என் மலர்
நீங்கள் தேடியது "ரவி தேஜா 75"
- இப்படத்தை அறிமுக இயக்குனரான பானு போகவரபு இயக்கியுள்ளார்.
- திரைப்படம் வரும் ஆகஸ்ட் 27 ஆம் தேதி வெளியாகிறது.
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவர் ரவி தேஜா. இவரை ரசிகர்கள் அன்போடு மாஸ் மகாராஜா என அழைப்பர். ரவி தேஜா அடுத்ததாக நடித்து இருக்கும் மாஸ் ஜாதரா படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு சமீபத்தில் வெளியிட்டு அது மக்களின் கவனத்தை பெற்றது.
படத்தின் நாயகியாக ஸ்ரீலீலா நடித்துள்ளார். இப்படத்தை அறிமுக இயக்குனரான பானு போகவரபு இயக்கியுள்ளார். படத்தின் இசையை பீம்ஸ் செசிரொலியோ மேற்கொண்டுள்ளார். படத்தின் பாடலான ஒலே ஒலே வெளியாகி மிகப்பெரிய வைரலானது. இந்நிலையில் படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. டீசர் காட்சிகள் ஆக்ஷன் மற்றும் காமெடி , காதல் என அனைத்து விதமான காட்சிகளால் உருவாக்கப்பட்டு இருக்கிறது. முழுக்க முழுக்க குடும்ப பொழுதுபோக்கு திரைப்படமாக வெளியாக இருக்கிறது.
படத்தை சித்தாரா எண்டெர்டெயின்மண்ட்ஸ் மற்றும் ஃபார்சூன் ஃபோர் சினிமாஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. விது அய்யனா ஒளிப்பதிவை மேற்கொள்ள நவின் நூலி படத்தொகுப்பை செய்துள்ளார்.
திரைப்படம் வரும் ஆகஸ்ட் 27 ஆம் தேதி வெளியாகிறது.
- தெலுங்கு சினிமா துறையில் அதிகமான சம்பளம் வாங்கும் நடிகர்களுள் ஒருவர் ரவி தேஜா.
- தற்பொழுது அவரது 75-வது திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான சித்தாரா எண்டர்டெயின்மண்ட் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.
தெலுங்கு சினிமா துறையில் அதிகமான சம்பளம் வாங்கும் நடிகர்களுள் ஒருவர் ரவி தேஜா. மக்களால் மாஸ் மஹாராஜா என அழைக்கப்படும் நடிகராவார். இவர் நடித்த பெரும்பாலான படங்கள் ப்ளாக்ப்ஸ்டர் ஹிட்டானதே அதற்கு காரணம்.
பல தெலுங்கு முன்னணி திரைப்படங்களில் குணச்சித்திர கதாப்பாத்திரங்கள் நடித்து கொண்டு இருந்த ரவி தேஜா, 'நீ கோசம்' என்ற படத்தில் கதாநாயகனாக நடித்தார். அதைத்தொடர்ந்து 'இட்லு ஸ்ரவானி சுப்பிரமண்யம்' திரைப்படம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
கடைசியாக 'ஈகிள்' திரைப்படத்தில் ரவி தேஜா நடித்திருந்தார். அதைத்தொடர்ந்து தற்பொழுது அவரது 75-வது திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான சித்தாரா எண்டர்டெயின்மண்ட் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இப்படம் ஒரு அதிரடி மாஸ் கமெர்ஷியல் திரைப்படமாக இருக்கும் என கூறப்படுகிறது.
இப்படத்தில் பிரபல தெலுங்கு நடிகையான ஸ்ரீ லீலா கதாநாயகியாக நடிக்கிறார். இதற்கு முன் 2022 ஆம் ஆண்டு வெளியான 'தமாக்கா' திரைப்படத்தில் ரவி தேஜாவுடன் இணைந்து நடித்தது குறிப்பிடத்தக்கது. பீம்ஸ் செசிரோலியோ இப்படத்திற்கு இசையமைக்கவுள்ளார். படத்திற்கு திரைக்கதை எழுத்தாளரான பானு போகவரப்பு இப்படத்தை இயக்கவுள்ளார். இவர் இதற்கு முன் வால்டர் வீரய்யா திரைப்படத்திற்கு திரைக்கதை எழுதியவர் ஆவார். படத்தின் பூஜை விழா இன்று நடைப்பெற்றது. மேலும் முதல் நாள் படப்பிடிப்பையும் இன்று தொடங்கினர். படத்தை குறித்து மேலும் தகவல்கள் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்ஐ க்ளிக் செய்யவும்.






