என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sri leela"

    • அஜித்தை சந்தித்த நடிகை ஸ்ரீலீலா அவருடன் செல்பி எடுத்து கொண்டார்.
    • பராசக்தி படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் ஸ்ரீலீலா ஈடுபட்டுள்ளார்

    தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக விளங்குபவர் அஜித் குமார். சினிமா தாண்டி கார் பந்தயத்திலும் கலக்கி வரும் நடிகர் அஜித் குமார், சமீபத்தில் ஸ்பெயினில் நடந்த 24 மணி நேர கார் பந்தயத்தில் 3-வது இடம் பிடித்தார். இதனை தொடர்ந்து இந்த ஆண்டில் (2026) அபுதாபியில் நடைபெறும் கார் பந்தய போட்டிகளிலும் அஜித்குமார் ரேசிங் அணி கலந்து கொள்கிறது.

    இதற்கு முன்னதாக மலேசியாவில் நடைபெற்று வரும் கார் பந்தய போட்டியில் அஜித்குமார் ரேசிங் அணி பங்கேற்றது. அப்போது அஜித்தை சந்தித்த நடிகை ஸ்ரீலீலா அவருடன் செல்பி எடுத்து கொண்டார்.

    இந்நிலையில் பராசக்தி படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் ஈடுபட்டுள்ள ஸ்ரீலீலா நடிகர் அஜித்குமாரின் குறித்து பேசியுள்ளார்.

    நேர்காணலில் பேசிய ஸ்ரீலீலா, "நான் அஜித்குமாரின் வெறித்தனமான ரசிகை. அவர் அற்புதமான மனிதர். எனக்கும் ரேஸிங்கில் ஆர்வம் உண்டு'' என்று தெரிவித்தார்.

    இதனிடையே, ஏகே 64 படத்தில் அஜித்துக்கு ஜோடியாக ஸ்ரீலீலா நடிக்கவுள்ளதாக தகவல் பரவி வருவது குறிப்பிடத்தக்கது.

    • தொழில்நுட்பம் வாழ்க்கையை எளிமைப்படுத்ததான், சிக்கலாக்க அல்ல.
    • தொழில்நுட்பத்தை நல்லதற்கு பயன்படுத்துவதற்கும், தவறான முறையில் பயன்படுத்துவதற்கும் வித்தியாசம் உள்ளது.

    தவறான முறையில் ஏஐ பயன்பாடு இருப்பதாக நடிகை ஸ்ரீலீலா வேதனை தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து நடிகை ஸ்ரீலீலா கூறியதாவது:-

    AI-ஆல் உருவாக்கப்படும் தவறான விஷயங்களை ஆதரிக்க வேண்டாம் என கையெடுத்து கும்பிட்டு அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.

    தொழில்நுட்பத்தை நல்லதற்கு பயன்படுத்துவதற்கும், தவறான முறையில் பயன்படுத்துவதற்கும் வித்தியாசம் உள்ளது.

    தொழில்நுட்பம் வாழ்க்கையை எளிமைப்படுத்ததான், சிக்கலாக்க அல்ல.

    என்னுடைய வேலையில் கவனம் செலுத்தியதால் என்னால் இணையத்தில் நடந்தவற்றை மற்றவர்களின் மூலமே தெரிந்து கொள்ள முடிந்தது.

    ஆனால் இது அருவருப்பாக உள்ளது. அனைவரும் எங்களுக்காக துணை நிற்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • பவனுக்கு ஜோடியாக அவரை விட 30 வயது இளையவரான ஸ்ரீலீலா நடிக்கிறார்.
    • தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்த இந்த முழு பாடலும் 13 ஆம் தேதி வெளியாக உள்ளது.

    தெலுங்கு பவர் ஸ்டார் பவன் கல்யாண் இரு புறம் ஆந்திர துணை முதல்வராக இருந்துகொண்டு மறுபுறம் படங்களிலும் நடித்து வருகிறார்.

    இயக்குனர் ஹரிஷ் சங்கர் இயக்கத்தில் 'உஸ்தாத் பகத் சிங்' என்ற படத்தில் பவன் நடித்துள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்த இந்தப் படத்தில், பவனுக்கு ஜோடியாக அவரை விட 30 வயது இளையவரான ஸ்ரீலீலா நடிக்கிறார்.

    இந்நிலையில் இந்த படத்தின் முதல் பாடல் ப்ரோமோவை படக்குழு வெளியிட்டுள்ளது. விஷால் தத்லானி இதை பாடியுள்ளார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்த இந்த முழு பாடலும் 13 ஆம் தேதி வெளியாக உள்ளது. 

    • இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
    • இப்படம் ஜனவரி 14-ந்தேதி வெளியாக உள்ளது.

    தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க நடிகர்களில் ஒருவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் கடைசியாக 'மதராஸி' வெளியானது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய இப்படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.

    'மதராஸி' படத்தை தொடர்ந்து சுதா கொங்கரா இயக்கத்தில் 'பராசக்தி' படத்தில் சிவகார்த்திகேயன் நடித்துவருகிறார். ரவி மோகன், ஸ்ரீலீலா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாக உள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இப்படம் பொங்கல் பண்டிகையையொட்டி ஜனவரி 14-ந்தேதி வெளியாக உள்ளது.

    இதற்கிடையே, சிவகார்த்திகேயன் அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க உள்ளார். மேலும் 'டான்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான சிபி சக்கரவர்த்தியின் இயக்கத்திலும் நடிக்க உள்ளார். இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீலீலா நடிக்க உள்ளதாகவும் இப்படத்தில் சாய் அபயங்கர் இசையமைக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • அருந்ததி திரைப்படம் தெலுங்கில் மட்டுமில்லாமல் தமிழிலும் மாபெரும் வரவேற்பை பெற்றது.
    • அருந்ததி படம் ரூ.60 கோடிக்கும் மேல் உலகளவில் வசூல் செய்து சாதனை படைத்தது.

    அனுஷ்கா நடிப்பில் 2009ல் வெளியான 'அருந்ததி' திரைப்படம் தெலுங்கில் மட்டுமில்லாமல் தமிழிலும் மாபெரும் வரவேற்பை பெற்றது.

    அன்றைய காலகட்டத்திலேயே இப்படம் ரூ.60 கோடிக்கும் மேல் உலகளவில் வசூல் செய்து சாதனை படைத்தது.

    ஒன்னிலையில் 'அருந்ததி' திரைப்படம் இந்தியில் ரீமேக் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    மோகன் ராஜா இயக்கும் இப்படத்தில் அருந்ததியாக ஸ்ரீலீலா நடிக்கவுள்ளதாகவும், 2026 ஜனவரியில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

    • சீன உணவுப்பொருள் நிறுவனமான சிங் நிறுவன விளம்பரம் ஒன்றை அட்லி இயக்கியுள்ளார்.
    • இந்த விளம்பரத்தில் ரன்வீர் சிங், ஸ்ரீலா, பாபி தியோல் ஆகியோர் நடித்துள்ளனர்.

    இயக்குனர் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் வெளியான ஜவான் திரைப்படம் உலக அளவில் ரூ.1000 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்தது.

    இந்நிலையில், சீன உணவுப்பொருள் நிறுவனமான சிங் நிறுவன விளம்பரம் ஒன்றை அட்லி இயக்கியுள்ளார். இந்த விளம்பரத்தில் ரன்வீர் சிங், ஸ்ரீலா, பாபி தியோல் ஆகியோர் நடித்துள்ளனர்.

    ரூ.150 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்த விளம்பரம் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவான படத்தின் டிரெய்லர் போல உள்ளது. பல பாலிவுட் படங்களின் பட்ஜெட்டை விட இந்த விளம்பரத்தின் பட்ஜெட் அதிகம் என்பதால் இந்த விளம்பரம் அனைவரின் கவனத்தியும் ஈர்த்துள்ளது.

    இந்த விளம்பரத்தில் சிங் நிறுவனத்தின் ஏஜெண்டாக ரன்வீர் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக ஸ்ரீலீலா நடித்துள்ளார். பாபி தியோல் வில்லனாக நடித்துள்ளார்.

    ரன்வீர் சிங் இதற்கு முன்பும் சிங் நிறுவனத்தின் விளம்பரங்களில் நடித்திருந்தார். ரோஹித் ஷெட்டி இயக்கிய இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் விளம்பரத்தில் தமன்னாவுடன் இணைந்து ரன்வீர் சிங் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஸ்ரீலீலா மணப்பெண் அலங்காரத்தில் இருப்பதையும், சிலர் அவரது கன்னங்களில் மஞ்சள் தடவுவதையும் காட்டுகின்றன.
    • அவர் தனது இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார்.

    தெலுங்கு நாயகி ஸ்ரீலீலா இளைஞர்கள் மத்தியில் தற்போதைய சென்ஷேசன். 23 வயதாகும் இவர் தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து வருகிறார். சிவகார்திகேகேயனின் பராசக்தி படம் மூலம் தமிழிலும் அறிமுகமாக உள்ளார். இதற்கு மத்தியில் குழந்தைகளைத் தத்தெடுத்து ஸ்ரீலீலா வளர்த்து வருகிறார்.

    சமூக ஊடகங்களில் ஆக்டிவாக இருக்கும் ஸ்ரீலீலா திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளது பலரையும் புருவம் உயர்ந்த வைத்துள்ளது.

    இந்தப் புகைப்படங்கள் ஸ்ரீலீலா மணப்பெண் அலங்காரத்தில் இருப்பதையும், சிலர் அவரது கன்னங்களில் மஞ்சள் தடவுவதையும் காட்டுகின்றன.

    கூடுதலாக, "இன்று எனக்கு ஒரு பெரிய நாள். விரைவில் முழு விவரங்களையும் நான் உங்களுக்குச் சொல்கிறேன், விரைவில் வருகிறேன்" என்று ஸ்ரீலீலா பதிவிட்டுள்ளதால் அவர் திருமணம் செய்து கொள்ள உள்ளாரா என்ற ஊகங்கள் எழுந்தன.

    இந்நிலையில் இதுகுறித்து ஸ்ரீலீலா விளக்கம் அளித்துள்ளார். தனது வீட்டில் நடந்த கொண்டாட்டத்தை பற்றி விளக்கிய அவர், "எனது பிறந்தநாளுக்கு முந்தைய கொண்டாட்டங்களை நாங்கள் வீட்டில் இப்படித்தான் கொண்டாடினோம்.

    இதற்கான அனைத்து திட்டமிடலையும் என் அம்மா கவனித்துக் கொண்டார்" என்று அவர் தனது இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார். இது அவரின் திருமண வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

    ஸ்ரீ ரீலீலா ஜூன் 14 ஆம் தேதி தனது 24வது பிறந்தநாளைக் கொண்டாட உள்ளது குறிப்பிடத்தக்கது. 

    • குழந்தைகளைத் தத்தெடுத்து ஸ்ரீலீலா வளர்ந்து வருகிறார்.
    • சிவகார்திகேகேயனின் பராசக்தி படம் மூலம் தமிழிலும் அறிமுகமாக உள்ளார்.

    தெலுங்கு சினிமாவின் இளம் நாயகி ஸ்ரீலீலா இளைஞர்கள் மத்தியில் தற்போதைய சென்ஷேசன். 23 வயதாகும் இவர் தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து வருகிறார். சிவகார்திகேகேயனின் பராசக்தி படம் மூலம் தமிழிலும் அறிமுகமாக உள்ளார். இதற்கு மத்தியில் குழந்தைகளைத் தத்தெடுத்து ஸ்ரீலீலா வளர்த்து வருகிறார்.

    சமூக ஊடகங்களில் ஆக்டிவாக இருக்கும் ஸ்ரீலீலா திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளது பலரையும் புருவம் உயர்ந்த வைத்துள்ளது.

    இந்தப் புகைப்படங்கள் ஸ்ரீலீலா மணப்பெண் அலங்காரத்தில் இருப்பதையும், சிலர் அவரது கன்னங்களில் மஞ்சள் தடவுவதையும் காட்டுகின்றன.

    கூடுதலாக, "இன்று எனக்கு ஒரு பெரிய நாள். விரைவில் முழு விவரங்களையும் நான் உங்களுக்குச் சொல்கிறேன், விரைவில் வருகிறேன்" என்று ஸ்ரீலீலா பதிவிட்டுள்ளதால் அவர் திருமணம் செய்து கொள்ள உள்ளாரா என்ற ஊகங்கள் எழுந்துள்ளன. இது ஸ்ரீலீலா ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாக மாறி உள்ளது. 

    • ஸ்ரீலீலா இந்தியில் கார்த்திக் ஆர்யனுடன் இணைந்து புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார்.
    • ஸ்ரீலீலாவை திடீரென கூட்டத்திற்குள் ஒருவர் வலுக்கட்டாயமாக இழுக்கிறார்.

    தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம்வரும் ஸ்ரீலீலா, தற்போது இந்தியில் கார்த்திக் ஆர்யனுடன் இணைந்து புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். இப்படத்தை அனுராக் பாசு இயக்கி வருகிறார்.

    இப்படத்தின் படப்பிடிப்பு கேங்டாக் மற்றும் டார்ஜிலிங்கில் நடைபெற்று வருகிறது.

    டார்ஜிலிங்கில் ஸ்ரீலீலா மற்றும் கார்த்திக் ஆர்யன் ஆகியோர் மக்கள் கூடியுள்ள இடத்தின் இடையே நடந்து வரும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலானது.

    அந்த வீடியோவில் ஸ்ரீலீலாவை திடீரென கூட்டத்திற்குள் ஒருவர் வலுக்கட்டாயமாக இழுக்கிறார். இதனால் ஸ்ரீலா பதட்டமடைந்தார். ஆனால் இதை அறியாமல் கார்த்திக் தொடர்ந்து நடந்து செல்கிறார்.

    இந்த வீடியோ இணையத்தில் வைரலாக, இந்த சம்பவத்தை விமர்சித்து, நடிகைகளுக்கு போதுமான பாதுகாப்புக்கு வழங்க வேண்டுமென நெட்டிசன்கள் கோரிக்கை விடுத்தனர். 

    • சமீபத்தில் திரைக்கு வந்து மிகுந்த வரவேற்பை பெற்ற படம் பிரேமலு. படத்தின் கதாநாயகியாக மமிதா பைஜூ நடித்திருந்தார்.
    • விஜய் தேவரகொண்டா ராணுவ வீரராக புதிய படத்தில் நடிக்க இருக்கிறார்.

    சமீபத்தில் திரைக்கு வந்து மிகுந்த வரவேற்பை பெற்ற படம் பிரேமலு. படத்தின் கதாநாயகியாக மமிதா பைஜூ நடித்திருந்தார். மலையாளத்தில் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, கன்னட மொழி ரசிகர்களையும் கவர்ந்தார்.

    இதையடுத்து மமிதா பைஜூ திரையுலகினர் திரும்பி பார்க்கும் நடிகையாக உருவெடுத்தார். இந்த நிலையில் தெலுங்கு திரை உலகில் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் விஜய் தேவரகொண்டா. இவரை தற்போது திரை உலகின் காதல் மன்னன் என ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.

    விஜய் தேவரகொண்டா ராணுவ வீரராக புதிய படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை ஜெர்சி படத்தை இயக்கிய கவுதம் தின்னனூரி இயக்குகிறார். இப்படம் விஜய் தேவரகொண்டாவின் 12-வது திரைப்படமாகும். தற்காலிகமாக VD-12 என தலைப்பிடப்பட்டுள்ளது. படத்தில் அவருக்கு ஜோடியாக மமிதா பைஜூ நடிக்க இருக்கிறார். முதலில் ஸ்ரீலீலா இப்படத்தில் நடிக்கவிருந்தார் ஆனால் தற்பொழுது அவர் இதில் நடிக்கவில்லை.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • தெலுங்கு சினிமா துறையில் அதிகமான சம்பளம் வாங்கும் நடிகர்களுள் ஒருவர் ரவி தேஜா.
    • தற்பொழுது அவரது 75-வது திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான சித்தாரா எண்டர்டெயின்மண்ட் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

    தெலுங்கு சினிமா துறையில் அதிகமான சம்பளம் வாங்கும் நடிகர்களுள் ஒருவர் ரவி தேஜா. மக்களால் மாஸ் மஹாராஜா என அழைக்கப்படும் நடிகராவார். இவர் நடித்த பெரும்பாலான படங்கள் ப்ளாக்ப்ஸ்டர் ஹிட்டானதே அதற்கு காரணம்.

    பல தெலுங்கு முன்னணி திரைப்படங்களில் குணச்சித்திர கதாப்பாத்திரங்கள் நடித்து கொண்டு இருந்த ரவி தேஜா, 'நீ கோசம்' என்ற படத்தில் கதாநாயகனாக நடித்தார். அதைத்தொடர்ந்து 'இட்லு ஸ்ரவானி சுப்பிரமண்யம்' திரைப்படம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

    கடைசியாக 'ஈகிள்' திரைப்படத்தில் ரவி தேஜா நடித்திருந்தார். அதைத்தொடர்ந்து தற்பொழுது அவரது 75-வது திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான சித்தாரா எண்டர்டெயின்மண்ட் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இப்படம் ஒரு அதிரடி மாஸ் கமெர்ஷியல் திரைப்படமாக இருக்கும் என கூறப்படுகிறது.

    இப்படத்தில் பிரபல தெலுங்கு நடிகையான ஸ்ரீ லீலா கதாநாயகியாக நடிக்கிறார். இதற்கு முன் 2022 ஆம் ஆண்டு வெளியான 'தமாக்கா' திரைப்படத்தில் ரவி தேஜாவுடன் இணைந்து நடித்தது குறிப்பிடத்தக்கது. பீம்ஸ் செசிரோலியோ இப்படத்திற்கு இசையமைக்கவுள்ளார். படத்திற்கு திரைக்கதை எழுத்தாளரான பானு போகவரப்பு இப்படத்தை இயக்கவுள்ளார். இவர் இதற்கு முன் வால்டர் வீரய்யா திரைப்படத்திற்கு திரைக்கதை எழுதியவர் ஆவார். படத்தின் பூஜை விழா இன்று நடைப்பெற்றது. மேலும் முதல் நாள் படப்பிடிப்பையும் இன்று தொடங்கினர். படத்தை குறித்து மேலும் தகவல்கள் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்ஐ க்ளிக் செய்யவும்.

    • படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.
    • படத்தில் ஸ்ரீலீலா கிஸிக் என்ற பாடலுக்கு நடனமாடியுள்ளார்

    சுகுமார் இயக்கத்தில் புஷ்பா படத்தின் இரண்டாவது பாகம் புஷ்பா 2 தி ரூல் என்ற பெயரில் உருவாகியுள்ளது. படத்தில் அல்லு அர்ஜுன் உடன் ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் உள்பட பலர் நடித்துள்ளனர். படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். படத்தின் சில பாடல்கள் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

     

    புஷ்பா 2 திரைப்படம் வரும் டிசம்பர் 5 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் படத்தின் டிரைலர் விரைவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் நவம்பர் 17 ஆம் தேதி அதற்கு தேதி குறிக்கப்பட்டது.

     

    அதன்படி நாளை [ நவம்பர் 17] மாலை 6.03 மணிக்கு புஷ்பா 2 டிரைலர் வெளியாகவுள்ளதை உறுதிப்படுத்தி உள்ளது. டிரைலர் வெளியீட்டு விழா பாட்னாவில் மிக பிரம்மாண்டமாக நடைப்பெறவுள்ளதாக படக்குழு அறிவித்தது. படத்தில் ஸ்ரீலீலா கிஸிக் என்ற பாடலுக்கு நடனமாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×