என் மலர்
நீங்கள் தேடியது "ஸ்ரீநிதி ஷெட்டி"
சிறந்த செலிபிரிட்டி ஸ்டைலிஸ்டாகப் பெயர் பெற்ற நீர்ராஜா கோனா, தற்போது இயக்குநராக அறிமுகமாகிறார். அவருடைய முதல் படம் Telusu Kada, ரொமான்டிக் டிராமாவாக உருவாகியுள்ளது.
இந்த படத்தில் சித்து , ராஷி கண்ணா, மற்றும் ஸ்ரீநிதி ஷெட்டி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்நிலையில் படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.
ஏற்கனவே வெளியான முதல் சிங்கிள் "மல்லிகா கந்தா" ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இன்று வெளியான டீசர், புதுமையான காட்சிகள், தமன் இசை, மற்றும் வண்ணமயமான காதல் கதை அம்சங்களுடன் பார்வையாளர்களை கவர்ந்துள்ளது.
சித்து ஒரே நேரத்தில் இரண்டு பெண்களை காதலிக்கும் கதையமைப்பு, மேலும், இருவரிடமும் திருமணத்திற்கான வேண்டுகோள் வைப்பது டீசரின் முக்கிய அம்சமாக உள்ளது. திரைப்படம் வரும் அக்டோபர் 17-ம் தேதி படம் வெளியாக உள்ளது. இந்த படத்தை People Media Factory நிறுவனம் சார்பில் டி.ஜி. விஸ்வா பிரசாத் மற்றும் கிரிதி பிரசாத் தயாரிக்கின்றனர்.
- கே.ஜி.எப், கே.ஜி.எப்.-2 படங்களின் மூலம் இந்திய அளவில் பிரபலமானவர் ஸ்ரீநிதி ஷெட்டி.
- தற்போது ஸ்ரீநிதி புலாசா காடா என்ற படத்தில் நடித்து வருகிறார்.
கே.ஜி.எப், கே.ஜி.எப்.-2 படங்களின் மூலம் இந்திய அளவில் பிரபலமானவர் ஸ்ரீநிதி ஷெட்டி. அடுத்ததாக நடிகர் நானியுடன் இணைந்து நடித்த ஹிட் 3 படம் திரைக்கு வந்து ரூ.100 கோடி வசூலை பெற்றது.
படத்தில் ஸ்ரீநிதி ஷெட்டி கேரக்டர் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது ஸ்ரீநிதி புலாசா காடா என்ற படத்தில் நடித்து வருகிறார். இன்னொரு கதாநாயகியாக ராஷி கண்ணா நடிக்கிறார். இந்நிலையில் ஸ்ரீநிதி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
ஒரு கைக்குழந்தையை ஸ்ரீநிதி தனது மடியில் வைத்து அன்போடு பாலூட்டும் புகைப்படங்களை தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.
இந்த புகைப்படங்கள் வைரலாகி ஸ்ரீநிதிக்கு எப்போ திருமணம் ஆச்சு, அவருக்கு குழந்தைகள் இருக்கின்றனரா? என சமூக வலைதளத்தில் விமர்சனங்கள் எழுந்தது.
விமர்சனங்களுக்கு ஸ்ரீநிதி பதிவு விடையை கொடுத்தது. அவரது பதிவில், "நான் எழுந்த போது என் குழந்தைகள் என் அருகில் இருந்தார்கள். நான்தான் சிறந்த அத்தை" என பதிவிட்டுள்ளார்.
- நானி, 'ஹிட் தி தேர்ட் கேஸ்' படத்தில் நடித்துள்ளார்.
- இப்படம் மே 1 ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நானி. 'சூர்யாவின் சனிக்கிழமை' படத்தை தொடர்ந்து நானி, 'ஹிட் தி தேர்ட் கேஸ்' படத்தில் நடித்துள்ளார். இப்படம் மே 1 ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
கே.ஜி.எப் நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி கதாநாயகியாக நடித்திருக்கும் இப்படத்தை பிரபல இயக்குனர் சைலேஷ் கொலானு இயக்கியுள்ளார். அதிரடி ஆக்ஷன் திரைப்படமாக உருவாகி இருக்கும் இப்படத்தை மக்கள் ரசித்து வருகின்றனர். தமிழ்நாட்டிலும் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்நிலையில் படத்தின் வசூல் விவரத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. திரைப்படம் வெளியாகி 4 நாட்களில் உலகளவில் 101 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. இன்னும் வரும் நாட்களில் பல கோடிகள் அதிகமாக வசூல் செய்யும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
- நானி, 'ஹிட் தி தேர்ட் கேஸ்' படத்தில் நடித்துள்ளார்.
- இப்படம் மே 1 ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நானி. 'சூர்யாவின் சனிக்கிழமை' படத்தை தொடர்ந்து நானி, 'ஹிட் தி தேர்ட் கேஸ்' படத்தில் நடித்துள்ளார். இப்படம் மே 1 ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
கே.ஜி.எப் நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி கதாநாயகியாக நடித்திருக்கும் இப்படத்தை பிரபல இயக்குனர் சைலேஷ் கொலானு இயக்கியுள்ளார். அதிரடி ஆக்ஷன் திரைப்படமாக உருவாகி இருக்கும் இப்படத்தை மக்கள் ரசித்து வருகின்றனர். தமிழ்நாட்டிலும் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்நிலையில் படத்தின் வசூல் விவரத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. திரைப்படம் வெளியாகி இரண்டு நாட்களில் உலகளவில் 62 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. இன்னும் வரும் நாட்களில் பல கோடிகள் அதிகமாக வசூல் செய்யும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
- ஹிட் 3 படத்தை பிரபல இயக்குநர் சைலேஷ் கொலானு இயக்கியுள்ளார்.
- இப்படம் மே மாதம் 1 ஆம் தேதி திரைக்கு வருகிறது.
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நானி. கடைசியாக இவர் நடிப்பில் வெளியான படம் 'சூர்யாவின் சனிக்கிழமை' படம் வசூல் மற்றும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது.
இதைத் தொடர்ந்து 'ஹிட் 3 படத்தில் நானி நடித்துள்ளார். ஹிட் 3 படத்தை பிரபல இயக்குநர் சைலேஷ் கொலானு இயக்கியுள்ளார்.
பிரசாந்தி திபிர்னேனி தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படம் வரும் மே மாதம் 1 ஆம் தேதி திரைக்கு வருகிறது. ரத்தம் தெறிக்கும் கிரிமினல் ஜானரில் உருவாகியுள்ள ஹிட் 3 படத்தில் நானி போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
படத்தில் நடிகர் கார்த்தி கௌரவ வேடத்தில் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.
திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் வெளியாகிறது. திரைப்படம் வெளியாக இன்னும் 6 நாட்கள் மட்டும் இருக்க நிலையில் படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. படத்தின் முதல் பாடலான ப்ரேம வெல்லுவா பாடல் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் படத்தின் அடுத்த பாடலான `தனு' பாடலின் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்பாடலை ராகவ் வரிகளில் அனிருத் பாடியுள்ளார்.













