என் மலர்

  நீங்கள் தேடியது "South Film Fare Awards"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பிரபாஸ் நடிப்பில் வெளியான பாகுபலி படத்திற்கு பிலிம்பேர் தென் இந்திய விருதுகள் நிகழ்ச்சியில் ஒரு விருதுகள் கூட கிடைக்கவில்லை என்று பிரபாஸ் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வருத்தம் தெரிவித்து வருகின்றனர். #Prabhas
  பாகுபலி படத்துக்காக பிரபாசுக்கு ஒரு விருது கூட கிடைக்கவில்லையே என்று சமூக வலைதளங்களில் பிரபாஸ் ரசிகர்கள் வருத்தம் தெரிவித்து வருகிறார்கள்.

  பிரபாஸ் ரசிகர்களின் சமூக வலைதள பக்கங்களில் ‘இந்த படத்திற்காக தன்னுடைய திருமணத்தையே தள்ளி வைத்தார். 5 ஆண்டுகள் தன் உழைப்பையும் நேரத்தையும் கொடுத்தார். ஒரு நாளைக்கு 40 முட்டைகள் சாப்பிட்டார்.

  6000 திருமண கோரிக்கைகளை நிராகரித்தார். தோள்பட்டையில் பெரிய காயம் அடைந்தார். அவரது நடிப்பால் இந்த ஒட்டுமொத்த நாட்டுமக்களையே கண்ணீர் விடவைத்தார்.  ஆனால் அவரது நடிப்புக்கும், அர்ப்பணிப்புக்கும் ஒரு விருதுகூட இல்லையா? இங்கே விருதுகள் என்பது அங்கீகரிப்பு இல்லை’ என்று சோகத்துடன் பகிர்ந்து வருகிறார்கள்.

  சமீபத்தில் நடந்த பிலிம்பேர் தென் இந்திய விருதுகள் நிகழ்ச்சியில் பிரபாசுக்கு விருது வழங்கப்படாததே இதற்கு காரணம் என்கிறார்கள். #Prabhas #Baahubali
  ×