என் மலர்
நீங்கள் தேடியது "சிவபெருமான் வழிபாடு"
- சிவராத்திரி அன்று ஒருவேளை மட்டுமே உணவு உட்கொள்ள வேண்டும்.
- சிவபுராணம் படித்தோ அல்லது கேட்டோ, பகல் பொழுதைக் கழிக்க வேண்டும்.
சிவராத்திரி விரதம் இருப்பதால் தெரியாமல் செய்த பாவங்களுடன், தெரிந்தே பாவங்கள் செய்திருந்தாலும் அவை விலகும். சிவராத்திரி விரதம் யார் வேண்டுமானாலும் மேற்கொள்ளலாம். 100 அசுவமேத யாகம் செய்வது, பல முறை கங்கா ஸ்நானம் (குறியல்) செய்வது ஆகிய அனைத்தையும் மேற்கொண்டாலும், ஒரு சிவராத்திரி விரதத்துக்கு ஈடாகாது. சிவராத்திரி விரதம் கடைப்பிடிப்பவர்கள் முந்தைய நாள் அதிகாலையிலேயே எழுந்து குளித்து விட்டு, வீட்டில் உள்ள சிவபெருமானின் உருவப்படத்திற்கு தீப ஆராதனை காண்பித்து வழிபட வேண்டும். தொடர்ந்து, சிவன் கோவிலுக்கு சென்று முறைப்படி தரிசனம் செய்ய வேண்டும்.
அன்றைய தினம் ஒருவேளை மட்டுமே உணவு உட்கொள்ள வேண்டும். மாலையில் மீண்டும் குளித்து சிவபூஜை செய்ய வேண்டும். இரவு சிவனை நினைத்து மந்திரம் ஓதியோ, புராணங்களைப் படித்தோ தூங்க வேண்டும். மறுநாள் சிவராத்திரி அன்று அதிகாலையில் நல்ல சுத்தமான நீரில் குளித்து சூரிய உதயத்துக்கு முன்பாக சிவ சிந்தனையோடு சிவாலயத்திற்கு போய் ஈசனை வணங்க வேண்டும். மாலையில் குளித்து உலர்ந்த ஆடை அணிந்து நெற்றியில் திருவெண்ணீறு அணிந்து, கையில் ருத்திராட்ச மாலையுடன் சிவ அர்ச்சனைக்கு உரிய பொருட்களோடு சிவன் கோவில் சென்று ஏற்பாடுகளைச் செய்யலாம்.
கோவிலில் 4 காலங்களிலும் நடைபெறும் பூஜைகளைக் கண்டு சிவனை வணங்கி இரவு முழுவதும் விழித்திருக்க வேண்டும். அவசியம் நான்கு கால பூஜையையும், பார்க்க வேண்டும். அப்படி இல்லாவிட்டாலும் கூட கடைசி கால பூஜையையாவது பார்ப்பது அவசியம். சிவராத்திரியில் விரதம் இருக்க முடியாதவர்கள் ஒவ்வொரு ஜாம பூஜை முடித்த பிறகும் தண்ணீர், பால், பழங்களை உண்ணலாம்.
மகா சிவராத்திரிக்கு மறுநாள் காலையில் நீராடி அன்னதானம் அளித்து விட்டு விரதத்தை நிறைவு செய்யும் விதமாக உணவு உண்ண வேண்டும். சிவராத்திரி அன்று கண் விழித்த பின்னர் மறுநாள் பகல் பொழுதில் தூங்கக்கூடாது. சிவபுராணம் படித்தோ அல்லது கேட்டோ, பகல் பொழுதைக் கழிக்க வேண்டும்.
சிவராத்திரி தினத்தன்று முழு உபவாசத்தைக் கடைபிடித்தால் எம்பெருமான் வாழ்நாள் முழுவதும் காப்பாற்றுவதுடன் மகிழ்ச்சியையும், வாழ்வில் முன்னேற்றத்தையும் அளிப்பார் என்பது ஐதீகம். மகா சிவராத்திரி விரதம் இருப்போருக்கு நற்கதி கிடைக்கும். 24 வருடங்கள் சிவராத்திரி விரதமிருந்தால் அவர்கள் சிவகதி அடைவார்கள். அத்துடன் அவர்களின் மூவேழு தலைமுறைகளும் நற்கதி அடைந்து, முக்தியை அடைவார்கள் என்று புராணங்கள் கூறுகின்றன.
- இந்த நாளில் வழிபாடு மற்றும் விரதம் தவிர, மனதில் கொள்ள வேண்டிய வேறு சில விஷயங்களும் உள்ளன.
- பிரதோஷ விரதத்தின் போது, யாரிடமும் தவறாக எதுவும் சொல்லவோ, யாரிடமும் பொய் சொல்லவோ கூடாது.
பிரதோஷம் அன்று சிவபெருமானுக்கு பூஜை செய்வது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. விரதம் இருந்து பிரதோஷ காலத்தில் சிவனாரை தரிசிப்பதால், சகல பாவங்களும் விலகி, புண்ணியம் சேரும். சகல செளபாக்கியங்களும் உண்டாகும். புகழும் கெளரவமுமாக வாழலாம்.
விரதம் இருந்து பிரதோஷ நாளில் செய்யப்படும் எந்த தானமும் மும்மடங்குப் பலன்களை வழங்கும் என்பது ஐதீகம். பிறப்பே இல்லாத முக்தியை அளித்து அருள் செய்யும்.
அந்த வகையில், இன்று ஜனவரி மாதத்தின் கடைசி பிரதோஷ விரதம். அதிலும் இன்று வெள்ளிக்கிழமையும் கூட. அதனால்தான் இந்த விரதம் சுக்கிரவார பிரதோஷ விரதம் என்று அழைக்கப்படுகிறது. தை மாதத்தில் வளர்பிறையில் வரும் இந்த நாள் முக்கியத்துவம் வாய்ந்தது.
அதன்படி, இன்றைய பூஜையின் முழு மனதுடன் உங்களின் வேண்டுதலை சிவனுக்கு சில பொருட்களை காணிக்கையாக செலுத்துவதன் மூலம் நிறைவேறும். அதாவது உங்களுக்கு ஏதேனும் பணி நிலுவையில் இருந்தால் இதனை செய்யலாம்.
இன்றைய பூஜைக்கான நல்ல நேரம் மற்றும் இந்த நாளில் சிவ பெருமானுக்கு என்ன பிரசாதம் செய்வது பொருத்தமானது என்று பார்ப்போம்...
இன்று சுக்கிரவார பிரதோஷ விரதத்தை வழிபடுவதற்கு உகந்த நேரம்:
இன்றைய பிரதோஷ காலம் மாலை 5:01 மணிக்கு தொடங்கி 6:45 மணி வரை. வழிபாட்டிற்கான நல்ல நேரம் மாலை 5:59 மணி முதல் இரவு 8:37 மணி வரை. தோராயமாக இரண்டரை மணி நேரம் கொண்ட இந்த நல்ல நேரத்தில் நீங்கள் மனதார சிவபெருமானையும் பார்வதி தேவியையும் வணங்கினால், உங்களின் வேண்டுதல் நிறைவேறும்.
சிவ பெருமானுக்கு உகந்தவை:
உங்கள் மனதில் நீண்ட நாட்களாக ஒரு ஆசை இருந்தாலோ அல்லது சில வேலைகள் பாதியில் நின்றாலோ இன்று இந்த பரிகாரத்தை முயற்சி செய்யலாம். சுக்கிர வார பிரதோஷ விரதத்தில், சிவபெருமான் சிவலிங்கத்தில் சில சிறப்புப் பொருட்களை படைத்தால் மகிழ்வார். அதாவது, சிவ பெருமானுக்கு பச்சைப் பால் மற்றும் குங்குமப்பூ படைத்தால், வாழ்க்கையில் மகிழ்ச்சி மற்றும் செழிப்புடன், காதல் வாழ்க்கையில் உள்ள தடைகளும் குறையும். இது தவிர, நீங்கள் மற்றொரு எளிய பரிகாரத்தையும் முயற்சி செய்யலாம். வில்வத்தில் சிறிது தேன் தடவி சிவ பெருமானுக்கு சமர்ப்பித்தால், உங்கள் நிலுவையில் உள்ள அனைத்து வேலைகளும் நிறைவடையத் தொடங்கும்.
பிரதோஷத்தில் இந்த தவறுகளை செய்யாதீர்கள்:
இந்த நாளில் வழிபாடு மற்றும் விரதம் தவிர, மனதில் கொள்ள வேண்டிய வேறு சில விஷயங்களும் உள்ளன. இன்று, தவறுதலாக கூட இறைச்சி மற்றும் மது உள்ளிட்ட பொருட்களை உட்கொள்ளக்கூடாது. மேலும், இந்த நாளில் ஒருவர் தனது பேச்சின் மீது முழுமையான கட்டுப்பாட்டைக் கொண்டிருக்க வேண்டும். இன்று, உங்கள் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துவதும், கோபத்தைக் கட்டுக்குள் வைத்திருப்பதும் முக்கியம். மேலும், பிரதோஷ விரதத்தின் போது, யாரிடமும் தவறாக எதுவும் சொல்லவோ, யாரிடமும் பொய் சொல்லவோ கூடாது. மேலும், சிவபெருமானுககு உடைந்த எந்தப் பொருளையும் படைக்கக்கூடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் குங்குமப்பூவை படைத்தால், அதன் இழைகள் உடைக்கப்படக்கூடாது.
- பிரம்மன் வழிபட்ட இடம் பிரம்மகிரி என்னும் அழகிய மலைப்பிரதேசமாகும்.
- ஐந்தாவதாக சத்யேஜாதக மூர்த்தியாக சிந்தாமணியில் இருப்பது புராணவரலாறு.
அருணா நதிக்கரையில் தங்களின் பஞ்சசேத்திரங்கள் அமைத்து அருள்பாலிக்குமாறு நான்முகனும் சரஸ்வதியும் வேண்டிக்கொண்டனர்.
பிரம்மன் வழிபட்ட இடம் பிரம்மகிரி என்னும் அழகிய மலைப்பிரதேசமாகும்.
மூலசேத்திரமாக விளங்குவது சுருட்டப்பள்ளி ஆகும். இங்கு வால்மீகிஸ்வரராக காட்சி தருகிறார்.
சிவசயன சேத்திரத்தில் தத்புருஷமூர்த்தியாக விளங்குகிறார்.
மேற்கில் சத கூடாத்திரி என்னும் ராமகிரி, இந்த சேத்திரத்தில் ஈஸ்வரன் ஈசான மூர்த்தியாக வாலீஸ்வரராக விளங்குகிறார்.
கிழக்கு புறத்தில் விசங்கடம் என்னும் வடதில்லையில் அகோர மூர்த்தியாக ஸ்ரீ பாபஹரேஸ்வரேர் என்ற திருநாமத்துடன் ஈசன் வீற்றிருக்கிறார்.
அரியதுரையில் வாமதேவ மூர்த்தியாக ஸ்ரீ வரமுக்தீஸ்வரர் அருள்பாளிக்கிறார்.
ஐந்தாவதாக சத்யேஜாதக மூர்த்தியாக சிந்தாமணியில் இருப்பது புராணவரலாறு.
இவ்வாறு உண்டான பன்ச சேத்திரங்களில் ரகசிய சேத்திரம் என்றும், காலகூடசேத்திரம் என்றும் அழைக்கப்படுவது தான் சுருட்டப் பள்ளியாகும்.
- கணபதியை வணங்கி விட்டு சண்டிகேஸ்வரரையும், நந்தீஸ்வரரையும் வணங்கவும்.
- பிரசித்திப் பெற்ற கோவில் ஸ்தலங்களில் பொதுவாக சிவன் ஸ்தலங்களில் தீர்த்த குளம் இருக்கும்.
பிரசித்திப் பெற்ற கோவில் ஸ்தலங்களில் பொதுவாக சிவன் ஸ்தலங்களில் தீர்த்த குளம் இருக்கும்.
கோவில் உள்ளே செல்லும் முன்பு தீர்த்த குளத்தில் கை கால்களை சுத்தம் செய்து கொண்டு அந்த தீர்த்தத்தை தலையிலும் தெளித்துக் கொள்ளவும், பிறகு கோபுரத்தை பார்த்து வணங்கவும்.
கோபுரம் தரிசனம் முடித்துக் கொண்டு கணபதியை வணங்கவும், கணபதியை வணங்கி விட்டு சண்டிகேஸ்வரரையும், நந்தீஸ்வரரையும் வணங்கவும்.
சிவாலயத்தில் பலி பீடத்தருகில்தான் நமஸ்கரிக்க வேண்டும்.
3, 4, 7, 9 என்ற எண்ணிக்கைகளில் ஏதாவது ஒன்றினை மேற்கொள்ளலாம்.
வடபுறம், கிழக்குப்புறம் கால் நீட்டக்கூடாது.
ஆண்கள் அஷ்டாங்க நமஸ்காரமும், பெண்கள் பஞ்சாங்க நமஸ்காரமும் செய்ய வேண்டும்.
கிழக்கு நோக்கிய சன்னதியானால் பலிபீடத்திற்குத் தென்கிழக்கு மூலையில் தலை வைத்து நமஸ்கரிக்க வேண்டும்.
தெற்கு, மேற்கு நோக்கிய சன்னிதிகளில் பலி பீடத்திற்கு தென்மேற்கு மூலையில் தலை வைத்து நமஸ்கரிக்க வேண்டும்.
வடக்கு நோக்கிய சன்னிதியானால் பலிபீடத்திற்கு வடமேற்கு மூலையில் தலை வைத்து நமஸ்கரிக்க வேண்டும்.
சூரிய கிரகணத்தின்போதும், சங்கராந்தி காலத்திலும் மேற்கே கால் நீட்டி நமஸ்கரிக்கலாகாது.
அஷ்டாங்க நமஸ்காரத்தில் முதலில் தலையை வைத்து, மார்பு பூமியில் படும்படி வலக்கையை முன்னும், இடக்கையைப் பின்னும் நேரே நீட்டி, பின்னர் அம்முறையே மடக்கி, வலத்தோளும், இடத்தோளும் தரையில் பொருந்தும்படி கைகளை இடுப்பை நோக்கி நீட்டி, வலக் காதை முதலிலும், இடக்காதைப் பிறகும் பூமியில் படும்படி செய்ய வேண்டும்.






