என் மலர்
நீங்கள் தேடியது "ADVERTISEMENT"
- 40 ஆண்டுகளாக இந்தியாவின் விளம்பரத் துறையில் கோலோச்சி வந்தார்.
- மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ள இரங்கல் தெரிவித்துள்ளார்.
மக்களின் அன்றாட வாழ்க்கையில் தொலைக்காட்சி முக்கிய பங்காற்றுகிறது. தொலைக்காட்சிகளில் விளம்பரங்கள் தவிர்க்க முடியாத அம்சமாக இருந்து வருகிறது. அதிலும் 90-களில் வெளிவந்த பல விளம்பரங்கள் மக்கள் மத்தியில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தின.
அந்த வகையில் ஃபெவிகால் (Fevicol) பசை விளம்பரம், காட்பரி (Cadbury) மிட்டாய் விளம்பரம், ஏசியன் பெயிண்ட்ஸ் (Asian Paints) விளம்பரம் ஆகியவற்றை நம்மால் மறந்திருக்க முடியாது.
இந்தத் தனித்துவமான விளம்பரங்களை உருவாக்கிய பியூஷ் பாண்டே (Piyush Pandey) இன்று (வெள்ளிக்கிழமை) உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 70.
தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது.
ஓகில்வி (Ogilvy) என்ற விளம்பர நிறுவனத்தில் 1982-இல் இணைந்த பியூஷ் பாண்டே, 40 ஆண்டுகளாக இந்தியாவின் விளம்பரத் துறையில் கோலோச்சி வந்தார். அந்நிறுவனத்தின் நிர்வாகத் தலைவராகவும், சர்வதேச கிரியேட்டிவ் தலைமைப் பதவியிலும் அவர் பெரும் பங்காற்றியுள்ளார்.
1982-இல் சன்லைட் டிடர்ஜென்ட் பவுடருக்காக அவர் முதன்முதலில் விளம்பரம் எழுதினார். தொடர்ந்து Fevicol, Cadbury, Asian Paints, லூனா மொபெட் (Luna Moped), ஃபார்ச்சூன் ஆயில் (Fortune Oil) உள்ளிட்ட பல பிராண்டுகளுக்கு அவர் உருவாக்கிய விளம்பர கான்செப்ட் அனைவரையும் கவர்ந்தது.
அவரது தலைமையின் கீழ் Ogilvy இந்தியாவின் நம்பர் 1 விளம்பரக் கம்பெனியாகத் திகழ்ந்தது. 2013-இல் பியூஷ் பாண்டே சினிமாவிலும் நடிகராகக் களமிறங்கினார். ஜான் ஆபிரகாம் நடிப்பில் வெளியான மெட்ராஸ் கஃபே (Madras Cafe) படத்தில் அவர் நடித்தார். மேலும் போபால் எக்ஸ்பிரஸ் (Bhopal Express) என்ற படத்திற்குத் திரைக்கதையும் அவர் எழுதியுள்ளார்.
அவரது பணிகளுக்காக, கடந்த 2016-இல் அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். தற்போது அவரின் மறைவுக்கு வணிகம், விளம்பரம் மற்றும் அரசியல் பிரமுகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். நாளை அவரது உடல் மும்பை சிவாஜி பார்க் பகுதியில் தகனம் செய்யப்பட உள்ளது.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ள இரங்கல் 'X' பதிவில், "பியூஷ் பாண்டேவின் மறைவை அறிந்து வருத்தமடைந்தேன். இந்திய விளம்பரத் துறையின் ஜாம்பவானாக இருந்த அவர், பேச்சுவழக்குச் சொற்கள், மண் சார்ந்த நகைச்சுவை மற்றும் உண்மையான அரவணைப்பைக் கொண்டு வந்து தகவல்தொடர்பு முறையையே மாற்றினார்.
பல்வேறு சந்தர்ப்பங்களில் அவருடன் பேச வாய்ப்புக் கிடைத்தது. அவரது குடும்பத்தினர், நண்பர்களுக்கு மனமார்ந்த இரங்கல்கள். அவரது மரபு தலைமுறைகளைத் தொடர்ந்து ஊக்குவிக்கும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
- சீன உணவுப்பொருள் நிறுவனமான சிங் நிறுவன விளம்பரம் ஒன்றை அட்லி இயக்கியுள்ளார்.
- இந்த விளம்பரத்தில் ரன்வீர் சிங், ஸ்ரீலா, பாபி தியோல் ஆகியோர் நடித்துள்ளனர்.
இயக்குனர் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் வெளியான ஜவான் திரைப்படம் உலக அளவில் ரூ.1000 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்தது.
இந்நிலையில், சீன உணவுப்பொருள் நிறுவனமான சிங் நிறுவன விளம்பரம் ஒன்றை அட்லி இயக்கியுள்ளார். இந்த விளம்பரத்தில் ரன்வீர் சிங், ஸ்ரீலா, பாபி தியோல் ஆகியோர் நடித்துள்ளனர்.
ரூ.150 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்த விளம்பரம் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவான படத்தின் டிரெய்லர் போல உள்ளது. பல பாலிவுட் படங்களின் பட்ஜெட்டை விட இந்த விளம்பரத்தின் பட்ஜெட் அதிகம் என்பதால் இந்த விளம்பரம் அனைவரின் கவனத்தியும் ஈர்த்துள்ளது.
இந்த விளம்பரத்தில் சிங் நிறுவனத்தின் ஏஜெண்டாக ரன்வீர் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக ஸ்ரீலீலா நடித்துள்ளார். பாபி தியோல் வில்லனாக நடித்துள்ளார்.
ரன்வீர் சிங் இதற்கு முன்பும் சிங் நிறுவனத்தின் விளம்பரங்களில் நடித்திருந்தார். ரோஹித் ஷெட்டி இயக்கிய இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் விளம்பரத்தில் தமன்னாவுடன் இணைந்து ரன்வீர் சிங் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- மோகன்லால் நடிப்பில் அண்மையில் வெளியான தொடரும் திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்றது.
- அந்த படத்தில் வில்லனாக நடித்த பிரகாஷ் வர்மா தான் இந்த விளம்பர வீடியோவை இயக்கியுள்ளார் .
மோகன்லால் நடிப்பில் அண்மையில் வெளியான தொடரும் திரைப்படம் 200 கோடி வசூலை கடந்து மாபெரும் வெற்றியை பெற்றது. அந்த படத்தில் வில்லனாக நடித்த பிரகாஷ் வர்மா தான் இந்த விளம்பர வீடியோவை இயக்கியுள்ளார் .
விளம்பர வீடியோவில், படப்பிடிப்பு தளத்திற்கு வரும் மோகன்லாலை பிரகாஷ் வர்மா அழைத்துச் சென்று மாடல் அழகியிடம் அறிமுகம் செய்து வைக்கிறார். அப்போது மாடல் அழகி அணிந்திருக்கும் வைர நெக்லஸ், மோதிரம், பிரேஸ்லட் மீது மோகன்லாலுக்கு ஆசை ஏற்படுகிறது.
மாடல் அழகி நகைகளை கழற்றி வைத்த பிறகு மோகன்லால் அவற்றை அணிந்து கொண்டு கண்ணாடி முன் நின்று தன்னை தானே மெய் மறந்து ரசிப்பது போன்றும் காட்சி அமைந்துள்ளது.
இந்த விளம்பர வீடியோவில் பெண்மை தன்மையுடன் கூடிய மோகன்லாலின் நடிப்பை ரசிகர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- பாரத பிரதமரின் காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்துவதற்காக உதவியாளர் பணிக்கு ஆள்சேர்ப்பதாக விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.
- விளம்பரத்தில் உதவியாளர் பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் ரூ.250 விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெல்லை:
நெல்லை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் (பொறுப்பு) அசோக்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பாரத பிரதமரின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க நிறுவனங்கள் மத்திய அரசின் வேளாண் உழவர் நலத்துறையில் ஒப்புதல் பெற்றிருக்க வேண்டும். இந்திய வேளாண் அமைச்சகத்தால் ஒப்புதல் பெறாத பாரதிய கூட்டுறவு பொது காப்பீட்டு நிறுவனம் சார்பில் பாரத பிரதமரின் காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்துவதற்காக உதவியாளர் பணிக்கு ஆள்சேர்ப்பதாக விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.
இதற்கும் மத்திய அரசின் வேளாண் அமைச்சகத்தில் ஒப்புதல் பெற்ற நிறுவனத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. மேலும் அந்த விளம்பரத்தில் உதவியாளர் பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் ரூ.250 விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவர்கள், பாரதிய கூட்டுறவு பொதுக் காப்பீட்டு நிறுவனத்தால் பயிர் காப்பீடு உதவியாளர் பணிக்காக வெளியிடப்படும் விளம்பரத்தை நம்பி ஏமாற வேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- கலைஞர் மு.கருணாநிதியின் 101 வது பிறந்தநாள் இன்று (ஜூன் 3) தமிழகம் முழுவதும் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
- பிரசித்தி பெற்ற டைம்ஸ் சதுக்கத்தில் வகையில் கலைஞரின் புகைப்படம் பிரதிபலிக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது
மறைந்த தி.மு.க தலைவரும் தமிழக முன்னாள் முதல்வருமான கலைஞர் மு.கருணாநிதியின் 101 வது பிறந்தநாள் இன்று (ஜூன் 3) தமிழகம் முழுவதும் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. பெரியாரின் வழிவந்த அண்ணாவின் திராவிட அரசியலை 1969 இல் அவரது மறைவுக்குப் பின் தமிழகத்தில் தீவிரமாக முன்னெடுத்துச் சென்ற கலைஞர் கருணாநிதி பழமைவாதத்தை வேரறுக்கும் பல மகத்தான திட்டங்களை கொண்டுவந்தவர் ஆவார்.
கை ரிக்ஷா ஒழிப்புத்திட்டம், பிச்சைக்காரர்கள் மறுவாழ்வுத்திட்டங்களை கொண்டுவந்தது, எல்லா மாவட்டங்களிலும் அரசு மருத்துவமனைகள், கலை அறிவியல் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களை நிறுவியது, இடஒதுக்கீடு கொள்கையை நடைமுறைப்படுத்தி, கல்வியிலும் வேலைவாய்ப்பிலும், 50 விழுக்காட்டில் 30 விழுக்காடு பிற்படுத்தப்பட்டோருக்கும், 20 விழுக்காடு மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கும், 18 விழுக்காடு தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கும், 3 விழுக்காடு அருந்ததியருக்கும், 3.5 விழுக்காடு இஸ்லாமியருக்கும், 1 விழுக்காடு மலைவாழ் மக்களுக்கும் அளித்து அனைத்து சமூகத்தினருக்கும் சம உரிமை கிடைக்க வழிவகை செய்தது, மகளிர் சுயஉதவிக் குழுக்கள் அமைத்தது, அரசுப் பணிகளில் பெண்களுக்கு 30 விழுக்காடு இட ஒதுக்கீட்டை அளித்தது, விதவைகளுக்கு மறுமண உதவித் திட்டங்களை அளித்தது, கலப்பு திருமணங்களை ஊக்குவிக்க நிதியுதவி அளித்தது என கலைஞர் கொண்டுவந்த திட்டங்களின் பட்டியல் நீளும்.

குமரிக்கடலில் திருவள்ளுவர் சிலையை நிறுவி உலக செம்மொழி மாநாட்டை நடத்திக்காட்டினார். கலைஞரின் சாதனைகளுக்காக இன்றளவும் அவர் நினைவுகூறப்டும் நிலையில் அவரின் 101 வது பிறந்தநாளை திமுக தொண்டர்களும் அவரது அபிமானிகளும் கொண்டாடி வருகின்றனர்.
அந்த வகையில் அமெரிக்காவில் உள்ள தமிழகத்தைச் சேர்ந்த தொழிலதிபரும் நியூ யார்க் தமிழ் சங்கத் தலைவருமான கதிர்வேல் குமாரராஜா தனது குடும்பத்துடன் சேர்ந்து கலைஞருக்கு மரியாதை செலுத்தும் வகையில் தனது காசை செலவுசெய்து, நியூ யார்க் டைம்ஸ் சதுக்கத்தில் முழு அளவிலான விளம்பரப் பலகையில் கலைஞரின் புகைப்படத்தை இடம்பெறச் செய்துள்ளார். அதில் முதல்வர் மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் மற்றும் கதிர்வேல் ராஜாவின் குடும்பத்தினர் புகைப்படங்களும் இடம்பெற்றுள்ளன. பிரசித்தி பெற்ற டைம்ஸ் சதுக்கத்தில் வகையில் கலைஞரின் புகைப்படம் பிரதிபலிக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
- காலை முதலே தானே மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
- விளம்பரப் பலகை பெயர்ந்து விழும் பரபரப்பு வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.
மகாராஷ்டிராவின் உள்ள பல்வேறு பகுதிகளில் காலை முதலே கனமழை பெய்து வருகிறது. இந்திய வானிலை ஆய்வு மையமானது அங்குள்ள பகுதிகளுக்குச் சிவப்பு மற்றும் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில் காலை முதலே தானே மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கல்யாண் நகரில் உள்ள சஹாஜானந்த் சவுக் [Sahajanand Chowk] பகுதியில் உள்ள கடை ஒன்றில் இருந்த விளம்பரப் பலகையானது பலத்த காற்று மற்றும் மழை காரணமாக பெயர்ந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது இந்த விபத்தில் அங்கு நின்றிருந்த வாகனங்கள் சேதமடைந்தன.
மேலும் பலகைக்குக் கீழ் யாரேனும் சிக்கியுள்ளனரா என்ற தெரியாத நிலையில் விபத்து நடத்த இடத்துக்கு மீட்புக் குழுவினர் விரைந்துள்ளனர். இதற்கிடையில், விளம்பரப் பலகை பெயர்ந்து விழும் பரபரப்பு வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. சமீபத்தில் மும்பையில் ராட்சத விளம்பரப் பலகை விழுந்து பலர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
- பெண் கான்டபிள் ஒருவர் சீருடை அணைத்தவாறு நடித்த வீடியோ இணையத்தில் வைரலானது.
- ரத்லாம் மாவட்டத்தில் போட்டித் தேர்வுகளுக்கான இந்த தனியார் பயிற்சி மையம் இயங்கி வருகிறது
மத்தியப் பிரதேசத்தில் காவலர் சீருடை அணைத்தவாறு தனியார் பயிற்சி மைய விளம்பரத்தில் நடித்த பெண் காவலர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.மத்தியப் பிரதேச மாநிலம் ரத்லாம் மாவட்டத்தில் இயங்கி வரும் போட்டித் தேர்வுகளுக்கான தனியார் பயிற்சி மையத்தின் விளம்பரத்தில் பெண் கான்டபிள் ஒருவர் சீருடை அணைத்தவாறு நடித்த வீடியோ இணையத்தில் வைரலானது.
இதைத்தொடர்ந்து போலீஸ் மேலதிகாரிகளின் கவனத்துக்கு இது சென்றுள்ளது. எனவே அவரை தற்போது இடைநீக்கம் செய்து காவல் கண்கணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார். மேலும் இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தனது எக்ஸ் பக்கத்தில் உறுதியளித்துள்ளார்.
- ஆசிரமத்தில் 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஆசாராம் பாபு ஆயுள் தண்டனை பெற்றார்.
- டெல்லி மெட்ரோ ரெயில் நிர்வாகத்தின் [DMRC-யின்] வெட்கக்கேடான செயல் என்று விமர்சித்தார்.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்த பிரபல சாமியார் ஆசாராம் பாபு. இவருக்கு ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் உள்பட பல இடங்களில் ஆசிரமம், அறக்கட்டளைகள் உள்ளன.
2013-ம் ஆண்டு ஜோத்பூரில் உள்ள ஆசிரமத்தில் 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஆசாராம் பாபு கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் 2018-ம் ஆண்டு ஆசாராம் பாபுவுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அவர் ஜோத்பூர் சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார்.
இந்நிலையில் டெல்லி மெட்ரோ ரெயில் பெட்டிகளில் சாமியார் ஆசாராம் பாபுவின் உருவப்படம் கொண்ட விளம்பர ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டிருப்பது விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்த விளம்பர போஸ்டர்களை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்த வழக்கறிஞர் ஒருவர், பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகளின் கீழ் தண்டிக்கப்பட்ட ஒரு குற்றவாளியின் விளம்பர போஸ்டர்களை மெட்ரோவில் காட்சிப்படுத்த அனுமதித்திருப்பது டெல்லி மெட்ரோ ரெயில் நிர்வாகத்தின் [DMRC-யின்] வெட்கக்கேடான செயல் என்று விமர்சித்தார்.
இந்த பதிவு வைரலான நிலையில் பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்தனர். விமர்சனங்களுக்கு பின் பதிலளித்த டெல்லி மெட்ரோ நிர்வாகம், மெட்ரோ வளாகத்திலிருந்து இந்த விளம்பரங்களை விரைவில் அகற்றுமாறு உரிமதாரருக்கு DMRC உடனடி உத்தரவு பிறப்பித்துள்ளதாக விளக்கம் அளித்துள்ளது.
- பான் மசாலாவின் ஒவ்வொரு தானியமும் குங்குமப்பூவின் சக்தியைக் கொண்டுள்ளது என்று விளம்பரப்படுத்தினர்.
- "குங்குமப்பூ தடவிய குட்கா" என்ற பெயரில் விமல் பான் மசாலாவை வாங்க பொதுமக்கள் விளம்பரம் மூலம் ஈர்க்கப்படுகின்றனர்.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள நுகர்வோர் குறைதீர் ஆணையம், பான் மசாலா விளம்பரத்தில் நடித்த பாலிவுட் நடிகர்கள் ஷாருக்கான், அஜய் தேவ்கன் மற்றும் டைகர் ஷெராஃப் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
விமல் பான் மசாலாவை தயாரிக்கும் ஜேபி இண்டஸ்ட்ரீஸின் தலைவர் விமல் குமார் அகர்வாலுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
ஜெய்ப்பூரைச் சேர்ந்த வழக்கறிஞர் யோகேந்திர சிங் பதியால் அளித்த புகாரின் அடிப்படையில் நேற்று இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
அவரின் புகாரில், மேற்கூறிய நடிகர்கள் நடித்த பான் மசாலா விளம்பரங்களில், " தானே தானே மெய்ன் ஹை கேசர் கா தம் (பான் மசாலாவின் ஒவ்வொரு தானியமும் குங்குமப்பூவின் சக்தியைக் கொண்டுள்ளது)" என்று கூறப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, ஜேபி இண்டஸ்ட்ரீஸ் கோடிக்கணக்கான ரூபாய்களை சம்பாதித்து வருகிறது. பொது மக்கள் தொடர்ந்து பான் மசாலாவை அதிகம் உட்கொள்கிறார்கள்.
"குங்குமப்பூ தடவிய குட்கா" என்ற பெயரில் விமல் பான் மசாலாவை வாங்க பொதுமக்கள் விளம்பரம் மூலம் ஈர்க்கப்படுகின்றனர். ஆனால் பான் மசாலா ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவித்து புற்றுநோய் போன்ற கடுமையான நோய்களை வரவழைக்கிறது.
எனவே மக்களை தவறாக வழிநடத்திய நிறுவனம் மீதும் நடிகர்கள் மீது நடவடிக்கை எடுக்க அவர் கோரியிருந்தார். இந்த மனுவை விசாரித்த ஆணையம் தற்போது சம்மந்தப்பட்ட நிறுவனத்துக்கும் நடிகர்களுக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
நோட்டீஸ் கிடைத்த நாளிலிருந்து 30 நாட்களுக்குள் அனைத்து நடிகர்களும், பான் மசாலா தயாரிப்பு நிறுவனமும் தங்கள் பதிலை தாக்கல் செய்ய வேண்டும் என்று ஆணையம் உத்தரவிட்டது.
- காவல்துறை சார்பில் விழிப்புணர்வு விளம்பரம் செய்யப்பட்டது
- போக்குவரத்து விதிகளை கடைப்பிடிக்க வலியுறுத்தி செய்யப்பட்டது
அரியலுர்:
மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் நேற்று தொடங்கியநிலையில், போக்குவரத்து விதிகளை கடைப்பிடிக்க வலியுறுத்தி,செஸ் பலகை மற்றும் சாலை விதிகளை தொடர்புபடுத்தி, அரிலூர் மாவட்ட காவல் துறை சார்பில் விழிப்புணர்வு விளம்பரம் வெளியிடப்பட்டது. சமூக வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ள அந்த விளம்பரத்தில் ராணி உள்ளிட்ட சில காய்களுடன் கூடிய ஸெ் பலகையில், செஸ் பலகையோ அல்லது சாலையோ, தவறான சிறிய நகர்வும் பெரிய விளைவை ஏற்படுத்தும் என்றும், தவளான திசையில் வாகனங்களை இயக்ககூடாது என்று அச்சிடப்பட்டுள்ளது.

இப்போட்டி தொடரை உலகம் முழுவதும் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டு இருக்கிறார்கள்.
இந்தியாவிலும் உலக கோப்பை கால்பந்து போட்டி ஜூரம் பரவி வருகிறது. கிரிக்கெட்டுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தாலும் உலக கோப்பை கால்பந்து போட்டியை இந்திய ரசிகர்கள் விரும்பி பார்க்கிறார்கள்.
இந்தியாவில் உலக கால்பந்து போட்டியை ஒளிபரப்பும் உரிமையை சோனி நிறுவனம் பெற்றுக் இருக்கிறது.
அந்நிறுவனம் விளம்பரங்கள் மூலம் ரூ.200 கோடி சம்பாதிக்க இலக்கு நிர்ணயித்துள்ளது. இது கடந்த ஆண்டை விட இரு மடங்கு உயர்வாகும். 2014-ம் ஆண்டு உலக கோப்பை போட்டியின் போது ரூ.120 கோடி வரை விளம்பரம் மூலம் வருவாய் கிடைத்தது.
இந்தியாவில் நடந்துவரும் இந்தியன் சூப்பர் லீக் கால் பந்து தொடர் மூலம் அதிக ரசிகர்களை ஈர்த்துள்ளது. #sony #FIFA2018






