நானியின் 'தி பாரடைஸ் - புது ரிலீஸ் தேதி அறிவிப்பு!

படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார். படம் மார்ச் 26 அன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
நானியின் 'தி பாரடைஸ் - புது ரிலீஸ் தேதி அறிவிப்பு!
Published on

நடிகர் நானி மற்றும் இயக்குனர் ஸ்ரீகாந்த் ஒடேலா மீண்டும் இணைந்துள்ள படம் தி பாரடைஸ். 'தசரா' படத்திற்குப் பிறகு நானி-ஸ்ரீகாந்த் ஒடேலா இணையும் இரண்டாவது படம் இது. இப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார். கயாடு லோஹர் கதாநாயகியாக நடிக்கிறார். மோகன் பாபு, ராகவ் ஜுயல், சோனாலி குல்கர்னி மற்றும் சம்பூர்ணேஷ் பாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகும் இப்படத்தை SLV சினிமாஸ் தயாரிக்கிறது.

1980-களில் செகந்திராபாத் பின்னணியில் நடக்கும் கதைக்களத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இதில் ஒடுக்கப்பட்ட சமூகத்திற்காகப் போராடும் தலைவராக நானி நடித்துள்ளார். இந்தப் படம் மார்ச் 26 அன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் படம் ஆகஸ்ட் 21 அன்று வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.  

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com