மழைக்கு ஒதுங்குனது ஒரு குத்தமா?.. சூறைக் காற்றில் விளம்பரப் பலகை சரிந்து விபத்து.. வீடியோ

காலை முதலே தானே மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. விளம்பரப் பலகை பெயர்ந்து விழும் பரபரப்பு வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.
மழைக்கு ஒதுங்குனது ஒரு குத்தமா?.. சூறைக் காற்றில் விளம்பரப் பலகை சரிந்து விபத்து.. வீடியோ
Published on

மகாராஷ்டிராவின் உள்ள பல்வேறு பகுதிகளில் காலை முதலே கனமழை பெய்து வருகிறது. இந்திய வானிலை ஆய்வு மையமானது அங்குள்ள பகுதிகளுக்குச் சிவப்பு மற்றும் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில் காலை முதலே தானே மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கல்யாண் நகரில் உள்ள சஹாஜானந்த் சவுக் [Sahajanand Chowk] பகுதியில் உள்ள கடை ஒன்றில் இருந்த விளம்பரப் பலகையானது பலத்த காற்று மற்றும் மழை காரணமாக பெயர்ந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது இந்த விபத்தில் அங்கு நின்றிருந்த வாகனங்கள் சேதமடைந்தன.

மேலும் பலகைக்குக் கீழ் யாரேனும் சிக்கியுள்ளனரா என்ற தெரியாத நிலையில் விபத்து நடத்த இடத்துக்கு மீட்புக் குழுவினர் விரைந்துள்ளனர். இதற்கிடையில், விளம்பரப் பலகை பெயர்ந்து விழும் பரபரப்பு வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. சமீபத்தில் மும்பையில் ராட்சத விளம்பரப் பலகை விழுந்து பலர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. 

X

Maalai Malar
www.maalaimalar.com