என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    அனுஷ்கா - விக்ரம் பிரபு நடித்த Ghaati படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
    X

    அனுஷ்கா - விக்ரம் பிரபு நடித்த Ghaati படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

    • தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பல வெற்றி திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார் நடிகை அனுஷ்கா.
    • இப்படத்தை கிரிஷ் ஜகர்லமுடி இயக்கியுள்ளார்.

    தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பல வெற்றி திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார் நடிகை அனுஷ்கா. கடந்த ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற Miss ஷெட்டி MR பொலிஷெட்டி திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து இருந்தார்.

    அதைத் தொடர்ந்து அனுஷ்கா அடுத்ததாக காதி (Ghaati) என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை கிரிஷ் ஜகர்லமுடி இயக்கியுள்ளார்.

    இப்படத்தின் மூலம் நடிகர் விக்ரம் தெலுங்கில் அறிமுகமாகிறார்.

    இத்திரைப்படம் வரும் ஏப்ரல் 18 ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளதாக முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால், பல்வேறு காரணங்களால் ரிலீஸ் தேதி தள்ளிப்போனது.

    இந்நிலையில், படத்தின் புதிய ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. திரைப்படம் வரும் ஜூலை 11 ஆம் தேதி வெளியாகிறது என படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.

    Next Story
    ×