என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராஷ்மிகா மந்தனா"

    • கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் போன்ற படங்களில் நடித்ததன்மூலம் ரசிகர்களின் ஃபேவரைட் ஜோடியாக மாறியவர்கள்
    • இரண்டு முறை திருமணம் நடைபெற்றுள்ளது.

    கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் போன்ற படங்களில் நடித்ததன்மூலம் ரசிகர்களின் ஃபேவரைட் ஜோடியாக மாறியவர்கள் விஜய் தேவரகொண்டா- ராஷ்மிகா மந்தனா. இப்படங்களில் இருந்து இருவரும் காதலிப்பதாக நீண்டநாட்களாக, வருடங்களாக பல கிசுகிசுக்கள் வெளியாகின. ஆனால் எவற்றிற்கும் பதிலளிக்காமல் அமைதியாகவே நட்பை தொடர்ந்தது இந்த ஜோடி. 

    இந்நிலையில் ஜனவரி தொடக்கத்திலிருந்தே இவர்களின் திருமணம் தொடர்பான செய்திகள் வெளிவந்த வண்ணம் இருந்தன. இதனையடுத்து ரசிகர்கள் எதிர்பார்த்த அந்த அறிவிப்பை, ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் 'விரோஷ்' என்ற பெயரிலேயே அறிவித்தனர். 

    இந்நிலையில் இன்று இவர்களின் திருமணம் நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் உள்ள ஐடிசி மெமென்டோஸ் ஆடம்பர ஹோட்டலில் நடைபெற்றது. விஜய் தேவரகொண்டா ஆந்திராவைச் சேர்ந்தவர் என்பதால் காலை 10:10 மணிக்கு தெலுங்கு பாரம்பரியப்படியும், ராஷ்மிகா கர்நாடகாவின் குடகு பகுதியைச் சேர்ந்தவர் என்பதால் மாலை 4:30 மணிக்கு அவரது குடும்ப முறைப்படி கொடவா பாரம்பரியப்படியும் என இருமுறை திருமணச் சடங்குகள் நடைபெற்றதாக கூறப்படுகிறது. 

    இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இந்தத் தம்பதியினருக்குக் கடிதம் மூலம் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். ஆனால் புகைப்படங்கள் எதுவும் வெளியாகவில்லை. இந்நிலையில் தம்பதியினர் தற்போது அதிகாரப்பூர்வமாக தங்களது திருமணப் புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

    புகைப்படங்களை பகிர்ந்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள விஜய்,

    "ஒரு நாள், நான் அவளை மிகவும் தேடினேன் (Miss பண்ணினேன்).

    அவள் கூட இருந்திருந்தால் என் நாள் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் என்று தோன்றும் வகையில் அந்தத் தேடல் இருந்தது.

    அவள் எனக்கு எதிரே அமர்ந்திருந்தால், நான் உண்ணும் உணவு இன்னும் முழுமையாகவும், திருப்தியாகவும் இருந்திருக்கும் என்று தோன்றியது.

    அவள் என்னுடன் இருந்தால், என் உடற்பயிற்சிகள் ஒரு தண்டனையாகத் தெரியாமல் இன்னும் மகிழ்ச்சியாக இருந்திருக்கும் என்று தோன்றியது.

    நான் எங்கே இருந்தாலும், அந்த 'வீடு' போன்ற உணர்வையும், அமைதியையும் உணர அவள் எனக்குத் தேவைப்பட்டாள்.

    அதனால்,

    என் உயிர் நண்பியை... என் மனைவியாக்கிக் கொண்டேன்." எனக் குறிப்பிட்டுள்ளார்.


    • இந்த ஓட்டல் ஆடம்பர நிகழ்ச்சிக்கு பெயர் பெற்றது.
    • திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டங்கள் நேற்று முதல் தொடங்கியது.

    நடிகர் விஜய்தேவரகொண்டா -ராஷ்மிகா காதல் திருமணம் நாளை உதய்ப்பூரில் நடக்கிறது. நெருங்கிய உறவினர்கள் 100 பேர் மட்டும் பங்கேற்கும் இந்த திருமண விழா உதய்ப்பூர் நகரத்தில் இருந்து சுமார் 30 கி.மீட்டர் தொலைவில் ஆரவல்லி மலை உச்சியில் அமைந்துள்ள ஐ.டி.சி. மெமென்டோஸ் ரிசார்ட்டில் நடைபெறுகிறது.

    மலைப் பகுதியில் விரிவான தோட்டங்களுக்கு மத்தியில் உள்ள இந்த ஆடம்பர ரிசார்ட் தனியுரிமைக்கு பெயர் பெற்றது. இதில் 117 அறைகள் உள்ளன. சுமார் 3 ஆயிரம் பேர் தங்கலாம். இந்த ஓட்டல் ஆடம்பர நிகழ்ச்சிக்கு பெயர் பெற்றது.

    திருமணத்திற்காக விஜய் தேவரகொண்டா- ராஷ்மிகா குடும்பத்துடன் சில தினங்களுக்கு முன்பு ஐதராபாத்தில் இருந்து உதய்ப்பூர் புறப்பட்டு சென்றனர். திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டங்கள் நேற்று முதல் தொடங்கியது. இன்று ஹல்டி மற்றும் சங்கீத் விழாக்கள் நடைபெறுகிறது.

    நாளை குடும்பத்தினர், நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் இருவரது திருமணமும் நடைபெறுகிறது. ஆண்டுக்கணக்கில் காதலில் ரகசியத்தை காத்தது போல் திருமண விழாவிலும் ரகசியம் காக்கின்றனர் விஜய் தேவரகொண்டா-ராஷ்மிகா.

    • திருமண அழைப்பிதழும் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது.
    • அமிஷ் ஷர்மா இயக்கத்தில் ஷாகித் கபூர் நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா நடிப்பதாக இருந்தது.

    விஜய் தேவரகொண்டா- ராஷ்மிகா திருமணம் வருகிற 26-ந்தேதி ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள உதய்பூர் அரண்மனையிலும், அதனைத்தொடர்ந்து திருமண வரவேற்பு மார்ச் 4-ந்தேதி நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது.

    இதுதொடர்பான அழைப்பிதழும் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. திருமணத்துக்கு சில நாட்களே உள்ள நிலையில், இந்தியில் முன்னணி நடிகரின் படத்தில் இருந்து ராஷ்மிகா விலகியிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

    அதாவது அமிஷ் ஷர்மா இயக்கத்தில் ஷாகித் கபூர் நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா நடிப்பதாக இருந்தது. இதற்கிடையில் ராஷ்மிகாவின் திடீர் விலகல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருமணத்தையொட்டி, இந்த விலகல் முடிவை அவர் எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.

    • தற்போது யாஷ் நடிப்பில் உருவாகி வரும் டாக்ஸிக் படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
    • இந்திய அளவில் பிரபலமான அனுஷ்கா சொத்து மதிப்பு ரூ.135 கோடியை தாண்டியுள்ளது.

    திரை உலகில் ஹீரோக்கள் மட்டுமே அதிக சம்பளம் வாங்கி வந்தனர். சமீபகாலமாக ஹீரோயின்களின் சம்பளமும் அதிகரிக்க தொடங்கி வருகிறது. கதாநாயகர்களை போல கதாநாயகிகளின் சம்பளமும் கோடிகளை தாண்டி உள்ளது.

    சினிமா மட்டுமின்றி விளம்பரங்கள் மற்றும் சொந்தமான தொழிலில் ஈடுபடுவது மூலம் கதாநாயகிகளின் வருமானம் உச்சத்தை அடைந்து வருகிறது.

    இந்நிலையில் 2026-ம் ஆண்டு தென்னிந்திய திரை உலகில் டாப் 10 கதாநாயகிகளின் பட்டியல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    நயன்தாரா: தென்னிந்திய திரை உலகின் லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்டு வரும் நயன்தாரா சினிமா நடிப்பு மட்டுமின்றி தயாரிப்பு, விளம்பர படங்கள், சொந்தமாக அழகு சாதன பொருட்கள் விற்பனை போன்றவை செய்து வருகிறார்.

    தற்போது யாஷ் நடிப்பில் உருவாகி வரும் டாக்ஸிக் படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவரது சொத்து மதிப்பு ரூ.200 கோடி என தகவல் வெளியாகி இருக்கிறது.

    அனுஷ்கா: பாகுபலி, அருந்ததி போன்ற படங்கள் மூலம் இந்திய அளவில் பிரபலமான அனுஷ்கா சொத்து மதிப்பு ரூ.135 கோடியை தாண்டியுள்ளது.

    தமன்னா: தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் நடிப்பது, தனி பாடலுக்கு நடனம் ஆடுவது என திரை உலக ரசிகர்களை கவர்ந்து வரும் தமன்னா சொத்து மதிப்பு ரூ.110 முதல் ரூ.120 கோடி என கூறப்பட்டுள்ளது.

    சமந்தா: ரூ.110 முதல் ரூ.120 கோடி, திரிஷா-ரூ.85 முதல் ரூ.100 கோடி, காஜல் அகர்வால்-சுமார் ரூ.85 கோடி, ராஷ்மிகா மந்தனா-ரூ.66 கோடி, பூஜா ஹெக்டே-ரூ.50 கோடி, சாய்பல்லவி-ரூ.47 கோடி, சுருதிஹாசன்-ரூ.45 கோடி என தகவல்கள் வெளியாகி உள்ளன.

    • வரும் 26-ந் தேதி ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள உதய்பூர் அரண்மனையில் திருமணம் நடக்க இருப்பதாக தகவல்.
    • திருமணம் பற்றி இருவருமே அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடாமல் மவுனம் காத்து வருகின்றனர்.

    விஜய் தேவரகொண்டா-ராஷ்மிகா திருமண நிச்சயதார்த்தம் ரகசியமாக முடிந்த நிலையில், இருவரது திருமணம் வருகிற 26-ந் தேதி ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள உதய்பூர் அரண்மனையில் நடக்க இருப்பதாக கூறப்படுகிறது.

    ஆனால் திருமணம் பற்றி இதுவரை இருவருமே அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடாமல் மவுனம் காத்து வருகிறார்கள்.

    இதற்கிடையில் விஜய் தேவரகொண்டா- ராஷ்மிகா ஜோடி தங்களது திருமண நிகழ்வை ஆவணப்படமாக தயாரித்து ஓ.டி.டி. தளத்தில் வெளியிடவும், இதற்காக பெரிய தொகைக்கு ஒப்பந்தம் பேசியிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

    ஏற்கனவே நயன்தாரா-விக்னேஷ் சிவன் தம்பதியும் தங்கள் திருமணத்தை இதேபோல ஆவணப்படமாக தயாரித்து ஓ.டி.டி. தளத்தில் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

    • காதலை எப்படி சொல்லாமல் மறைத்து வந்தார்களோ, அதேபோல திருமண நிச்சயதார்த்தம் குறித்தும் இதுவரை இருவருமே வெளிப்படையாக சொல்லவில்லை.
    • ராஷ்மிகா கையில் இருக்கும் நிச்சய மோதிரம் இதை உறுதி செய்துள்ளது.

    எப்போது தான் இவர்கள் திருமணம் நடக்கும்? என்று எதிர்பார்த்த நிலையில், கடந்த ஆண்டு ஐதராபாத்தில் விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா திருமண நிச்சயதார்த்தம் ரகசியமாக நடந்து முடிந்தது. காதலை எப்படி சொல்லாமல் மறைத்து வந்தார்களோ, அதேபோல திருமண நிச்சயதார்த்தம் குறித்தும் இதுவரை இருவருமே வெளிப்படையாக சொல்லவில்லை. ஆனாலும் ராஷ்மிகா கையில் இருக்கும் நிச்சய மோதிரம் இதை உறுதி செய்துள்ளது.

    இதற்கிடையில் விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா திருமணம் வருகிற 26-ந்தேதி ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள உதய்பூர் அரண்மனையில் நடக்க இருப்பதாக கூறப்படுகிறது.

    இந்தநிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட ராஷ்மிகாவிடம், 'உதய்பூரில் வருகிற 26-ந்தேதி திருமணமா?' என்று கேட்கப்பட்டது. இதற்கு அப்படியெல்லாம் இல்லையே... என்று பதிலளித்துள்ளார் ராஷ்மிகா.

    ராஷ்மிகாவின் இந்த திகைப்பூட்டும் பதிலால் மறுபடியும் ரசிகர்களிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது.

    • அக்டோபர் மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது.
    • வீடியோவை கண்ட ரசிகர்கள், பயனர்கள் பலரும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

    தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையான ராஷ்மிகாவுக்கும், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் தேவரகொண்டாவுக்கும் ஐதராபாத்தில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. ஆனால் காதலை போலவே, இருவரும் இந்த விவகாரம் குறித்து வாயைத் திறக்காமல் ரகசியமாகவே வைத்திருந்தனர். ஆனாலும் ராஷ்மிகா விரலில் இருந்த நிச்சயதார்த்த மோதிரம் அதை சொல்லாமல் சொல்லியது.

    இதனிடையே, தெலுங்கில் நடிகர் ஜெகபதி பாபு நடத்திய நிகழ்ச்சியில் ராஷ்மிகா கலந்துகொண்டார். அப்போது அவரது விரலில் அணிந்திருக்கும் மோதிரம் பற்றி பேச்சு எழுந்தது. இதற்கு ராஷ்மிகா, 'இது என் வாழ்நாளில் முக்கியமான ஒன்று' என்று கண்ணடித்து சிரித்தார்.

    இதனை தொடர்ந்து, விஜய் தேவரகொண்டா- ராஷ்மிகா ஜோடி பிப்ரவரி மாதம் 26-ந்தேதி ராஜஸ்தானின் உதய்பூரில் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இருப்பினும் இந்த தகவல்கள் குறித்து இருதரப்பினரும் பதிலளிக்காமல் இருந்து வந்தனர்.

    இந்த நிலையில், விஜய் தேவரகொண்டா- ராஷ்மிகா ஜோடி ராஜஸ்தானின் உதய்பூரில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் நாளை திருமணம் செய்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள வீடியோவில் திருமணத்திற்காக பிரமாண்டமான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. ஆனால் இதற்கு எப்போதும் போல இருதரப்பினரும் பதிலளிக்காமல் மவுனமாக உள்ளனர்.

    மேலும் வீடியோவை கண்ட ரசிகர்கள், பயனர்கள் பலரும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். 



    • இப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 11-ந்தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • வரலாற்றுப் பின்னணியில் உருவாகும் இப்படத்தின் Title Glimpse வீடியோவை ரசிகர்கள் இணையதளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

    தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் தேவரகொண்டா தனது 'Taxiwaala' இயக்குனர் ராகுல் சங்க்ரித்யனுடன் மீண்டும் இணைந்துள்ளார். இது விஜய் தேவரகொண்டாவின் 14-வது படமாகும்.

    இந்த நிலையில் விஜய் தேவரகொண்டாவின் புதிய படத்திற்கான தலைப்பு தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அப்படத்திற்கு 'ரணபாலி' என்று பெயரிடப்பட்டுள்ளது. தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையான ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்து வருகின்றனர். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 11-ந்தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    வரலாற்றுப் பின்னணியில் உருவாகும் இப்படத்தின் Title Glimpse வீடியோவை ரசிகர்கள் இணையதளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

    இதனிடையே, விஜய் தேவகொண்டா- ராஷ்மிகா மந்தனா இருவரும் அடுத்த மாதம் திருமணம் செய்து கொள்வதாக தகவல்கள் வெளியான நிலையில், இருவரும் இணைந்து நடித்துள்ள இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 



    • 2025-ம் ஆண்டு கதாநாயகிகளுக்கு ஒரு பொற்காலமாக அமைந்துள்ளது.
    • கதாநாயகிகளின் ஆதிக்கத்தில் பல படங்கள் வெற்றி பெற்று கோடிகளில் வசூலை பெற்றுள்ளது.

    திரை உலகில் கதாநாயகர்களால் படங்கள் வெற்றி பெற்று நல்ல வசூலை பெறுவது வழக்கமான ஒன்று. ஆனால் இந்த ஆண்டு கதாநாயகிகளின் ஆதிக்கத்தில் பல படங்கள் வெற்றி பெற்று கோடிகளில் வசூலை பெற்றுள்ளது.

    2025-ம் ஆண்டு கதாநாயகிகளுக்கு ஒரு பொற்காலமாக அமைந்துள்ளது. அதிக வசூல் பெற்று தந்த 5 கதாநாயகிகள் குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம்


    ராஷ்மிகா மந்தனா:-

    2025-ம் ஆண்டில் பொருத்தவரை பாக்ஸ் ஆபீஸ் வசூலில் சாதனை படைத்து முதல் இடத்தில் இருப்பவர் ராஷ்மிகா மந்தனா. சாவா, சிக்கந்தர், தம்மா மற்றும் குபேரா, தி கேர்ள் பிரெண்ட் போன்ற படங்களில் நடித்து இருக்கிறார். அவர் நடிப்பில் வெளியான படங்களில் 5 படங்கள் மொத்தமாக ரூ.1347.71 கோடி வசூலை பெற்றுள்ளது. இதையடுத்து இந்தியாவில் அதிக வசூல் செய்த நடிகை என ராஷ்மிகாவை திரை உலகம் கொண்டாடி வருகிறது.


    ருக்மணி வசந்த்-

    கன்னட திரை உலகில் பிரபல நடிகையாக இருந்த ருக்மணி வசந்த் நடிப்பில் காந்தாரா அத்தியாயம் 1, ஏஸ், மதராசி ஆகிய மூன்று படங்கள் வெளியாகி இருக்கிறது. இந்த ஆண்டு அவரது படங்களின் மொத்த வசூல் ரூ.963.33 கோடி மதிப்பில் ருக்மிணி 2-ம் இடத்தில் இருக்கிறார்.


    சாரா அர்ஜுன்:-

    ரன்வீர் சிங் நடிப்பில் வெளியான துரந்தர் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் சாரா அர்ஜுன். முதல் படத்திலேயே ரூ.836.75 கோடி அவர் நடிப்பில் வெளியான துரந்தர் படம் வசூலை பெற்று தந்துள்ளது. இதையடுத்து இந்திய அளவில் அதிக வசூலை பெற்று தந்த நடிகைகளின் 3-வது இடத்தில் சாரா இருக்கிறார்.


    அனீத் பத்தா:

    4-ம் இடத்தில் இருக்கும் அனீத் பத்தா நடிப்பில் வெளியான சாயாரா ரூ.570.33 கோடி வசூலை பெற்று சாதனை படைத்தது.


    கியாரா அத்வானி:-

    கேம் சேஞ்சர் படத்தில் கியாரா அத்வானி நடித்துள்ள கேம் சேஞ்சர், வார்2 படங்கள் நல்ல வரவேற்பை பெறாவிட்டாலும் ரூ.550.63 கோடி வசூலை பெற்று இருக்கிறது.


    ஸ்பெஷல் மென்ஷன்:

    கல்யாணி பிரியதர்ஷன்:-

    டொமினிக் அருண் ஃபேன்டசி-ஆக்ஷன் ஜானரில் இயக்கிய திரைப்படம் லோகா. கல்யாணி பிரியதர்ஷன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்த இப்படம் தான் இந்தியாவின் முதல் பெண் சூப்பர் ஹீரோ படம் என்று கருதப்படுகிறது.

    ஓணம் பண்டிகையை ஒட்டி வெளியான இப்படம் உலகலவில் ரூ.300 கோடி வசூலை தாண்டி மலையாளத்தின் அதிக வசூல் படமாக மாறியது. மேலும், கதாநாயகியை மையமாக கொண்ட படங்களில் அதிக வசூல் குவித்த இந்திய திரைப்படம் என்ற சாதனையையும் இப்படம் படைத்தது.

    இதனால் தான் இந்த பட்டியலில் உள்ள மற்ற நடிகைகளை விட கல்யாணி பிரியதர்ஷன் தனித்து தெரிகிறார். அதற்காகவே அவருக்கு இந்த ஸ்பெஷல் மென்ஷன் பிரிவில் இடம் கிடைத்துள்ளது.

    • அவரது நடிப்பில் ‘காக்டெயில்', ‘மைசா' ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளன.
    • பெரிய பட்ஜெட் படங்கள் என்றால் ரூ.13 கோடி வரை கேட்பதற்கும் திட்டமிட்டுள்ளாராம்.

    'புஷ்பா' படத்தில் நடித்து பான் இந்திய நடிகையாக பிரபலமான ராஷ்மிகாவுக்கு அதன்பிறகு அடித்தது அனைத்துமே 'ஜாக்பாட்' தான்.

    தமிழில் விஜய் ஜோடியாக நடித்த 'வாரிசு' ரூ.300 கோடியும், இந்தியில் ரன்பீர் கபூர் ஜோடியாக நடித்த 'அனிமல்' படம் ரூ.1,000 கோடியும், அல்லு அர்ஜூன் ஜோடியாக நடித்த 'புஷ்பா-2' ரூ.1,800 கோடிக்கும் அதிகமாக வசூல் குவித்தது.

    அவரது நடிப்பில் 'காக்டெயில்', 'மைசா' ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளன. ஒரு படத்துக்கு ரூ.5 கோடி வரை சம்பளம் பெற்று வந்த ராஷ்மிகா தனது சம்பளத்தை ரூ.10 கோடியாக உயர்த்தியுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. பெரிய பட்ஜெட் படங்கள் என்றால் ரூ.13 கோடி வரை கேட்பதற்கும் திட்டமிட்டுள்ளாராம்.

    இது திரையுலகில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அடுத்த ஆண்டில் விஜய் தேவரகொண்டாவுடன் திருமண பந்தத்தில் இணையவுள்ள ராஷ்மிகா, காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்ள நினைக்கிறார்.

    • ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியான பல படங்கள் வசூல் சாதனையை நிகழ்த்தி இருக்கின்றன.
    • ராஷ்மிகா மந்தனா நடித்த 'தி கேர்ள் பிரண்ட்' படமும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

    தென்னிந்திய மொழி திரைப்படங்கள் மட்டுமின்றி, பாலிவுட் ரசிகர்கள் மனதிலும் தனக்கான இடத்தை தக்கவைத்துக் கொண்டவர், ராஷ்மிகா மந்தனா. இவரது நடிப்பில் வெளியான பல படங்கள் பல கோடி வசூல் சாதனையை நிகழ்த்தி இருக்கின்றன.

    சமீபத்தில் ராஷ்மிகா மந்தனா கதையின் நாயகியாக நடித்த 'தி கேர்ள் பிரண்ட்' படமும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

    இந்நிலையில், ராஷ்மிகா மந்தனா நடிக்கும் 'மைசா' படத்தின் 'First Glimpse' வீடியோ வெளியாகியுள்ளது. இப்படத்தை ரவீந்திர புல்லே இயக்கியுள்ளார். 

    கண்ணியமான சமூகத்தை உருவாக்க ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்துங்கள்.

    ஏஐ தொழில்நுட்பத்தில் பெண்களின் மார்பிங் புகைப்படங்கள் இணையத்தில் பகிரப்படுவது குறித்து நடிகை ராஷ்மிகா கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து மேலும் கூறிய அவர்," கண்ணியமான, முற்போக்கான சமூகத்தை உருவாக்க ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்துங்கள்.

    மக்கள் மனிதர்களை போல் செயல்படாவிட்டால் அவர்களுக்கு மன்னிக்க முடியாத கடுமையான தண்டனைகள் தரப்பட வேண்டும்.

    முன்னேற்றத்திற்கான மிகப்பெரிய சக்தியான ஏஐ-ஐ தவறாக பயன்படுத்தி பெண்களை குறிவைப்பது தார்மீக வீழ்ச்சியை காட்டுகிறது" என்றார்.

    ×