என் மலர்
சினிமா செய்திகள்

அனிருத் குரலில் ஹிட் 3 படத்தின் 3rd சிங்கிள் ரிலீஸ்
- ஹிட் 3 படத்தை பிரபல இயக்குநர் சைலேஷ் கொலானு இயக்கியுள்ளார்.
- இப்படம் மே மாதம் 1 ஆம் தேதி திரைக்கு வருகிறது.
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நானி. கடைசியாக இவர் நடிப்பில் வெளியான படம் 'சூர்யாவின் சனிக்கிழமை' படம் வசூல் மற்றும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது.
இதைத் தொடர்ந்து 'ஹிட் 3 படத்தில் நானி நடித்துள்ளார். ஹிட் 3 படத்தை பிரபல இயக்குநர் சைலேஷ் கொலானு இயக்கியுள்ளார்.
பிரசாந்தி திபிர்னேனி தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படம் வரும் மே மாதம் 1 ஆம் தேதி திரைக்கு வருகிறது. ரத்தம் தெறிக்கும் கிரிமினல் ஜானரில் உருவாகியுள்ள ஹிட் 3 படத்தில் நானி போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
படத்தில் நடிகர் கார்த்தி கௌரவ வேடத்தில் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.
திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் வெளியாகிறது. திரைப்படம் வெளியாக இன்னும் 6 நாட்கள் மட்டும் இருக்க நிலையில் படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. படத்தின் முதல் பாடலான ப்ரேம வெல்லுவா பாடல் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் படத்தின் அடுத்த பாடலான `தனு' பாடலின் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்பாடலை ராகவ் வரிகளில் அனிருத் பாடியுள்ளார்.






