என் மலர்
நீங்கள் தேடியது "மகா சிவராத்திரி"
- ஈஷா யோகா மையத்தில் மகா சிவராத்திரி விமரிசையாக கொண்டாடப்பட்டது.
- பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்
நேற்று கோவை ஈஷா யோகா மையத்தில் மகா சிவராத்திரி விமரிசையாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவுக்கு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
ஒவ்வொரு ஆண்டும் ஈஷா யோகா மையத்தில் நடைபெறும் மகா சிவராத்திரி விழாவில் பல்வேறு திரை பிரபலங்கள் கலந்துகொள்வர். அவ்வகையில் இந்தாண்டு நடிகைகள் தமன்னா,ஸ்ரீநிதி, சாரா அர்ஜுன் ஆகியோர் கலந்து சிவனை மனமுருகி வேண்டினர்.
இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
- நெருப்பு பிழம்பில் இருந்து வெடித்து வெளியே வந்து, லிங்க வடிவாக காட்சி தந்தார்.
- சிவனிடம் அடி பணிந்து நின்ற விஷ்ணுவிற்கும், தேவர்களுக்கும் கேட்ட வரங்களை கொடுத்தார்.
ஒருமுறை பிரம்மாவிற்கும், விஷ்ணுவிற்கும் தங்களில் யார் பெரியவர் என்ற பிரச்சிினை ஏற்பட்டது. அவர்களது சண்டையை தீர்த்து வைக்குமாறு தேவர்கள் அனைவரும் சிவபெருமானிடம் சென்று முறையிட்டனர்.
தேவர்களின் கோரிக்கையை ஏற்று, சிவ பெருமானுக்கு மிகப்பெரிய நெருப்பு பிழம்பமாக தோன்றினார். அந்த நெருப்பு பிழம்பு விண்ணிற்கும், மண்ணிற்கும் பரவி மிகப் பெரிய வடிவமாக காட்சி அளித்தது. அந்த நெருப்பு பிழம்பின் அடியை காண விஷ்ணுவும், முடியை காண பிரம்மாவும் புறப்பட்டனர்.
அடியையும், முடியையும் முதலில் கண்டறிந்த வருபவரே உலகில் பெரியவர் என்றார் சிவபெருமான். அன்னப்பறவையாக மாறி பல யுகங்கள் பிரயாணம் செய்த பிரம்மாவின் அகந்தை குறையாததால் ஒரு தாழம்பூவை பொய் சாட்சி சொல்ல அழைத்து வந்தார். அதன் படி தாழம்பூவும் பொய் சாட்சி சொன்னது. நெருப்பு பிழம்பாக இருந்த சிவ பெருமானுக்கு கோபம் வந்தது.
அந்த நெருப்பு பிழம்பில் இருந்து வெடித்து வெளியே வந்து, லிங்க வடிவாக காட்சி தந்தார். பொய் சொன்ன பிரம்மாவிற்கு பூவுலகில் வழிபாடுகளே இருக்காது என்றும், தாழம்பூ எந்த பூஜைக்கு பயன்படாமல் கொடிய நாகங்கள் குடியிருக்கும் இடமாக மாறும் என்றும் சாபம் அளித்தார். அதே சமயம் சிவனிடம் அடி பணிந்து நின்ற விஷ்ணுவிற்கும், தேவர்களுக்கும் கேட்ட வரங்களை கொடுத்தார்.
இந்த நிகழ்ச்சி நடந்தது திருவண்ணாமலையில் தான். மகாசிவராத்திரி மட்டுமல்ல லிங்க வழிபாடும், உலகில் முதன் முதலில் அக்னி தோன்றியதும் திருவண்ணாமலை திருத்தலத்தில் தான். இந்த அக்னியில் இருந்த தான் சூரியன், சந்திரனின் பிரகாசங்களும், தீப ஒளியும் தோன்றியதாக புராணங்கள் சொல்கின்றன.
அக்னியில் இருந்து வெளியில் வந்த சிவபெருமான் லிங்கோத்பவராக காட்சி அளித்தார். இந்த நிகழ்வு மாசி மாத தேய்பிறை சதுர்த்தியில் நடைபெற்றதாலேயே இந்த நாள் மகா சிவராத்திரி தினமாக கொண்டாடப்படுகிறது.
திருவண்ணாமலை தலத்தில் இருந்து தான் லிங்க வழிபாடும், மகாசிவராத்திரி வழிபாடும் மற்ற பகுதிகளுக்கு பரவியதாக சொல்லப்படுகிறது.
- பகல் பொழுது பரமேஸ்வரனுக்கும், இரவுப்பொழுது அம்பிகையான உமாதேவிக்கும் உரியது.
- சிவராத்திரி என்பது அம்பாளின் வேண்டுதலின்படி கொண்டாடப்படுவதால் அது சிவனுக்கு உரியதானது.
பிரளய காலத்தின் போது பிரம்மனும், அவரால் சிருஷ்டிக்கப்பட்ட அனைத்து ஜீவராசிகளும் பரம்பொருளுக்குள் அடங்கின. இதையடுத்து அன்றைய இரவுப் பொழுதில் அம்பிகை உமாதேவி, பரமேஸ்வரனை நினைத்துப் பூஜை செய்தார். நான்கு ஜாமங்களிலும் இரவு முழுவதும் ஆகம விதிப்படி அர்ச்சனை செய்தார்.
பூஜையின் முடிவில் அம்பிகை ஈஸ்வரனை வணங்கி, அடியேன் தங்களைப் பூசித்த இந்த இரவை, தேவர்களும் மனிதர்களும் தங்கள் திருநாமத்தாலேயே - அதாவது 'சிவராத்திரி' என்றே கொண்டாட வேண்டும் என்று வேண்டினார். சிவராத்திரி அன்று, சூரியன் மறைந்தது முதல் மறுநாள் காலை சூரியன் உதயமாகும் வரை, சிவனைப் பூஜிப்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்களுக்கு எல்லா விதமான பாக்கியங்களையும் தந்து முடிவில் மோட்சத்தையும் அளிக்க வேண்டும் என்று அன்னையானவள் வேண்டிக் கொண்டாள்.
சிவபெருமானும், அப்படியே ஆகட்டும் என்று கூறி அருள் புரிந்தார். அந்த இரவே சிவராத்திரி என வழங்கப்பட்டு, அனைவராலும் கொண்டாடப்படுகிறது. பகல் பொழுது பரமேஸ்வரனுக்கும், இரவுப்பொழுது அம்பிகையான உமாதேவிக்கும் உரியது. ஆனால் சிவராத்திரி என்பது அம்பாளின் வேண்டுதலின்படி கொண்டாடப்படுவதால் அது சிவனுக்கு உரியதானது.
- இன்று அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் ராமேசுவரத்தில் குவிந்து வருகின்றனர்.
- சிகர நிகழ்ச்சியான மகா சிவராத்திரி தேரோட்டம் நாளை நடக்கிறது.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் பிரசித்தி பெற்ற ராமநாத சுவாமி கோவில் உள்ளது. நாள்தோறும் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வெளி மாநிலத்தில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள்.
12 ஜோதி லிங்க ஸ்தலங்களில் ஒன்றான இக்கோவிலில் மகாசிவராத்திரி திருவிழா விமரிசையாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான விழா கடந்த 8-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் சுவாமி-அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
சிவராத்திரியான இன்று கோவில் நடை அதிகாலை திறக்கப்பட்டு ராமநாத சுவாமிக்கும்-பர்வதவர்த்தினி அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து ஸ்படிக லிங்க பூஜை நடைபெற்றன.

கோவிலுக்கு வந்த ஏராளமான பக்தர்கள் ராமேசுவரம் அக்னி தீர்த்த கடற்கரையில், புனித நீராடிவிட்டு கடற்கரை மண்ணில் சிவலிங்கம் போன்று வடிவமைத்து வழிபட்டு வருகின்றனர்.
பின்னர் கோவிலுக்கு உள்ளே உள்ள சாமி மற்றும் அம்பாளை நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். வட மாநில பக்தர்கள் காசியில் இருந்து கொண்டு வந்த கங்கை நீரை அபிஷேகத்திற்கு வழங்குவதற்காக தலையில் சுமந்து கொண்டு வந்தனர். இன்று அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் ராமேசுவரத்தில் குவிந்து வருகின்றனர்.
சிகர நிகழ்ச்சியான மகா சிவராத்திரி தேரோட்டம் நாளை நடக்கிறது. மகாசிவராத்திரியை முன்னிட்டு ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவில் இன்று இரவு முதல் விடிய விடிய சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. இதனால் கோவில் நடை இரவு முழுவதும் திறந்திருக்கும்.
- வருகிற 16-ந்தேதி இதே ரெயில் திருவண்ணாமலையில் இருந்து அதிகாலை 4 மணிக்கு புறப்பட்டு எழும்பூருக்கு காலை 9.15 மணிக்கு வந்து சேரும்.
- விழுப்புரம்- திருவண்ணாமலை இடையேயும் விழுப்புரம்- வேலூர் இடையேயும் முன்பதிவு இல்லாத மெமு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன.
சென்னை:
மகா சிவராத்திரி நாளை நடைபெறுவதால் சிவன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடக்கிறது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவது வழக்கம்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திருவண்ணாமலைக்கு பஸ் மற்றும் ரெயில்களில் செல்கிறார்கள். கூட்ட நெரிசலை குறைப்பதற்காக சிறப்பு பஸ், ரெயில்கள் இயக்கப்படுகிறது.
சென்னை எழும்பூரில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு ரெயில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரெயில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 10.15 மணிக்கு எழும்பூரில் இருந்து புறப்பட்டு திருவண்ணாமலைக்கு பிற்பகல் 3 மணிக்கு சென்றடைகிறது.
வருகிற 16-ந்தேதி இதே ரெயில் திருவண்ணாமலையில் இருந்து அதிகாலை 4 மணிக்கு புறப்பட்டு எழும்பூருக்கு காலை 9.15 மணிக்கு வந்து சேரும்.
இதேபோல எழும்பூரில் இருந்து வேலூர் கண்டோண்ட்மென்ட்டுக்கு முன்பதிவு இல்லாத மெமு எக்ஸ்பிரஸ் சிறப்பு ரெயில் புறப்படுகிறது. இந்த ரெயில் எழும்பூரில் இருந்து நாளை மதியம் 12 மணிக்கு புறப்பட்டு மாலை 6 மணிக்கு வேலூர் சென்றடைகிறது.
பின்னர் 16-ந்தேதி வேலூர் கண்டோண்ட்மென்ட்டில் இருந்து அதிகாலை 3 மணிக்கு புறப்பட்டு காலை 9.15 மணிக்கு தாம்பரம் வந்து சேருகிறது. இந்த 2 ரெயில்களுக்கான முன்பதிவு இன்று மதியம் 12 மணிக்கு தொடங்கியது.
இதே போல விழுப்புரம்- திருவண்ணாமலை இடையேயும் விழுப்புரம்- வேலூர் இடையேயும் முன்பதிவு இல்லாத மெமு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன.
- சிவபெருமான்-பார்வதி தேவியை திருமணம் செய்து கொண்ட நாளாக கருதப்படுகிறது.
- சிவ அபிஷேகத்திற்கு தேவையான பொருட்களையோ அல்லது சிவ பூஜைக்கு தேவையான மலர்கள் ஆகியவற்றையோ வாங்கிக் கொடுக்கலாம்.
மகாசிவராத்திரியின் நேரடி அர்த்தம் 'சிவனின் மகா இரவு' என்பதாகும். மகாசிவராத்திரி விரதத்தைக் கடைப்பிடிப்பது திருமணமாகாத பெண்களுக்கு அவர்கள் விரும்பிய வாழ்க்கைத் துணை கிடைக்க ஆசீர்வதிக்கிறது. திருமணமான பெண்களுக்கு திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியை அளிக்கிறது.
மகாசிவராத்திரி என்பது சிவபெருமான்-பார்வதி தேவியை திருமணம் செய்து கொண்ட நாளாக கருதப்படுகிறது.
தெய்வீக ஆற்றல் அதிகரித்து காணப்படும் இந்த நாளில் சிவபெருமானையும், பார்வதி தேவியையும் வழிபடுவதால் மகிழ்ச்சி, ஆரோக்கியம், அமைதி, செல்வ வளம் ஆகியவை கிடைக்கும்.
திருமணம் தாமதமாகிறவர்கள், திருமணம் தடைபடுபவர்கள் இந்த நாளில் எளிய பரிகாரம் செய்தால் விரைவில் திருமண வரம் கூடி வரும் என்பது நம்பிக்கை. யாருக்கு திருமணம் ஆக வேண்டுமோ அவர்கள் தங்கள் கைகளால் மஞ்சளை சிவன் மற்றும் பார்வதியின் பாதத்தில் வைத்து வழிபட வேண்டும். திருமண வாழ்க்கையில் பிரச்சினை இருப்பவர்களும், கருத்து வேறுபாட்டால் பிரிந்து இருக்கும் கணவன்- மனைவியும் இந்த வழிபாட்டினை செய்யலாம்.
மஞ்சளை படைத்து, சிவன்-பார்வதியை வேண்டிக் கொண்டு முடிந்த வரை சிவ மந்திரத்தை உச்சரித்து மனதில் உள்ள வேண்டுதலை சொல்லி வழிபடலாம். இப்படி வழிபடுவதால் அவர்களின் திருமணம் நடைபெறுவதில் அல்லது திருமண வாழ்க்கையில் இருக்கும் பிரச்சினைகள், தடைகள் ஆகியவை நீங்கி, மனதிற்கு விருப்பமான திருமண வாழ்க்கை அமையும்.
சிவ அபிஷேகத்திற்கு தேவையான பொருட்களையோ அல்லது சிவ பூஜைக்கு தேவையான மலர்கள் ஆகியவற்றையோ வாங்கிக் கொடுக்கலாம். அன்று 2 பேருக்காவது அன்னதானம் செய்வது சிறந்த பலனை தரும். ஜாதகத்தில் உள்ள கிரகங்களாலோ அல்லது வேறு ஏதாவது காரணத்தாலோ திருமணம் தள்ளிப் போகிறது என்றாலும் அன்னதானம் செய்து, சிவனை வழிபட்டால் அனைத்து தோஷங்களும், பாவங்களும் நிவர்த்தி ஆகி மகிழ்வான வாழ்க்கை அமையும்.
- இன்று சனிக்கிழமை பிரதோஷம் என்பதால் அதிக நன்மை கிடைக்கும் என்ற ஐதீகத்தில் பிற மாநிலங்களில் இருந்து பக்தர்கள் சிவாலய ஓட்டத்தில் பங்கேற்றனர்.
- இரவு முழுவதும் தூங்கா நோன்பு இருந்து ஓட்டத்தை நிறைவு செய்கின்றனர்.
நாட்டில் வேறெங்கும் இல்லாத வகையில் மகா சிவராத்திரி தினத்தில் 12 சிவாலயங்களுக்கும் பக்தர்கள் ஓடிச்சென்று தரிசிக்கும் முறை குமரி மாவட்டத்தில் மட்டுமே உள்ளது. பாரம்பரியமாக நடக்கும் இந்த நிகழ்வு வரலாற்று சிறப்புமிக்கதாகும். சிவாலய ஓட்டத்தில் கலந்துகொள்ளும் பக்தர்கள் மாசி மாதம் ஏகாதசி தினத்தில் மாலை அணிந்து விரதம் தொடங்குவார்கள்.
விரத நாளில் தீயினால் வேகவைக்கும் அனைத்து உணவுகளையும் தவிர்த்து விரதம் இருப்பார்கள். குறிப்பாக நுங்கு, இளநீர், பதநீர், பழங்கள் சாப்பிடுவது வழக்கம். அதுமட்டுமின்றி விரத நாட்களில் காலை, மாலை நேரங்களில் சிவாலயத்தின் அருகில் உள்ள நீர்நிலைகளில் நீராடி விட்டு ஈரத்துணியுடன் சிவபெருமானை தரிசிப்பார்கள். இந்த ஆண்டுக்கான சிவராத்திரி விழா நாளை (15-ந்தேதி) கொண்டாடப்படுகிறது. இதையடுத்து இன்று (14-ந்தேதி) பக்தர்கள் சிவாலய ஓட்டத்தை தொடங்கினார்கள்.

முஞ்சிறையில் உள்ள திருமலை மகாதேவர் ஆலயத்தில் இருந்து பக்தர்கள் ஓட்டத்தை தொடங்கினர். இதனால் காலை முதலே கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. காவி உடை அணிந்து கோவிந்தா... கோபாலா... என்ற பக்தி கோஷத்துடன் கையில் விசிறி ஏந்தி சிவாலய ஓட்டத்தில் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு மோர், குளிர்பானங்கள், பழவகைகள், அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று சனிக்கிழமை பிரதோஷம் என்பதால் அதிக நன்மை கிடைக்கும் என்ற ஐதீகத்தில் பிற மாநிலங்களில் இருந்து பக்தர்கள் சிவாலய ஓட்டத்தில் பங்கேற்றனர்.
சிவாலய ஓட்டத்தில் பங்கேற்ற பக்தர்கள் திக்குறிச்சி மகாதேவர் கோவிலில் உள்ள குளத்தில் பக்தர்கள் புனித நீராடி விட்டு சாமி தரிசனம் செய்தனர். திற்பரப்பு வீரபத்திரர் கோவில், திருநந்திக்கரை நந்தீஸ்வரர் கோவில், பொன்மனை தீம்பிலான்குடி மகாதேவர் கோவில், கல்குளம் நீலகண்டசாமி கோவில், மேலாங்கோடு மகாதேவர் கோவில், திருவிடைக்கோடு மகாதேவர் கோவில், திருவிதாங்கோடு மகாதேவர் கோவில், திருப்பன்றிகோடு மகா தேவர் கோவிலில் தரிசனம் செய்து விட்டு சுமார் 110 கிலோ மீட்டர் தூரத்தை கடந்து பக்தர்கள் நாளை (15-ந்தேதி) மாலை நட்டாலம் சங்கரநாராயணர் கோவிலை வந்தடைவார்கள்.
அங்கு இரவு முழுவதும் தூங்கா நோன்பு இருந்து ஓட்டத்தை நிறைவு செய்கின்றனர். சிவாலய ஓட்டத்தில் குமரி மாவட்டம் மட்டுமின்றி கேரளா மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். சிவாலய ஓட்டத்தில் பங்கேற்ற பக்தர்களுக்கு சிவாலயங்களில் பிரசாதங்கள் வழங்கப்பட்டது.
- சிவராத்திரி அன்று ஒருவேளை மட்டுமே உணவு உட்கொள்ள வேண்டும்.
- சிவபுராணம் படித்தோ அல்லது கேட்டோ, பகல் பொழுதைக் கழிக்க வேண்டும்.
சிவராத்திரி விரதம் இருப்பதால் தெரியாமல் செய்த பாவங்களுடன், தெரிந்தே பாவங்கள் செய்திருந்தாலும் அவை விலகும். சிவராத்திரி விரதம் யார் வேண்டுமானாலும் மேற்கொள்ளலாம். 100 அசுவமேத யாகம் செய்வது, பல முறை கங்கா ஸ்நானம் (குறியல்) செய்வது ஆகிய அனைத்தையும் மேற்கொண்டாலும், ஒரு சிவராத்திரி விரதத்துக்கு ஈடாகாது. சிவராத்திரி விரதம் கடைப்பிடிப்பவர்கள் முந்தைய நாள் அதிகாலையிலேயே எழுந்து குளித்து விட்டு, வீட்டில் உள்ள சிவபெருமானின் உருவப்படத்திற்கு தீப ஆராதனை காண்பித்து வழிபட வேண்டும். தொடர்ந்து, சிவன் கோவிலுக்கு சென்று முறைப்படி தரிசனம் செய்ய வேண்டும்.
அன்றைய தினம் ஒருவேளை மட்டுமே உணவு உட்கொள்ள வேண்டும். மாலையில் மீண்டும் குளித்து சிவபூஜை செய்ய வேண்டும். இரவு சிவனை நினைத்து மந்திரம் ஓதியோ, புராணங்களைப் படித்தோ தூங்க வேண்டும். மறுநாள் சிவராத்திரி அன்று அதிகாலையில் நல்ல சுத்தமான நீரில் குளித்து சூரிய உதயத்துக்கு முன்பாக சிவ சிந்தனையோடு சிவாலயத்திற்கு போய் ஈசனை வணங்க வேண்டும். மாலையில் குளித்து உலர்ந்த ஆடை அணிந்து நெற்றியில் திருவெண்ணீறு அணிந்து, கையில் ருத்திராட்ச மாலையுடன் சிவ அர்ச்சனைக்கு உரிய பொருட்களோடு சிவன் கோவில் சென்று ஏற்பாடுகளைச் செய்யலாம்.
கோவிலில் 4 காலங்களிலும் நடைபெறும் பூஜைகளைக் கண்டு சிவனை வணங்கி இரவு முழுவதும் விழித்திருக்க வேண்டும். அவசியம் நான்கு கால பூஜையையும், பார்க்க வேண்டும். அப்படி இல்லாவிட்டாலும் கூட கடைசி கால பூஜையையாவது பார்ப்பது அவசியம். சிவராத்திரியில் விரதம் இருக்க முடியாதவர்கள் ஒவ்வொரு ஜாம பூஜை முடித்த பிறகும் தண்ணீர், பால், பழங்களை உண்ணலாம்.
மகா சிவராத்திரிக்கு மறுநாள் காலையில் நீராடி அன்னதானம் அளித்து விட்டு விரதத்தை நிறைவு செய்யும் விதமாக உணவு உண்ண வேண்டும். சிவராத்திரி அன்று கண் விழித்த பின்னர் மறுநாள் பகல் பொழுதில் தூங்கக்கூடாது. சிவபுராணம் படித்தோ அல்லது கேட்டோ, பகல் பொழுதைக் கழிக்க வேண்டும்.
சிவராத்திரி தினத்தன்று முழு உபவாசத்தைக் கடைபிடித்தால் எம்பெருமான் வாழ்நாள் முழுவதும் காப்பாற்றுவதுடன் மகிழ்ச்சியையும், வாழ்வில் முன்னேற்றத்தையும் அளிப்பார் என்பது ஐதீகம். மகா சிவராத்திரி விரதம் இருப்போருக்கு நற்கதி கிடைக்கும். 24 வருடங்கள் சிவராத்திரி விரதமிருந்தால் அவர்கள் சிவகதி அடைவார்கள். அத்துடன் அவர்களின் மூவேழு தலைமுறைகளும் நற்கதி அடைந்து, முக்தியை அடைவார்கள் என்று புராணங்கள் கூறுகின்றன.
- பார்வதி தேவி சிவனை வேண்டி பூஜை செய்த நாள் மகாசிவராத்திரி.
- சதுர்த்தியன்று தேவர்கள் ஈசனை பூஜை செய்து அர்ச்சித்து வழிபட்டனர். அந்த நாளே சிவராத்திரி.
சூரிய பகவான் கும்பராசியில் சஞ்சரிக்கும் மாசி மாதம் புண்ணியமான மாதமாகவும் சுபநிகழ்ச்சிகள் செய்ய உகந்த மாதமாகவும் சொல்லப்படுகிறது. மாசி மாத சிறப்புகளின் மகுடம் மகாசிவராத்திரி. தேய்பிறை சதுர்தசி திதி நாள் சிவராத்திரி ஆகும். என்றாலும் மாசி மாதம் வரும் சிவராத்திரி மகா சிவராத்திரி என்று போற்றப்படுகிறது.
சாந்திராயனம் எனப்படும் சந்திரனை அடிப்படையாகக் கொண்ட நாட்காட்டியின் படி இந்த மாதத்தை `மகா' மாதம் என்று கூறுவர். எனவே இந்த மாதம் வரும் சிவராத்திரியை மகா சிவராத்திரி என்கின்றனர்.
பார்வதி தேவி சிவனை வேண்டி பூஜை செய்த நாள் மகாசிவராத்திரி. அந்த பூஜையினால் மகிழ்ச்சி அடைந்த சிவபெருமான் மகாநிசி காலத்தில் அருளியதை நமது ஆகமங்களும் புராணங்களும் சொல்கின்றன.
தேவர்களும், அசுரர்களும் அமுதம் வேண்டி திருப்பாற்கடலை கடைந்தபோது அதிலிருந்து ஆலகால விஷம் வந்தது. அந்த விஷத்தினை சிவபெருமான் உண்டு உலகை காத்தருளினார். சதுர்த்தியன்று தேவர்கள் ஈசனை பூஜை செய்து அர்ச்சித்து வழிபட்டனர். அந்த நாளே சிவராத்திரி ஆகும்.
உலகிற்கு ஆதாரமான சிவபெருமான் உலக உயிர்களை படைத்தலும், படைத்த உயிர்களை காத்தலும், காத்த உயிர்களை தன்னுள் ஐக்கியப்படுத்திக் கொள்ளுதலும் இந்த நாளில்தான் நடக்கும் என்கின்றன புராணங்கள்.
மாசி மாதத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்ததால் மாசி மாதம் வரும் சிவராத்திரி, மகா சிவராத்திரி எனவும், மற்ற மாதங்களிலும் சிவன் மீது மிகுந்த பற்று இருப்பவர்கள் இவ்விரதத்தை அனுஷ்டித்து சிவபெருமான் குறித்த அறிவை அடைய உதவுவதினால் அவை மாத சிவராத்திரி எனவும் போற்றப்படுகிறது.
மற்ற மாதங்களில் சிவராத்திரி விரதம் கடைப்பிடிக்க முடியாதவர்களும் மாசி மாதத்தின் மகா சிவராத்திரி அன்று விரதமிருந்து சிவனை வழிபாடு செய்தால் ஓர் ஆண்டின் அனைத்து சிவராத்திரிகளிலும் வழிபாடு செய்த பலன் கிடைக்கும் என்கிறார்கள் ஆன்மீக பெரியவர்கள்.
- ராஜநாத் சிங் சிறப்பு விருந்தினராக பங்கெடுக்க உள்ளார்.
- சிறந்த கலைஞர்களின் இசை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.
கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் உள்ள ஈஷா யோகா மையத்தில் மகா சிவராத்திரி விழா பிப்ரவரி 15ஆம் தேதி மாலை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இவ்விழாவில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜநாத் சிங் சிறப்பு விருந்தினராக பங்கெடுக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு கோவை பிரஸ் கிளப் அரங்கில் இன்று நடைபெற்றது. இதில் தென் கைலாய பக்தி பேரவையின் தன்னார்வலர் ரவீந்திரன் மற்றும் தன்னார்வலர் சரவணன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
செய்தியாளர் சந்திப்பில் அவர்கள் பேசியதாவது, "ஈஷாவில் 32வது மகா சிவராத்திரி விழா 15ஆம் தேதி பிரமாண்டமாக கொண்டாடப்பட உள்ளது. இதில் சிறப்பு விருந்தினராக பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உட்பட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்ள உள்ளனர். மேலும் லட்சக்கணக்கான மக்கள் இதில் பங்கேற்க உள்ளனர்.
15ஆம் தேதி மாலை 6 மணிக்கு தொடங்கி மறுநாள் காலை 6 மணி வரை மகா சிவராத்திரி விழா நடைபெற உள்ளது. இதில் சக்தி வாய்ந்த தியானங்கள், மந்திர உச்சாடனைகள், யோகேஸ்வரலிங்க மகா அபிஷேகம் மற்றும் சிறந்த கலைஞர்களின் இசை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.
மேலும் இந்தாண்டு முதன் முறையாக சத்குரு ஆதியோகி முன்பு பிரதிஷ்டை செய்யப்பட்டு இருக்கும் யோகேஸ்வர லிங்கத்திற்கு மகா அபிஷேகம் எனும் ஆன்மிக செயல்களை அர்ப்பணிக்க உள்ளார்" என தெரிவித்தனர்.
மேலும், மக்களின் வசதிக்காக தேவையான பார்க்கிங் வசதி, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், கழிவறைகள், மருத்துவ வசதி உள்ளிட்டவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த விழாவிற்கு பல்வேறு நாடுகளில் இருந்து மக்கள் வருகை தர உள்ளதாகவும் குறிப்பிட்டனர்.
ஈஷாவில் நடைபெறும் மகா சிவராத்திரி விழாவை இந்தியா முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்பட உள்ளதாகவும், தமிழ்நாட்டில் 60 இடங்களிலும், கேரளாவில் 29 கோவில்களிலும் நேரலை செய்யப்பட உள்ளதாக தெரிவித்தனர்.
- இரவு 8 மணிக்கு முதற்கால பூஜையும், 11 மணிக்கு 2-ம் கால பூஜையும் நடைபெறுகிறது.
- சிவராத்திரி இரவு முழுவதும் நடைதிறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்படும்.
மகா சிவராத்திரியையொட்டி இரவு முழுவதும் பக்தர்கள் விழித்திருந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான மகா சிவராத்திரி வருகிற 15-ந்தேதி வருகிறது. இதையொட்டி பழனி பகுதியில் உள்ள சிவன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு இரவு முழுவதும் கண்விழித்து விடியவிடிய வழிபாடு நடத்துவார்கள். மேலும் மறுநாள் கோவில்களில் நடக்கும் சிறப்பு பூஜையிலும் பங்கேற்பார்கள்.
பழனி மலைக்கோவிலில் இரவு 8 மணிக்கு முதற்கால பூஜையும், 11 மணிக்கு 2-ம் கால பூஜையும் நடைபெறுகிறது. நள்ளிரவு 1 மணிக்கு 3-ம் கால பூஜையும், அதிகாலை 3 மணிக்கு 4-ம் கால பூஜையுடன் அர்த்தஜாம பூஜையும் நடைபெறுகிறது. வழக்கமாக ராக்கால பூஜைக்குப்பின் கோவில் நடை சாத்தப்படும். ஆனால் சிவராத்திரி இரவு முழுவதும் நடைதிறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்படும்.
இதேபோல் பெரியாவுடையார் கோவில், பெரியநாயகி அம்மன் கோவில், மாரியம்மன் கோவில், பட்டத்து விநாயகர் கோவில், திருஆவினன்குடி கோவில், வேளீஸ்வரர் கோவில், சன்னதி வீதி மீனாட்சியம்மன் கோவில் உள்ளிட்ட அனைத்து கோவில்களிலும் உள்ள சிவன் சன்னதிகளில் மகா சிவராத்திரியையொட்டி சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடைபெறுகின்றன.
- பல மிருகங்களை வேட்டையாடிய வேடனின் பாவ கணக்கில் எதுவும் இல்லை என்று சித்திரகுப்தன் சொன்னது, எமதர்மனுக்கு அதிர்ச்சி அளித்தது.
- வில்வ இலைகள் விழுந்த இடத்தில் ஒரு பழமையான சிவலிங்கம் மண்ணில் புதைந்திருந்தது.
முன்பொரு சமயம், வேடன் ஒருவன் காட்டில் வேட்டையாடி தன் குடும்பத்தைக் காப்பாற்றி வந்தான். ஒரு முறை காட்டில் வேட்டையாட சென்றபோது, வேடனுக்கு எதுவும் கிடைக்கவில்லை. எனவே விலங்குகளைத் தேடி நீண்ட தூரம் காட்டிற்குள் சென்றான். அவ்வேளையில் வேடனை தாக்க ஒரு புலி பாய்ந்து வந்தது. இதனால் பதறிப்போன வேடன், அருகில் இருந்த மரத்தின் மேல் ஏறி அமர்ந்தான். இரவு முழுவதும் புலி அந்த மரத்தை சுற்றி வந்தது. வேடன், எதுவும் சாப்பிடாமல் இரவு முழுவதும் அந்த மரத்தின் கிளைகளைப் பற்றியபடியே இருந்தான். மறுநாள் பொழுது விடிந்ததும் வேடன் வீடு திரும்பினான். பல ஆண்டுகள் வாழ்ந்த அந்த வேடன் வயது முதிர்ச்சியால் இறந்தான்.
அந்த வேடனின் ஆன்மா எமலோகம் சென்றது. பல மிருகங்களை வேட்டையாடிய வேடனின் பாவ கணக்கில் எதுவும் இல்லை என்று சித்திரகுப்தன் சொன்னது, எமதர்மனுக்கு அதிர்ச்சி அளித்தது.
வேடன் செய்த புண்ணியம் என்ன என்று பார்க்க, முன்பு புலிக்கு பயந்து வேடன் ஏறி அமர்ந்தது, வில்வமரம் ஆகும். அன்றைய தினம் மகா சிவராத்திரி. பயத்தில் கைகள் நடுங்க கிளைகளைப் பற்றி இருந்ததால், அந்த நடுக்கத்தில் வில்வ இலைகள் உதிர்ந்து கீழே விழுந்தன. வில்வ இலைகள் விழுந்த இடத்தில் ஒரு பழமையான சிவலிங்கம் மண்ணில் புதைந்திருந்தது.
மகா சிவராத்திரி அன்று சாப்பிடாமல், வில்வ இலைகளால் சிவலிங்கத்தை அர்ச்சனை செய்த புண்ணியம் வேடனுக்கு கிடைத்தது என்பதை எமதர்மனும், சித்திரகுப்தனும் அறிந்தனர்.






