அனுஷ்கா நடித்துள்ள Ghaati படத்தின் டிரெய்லர் ரிலீஸ் தேதி அறிவிப்பு

அனுஷ்கா காதி (Ghaati) என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை கிரிஷ் ஜகர்லமுடி இயக்கியுள்ளார்.
அனுஷ்கா நடித்துள்ள Ghaati படத்தின் டிரெய்லர் ரிலீஸ் தேதி அறிவிப்பு
Published on

நடிகை அனுஷ்கா தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பல வெற்றி திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். கடந்த ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற Miss ஷெட்டி MR பொலிஷெட்டி திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து இருந்தார்.

அதைத் தொடர்ந்து அனுஷ்கா காதி (Ghaati) என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை கிரிஷ் ஜகர்லமுடி இயக்கியுள்ளார்.

இப்படத்தின் மூலம் நடிகர் விக்ரம் பிரபு தெலுங்கில் அறிமுகமாகிறார். இத்திரைப்படம் வரும் ஜூலை 11 ஆம் தேதி வெளியாக இருந்த நிலையில் பட ரிலீசை படக்குழு தள்ளிவைத்தது.

இந்நிலையில், காதி படத்தின் டிரெய்லர் ஆகஸ்ட் 6 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com