என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிரபாஸ் திருமணம்"

    • 45 வயதான நடிகர் பிரபாசுக்கு இன்னமும் திருமணம் ஆகவில்லை.
    • நடிகர் பிரபாஸ் அனுஷ்காவை திருமணம் செய்து கொள்ளவிருப்பதாகவும் கிசுகிசுக்கள் வெளியானது

    தெலுங்கு பட உலகில் முன்னணி நாயகனாக வலம் வந்த பிரபாஸ், பாகுபலி படத்தின் மாபெரும் வெற்றிக்கு பின்புகு இந்திய சினிமாவின் முன்னணி நடிகரானார். இவர் நடிப்பில் வெளியான சலார், கல்கி 2898 ஏடி படங்கள் மாபெரும் வெற்றியை பெற்றன.

    45 வயதான நடிகர் பிரபாசுக்கு இன்னமும் திருமணம் ஆகவில்லை. பாகுபலி படத்தில் நடிக்கும் போது, நடிகர் பிரபாசுக்கும். அனுஷ்காவுக்கும் காதல் ஏற்பட்டதாகவும், இருவரும் திருமணம் செய்து கொள்ளவிருப்பதாகவும் கிசுகிசுக்கள் வெளியானது. அதனை இருவருமே மறுத்து நட்பாகத்தான் பழகுகிறோம் என்று தெளிவுபடுத்தினர்.

    இந்நிலையில் பிரபாஸின் திருமணம் குறித்து புதிய தகவல் வெளியாகி உள்ளது. ஐதராபாத்தைச் சேர்ந்த ஒரு பிரபல தொழிலதிபரின் மகளை நடிகர் பிரபாஸ் விரைவில் திருமணம் செய்து கொள்ளவுள்ளதாக கூறப்படுகிறது. 

    பிரபாசின் மாமாவும் மறைந்த அரசியல்வாதியுமான கிருஷ்ணம் ராஜுவின் மனைவி சியாமளா தேவி, இந்த திருமண ஏற்பாடுகளை மேற்பார்வையிட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    பிரபாஸ் தற்போது 'ஸ்பிரிட்', 'கண்ணப்பா' உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    பிரபாசும், அனுஷ்காவும் காதலித்து வருவதாக கிசுகிசுக்கள் வந்த நிலையில், பிரபாசின் திருமண ஏற்பாடுகளை அவரது பெற்றோர்கள் தீவிரப்படுத்தி இருப்பதாகவும், மணப்பெண்ணை தேர்வு செய்துவிட்டதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. #Prabhas
    பாகுபலி படத்தின் மூலம் இந்திய அளவில் பிரபலமான நடிகர் பிரபாசும், நடிகை அனுஷ்காவும் காதலித்து வருவதாக நீண்ட நாட்களாக கிசுகிசுக்கள் வந்தன. இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துள்ளதாகவும் கூறினர்.

    திரையில் இருவரும் பொருத்தமான ஜோடியாக வலம் வந்ததால் இருவருரையும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அதற்கேற்றாற் போல், பாகுபலி படமும் அவர்களுக்கு திருப்பு முனையாக அமைந்தது. பிரபாஸ் ரசிகர்கள் அனுஷ்காவை அண்ணி என்றே அழைத்தனர். 

    முன்னதாக பாகுபலி படம் ரிலீசுக்கு பிறகு, பிரபாசை திருமணம் செய்துகொள்ள 6 ஆயிரம் பெண்கள் விண்ணப்பித்தனர். ஆனால் அனுஷ்காவை மணக்க எல்லா விண்ணப்பங்களையும் அவர் நிராகரித்ததாக கூறப்பட்டது. அனுஷ்கா சமீபத்தில் குடும்பத்தினருடன் கோவில்களுக்கு சென்று பூஜைகள் செய்து வழிபாடுகள் நடத்தி வந்தார். ஜாதகத்தில் தோ‌ஷம் இருப்பதாகவும் திருமண தடை நீங்க அவர் பரிகாரங்கள் செய்ததாகவும் கூறப்பட்டது. 



    இந்த நிலையில், பிரபாசின் திருமணத்தை விரைவில் முடிக்க அவரது பெற்றோர் ஏற்பாடுகளை கவனித்து வருவதாக அவரது குடும்ப நண்பர் ஒருவர் தெரிவித்துள்ளார். மணமகளை முடிவு செய்துவிட்டதாகவும் அவர் கூறினார்.

    இதனால் தெலுங்கு பட உலகினரும், ரசிகர்களும் மணமகள் யார்? என்ற கேள்விகளை எழுப்பிய வண்ணமாக இருக்கிறார்கள். அனுஷ்காவைத் தான் அவர் திருமணம் செய்து கொள்வார் என்றும் பேச்சு உள்ளது. பிரபாஸ் தற்போது தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் தயாராகும் `சாஹோ' என்ற படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு முடிந்ததும் அவரது திருமணம் நடைபெறும் என்று கூறப்படுகிறது. #Prabhas #Anushka

    ×