என் மலர்
நீங்கள் தேடியது "சாரா அர்ஜுன்"
- சாரா அர்ஜூன் விழாவில் கலந்து கொண்ட வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
- ‘துரந்தர்’ படத்தின் டிரெய்லர் வீடியோ வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான குழந்தை நட்சத்திரமாக வலம் வந்தவர் சாரா அர்ஜூன். மும்பையில் பிறந்த இவர் கடந்த 2011-ம் ஏ.எல். விஜய் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வெளியான 'தெய்வத் திருமகள்' படத்தில் நடித்திருந்தார். இப்படத்தின் மூலம் தந்தைக்கும் மகளுக்கும் இடையே உள்ள பாசப்பிணைப்பு நடிப்பின் மூலம் வெளிப்படுத்தி தனக்கென ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கினார் சாரா அர்ஜூன்.
'தெய்வத் திருமகள்' திரைப்படத்தை தொடர்ந்து தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் என பான் இந்தியா குழந்தை நட்சத்திரமாக ஜொலித்தார். அதனை தொடர்ந்து 2022-ம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ரவி மோகன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான 'பொன்னியின் செல்வன்' படத்தில் இளம்வயது நந்தினியாக ரசிகர்களை கவர்ந்தார்.
இந்நிலையில் ஆதித்யா தார் இயக்கத்தில் ரன்வீர் சிங், மாதவன், சஞ்சய் தத், அக்ஷய் கண்ணா என பெரிய நட்சத்திர நடிகர்கள் பட்டாளமே நடித்துள்ள 'துரந்தர்' படத்தில் சாரா அர்ஜூன் கதாநாயகியாக நடித்துள்ளார். வருகிற 5-ந்தேதி இப்படம் வெளியாக உள்ள நிலையில் மும்பையில் இப்படத்தின் ஆடியோ வெளியிட்டு விழா நடந்தது. இந்த விழாவில் படத்தில் நடித்த பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர். மேலும் சாரா அர்ஜூனும் இவ்விழாவில் கலந்து கொண்டார். சாரா அர்ஜூன் விழாவில் கலந்து கொண்ட வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
'துரந்தர்' படத்தின் டிரெய்லர் வீடியோ வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இதில் 40 வயதான ரன்வீர் சிங்குக்கு ஜோடியாக சாரா அர்ஜூன் நடித்துள்ளார். அவருடன் ரொமான்ஸ் செய்யும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
சாரா அர்ஜூனுக்கு 20 வயது தான். தன்னை விட 20 வயது மூத்த பாலிவுட் நடிகருடன் அவர் நடித்துள்ளார். இந்தப் படம் அவரது திரை வாழ்வில் முக்கிய படமாக இருக்கும் என கூறப்படுகிறது.
- விவேக் கண்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் கொட்டேஷன் கேங்க்.
- படத்தில் பெண் தாதாக்களாக பிரியாமணி, சகுந்தலா என்ற கதாபாத்திரத்திலும் கவர்ச்சி நடிகையான சன்னி லியோன் பயங்கர கேங்ஸ்டராக பத்மா என்ற கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர்.
விவேக் கண்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் கொட்டேஷன் கேங்க். பிரியாமணி, சன்னி லியோன், சாரா அர்ஜுன், ஜாக்கிசெராப், ஜெயபிரகாஷ் உள்பட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.
படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து வருகிற ஜூலை மாதம்திரைக்கு வர இருக்கிறது. காஷ்மீர், மும்பை, சென்னையில் நடைபெறும் கதை இந்த படம்.
கொலைச் சம்பவத்தை நடத்துவதற்கு ஏலம் விட்டு கொலையாளிகளை தேர்வு செய்வதே கொட்டேஷன் கேங் படத்தின் கதை.
படத்தில் பெண் தாதாக்களாக பிரியாமணி, சகுந்தலா என்ற கதாபாத்திரத்திலும் கவர்ச்சி நடிகையான சன்னி லியோன் பயங்கர கேங்ஸ்டராக பத்மா என்ற கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர்.
படத்தில் இருவரது கதாபாத்திரங்களும் மாறுபட்ட தோற்றத்தில் உள்ளன.
இந்நிலையில் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று மாலை நடந்தது.
விழாவில் சன்னி லியோன் பேசியதாவது:-
இந்த படத்தின் கதைக்கு நான் பொருத்தமாக இருப்பேன் என்று இயக்குனர் விவேக் கண்ணன் நினைத்து என்னை இந்த கதாபாத்திரத்தில் நடிக்க வைத்துள்ளார்.
பிரியாமணியும் நானும் கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறோம்.
கவர்ச்சியாக என்னை பார்த்த ரசிகர்கள் இதுபோன்று கேங்ஸ்டர் கதாபாத்திரத்திலும் என்னை பார்த்து ரசிப்பார்கள். ஜாக்கி செராப்புக்கு நான் மனைவியாக படத்தில் நடித்திருக்கிறேன். இந்தப் படத்தின் மூலம் கவர்ச்சி நடிகை என்ற இமேஜ் கண்டிப்பாக மாறும். அவ்வளவு அழுத்தமான கதாபாத்திரத்தில் நான் நடித்துள்ளேன். படம் நன்றாக வந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
படத்தின் டிரைலர் மிகவும் ரத்தம் தெறிக்கும் காட்சிகளால் நிரம்பியுள்ளது. காஷ்மீர், மும்பை மற்றும் சென்னையென பல இடங்களில் ஒளிப்பதிவாளரான அருண் பத்மனாபன் படப்பிடிப்பை மேற்கொண்டுள்ளார். இப்படத்திற்கு டிரம்ஸ் சிவமணி இசையமைக்க கேஜே வெங்கடராமன் படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளார்.
கன்னடம், இந்தி, மலையாளம் மற்றும் தெலுங்கு மொழிகளிலும் திரைப்படம் வெளியாகவுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.






