என் மலர்
நீங்கள் தேடியது "Nani"
- மிகவும் பிரம்மாண்டமாக இப்படம் உருவாகி வருகிறது.
- பல மொழிகளில் அடுத்த ஆண்டு மார்ச் 26-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
நானி நடிப்பில் உருவாகி வரும் 'தி பாரடைஸ்' படத்திற்காக ரசிகர்கள் காத்துக்கொண்டு இருக்கிறார்கள். இந்த நிலையில், 'தி பாரடைஸ்' படத்தில் SHIKANJA MAALIK என்ற வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துவரும் நடிகர் மோகன் பாபுவின் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
வெளியான போஸ்டரில் நடிகர் மோகன் பாபு, சட்டை அணியாமல் ரத்தத்தில் நனைந்த கையுடன், ஒரு சுருட்டு மற்றும் கருப்பு கண்ணாடியை அணிந்த படி தனது பயங்கரமான வில்லத்தனத்தை வெளிப்படுத்தி உள்ளார். போஸ்டரை சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில், ஆக்சன் பின்னணியில் மிகவும் பிரம்மாண்டமாக இப்படம் உருவாகி வருகிறது. அனிருத் இசையமைக்கும் இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம், பெங்காலி, ஆங்கிலம் மற்றும் ஸ்பானிஷ் உள்ளிட்ட மொழிகளில் அடுத்த ஆண்டு மார்ச் 26-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
சிறிய பட்ஜெட்டில் உருவான "லிட்டில் ஹார்ட்ஸ்" (Little Hearts), புதுமுகங்களான மௌலி தனுஜ் பிரஷாந்த் மற்றும் சிவானி நாகரம் நடித்திருக்கும் இப்படம், திரையரங்குகளில் செம வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
படத்தின் முதல் நாள் வசூலாக 2 கோடி ரூபாய் வசூலித்துள்ளது, அமெரிக்காவில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் ஷோக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. திரைப்படத்தின் வசூல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. திரைப்படம் வெளியாகி 4 நாளில் உலகளவில் 15.41 கோடி ரூபாய் வசூலித்துள்ளது.
படத்தில் இடம் பெற்ற நகைச்சுவை காட்சிகள் அதிகமாக வொர்க் அவுட் ஆகியுள்ளதால் இளைஞர்கள் கூட்டம் படத்திற்கு பெரும் ஆதரவு கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் படத்தை பார்த்த நானி படக்குழுவை பாராட்டி அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் " லிட்டில் ஹார்ட்ஸ் திரைப்படத்தை பார்த்து ரசித்தேன், நீண்ட நாளுக்கு பிறகு படத்தை பார்த்து மனதார சிரித்தேன். அகில், மது, காத்யயானி நிங்கள் அனைவரும் இணைந்து என்னுடைய நாளை அழகாகிவிட்டனர். அதற்கு நன்றி" என பதிவிட்டுள்ளார். அதற்கு நன்றி தெரிவித்து படக்குழுவும் பதிவிட்டுள்ளது.
திரைப்படக் குழு:
இயக்கம்: சாய் மார்தண்ட்
தயாரிப்பு: '90s' இயக்குநர் ஆதித்ய ஹசன்
நடிப்பு: மௌலி தனுஜ் பிரஷாந்த், சிவானி நாகரம்
துணை நடிகர்கள்: ராஜீவ், எஸ். எஸ். காஞ்சி, அனிதா சௌதரி, சத்யா கிருஷ்ணன்
இசை: சிஞ்ஜித் யெர்ரமில்லி
விநியோகம்: வம்சி நந்திபட்டி, பன்னி வாஸ்
- , ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் நானி மீண்டும் அவரது 33- வது படமாக "தி பாரடைஸ்" என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
- இந்த கதப்பாத்திரத்திற்கு ஜடல் என பெயர் வைத்துள்ளனர்.
தசரா படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் நானி மீண்டும் அவரது 33- வது படமாக "தி பாரடைஸ்" என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தை எஸ்.எல்.வி. சினிமாஸ் தயாரிக்கிறது. தசரா படத்தை போலவே நானி இதிலும் வித்தியாசமான கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார். கதப்பாத்திரத்திற்கு ஜடல் என பெயர் வைத்துள்ளனர்.
படத்தின் முதல் கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு சில மாதங்களுக்கு முன் வெளியிட்டது. இந்த வீடியோ இணையத்தில் மிகப்பெரிய அளவில் வைரலானது. நானியின் வித்தியாசமான தோற்றம், உடல் பாவனை என அனைத்தும் ரசிகர்களை கவர்ந்தது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
'பேரடைஸ்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை அண்மையில் படக்குழு வெளியிட்டது. இந்நிலையில் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ளது அதனை படக்குழு வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளது.
இப்படம் ஒரு அதிரடி ஆக்ஷன் திரைப்படமாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. போஸ்டரில் நானி இரட்டை ஜடை போன்று வித்தியாசமான ஹேர் ஸ்டைலுடன் இருக்கிறார்.
அனிருத் இசையில் உருவாகி வரும் இத்திரைப்படம் 2026 மார்ச் 26ம் தேதி வெளியாகவுள்ளது
- ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் நானி மீண்டும் அவரது 33- வது படமாக "தி பாரடைஸ்" என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
- படத்தின் முதல் கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு சில மாதங்களுக்கு முன் வெளியிட்டது.
நானி, கீர்த்தி சுரேஷ் , சமுத்திரகனி, டாம் சாக்கோ போன்ற முன்னணி நடிகர்கள் நடித்து அறிமுக இயக்குநரான ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் 2023ம் ஆண்டு வெளிவந்த படம் தசரா.
தசரா படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் நானி மீண்டும் அவரது 33- வது படமாக "தி பாரடைஸ்" என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தை எஸ்.எல்.வி. சினிமாஸ் தயாரிக்கிறது. தசரா படத்தை போலவே நானி இதிலும் வித்தியாசமான கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார். கதப்பாத்திரத்திற்கு ஜடல் என பெயர் வைத்துள்ளனர்.
படத்தின் முதல் கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு சில மாதங்களுக்கு முன் வெளியிட்டது. இந்த வீடியோ இணையத்தில் மிகப்பெரிய அளவில் வைரலானது. நானியின் வித்தியாசமான தோற்றம், உடல் பாவனை என அனைத்தும் ரசிகர்களை கவர்ந்தது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
இந்நிலையில் 'பேரடைஸ்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படம் ஒரு அதிரடி ஆக்ஷன் திரைப்படமாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. போஸ்டரில் நானி இரட்டை ஜடை போன்று வித்தியாசமான ஹேர் ஸ்டைலுடன் இருக்கிறார்.அவருக்கு பின் ஏராளமான ஆயுதங்கள் துப்பாக்கிகள் காணப்படுகிறது.
அனிருத் இசையில் உருவாகி வரும் இத்திரைப்படம் 2026 மார்ச் 26ம் தேதி வெளியாகவுள்ளது
- ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் நானி நடிப்பில் 2023ம் ஆண்டு தசரா படம் வெளியானது.
- தசரா படத்தை போலவே நானி இதிலும் வித்தியாசமான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
நானி, கீர்த்தி சுரேஷ் , சமுத்திரகனி, டாம் சாக்கோ போன்ற முன்னணி நடிகர்கள் நடித்து அறிமுக இயக்குநரான ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் 2023ம் ஆண்டு வெளிவந்த படம் தசரா.
தசரா படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் நானி மீண்டும் அவரது 33- வது படமாக "தி பாரடைஸ்" என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.
இப்படத்தை எஸ்.எல்.வி. சினிமாஸ் தயாரிக்கிறது. தசரா படத்தை போலவே நானி இதிலும் வித்தியாசமான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
படத்தின் முதல் கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு சில மாதங்களுக்கு முன் வெளியிட்டது. இந்த வீடியோ இணையத்தில் மிகப்பெரிய அளவில் வைரலானது. நானியின் வித்தியாசமான தோற்றம், உடல் பாவனை என அனைத்தும் ரசிகர்களை கவர்ந்தது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
இந்நிலையில் 'பேரடைஸ்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஆகஸ்ட் 8ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
அனிருத் இசையில் உருவாகி வரும் இத்திரைப்படம் 2026 மார்ச் 26ம் தேதி வெளியாகவுள்ளது
- அவரது 41 வது திரைப்படத்தில் #DQ 41 அறிமுக இயக்குநர் ரவி நெலக்குடிடியுடன் இணைகிறார்.
- நிறுவனத்தின் சார்பில் தயாராகும் பத்தாவது திரைப்படம் #SLV 10 என்பது குறிப்பிடத்தக்கது.
துல்கர் சல்மான் - ரவி நெலகுடிடி (Ravi Nelakuditi)- சுதாகர் செருகுரி (Sudhakar Cherukuri) - SLV சினிமாஸ்- கூட்டணியில் தயாராகும் பான் இந்திய திரைப்படமான #DQ 41 - #SLV 10 பூஜையுடன் படப்பிடிப்பும் தொடங்கியது. 'நேச்சுரல் ஸ்டார் ' நானி கிளாப் அடித்து தொடங்கி வைக்க, வழக்கமான படப்பிடிப்பு இன்று முதல் தொடங்குகிறது.
பன்முக திறமை கொண்ட நட்சத்திரமான துல்கர் சல்மான் தனது அற்புதமான திரைக்கதை தேர்வுக்கு பெயர் பெற்றவர். புத்துணர்ச்சி- தனித்துவம் மற்றும் ஒரு நடிகராக சவாலான கதாபாத்திரங்களில் நடிப்பதை எப்போதும் விரும்புபவர். அவரது 41 வது திரைப்படத்தில் #DQ 41 அறிமுக இயக்குநர் ரவி நெலக்குடிடியுடன் இணைகிறார்.
சமகால காதல் கதையாக வளமான நாடகத்தன்மையுடன் தயாராகும் இந்த திரைப்படத்தை எஸ் எல் வி சினிமாஸ் நிறுவனம் சார்பில் வெற்றிகரமான தயாரிப்பாளர் சுதாகர் செருகுரி தயாரிக்கிறார். இந்தத் திரைப்படம் இந்த நிறுவனத்தின் சார்பில் தயாராகும் பத்தாவது திரைப்படம் #SLV 10 என்பது- இந்நிறுவனத்தின் புதிய மைல் கல்லை குறிக்கிறது.

ஹைதராபாத்தில் நடைபெற்ற பிரம்மாண்டமான தொடக்க நிகழ்வில் பல சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டனர். சுப முகூர்த்த படப்பிடிப்பிற்கு 'நேச்சுரல் ஸ்டார்' நானி கலந்துகொண்டு கிளாப் போர்டு அடித்தார். இயக்குநர் புச்சிபாபு சனா (Buchi Babu Sana) கேமராவை இயக்கினார். குன்னம் சந்தீப் (Gunnam Sandeep), நானி மற்றும் ரம்யா குன்னம் ஆகியோர் இப்படத்தின் ஸ்கிரிப்ட்டை படக் குழுவினரிடம் ஒப்படைத்தனர். இப்படத்தின் முதல் காட்சியை ரவி நெலகுடிடி இயக்கினார்.
'தசரா' மற்றும் 'தி பாரடைஸ்' படத்தின் இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒதெலாவும் (Srikanth Odela) இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் .
அனய் ஓம். கோஸ்வாமி (om Goswamy) ஒளிப்பதிவை கையாள தேசிய விருதை வென்ற ஜீ.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார் .அவினாஷ் கொல்லா (Avinash Kolla) தயாரிப்பு வடிவமைப்பாளராக பணியாற்றுகிறார்.
இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் , இந்தி ஆகிய இந்திய மொழிகளில் பான் இந்திய திரைப்படமாக வெளியாகிறது.
இப்படத்தில் நடிக்கும் ஏனைய நடிகர்கள்' நடிகைகள் பற்றிய விவரங்கள் அதிகாரப்பூர்வமாக விரைவில் வெளியிடப்படும்.
நடிகர்கள்: துல்கர் சல்மான்
தொழில்நுட்ப குழு :
எழுத்து & இயக்கம் : ரவி நெலகுடிடி
தயாரிப்பாளர் : சுதாகர் செருகுரி
தயாரிப்பு நிறுவனம் : எஸ் எல் வி சினிமாஸ்
இணை தயாரிப்பாளர் : கோபிசந்த் இன்னா முரி
சி இ ஓ - ( CEO) விஜயகுமார் சாகந்தி
இசை :ஜீ. வி பிரகாஷ் குமார்
ஒளிப்பதிவு : அனய் ஓம் கோஸ்வாமி.
தயாரிப்பு வடிவமைப்பாளர் அவினாஷ் கொல்லா
மக்கள் தொடர்பு: யுவராஜ் .
- நானி நடிப்பில் விவேக் ஆத்ரேயா இயக்கத்தில் கடந்தாண்டு வெளியானது சூர்யாஸ் சாட்டர்டே திரைப்படம்.
- மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று பிளாக்பஸ்டர் திரைப்படமாக உருவானது.
நானி நடிப்பில் விவேக் ஆத்ரேயா இயக்கத்தில் கடந்தாண்டு வெளியானது சூர்யாஸ் சாட்டர்டே திரைப்படம். இவரது இயக்கத்தில் இதற்கு முன் அண்டே சுந்தரனிகி என்ற படத்தில் நானி நடித்தார்.
சூர்யாஸ் சாட்டர்டே திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று பிளாக்பஸ்டர் திரைப்படமாக உருவானது. இப்படத்தில் நானியுடன் எஸ்.ஜே சூர்யா மற்றும் பிரியங்கா மோகன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தனர்.
இந்நிலையில் விவேக் ஆத்ரேயா அடுத்ததாக நடிகர் ரஜினிகாந்திற்கு கதை கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் தற்பொழுது ஜன நாயகன் படத்தை இயக்கும் எச்.வினோத்தும் ரஜினிற்கு கதை கூறியுள்ளதாக கூறப்படுகிறது. ரஜினி ஜெயிலர் 2 திரைப்படத்திற்கு பிறகு எந்த படத்தில் நடிக்கவுள்ளார் என தெரியவில்லை.
- ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் 2023ம் ஆண்டு வெளிவந்த படம் தசரா.
- தசரா படத்தை போலவே நானி இதிலும் வித்தியாசமான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
நானி, கீர்த்தி சுரேஷ் , சமுத்திரகனி, டாம் சாக்கோ போன்ற முன்னணி நடிகர்கள் நடித்து அறிமுக இயக்குநரான ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் 2023ம் ஆண்டு வெளிவந்த படம் தசரா.
தசரா படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் நானி மீண்டும் அவரது 33- வது படமாக "தி பாரடைஸ்" என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.
இப்படத்தை எஸ்.எல்.வி. சினிமாஸ் தயாரிக்கிறது. தசரா படத்தை போலவே நானி இதிலும் வித்தியாசமான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
படத்தின் முதல் கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு சில மாதங்களுக்கு முன் வெளியிட்டது. இந்த வீடியோ இணையத்தில் மிகப்பெரிய அளவில் வைரலானது. நானியின் வித்தியாசமான தோற்றம், உடல் பாவனை என அனைத்தும் ரசிகர்களை கவர்ந்தது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
திரைப்படத்தில் சொனாலி குல்கர்னி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். இந்நிலையில் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. அப்போது எடுத்த ஒரு புகைப்படத்தை நானி அவரது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். ஹிட் 3 திரைப்படத்தை தொடர்ந்து இப்படத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
படத்தின் ஒளிப்பதிவை ஜி.கே விஷ்ணு மற்றும் படத்தொகுப்பை நவீன் நூலி மெற்ற்கொள்கின்றனர்.
திரைப்படம் 2026 ஆம் ஆண்டு மார்ச் 26 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
- நடிகர் வடிவேலு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.
- 'ஹிட் 3' படத்தில் கார்த்தி கேமியோ ரோலில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
விக்ரம் பிரபு நடிப்பில் டாணாக்காரன் இயக்கிய இயக்குனர் தமிழ் உடன் இணைந்து நடிகர் கார்த்தி படம் நடிக்கவுள்ளார். இப்படத்தை டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளது. இப்படம் கார்த்திக்கு 29 திரைப்படமாகும். அதனால், இப்படத்தை கார்த்தி 29 என்று அழைக்கப்படுகிறது.
படத்தின் முதல் போஸ்டரை தயாரிப்பு குழு கடந்த செப்டம்பர் மாதம் வெளியிட்டது. அதில் ஒரு கப்பல் கடலில் இருக்கும் புகைப்படம் இடம் பெற்றிருந்தது.
இப்படத்தில் நடிகர் வடிவேலு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.
இந்த நிலையில், இப்படத்தில் பிரபல தெலுங்கு நடிகரான நானி கேமியோ ரோலில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஏற்கனவே கார்த்தி நடிகர் நானியில் 'ஹிட் 3' படத்தில் கேமியோ ரோலில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால், படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
இதற்கிடையே, டிரீம் வாரியர் பிக்சர்ஸ் எக்ஸ் தள பதிவில் கனவே என்று குறிப்பிட்டு போஸ்டர் ஒன்றுடன் விரைவில்.. காத்திருங்கள் என பதிவிட்டுள்ளது.
இதனால், இது கார்த்தி 29 படத்தின் தலைப்பாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
- சசிகுமார், சிம்ரன் நடிப்பில் கடந்த மே 1ம் தேதி உலகம் முழுவதும் வெளியான திரைப்படம் 'டூரிஸ்ட் ஃபேமிலி'.
- படத்தை பார்த்த பல திரைப்பிரபலங்கள் படக்குழுவை பாராட்டி பதிவிட்டனர்.
சசிகுமார், சிம்ரன் நடிப்பில் கடந்த மே 1ம் தேதி உலகம் முழுவதும் வெளியான திரைப்படம் 'டூரிஸ்ட் ஃபேமிலி'. இப்படத்தை அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவின்ந்த் இயக்கியுள்ளார். இப்படம் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
இந்த திரைப்படத்தில் மிதுன் ஜெய்சங்கர், கமலேஷ், யோகி பாபு, ரமேஷ் திலக், எம்.எஸ். பாஸ்கர், பக்ஸ் என்ற பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இலங்கையைச் சேர்ந்த ஒரு தமிழ் குடும்பம் தமிழ்நாட்டுக்கு அகதிகளாக வந்து சந்திக்கும் சவால்களை காமெடி கலந்து எடுக்கப்பட்டுள்ளது.
படத்தை பார்த்த பல திரைப்பிரபலங்கள் படக்குழுவை பாராட்டி பதிவிட்டனர்.
இந்நிலையில், டூரிஸ்ட் ஃபேமிலி படத்தை பார்த்த நடிகர் சூர்யா, இயக்குனர் அபிஷன் ஜீவிந்த்தை நேரில் பாராட்டியனார் அந்த வகையில் தற்பொழுது நடிகர் நானி இயக்குனரை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார். இதை மிகவும் நெகிழ்ச்சியுடன் அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
- கடந்த ஆண்டு சூர்யாஸ் சாட்டர்டே படத்தில் நானி நடித்து இருந்தார்.
- இப்படத்தை விவேக் ஆத்ரேயா இயக்கியுள்ளார்.
கடந்த ஆண்டு சூர்யாஸ் சாட்டர்டே படத்தில் நானி நடித்து இருந்தார். இப்படத்தை விவேக் ஆத்ரேயா இயக்கியுள்ளார்.
சூர்யாஸ் சாட்டர்டே படத்தின் முன்னணி பெண் கதாப்பாத்திரத்தில் பிரியங்கா மோகன் நடித்தார் இப்படத்தில் எஸ்.ஜே சூர்யா வில்லனாக நடித்து மிரட்டி இருப்பார். டிவிவி எண்டர்டெயின்மண்ட் படத்தை தயாரிக்க ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ளார்.
இந்நிலையில் சூர்யா சாட்டர்டே திரைப்படத்திற்காக எஸ்ஜே சூர்யாவிற்கு சிறந்த துணை நடிகருக்கான விருதை வென்றுள்ளார். Gaddar தெலுங்கானா திரைப்பட விருதை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு எஸ்.ஜே சூர்யா நன்றி தெரிவித்து அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்டார். அதில் அவர் படக்குழு, தெலுங்கானா அரசுக்கு, விவேக் இயக்குநருக்கு, நானி மற்றும் தயாரிப்பாளருக்கு நன்றி தெரிவித்தார்.
எஸ்ஜே சூர்யா விருது வென்றதுக்கு நானி அவரது எக்ஸ் தளத்தில் " வாழ்த்துக்கள் சார், நீங்கள் வெறும் துணை நடிகர் அல்ல நீங்கள்தான் அனைத்தும்" என தெரிவித்தார். அதற்கும் எஸ்.ஜே சூர்யா நன்றி நேச்சுரல் ஸ்டார் என ஒரு வரியில் பதிலளித்தார்.
மேலும் நேற்று அதை குறிப்பிட்டு " நானி சார், சாரி, ஷூட்டில் இருந்ததால் சரியாக மெசெஜ் செய்ய முடியவில்லை, வெறும் நன்றி என்ற வார்த்தை சொன்னால் ஈடாகாது, நீங்கள் மற்றும் விவேக் இல்லை என்றால் இதற்கு வாய்ப்பே இல்லை" என தெரிவித்துள்ளார்.
- தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நானி.
- இவர் நடிப்பில் வெளியான ஹிட் 3 திரைப்படம் வசூல் மற்றும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது.
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நானி. கடைசியாக இவர் நடிப்பில் வெளியான ஹிட் 3 திரைப்படம் வசூல் மற்றும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது.
ஹிட் 3 படத்தை பிரபல இயக்குநர் சைலேஷ் கொலானு இயக்கியுள்ளார். ரத்தம் தெறிக்கும் கிரிமினல் ஜானரில் உருவாகியுள்ள ஹிட் 3 படத்தில் நானி போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
ஹிட் 3 பட ப்ரோமோஷன் நிகழ்ச்சியின் போது நானி " விருமாண்டி திரைப்படத்தில் அந்த கோர்ட் சீனின் போது அவர் தூங்கி கொண்டு இருப்பார். அவரை தட்டி எழுப்புவார்கள் அப்பொழுது அவர் உண்மையில் தூங்கி எழுபவர் எப்படி செய்வார்களோ அதே முக பாவனைகளை செய்வார். நான் அந்த வீடியோ கிளிப்பை ஒரு 100 தடவை மேல் பார்த்திருப்பேன். அதை இன்ஸ்பைர் செய்து தான் ஹாய் நான்னா திரைப்படத்தில் ஒரு காட்சி நடித்தேன். அவர் யாரிடம் இருந்து இன்ஸ்பையர் ஆகுகிறார் என ஆவல் அதிகம் இருக்கிறது" என கூறினார்.
தற்பொழுது தக் லைஃப் திரைப்பட ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் " நானி இப்படி குறிப்பிட்டு சொன்னார் என தொகுப்பாளர் கேட்க. " ஆமா நானி இத குறிப்பிட்டாரு நானும் அதை பார்த்தேன். சினிமா என்பது அப்படிதான் இருக்க வேண்டும். நன்றி நானி என்ற சொல்லுக்கு மேல் நான் நானி என்ற பெயரை இங்கு குறிப்பட்டது போதும். நான் மனதில் என்ன நினைக்கிறேன் என மக்கள் புரிந்துக் கொள்வார்கள்" என கூறியுள்ளார்.
இதற்கு நானி அவரது எக்ஸ் தளத்தில் " போதும் சார்.. போதும் " என மிகவும் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.






