என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Hit 3"

    • கே.ஜி.எப், கே.ஜி.எப்.-2 படங்களின் மூலம் இந்திய அளவில் பிரபலமானவர் ஸ்ரீநிதி ஷெட்டி.
    • தற்போது ஸ்ரீநிதி புலாசா காடா என்ற படத்தில் நடித்து வருகிறார்.

    கே.ஜி.எப், கே.ஜி.எப்.-2 படங்களின் மூலம் இந்திய அளவில் பிரபலமானவர் ஸ்ரீநிதி ஷெட்டி. அடுத்ததாக நடிகர் நானியுடன் இணைந்து நடித்த ஹிட் 3 படம் திரைக்கு வந்து ரூ.100 கோடி வசூலை பெற்றது.

    படத்தில் ஸ்ரீநிதி ஷெட்டி கேரக்டர் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது ஸ்ரீநிதி புலாசா காடா என்ற படத்தில் நடித்து வருகிறார். இன்னொரு கதாநாயகியாக ராஷி கண்ணா நடிக்கிறார். இந்நிலையில் ஸ்ரீநிதி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

    ஒரு கைக்குழந்தையை ஸ்ரீநிதி தனது மடியில் வைத்து அன்போடு பாலூட்டும் புகைப்படங்களை தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

    இந்த புகைப்படங்கள் வைரலாகி ஸ்ரீநிதிக்கு எப்போ திருமணம் ஆச்சு, அவருக்கு குழந்தைகள் இருக்கின்றனரா? என சமூக வலைதளத்தில் விமர்சனங்கள் எழுந்தது.

    விமர்சனங்களுக்கு ஸ்ரீநிதி பதிவு விடையை கொடுத்தது. அவரது பதிவில், "நான் எழுந்த போது என் குழந்தைகள் என் அருகில் இருந்தார்கள். நான்தான் சிறந்த அத்தை" என பதிவிட்டுள்ளார்.

    • நானி மற்றும் ஸ்ரீநிதி ஷெட்டி நடிப்பில் சைலேஷ் கொலானு இயக்கத்தில் வெளியானது ஹிட் 3 திரைப்படம்.
    • தருண் மூர்த்தி இயக்கத்தில் மோகன்லால் மற்றும் ஷோபனா முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து வெளியானது தொடரும் திரைப்படம்.

    திரையுலகில் ஒவ்வொரு வாரமும் பல புதிய படங்கள் ரிலீசாகி வருகின்றன. பல திரைப்படங்களுக்கு திரையரங்கிள் கிடைக்காத வெற்றி ஓடிடி தளத்தில் வெளியான பிறகு கிடைக்கிறது. அந்த வகையில், இந்த வாரம் எந்த திரைப்படங்கள் மற்றும் தொடர்கள் எந்தெந்த ஓ.டி.டி தளங்களில் வெளியாக உள்ளன என்பதைக் காணலாம்.

    ஹிட் 3

    நானி மற்றும் ஸ்ரீநிதி ஷெட்டி நடிப்பில் சைலேஷ் கொலானு இயக்கத்தில் வெளியானது ஹிட் 3 திரைப்படம். இப்படம் ஒரு அதிரடி ஆக்ஷன் திரைப்படமாக உருவாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. திரைப்படம் இன்று நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது.

    ரெட்ரோ

    கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா மற்றும் பூஜா ஹெக்டே முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து வெளியானது ரெட்ரோ திரைப்படம். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். ஆக்ஷன் மற்றும் காதல் கதைக்களத்தில் இப்படம் உருவாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. திரைப்படம் நாளை நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீமாகிறது.

    தொடரும்

    தருண் மூர்த்தி இயக்கத்தில் மோகன்லால் மற்றும் ஷோபனா முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து வெளியானது தொடரும் திரைப்படம். மோகன்லாலுடன் 20 வருடங்களுக்கு பிறகு ஷோபனா இப்படத்தில் நடித்துள்ளார். இதுவரை அதிக வசூலித்த மலையாள திரைப்படமாக தொடரும் உருமாறியுள்ளது. திரைப்படம் நாளை ஜியோ ஹோட்ஸ்டாரில் வெளியாகிறது.

    நிழற்குடை

    தர்ஷன் பிலிம்ஸ் சார்பில் சிவா ஆறுமுகம் கதை திரைக்கதை எழுதி இயக்கியுள்ள படம் நிழற்குடை. தேவயானி முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்த படத்தில் விஜித் கதாநாயகனாகவும் கண்மணி கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். திரைப்படம் நாளை ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

    "கேப்டன் அமெரிக்கா: பிரேவ் நியூ வேர்ல்ட்"

    நடிகர் ஆண்டனி மெக்கீ கேப்டன் அமெரிக்கா நடித்துள்ள படம் "கேப்டன் அமெரிக்கா: பிரேவ் நியூ வேர்ல்ட்". மார்வெல் காமிக்ஸை அடிப்படையாகக் கொண்டு உருவான இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. திரைப்படம் நேற்று ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியானது

    கிரிமினல் ஜஸ்டிஸ் சீசன் 4

    பங்கஜ் ட்ரிபாதி, ஷ்வேதா பசு, முகமத் அய்யுப் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து உருவாகியுள்ளது வெப் தொடரான கிரிமினல் ஜஸ்டிஸ் சீசன் 4. இது ஒரு கோர்ட்ரூம் டிராமாவாக உருவாகியுள்ளது. இத்தொடர் இன்று ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியானது.

    • 'சூர்யாவின் சனிக்கிழமை' படத்தை தொடர்ந்து நானி, 'ஹிட் தி தேர்ட் கேஸ்' படத்தில் நடித்துள்ளார்.
    • இப்படம் கடந்த மே 1 ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

    தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நானி. 'சூர்யாவின் சனிக்கிழமை' படத்தை தொடர்ந்து நானி, 'ஹிட் தி தேர்ட் கேஸ்' படத்தில் நடித்துள்ளார். இப்படம் கடந்த மே 1 ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

    கே.ஜி.எப் நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி கதாநாயகியாக நடித்திருக்கும் இப்படத்தை பிரபல இயக்குனர் சைலேஷ் கொலானு இயக்கியுள்ளார். திரைப்படம் இதுவரை உலகளவில் 120 கோடி ரூபாய் வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில் படத்தின் ஓடிடி ரிலீசை படக்குழு வெளியிட்டுள்ளது. திரைப்படம் வரும் மே 29 ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. திரையரங்கிள் பார்க்க தவறவிட்டவர்கள் ஓடிடியில் பார்த்து மகிழுமாறுகேட்டுக்கொள்ளப்படுகிறது.

    • நானி, 'ஹிட் தி தேர்ட் கேஸ்' படத்தில் நடித்துள்ளார்.
    • இப்படம் மே 1 ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

    தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நானி. 'சூர்யாவின் சனிக்கிழமை' படத்தை தொடர்ந்து நானி, 'ஹிட் தி தேர்ட் கேஸ்' படத்தில் நடித்துள்ளார். இப்படம் மே 1 ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

    கே.ஜி.எப் நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி கதாநாயகியாக நடித்திருக்கும் இப்படத்தை பிரபல இயக்குனர் சைலேஷ் கொலானு இயக்கியுள்ளார். அதிரடி ஆக்ஷன் திரைப்படமாக உருவாகி இருக்கும் இப்படத்தை மக்கள் ரசித்து வருகின்றனர். தமிழ்நாட்டிலும் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

    இந்நிலையில் படத்தின் வசூல் விவரத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. திரைப்படம் வெளியாகி 4 நாட்களில் உலகளவில் 101 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. இன்னும் வரும் நாட்களில் பல கோடிகள் அதிகமாக வசூல் செய்யும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    • இப்படம் மே 1 ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
    • இப்படத்தை பிரபல இயக்குனர் சைலேஷ் கொலானு இயக்கியுள்ளார்.

    தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நானி. 'சூர்யாவின் சனிக்கிழமை' படத்தை தொடர்ந்து நானி, 'ஹிட் தி தேர்ட் கேஸ்' படத்தில் நடித்துள்ளார். இப்படம் மே 1 ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

    கே.ஜி.எப் நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி கதாநாயகியாக நடித்திருக்கும் இப்படத்தை பிரபல இயக்குனர் சைலேஷ் கொலானு இயக்கியுள்ளார். அதிரடி ஆக்ஷன் திரைப்படமாக உருவாகி இருக்கும் இப்படத்தை மக்கள் ரசித்து வருகின்றனர். தமிழ்நாட்டிலும் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

    இந்நிலையில் படத்தின் வசூல் விவரத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. திரைப்படம் வெளியாகி 3 நாட்களில் உலகளவில் 83 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. இன்னும் வரும் நாட்களில் பல கோடிகள் அதிகமாக வசூல் செய்யும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    • நானி, 'ஹிட் தி தேர்ட் கேஸ்' படத்தில் நடித்துள்ளார்.
    • இப்படம் மே 1 ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

    தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நானி. 'சூர்யாவின் சனிக்கிழமை' படத்தை தொடர்ந்து நானி, 'ஹிட் தி தேர்ட் கேஸ்' படத்தில் நடித்துள்ளார். இப்படம் மே 1 ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

    கே.ஜி.எப் நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி கதாநாயகியாக நடித்திருக்கும் இப்படத்தை பிரபல இயக்குனர் சைலேஷ் கொலானு இயக்கியுள்ளார். அதிரடி ஆக்ஷன் திரைப்படமாக உருவாகி இருக்கும் இப்படத்தை மக்கள் ரசித்து வருகின்றனர். தமிழ்நாட்டிலும் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

    இந்நிலையில் படத்தின் வசூல் விவரத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. திரைப்படம் வெளியாகி இரண்டு நாட்களில் உலகளவில் 62 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. இன்னும் வரும் நாட்களில் பல கோடிகள் அதிகமாக வசூல் செய்யும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    • 'சூர்யாவின் சனிக்கிழமை' படத்தை தொடர்ந்து நானி, 'ஹிட் தி தேர்ட் கேஸ்' படத்தில் நடித்துள்ளார்.
    • இப்படம் வருகிற மே 1-ந் தேதி வெளியாக உள்ளது.

    தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நானி. 'சூர்யாவின் சனிக்கிழமை' படத்தை தொடர்ந்து நானி, 'ஹிட் தி தேர்ட் கேஸ்' படத்தில் நடித்துள்ளார். கே.ஜி.எப் நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி கதாநாயகியாக நடித்திருக்கும் இப்படத்தை பிரபல இயக்குனர் சைலேஷ் கொலானு இயக்கியுள்ளார். இப்படம் வருகிற மே 1-ந் தேதி வெளியாக உள்ளது. படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. படத்தின் டிக்கெட் முன்பதிவுகள் வேகமாக நடைப்பெற்று வருகிறது.

    சமீபத்தில் இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் பிரபல இயக்குனர் எஸ்.எஸ் ராஜமவுலி கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் ராஜமவுலி தன்னுடைய இயக்கத்தில் பிரமாண்ட உருவாக உள்ள 'மகாபாரதம்' படத்தில் நடிகர் நானியை ஒரு பகுதியை நடிக்க வைக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். இதனை கேட்ட ரசிகர்கள் உற்சாகமடைந்தனர்.

    இதற்கிடையில், இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி நடிகர் மகேஷ் பாபுவை வைத்து 'எஸ்எஸ்எம்பி 29' என்ற படத்தை தற்பொழுது இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பை முடித்த பின்னர் 'மகாபாரதம்' திரைப்படத்தை இயக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

    • ஹிட் 3 படத்தை பிரபல இயக்குநர் சைலேஷ் கொலானு இயக்கியுள்ளார்.
    • ரெட்ரோ மற்றும் ஹிட் 3 திரைப்படம் மே 1 வெளியாகிறது

    தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நானி. கடைசியாக இவர் நடிப்பில் வெளியான படம் 'சூர்யாவின் சனிக்கிழமை' படம் வசூல் மற்றும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது.

    இதைத் தொடர்ந்து 'ஹிட் 3 படத்தில் நானி நடித்துள்ளார். ஹிட் 3 படத்தை பிரபல இயக்குநர் சைலேஷ் கொலானு இயக்கியுள்ளார்.

    பிரசாந்தி திபிர்னேனி தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படம் வரும் மே மாதம் 1 ஆம் தேதி திரைக்கு வருகிறது. ரத்தம் தெறிக்கும் கிரிமினல் ஜானரில் உருவாகியுள்ள ஹிட் 3 படத்தில் நானி போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

    அதே மே 1 ஆம் தேதி சூர்யா நடிப்பில் ரெட்ரோ திரைப்படம் வெளியாகிறது. படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. ரெட்ரோ படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நேற்று ஐதரபாத்தில் நடைப்பெற்றது. நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்திராக நடிகர் விஜய் தேவரகொண்டா கலந்துக் கொண்டார்.

    அதில் நடிகர் சூர்யா கூறியதாவது " நானிக்கு சரிபோதா சனிவாரம், கோர்ட் திரைப்படத்தை தொடர்ந்து ஹிட் 3 திரைப்படமும் வெற்றியடையட்டும். நானி கூறியதைப் போல் மே 1 பார்ட்டி போல் இரண்டு திரைப்படங்களையும் கொண்டாடுவோம். மேலும் வீழ்வதில் தோல்வி இல்லை வீழ்ந்து எழாமல் இருப்பது தான் தோல்வி. நான் மீண்டும் எழுந்து சண்டைக்கு தயாராகி இருக்கிறேன் " என கூறினார்.

    மேலும் சூர்யா அடுத்ததாக லக்கி பாஸ்கர் இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் படம் நடிக்கவுள்ளார் என்பதை கூறினார்.

    • ஹிட் 3 படத்தை பிரபல இயக்குநர் சைலேஷ் கொலானு இயக்கியுள்ளார்.
    • இப்படம் வரும் மே மாதம் 1 ஆம் தேதி திரைக்கு வருகிறது.

    தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நானி. கடைசியாக இவர் நடிப்பில் வெளியான படம் 'சூர்யாவின் சனிக்கிழமை' படம் வசூல் மற்றும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது.

    இதைத் தொடர்ந்து 'ஹிட் 3 படத்தில் நானி நடித்துள்ளார். ஹிட் 3 படத்தை பிரபல இயக்குநர் சைலேஷ் கொலானு இயக்கியுள்ளார்.

    பிரசாந்தி திபிர்னேனி தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படம் வரும் மே மாதம் 1 ஆம் தேதி திரைக்கு வருகிறது. ரத்தம் தெறிக்கும் கிரிமினல் ஜானரில் உருவாகியுள்ள ஹிட் 3 படத்தில் நானி போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

    சமீபத்தில் நடந்த நேர்காணலில் நானி சில சுவாரசிய விஷயங்களை பகிர்ந்தார் " நான் கமல் சாரிடம் கேள்வி கேட்க வேண்டுமென்றால். விருமாண்டி திரைப்படத்தில் அந்த கோர்ட் சீனின் போது அவர் தூங்கி கொண்டு இருப்பார். அவரை தட்டி எழுப்புவார்கள் அப்பொழுது அவர் உண்மையில் தூங்கி எழுபவர் எப்படி செய்வார்களோ அதே முக பாவனைகளை செய்வார். நான் அந்த வீடியோ கிளிப்பை ஒரு 100 தடவை மேல் பார்த்திருப்பேன். அதை இன்ஸ்பைர் செய்து தான் ஹாய் நான்னா திரைப்படத்தில் ஒரு காட்சி நடித்தேன். அவர் யாரிடம் இருந்து இன்ஸ்பையர் ஆகுகிறார் என ஆவல் அதிகம் இருக்கிறது" என கூறியுள்ளார்.

    • ஹிட் 3 படத்தை பிரபல இயக்குநர் சைலேஷ் கொலானு இயக்கியுள்ளார்.
    • இப்படம் வரும் மே மாதம் 1 ஆம் தேதி திரைக்கு வருகிறது.

    தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நானி. கடைசியாக இவர் நடிப்பில் வெளியான படம் 'சூர்யாவின் சனிக்கிழமை' படம் வசூல் மற்றும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது.

    இதைத் தொடர்ந்து 'ஹிட் 3 படத்தில் நானி நடித்துள்ளார். ஹிட் 3 படத்தை பிரபல இயக்குநர் சைலேஷ் கொலானு இயக்கியுள்ளார்.

    பிரசாந்தி திபிர்னேனி தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படம் வரும் மே மாதம் 1 ஆம் தேதி திரைக்கு வருகிறது. ரத்தம் தெறிக்கும் கிரிமினல் ஜானரில் உருவாகியுள்ள ஹிட் 3 படத்தில் நானி போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

    சமீபத்தில் நடந்த நேர்காணல் ஒன்றில் பிரதீப் ரங்கநாதனை பற்றி நானி கூறியுள்ளார் அதில் " கோமாளி திரைப்படம் வெளியான பிறகு என்னை வைத்து திரைப்படம் இயக்க பிரதீப் ரங்கநாதன் என்னிடம் கதை கூறினார். பிரதீப் ரங்கநாதனை அவரது தொடக்க காலத்தில் சந்தித்து இருந்தால் அவருடைய படத்தை கண்டிப்பாக தயாரித்திருப்பேன். ஆனால் இப்பொழுது அவர் மக்களுக்கு பிடித்த ஒரு கதாநாயகன் ஆகிவிட்டார். புது முகம், புது எனெர்ஜி அடுத்த தலைமுறை சினிமா மக்கள் கொண்டாடுவது பார்ப்பதற்கு சந்தோஷமாக இருக்கிறது."

    • ஹிட் 3 படத்தை பிரபல இயக்குநர் சைலேஷ் கொலானு இயக்கியுள்ளார்.
    • மே 1 ஆம் தேதி சூர்யா நடிப்பில் ரெட்ரோ திரைப்படம் வெளியாகிறது.

    தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நானி. கடைசியாக இவர் நடிப்பில் வெளியான படம் 'சூர்யாவின் சனிக்கிழமை' படம் வசூல் மற்றும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது.

    இதைத் தொடர்ந்து 'ஹிட் 3 படத்தில் நானி நடித்துள்ளார். ஹிட் 3 படத்தை பிரபல இயக்குநர் சைலேஷ் கொலானு இயக்கியுள்ளார்.

    பிரசாந்தி திபிர்னேனி தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படம் வரும் மே மாதம் 1 ஆம் தேதி திரைக்கு வருகிறது. ரத்தம் தெறிக்கும் கிரிமினல் ஜானரில் உருவாகியுள்ள ஹிட் 3 படத்தில் நானி போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

    அதே மே 1 ஆம் தேதி சூர்யா நடிப்பில் ரெட்ரோ திரைப்படம் வெளியாகிறது. படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது.

    ஹிட் 3 படத்தின் சென்னை ப்ரோமோஷன் நிகழ்ச்சியின் போது நானியிடம் பத்திரிக்கையாளர் ஒருவர் "ஒரே நாளில் உங்கள் திரைப்படமும் சூர்யாவின் ரெட்ரோ திரைப்படமும் வருகிறது அதனை எப்படி நீங்கள் பார்க்கிறீர்கள்? " என கேள்வி எழுப்பினார் அதற்கு நானி " இது போட்டி என்று சொல்ல கூடாது. பார்ட்டி என்று சொல்ல வேண்டும். தமிழ் மக்கள் கண்டிப்பாக முதலில் சூர்யா சாரின் ரெட்ரோ திரைப்படத்தை பார்ப்பார்கள். அதை பார்த்துவிட்டு ஹிட் 3 திரைப்படத்தை பார்க்க வேண்டும். இரண்டு படங்களையும் கொண்டாட வேண்டும். ரெட்ரோ திரைப்படம் தெலுங்கிலும் வெளியாகிறது. அங்கும் திரைப்படம் நன்றாக ஓடும் என நம்புகிறேன்." என கூறினார்.

    • ஹிட் 3 படத்தை பிரபல இயக்குநர் சைலேஷ் கொலானு இயக்கியுள்ளார்.
    • இப்படம் மே மாதம் 1 ஆம் தேதி திரைக்கு வருகிறது.

    தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நானி. கடைசியாக இவர் நடிப்பில் வெளியான படம் 'சூர்யாவின் சனிக்கிழமை' படம் வசூல் மற்றும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது.

    இதைத் தொடர்ந்து 'ஹிட் 3 படத்தில் நானி நடித்துள்ளார். ஹிட் 3 படத்தை பிரபல இயக்குநர் சைலேஷ் கொலானு இயக்கியுள்ளார்.

    பிரசாந்தி திபிர்னேனி தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படம் வரும் மே மாதம் 1 ஆம் தேதி திரைக்கு வருகிறது. ரத்தம் தெறிக்கும் கிரிமினல் ஜானரில் உருவாகியுள்ள ஹிட் 3 படத்தில் நானி போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

    படத்தில் நடிகர் கார்த்தி கௌரவ வேடத்தில் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.

    திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் வெளியாகிறது. திரைப்படம் வெளியாக இன்னும் 6 நாட்கள் மட்டும் இருக்க நிலையில் படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. படத்தின் முதல் பாடலான ப்ரேம வெல்லுவா பாடல் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் படத்தின் அடுத்த பாடலான `தனு' பாடலின் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்பாடலை ராகவ் வரிகளில் அனிருத் பாடியுள்ளார்.

    ×