என் மலர்

  நீங்கள் தேடியது "rashmika mandana"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகை ராஷ்மிகா மந்தனா.
  • இவர் விஜய்யின் ‘வாரிசு’ திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

  தமிழில் சுல்தான் படத்தில் கார்த்தி ஜோடியாக அறிமுகமான ராஷ்மிகா மந்தனா தற்போது விஜய்யுடன் தமிழ், தெலுங்கு மொழிகளில் தயாராகும் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இப்படம் 2023-ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகவுள்ள நிலையில் இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


  வாரிசு

  இந்நிலையில் நடிகை ராஷ்மிகா, தனுஷ் படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு அடுத்த வருடம் ஜனவரி மாதம் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது.


  தனுஷ் - ராஷ்மிகா

  இதையடுத்து இந்த படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்கவுள்ளதாகவும் இது தொடர்பாக படக்குழு அவரிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ராஷ்மிகா மற்றும் விஜய் தேவரகொண்டா இருவரும் கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் படத்தில் இணைந்து நடித்தனர்.
  • இருவரும் காதலிப்பதாக அவ்வப்போது கிசுகிசுக்கப்பட்டது.

  தமிழில் சுல்தான் படத்தில் கார்த்தியுடன் நடித்த ராஷ்மிகா மந்தனா தற்போது வாரிசு படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ராஷ்மிகாவுக்கு ஏற்கனவே திருமணம் முடிவாகி சில காரணங்களால் நின்று போனது. மேலும் சிலருடன் இணைத்தும் கிசுகிசுக்கப்பட்டார்.

   

  விஜய் தேவர்கொண்டா - ராஷ்மிகா மந்தனா

  விஜய் தேவர்கொண்டா - ராஷ்மிகா மந்தனா

  தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டாவும், நடிகை ராஷ்மிகா மந்தனாவும், கீதா கோவிந்தம் படத்தில் இணைந்து நடித்திருந்தனர். இந்த படத்தில் இருவரின் கெமிஸ்டிரி தாறுமாறாக இருந்தது. இந்த படம் வசூலை அள்ளியது. கீதா கோவிந்தம் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இந்த ஜோடி டியர் காம்ரேட் என்ற படத்தில் நடித்தனர். இந்த இரண்டு படங்களுமே வெற்றியடைந்ததற்கு இவர்களது கெமிஸ்ட்ரி தான் முக்கிய காரணம் என்று பேசப்பட்டது.

   

  விஜய் தேவர்கொண்டா - ராஷ்மிகா மந்தனா

  விஜய் தேவர்கொண்டா - ராஷ்மிகா மந்தனா

  டியர் காம்ரேட் படத்தில் ஜோடியாக நடித்தபோது இருவரும் காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்டது. இந்த கிசுகிசு உண்மை என்பது போல டியர் காம்ரேட் படத்தில் முத்த காட்சி இடம் பெற்றிருந்தது. ஆனால், நாங்கள் இருவரும் நண்பர்கள் தான், காதலர்கள் இல்லை என கூறி வந்தனர்.

   

  விஜய் தேவர்கொண்டா - ராஷ்மிகா மந்தனா

  விஜய் தேவர்கொண்டா - ராஷ்மிகா மந்தனா

  அவ்வபோது இவர்கள் ஜோடியாக ஊர் சுற்றும் புகைப்படங்களும் வீடியோக்களும் தொடர்ந்து வெளியே வந்து கொண்டிருந்தது. அந்த வகையில், இந்த ஜோடி தற்போது மாலத்தீவில் விடுமுறையை கொண்டாட சென்றுள்ளனர். இதற்காக இருவரும் தனித்தனியே விமான நிலையத்திற்கு வந்தனர். ஆனால், இருவரும் ஜோடியாக ஒரே விமானத்தில் மாலத்தீவுக்கு சென்றுள்னனர்.

   

  விஜய் தேவர்கொண்டா - ராஷ்மிகா மந்தனா

  விஜய் தேவர்கொண்டா - ராஷ்மிகா மந்தனா

  ராஷ்மிகா மும்பை விமான நிலையத்தில் காணப்பட்டார். அவர் வருவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு, நடிகர் விஜய் தேவரகொண்டாவும் விமான நிலையத்திற்குள் நுழைந்தார். இருவரும் ஜோடியாக மாலத்தீவு செல்லும் விமானத்தில் ஏறியதால் இவர்களைப் பற்றிய காதல் விவகாரம் மீண்டும் பேசுபொருளாகி உள்ளது. 

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • இயக்குனர் பெப்பின் ஜார்ஜ் ஜெயசீலன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘எமகாதகி’.
  • இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகை ராஷ்மிகா மந்தனா வெளியிட்டுள்ளார்.

  இயக்குனர் பெப்பின் ஜார்ஜ் ஜெயசீலன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'எமகாதகி'. இப்படத்தில் ஒரு பெண் முதன்மை நாயகி கதாப்பாத்திரத்தில் ரூபா கொடுவயூர் நடித்துள்ளார். மேலும் நரேந்திர பிரசாத், கீதா கைலாசம், ஆர்.ராஜூ, சுபாஷ் ராமசாமி, ஹரிதா, பொற்கொடி, ஜெய், பிரதீப், ராமசாமி உள்ளிட்ட பலர் இணைந்து நடித்துள்ளனர். புதுமுகங்களால் உருவாகும் இப்படம் எந்தவித சமரசமுமின்றி முழுக்க முழுக்க கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தை நடிகர் வெங்கட் ராகுல், ஒளிப்பதிவாளர் சுஜித்சாரங், எடிட்டர் ஸ்ரீஜித்சாரங் இணைந்து தயாரித்துள்ளனர்.

  எமகாதகி

  எமகாதகி

   

  தஞ்சாவூரை சுற்றிய கிராமங்களில் இப்படத்தின் முழுப்படப்பிடிப்பும் நடத்தப்பட்டுள்ளது. கிராமத்து பின்னணியில் நடக்கும், சூப்பர் நேச்சுரல் மிஸ்டரி திரில்லராக இப்படம் உருவாகியுள்ளது. இதன் படப்பிடிப்பு முடிந்த நிலையில் இறுதிக்கட்ட வேலைகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகை ராஷ்மிகா மந்தனா வெளியிட்டார். இந்த ஃபர்ஸ்ட் போஸ்டர் ரசிகர்களை கவர்ந்து வைரலாகி வருகிறது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • விஜய் நடித்து வரும் 'வாரிசு' திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது.
  • வாரிசு திரைப்படம் 2023 பொங்கலுக்கு ரிலீசாகும் என்பதை படத்தயாரிப்பு நிறுவனம் உறுதி செய்துள்ளது.

  வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் 'வாரிசு' திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

   

  வாரிசு

  வாரிசு

  இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அடுத்த மாத இறுதிக்குள் இதன் முழு படப்பிடிப்பும் முடிவடைந்துவிடும் எனக் கூறப்படுகிறது. மேலும், இப்படத்தின் முதல் சிங்கிள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

   

  வாரிசு

  வாரிசு

  இந்நிலையில் வாரிசு படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு இன்று தொடங்குவதாக படக்குழு அறிவித்துள்ளது. இதனை படத்தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ், தனது அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப் பக்கத்தில் தெரிவித்துள்ளது. அதில் இன்னும் 2 பாடல்களும், 2 சண்டை காட்சிகளும் மட்டுமே படமாக்க வேண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் ஏற்கனவே அறிவித்தபடி, வாரிசு திரைப்படம் 2023 பொங்கலுக்கு ரிலீசாகும் என்பதையும் படத்தயாரிப்பு நிறுவனம் உறுதி செய்துள்ளது. இதனை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் வாரிசு.
  • வாரிசு படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் படப்பிடிப்பு காட்சிகள் இணையத்தில் கசிந்துள்ளது.

  வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் திரைப்படம் 'வாரிசு'. இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். 

   

  இப்படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. வாரிசு படத்தின் படப்பிடிப்பு காட்சிகள் இணையதளத்தில் தொடர்ந்து வெளியாகி படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. சில வாரங்களுக்கு முன்பு சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் படப்பிடிப்பை நடத்தியபோது, சிலர் அதை திருட்டுத்தனமாக படம் பிடித்து இணையதளத்தில் பகிர்ந்தனர்.

   

  சில தினங்களுக்கு முன்பு வாரிசு படப்பிடிப்பில் விஜய் கோட் சூட் அணிந்து தொழிலாளர்களுடன் பேசுவது போன்ற புகைப்படம் கசிந்தது. மருத்துவமனையில் நடந்த வாரிசு படப்பிடிப்பை செல்போனில் படம்பிடித்து சிலர் இணையதளத்தில் வெளியிட்டனர்.

   

  இந்த நிலையில் விஜய்யும், படத்தின் நாயகி ராஷ்மிகா மந்தனாவும் காதல் காட்சியில் பங்கேற்று நடனம் ஆடும் வீடியோ இணையத்தில் கசிந்துள்ளது. 26 நொடிகள் கொண்ட வீடியோ காட்சி லீக் ஆனதால் படக்குழு அதிர்ச்சியடைந்துள்ளனர். தொடர்ந்து வாரிசு காட்சிகள் இணையத்தில் லீக் ஆகி வருவதால் படக்குழு குழப்பத்தில் உள்ளனர்.

  ×