ஹிட் 3 நானியின் சர்கார் ஷோ - 3 நாள் வசூல் விவரம்

இப்படம் மே 1 ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இப்படத்தை பிரபல இயக்குனர் சைலேஷ் கொலானு இயக்கியுள்ளார்.
ஹிட் 3 நானியின் சர்கார் ஷோ - 3 நாள் வசூல் விவரம்
Published on

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நானி. 'சூர்யாவின் சனிக்கிழமை' படத்தை தொடர்ந்து நானி, 'ஹிட் தி தேர்ட் கேஸ்' படத்தில் நடித்துள்ளார். இப்படம் மே 1 ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

கே.ஜி.எப் நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி கதாநாயகியாக நடித்திருக்கும் இப்படத்தை பிரபல இயக்குனர் சைலேஷ் கொலானு இயக்கியுள்ளார். அதிரடி ஆக்ஷன் திரைப்படமாக உருவாகி இருக்கும் இப்படத்தை மக்கள் ரசித்து வருகின்றனர். தமிழ்நாட்டிலும் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்நிலையில் படத்தின் வசூல் விவரத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. திரைப்படம் வெளியாகி 3 நாட்களில் உலகளவில் 83 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. இன்னும் வரும் நாட்களில் பல கோடிகள் அதிகமாக வசூல் செய்யும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com