிகர் மைக்கேல் மேட்சனும் படக்குழுவில் இணைந்துள்ளார். ஹேமந்த் மதுகர் இயக்கும் இந்த படத்தில் அமெரிக்காவில் கதை நடைபெறுவதாக அமைக்கப்பட்டுள்ளதால் படப்பிடிப்பு அங்கு தொடங்கியது.   தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் வெளியாக உள்ள இந்தப் படத்தின் தெலுங்கு பதிப்பிற்கு நிசப்தம் எனப் பெயரிடப்பட்டுள்ளது. படத்தை அடுத்த ஆண்டு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இதற்கிடையே அனுஷ்கா - மாதவன் அமெரிக்கா செல்வதில் விசா சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்த அனுஷ்கா, தன்னுடைய நியூட்ரிஷியனுடன் இணைந்து உடல் எடை குறைப்பு பற்றி புதிய புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார்.
  விஜய், சூர்யா, ஆர்யா என முன்னணி நடிகர்களுடன் நடித்த அனுஷ்கா தமிழில் வெளியான ‘இஞ்சி இடுப்பழகி’ படத்துக்காக 20 கிலோ எடை அதிகரித்தார். அதன் பின் ‘பாகுபலி’ படத்தில் தேவசேனாவாக நடித்த அனுஷ்காவால் தன்னுடைய பழைய உடல் எடைக்கு திரும்ப முடியவில்லை.

  தற்போது பலகட்ட முயற்சிகளுக்குப் பிறகு, தன்னுடைய உடல் எடையை குறைத்துள்ள அனுஷ்கா, அதற்காகத்தான் எடுத்த முயற்சிகளை தன்னுடைய நியூட்ரிஷியனுடன் இணைந்து ‘தி மேஜிக் வெயிட்லாஸ் பில்’ என்ற தலைப்பில் புத்தகமாக வெளியிட இருக்கிறார்.

  இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “நம்முடைய உடல் எடை அதிகரிப்பு அதற்கான சிகிச்சை முறை என எல்லாமே வாழ்க்கை முறை மாற்றத்தை அடிப்படையாக கொண்டுள்ளது.  அன்றாட வாழ்க்கையில் நாம் சந்திக்கும் மனஅழுத்தம், உடல் எடை அதிகரிப்பு மற்றும் உறவு முறை, தூக்கம், உணர்ச்சிகள் தொடர்பான எல்லாவகையான பிரச்சினைகளுக்கும் வேறு எந்தச் சிகிச்சை முறையும் இன்றி வாழ்க்கை முறையை சரியாக அமைத்துக்கொண்டாலே போதுமானது.

  நமக்கு இருக்கும் எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வுகளும் இருக்கின்றன. நமக்கான தீர்வை நாம்தான் தேர்வு செய்ய வேண்டும். அது தொடர்பான தகவல்களை இந்த புத்தகம் உங்களுக்கு வழங்கும்” என குறிப்பிட்டுள்ளார். இந்தப் புத்தகத்துக்கு ஷில்பா ஷெட்டி முன்னுரை எழுதியுள்ளார்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மணிரத்னம் இயக்கத்தில் உருவாக இருக்கும் பொன்னியின் செல்வன் கதையில் நயன்தாரா ஒப்பந்தமாக இருந்த நிலையில், தற்போது அனுஷ்காவுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. #PonniyinSelvan #Maniratnam
  அமரர் கல்கி எழுதியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ நாவலைப் படமாக்கப் பல வருடங்களாக முயற்சி செய்து வருகிறார் மணிரத்னம். நட்சத்திர அந்தஸ்துள்ள பெரிய நடிகர், நடிகைகள் இதில் நடிக்க உள்ளனர்.

  இந்த கதையை மணிரத்னம் இரண்டு பாகங்களாக உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். படத்தில் பொன்னியின் செல்வனாக ஜெயம் ரவி, வந்தியத்தேவனாக கார்த்தி, ஆதித்த கரிகாலனாக விக்ரம், குந்தவையாக கீர்த்தி சுரேஷ் நடிக்கின்றனர்.   சுந்தரசோழனாக அமிதாப்பச்சன் நடிப்பதாக தகவல் வெளியான நிலையில், அமிதாப் அதனை உறுதிப்படுத்தியுள்ளார். பழுவேட்டரையர் கதாபாத்திரத்தில் மோகன்பாபு மற்றும் சத்யராஜ் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. சூழ்ச்சி செய்யும் மாய மோகினி நந்தினி கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராய் நடிக்கிறார்.

  பூங்குழலியாக நடிக்க நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் தளபதி 63, தர்பார் படங்களில் நயன்தாரா பிசியாகி இருப்பதால் அவருக்கு பதிலாக அனுஷ்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #PonniyinSelvan #Maniratnam #AnushkaShetty

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தமிழ், தெலுங்கு மொழிகளில் மிகவும் பிரபலமான நடிகை அனுஷ்கா, எனக்கு நானே போட்டி என்று கூறியிருக்கிறார். #Anushka
  அனுஷ்காவின் ரசிகர் ஹேம்சந்த் என்பவரால் முகநூலில் அனுஷ்கா பெயரில் ஒரு பக்கம் ஆரம்பிக்கப்பட்டது. ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக அவரே அந்தப் பக்கத்தை நிர்வகித்து வந்த நிலையில், அனுஷ்கா தனது ஒரு பிறந்தநாளின்போது அதை நிர்வகிக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.  அதன் பின்பு இந்தப் பக்கத்தில் லட்சக்கணக்கான ரசிகர்கள் இணைந்தனர். தற்போது இந்த முகநூல் பக்கத்தின் ரசிகர்கள் எண்ணிக்கை ஒரு கோடியைத் தாண்டியுள்ளது. அனுஷ்காவிடம் ‘சினிமாவில் உங்களுக்குப் போட்டியாக யாரை நினைக்கிறீர்கள்...’ என்று கேட்டால், ‘எனக்குப் போட்டி நான் மட்டுமே’ என்று சொல்லி இருக்கிறார்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் அனுஷ்கா, நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். #Anushka #AnushkaShetty
  ‘பாகுபலி 2’ படத்துக்கு பிறகு அனுஷ்கா எந்தப் படத்திலும் நடிக்கவில்லை. பிரபாசுடன் `சாஹோ’ படத்தில் நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டு, கேரக்டருக்காக உடல் இளைக்க, பல சிகிச்சைகளையும் துபாயில் மேற்கொண்டார் எனத் தகவல்கள் வெளியாயின. ஆனாலும் அதிகமான ஆக்‌‌ஷன் காட்சிகள் இருப்பதால் அந்த படத்திலிருந்து அவரே விலகினார் என கூறப்பட்டது.

  இதற்கு உடல் இளைப்பதற்கான சிகிச்சைகள் பலனளிக்காததும் ஒரு காரணம் என தெரிவித்தனர். அனுஷ்காவை திரையில் பார்க்க ரசிகர்கள் ஆவலாய் இருந்தபோதும் தனக்கு வந்த படங்களை தவிர்த்து வந்தார் அனுஷ்கா. உடல் எடை காரணமாக பொது நிகழ்வுகளிலும் பங்கேற்பதை தவித்து வந்தார்.  நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது மாதவனுடன் இணைந்து ‘சைலன்ட்’ என்ற திரில்லர் படத்தில் நடித்து வருகிறார். இதனிடையே அனுஷ்காவின் புகைப்படங்கள் நேற்று மாலை முதல் சமூக வலைதளத்தில் கலக்கி வருகிறது. நடிகரும் புகைப்படக்கலைஞருமான சுந்தர் ராமு இப்படங்களை எடுத்துள்ளார். இந்த படங்களில் அனுஷ்கா உடல் எடையை குறைத்து பழைய தோற்றத்தில் காணப்படுகிறார்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நீண்ட இடைவெளிக்குப் பிறகு மாதவன், அனுஷ்கா இணைந்து நடிக்கும் புதிய படத்தில் ஹாலிவுட் நடிகர்கள், பலரும் இணைந்து பணியாற்ற உள்ளனர். #Madhavan #Anushka #HappyPongal2019
  பீப்பள் மீடியா பேக்ட்ரி மற்றும் கோனா பிலிம் கார்ப்பரேஷன் ஆகிய தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து தமிழ், தெலுங்கு, ஹாலிவுட் நடிகர்கள் நடிக்கும் புதிய படமொன்றை பிரம்மாண்டமாக தயாரிக்கவுள்ளனர். 

  நடிகர்கள் மாதவன், அனுஷ்கா, அஞ்சலி, ஷாலினி பாண்டே, சுபா ராஜு, அவசராலா ஸ்ரீனிவாஸ் உள்ளிட்ட பல நடிகர்கள் நடிக்கவுள்ள இப்படத்தில் மேலும் பிரபல ஹாலிவுட் நடிகர்களும் தொழில்நுட்ப வல்லுனர்களும் பணியாற்றவுள்ளனர். ஹேமந்த் மதுக்கர் இயக்கும் இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகிறது.

  திகில் படமாக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் அமெரிக்காவில் தொடங்கவுள்ளதாகவும் இவ்வருடமே (2019) வெளியாகும் எனவும் தயாரிப்பளர்கள் டி.ஜி.விஸ்வபிரசாத் மற்றும் கோனா வெங்கட் அறிவித்துள்ளனர்.  கோனா வெங்கட், கோபி சுந்தர், ஷானியேல் டியோ, கோபி மோகன், நீராஜா கோனா ஆகியோர் தொழில்நுட்ப கலைஞர்களாக பணியாற்றும் இப்படத்தின் மற்ற விவரங்கள் விரைவில் அதிகார்ப்பூர்வமாக வெளியிடப்படும் என்று தயாரிப்பு தரப்பு கூறியுள்ளது. #Madhavan #Anushka #HappyPongal2019
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் அனுஷ்கா, தற்போது நடிக்க இருக்கும் புதிய படத்திற்காக பயிற்சி ஒன்றை எடுத்து வருகிறார். #Anushka
  தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் அனுஷ்கா ‘சைலன்ஸ்’ என்ற படத்தில் ஒப்பந்தமாகி உள்ளார். 2011-ம் ஆண்டு ‘வஸ்டடு நா ராஜு’ என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான ஹேமந்த் மதுகர் இந்தப் படத்தை இயக்குகிறார்.

  திரில்லர் பாணியில் உருவாகும் இந்தப் படத்தில் அனுஷ்கா செவித்திறன், பார்வைத் திறன் குறைபாடுள்ளவராக நடிக்கிறார். இதற்காக தற்போது பிரத்தியேக பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

  தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் உருவாக உள்ளதால் அந்தந்த திரையுலகைச் சார்ந்த நடிகர்களைப் படத்தில் இணைக்கும் பணிகள் நடைபெற்றுவருகிறது. மாதவன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கீதாஞ்சலி, சங்கராபரணம் உள்ளிட்ட படங்களை தயாரித்த கோனா வெங்கட் இந்தப் படத்தை தயாரிக்கிறார்.  தற்போது படத்தின் முன் தயாரிப்பு பணிகள் தொடங்கி நடைபெற்றுவரும் நிலையில் மார்ச் மாதம் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. படத்தின் பெரும்பாலான காட்சிகள் அமெரிக்காவில் படமாக்கப்பட உள்ளது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பாகுபலி என்ற பிரம்மாண்ட படத்தை கொடுத்த இயக்குனர் ராஜமவுலியின் மகன் திருமணத்தில் நடிகர் பிரபாஸ், நடிகை அனுஷ்கா குத்தாட்டம் போட்டுள்ளனர். #Rajamouli #Prabhas #Anushka
  பாகுபலி இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலியின் மகன் எஸ்.எஸ்.கார்த்திகேயா. ‘ஷோயிங் பிசினஸ்’ என்ற தனது நிறுவனத்தின் மூலம் படங்களுக்கான விளம்பரங்களைச் செய்து வருகிறார். மனம், பாகுபலி உள்ளிட்ட படங்களின் டிரெய்லர்களை இவரது நிறுவனமே உருவாக்கியது.

  இவருக்கும் தெலுங்கு நடிகர் ஜெகபதி பாபுவின் உறவினர் பூஜா பிரசாத்துக்கும் இன்று ஜெய்ப்பூரில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் திருமணம் நடந்தது. பூஜா பிரசாத் கர்நாடக இசைப்பாடகி ஆவார்.

  இதற்காக தெலுங்கு பட நடிகர்கள் நேற்று முன்தினமே ஜெய்ப்பூருக்குச் சென்றுள்ளனர். ஜூனியர் என்.டி.ஆர், ராம் சரண், ராணா டகுபதி ஆகியோர் ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் இருந்து ஒன்றாகச் சென்றனர்.

  பிரபாஸ், அனுஷ்கா, சுஷ்மிதா சென், நாகார்ஜுனா ஆகியோரும் விமான நிலையத்திலிருந்து செல்லும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. மணமக்கள் கார்த்திகேயாவும் பூஜா பிரசாத்தும் விமான நிலையத்தில் சந்தித்துக் கொள்ளும் புகைப்படமும் வெளியாகியுள்ளது.  இவர்களது திருமணம் தென்னிந்திய முறைப்படி இன்று நடைபெற்றது. திருமணத்துக்கு முந்தைய நிகழ்ச்சிகளான மெகந்தி, சங்கீத் ஆகியவை கடந்த 2 நாட்களாக நடந்தன. முன்னதாக நவம்பர் மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

  இந்த விழாவில் நடிகர்கள் ராணா, ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர், பிரபாஸ், நடிகைகள் அனுஷ்கா உள்ளிட்ட பலர் நடனம் ஆடினார்கள். #Rajamouli #Prabhas #Anushka
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  `சாஹோ' படத்தை தொடர்ந்து பிரபாஸ் அடுத்ததாக நடிக்கவிருக்கும் புதிய படத்தில் பிரபாசுடன் இணைந்து நடிக்க அனுஷ்கா ஒப்புக் கொண்டிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #Prabhas #Anushka
  பாகுபலி படம் மூலம் இணைந்த பிரபாஸ் - அனுஷ்கா இருவரும் காதலிப்பதாகவும் விரைவில் திருமணம் செய்துகொள்வார்கள் என்றும் செய்தி வெளியானது. இந்த கிசுகிசுக்களுக்கு பயந்தே இருவரும் இணைந்து நடிப்பதை தவிர்த்து வந்தவர்கள். இப்போது ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார்கள்.

  பிரபாஸ் நடிக்கும் `சாஹோ' படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய நான்கு மொழிகளில் தயாராகி வருகிறது. இந்தப் படத்தைத் தொடர்ந்து ராதா கிருஷ்ணகுமார் இயக்கும் புதிய படத்தில் பிரபாஸ் நடிக்க உள்ளார். சில மாதங்களுக்கு முன் இந்தப் படத்தின் பணிகள் பூஜையுடன் ஆரம்பமானது.

  இந்தப் படமும் தமிழ், இந்தி, தெலுங்கு என மூன்று மொழிகளில் உருவாக உள்ளது. பிரபாஸ் நடிக்கும் 20-வது படமான இதில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கிறார்.  இந்தப் படத்தின் பிளாஷ்பேக் காட்சியில் வரும் முக்கியக் கதாபாத்திரத்தில் எந்த நடிகையை நடிக்க வைக்கலாம் எனப் படக்குழு தேடிவந்தது. அழுத்தமான அந்தக் கதாபாத்திரத்தில் அனுஷ்காவை நடிக்கவைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அனுஷ்காவும் மீண்டும் பிரபாசுடன் நடிக்க ஒப்புக்கொண்டுவிட்டார். #Prabhas #Anushka

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  என்.டி.ராமராவ் வாழ்க்கை கதையில் சரோஜாதேவி வேடத்தில் நடிக்க பிரபல நடிகையிடம் படக்குழுவினர் அணுகி உள்ளனர். #SarojaDevi
  மறைந்த ஆந்திர முதல் மந்திரியும் தெலுங்கு நடிகருமான என்.டி.ராமராவ் வாழ்க்கை சினிமா படமாக தயாராகிறது. இந்த படத்தை 2 பாகங்களாக எடுக்கின்றனர். இதில் என்.டி.ஆர் வேடத்தில் அவரது மகன் பாலகிருஷ்ணா நடிக்கிறார். கிருஷ் டைரக்டு செய்கிறார். என்.டி.ராமராவ் மனைவி பசவதாரம் கதாபாத்திரத்தில் வித்யாபாலன் வருகிறார். 

  சந்திரபாபு நாயுடுவாக ராணாவும் கிருஷ்ணாவாக மகேஷ்பாபுவும் நடிக்கிறார்கள். என்.டி.ராமராவுடன் பல படங்களில் ஜோடி சேர்ந்த சாவித்திரியாக நித்யாமேனனும் ஸ்ரீதேவியாக ரகுல்பிரீத் சிங்கும் நடிக்கின்றனர். இதுபோல் என்.டி.ராமராவ் ஜோடியாக நடித்துள்ள சரோஜாதேவி வேடத்துக்கும் நடிகை தேர்வு நடக்கிறது. 

  சரோஜாதேவி தமிழ், கன்னடம், தெலுங்கில் 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். அன்றைய காலகட்டத்தில் இந்திய பட உலகின் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தார். தமிழில் எம்.ஜி.ஆர். சிவாஜி கணேசன் ஜோடியாகவும் அதிக படங்களில் நடித்தார். அபிநய சரஸ்வதி, கன்னடத்து பைங்கிளி என்றெல்லாம் பட்டங்கள் பெற்றார்.   என்.டி.ராமராவ் வாழ்க்கை கதையில் சரோஜாதேவி வேடத்தில் நடிக்கும்படி அனுஷ்காவை படக்குழுவினர் அணுகி பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். அனுஷ்கா தற்போது உடல் எடை குறைப்பில் தீவிரமாக உள்ளார்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்த அனுஷ்கா, எடையை குறைத்த பிறகுதான் நடிப்பேன் என்று கூறியிருக்கிறார். #Anushka
  நடிகை அனுஷ்காவுக்கு பாகுமதி படத்துக்கு பிறகு புதிய படங்கள் இல்லை. எடை கூடி குண்டாக இருப்பதால் டைரக்டர்கள் புறக்கணிக்கிறார்கள். இதனால் வெளிநாட்டில் சிகிச்சை பெற்று ஒல்லியாகும் முயற்சியில் இருக்கிறார். இந்த நிலையில் சினிமா வாழ்க்கை அனுபவங்கள் பற்றி அவர் கூறியதாவது:-

  “நான் கதாபாத்திரத்துக்காக எவ்வளவு உழைக்கவும் தயாராக இருக்கிறேன். கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளுக்கு நான்தான் முதல் அடையாளம் என்கிறார்கள். பாகுபலி, பாகமதி போன்ற படங்கள் எல்லோருடைய மனதையும் தொட்டு விட்டது என்கிறார்கள். அந்த கதாபாத்திரங்களுக்கு வேறு யாரையும் கற்பனை செய்து கூட பார்க்க முடியாது என்றும் சொல்கிறார்கள்.

  என்னை நம்பி இந்த மாதிரி கதாபாத்திரங்களை கொடுத்த இயக்குனர்களுக்கு நான் நன்றி சொல்ல வேண்டும். இந்த கதாபாத்திரத்தை உங்களால் செய்ய முடியும் என்று அவர்கள் தைரியமூட்டினார்கள். இஞ்சி இடுப்பழகி படத்துக்காக உடல் எடையை கூட்டி நடித்தேன். கூட்டிய எடையை குறைப்பது அவ்வளவு சுலபம் இல்லை.  எடையை குறைக்கும் முயற்சியில்தான் இப்போது ஈடுபட்டு இருக்கிறேன். முன்பு மாதிரியான தோற்றத்துக்கு வந்த பிறகு சினிமாவில் தீவிரமாக நடிக்க வேண்டும் என்று இருக்கிறேன். எனக்கு பட வாய்ப்புகள் அதிகம் வருகின்றன. எடையை குறைத்த பிறகு நடிக்க வேண்டும் என்று எதையும் ஒப்புக்கொள்ளவில்லை.”

  இவ்வாறு அனுஷ்கா கூறினார்.