என் மலர்

  நீங்கள் தேடியது "Raashi khanna"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • அயோக்யா, அடங்க மறு, சங்கத்தமிழன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமாடைந்தவர் ராஷி கண்ணா.
  • இவர் நடிப்பில் நேற்று வெளியான திருசிற்றம்பலம் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

  தமிழில் இமைக்கா நொடிகள், அயோக்யா, அடங்க மறு, சங்கத்தமிழன், துக்ளக் தர்பார், அரண்மனை 3, திருசிற்றம்பலம் ஆகிய படங்களில் நடித்தவர் ராஷி கண்ணா. தற்போது கார்த்தியுடன் சர்தார் படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கு, இந்தி மொழி படங்களிலும் நடித்து இருக்கிறார்.


  ராசி கண்ணா

  தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல மொழிகளில் பிரபல நடிகையாக வலம் வரும் ராஷி கண்ணா ட்விட்டரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். 'என் ட்விட்டர் கணக்கை செயலிழக்க வைத்துவிட்டேன். இன்ஸ்டாகிராமில் தொடர்வேன்' என்று தெரிவித்துள்ளார்.

  கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவர் தென்னிந்திய சினிமாவை பற்றி தவறாக கூறியதால் சர்ச்சையில் சிக்கி ட்விட்டரில் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்பட்டதாகவும் இதுவும் அவர் விலக ஒரு காரணம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • அயோக்யா, அடங்க மறு, சங்கத்தமிழன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமாடைந்தவர் ராஷி கண்ணா.
  • இவர் நடிப்பில் நேற்று வெளியான திருசிற்றம்பலம் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

  தமிழில் இமைக்கா நொடிகள், அயோக்யா, அடங்க மறு, சங்கத்தமிழன், துக்ளக் தர்பார், அரண்மனை 3, திருசிற்றம்பலம் ஆகிய படங்களில் நடித்தவர் ராஷி கண்ணா. தற்போது கார்த்தியுடன் சர்தார் படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கு, இந்தி மொழி படங்களிலும் நடித்து இருக்கிறார்.

   

  ராஷி கண்ணா

  ராஷி கண்ணா

  தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல மொழிகளில் பிரபல நடிகையாக வலம் வரும் ராஷி கண்ணா தற்போது வெள்ளை நிற உடையில் புதிய கவர்ச்சி புகைப்படத்தை பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் அனைவரின் கவனத்தை ஈர்த்து லைக்குகளை குவித்து வருகிறது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தமிழ் திரையுலகில் பிசியான நடிகையாக வலம் வரும் ராஷி கண்ணா, மேதாவி, சைதான் கா பச்சா, சர்தார், திருச்சிற்றம்பலம் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார்.
  நடிகை ராஷி கண்ணா, கடந்த 2013-ம் ஆண்டு வெளியான ‘மெட்ராஸ் கபே’ எனும் இந்தி படம் மூலம் நடிகையாக அறிமுகமானார். பின்னர் தெலுங்கு படங்களில் நடித்து தென்னிந்திய அளவில் பிரபலமான இவர், கடந்த 2018-ம் ஆண்டு வெளியான ‘இமைக்கா நொடிகள்’ படம் மூலம் தமிழ் திரையுலகில் எண்ட்ரி கொடுத்தார். பின்னர் அடங்கமறு, அயோக்யா, சங்கத்தமிழன், அரண்மனை 3 போன்ற படங்களில் நடித்ததன் மூலம் முன்னணி நடிகையாக உயர்ந்தார்.

  ராஷி கண்ணா
  ராஷி கண்ணா

  தற்போது மேதாவி, சைதான் கா பச்சா, சர்தார், திருச்சிற்றம்பலம் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ள நடிகை ராஷி கண்ணா, மேலும் ஒரு தமிழ் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளாராம். சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் அவர் ஜீவாவுக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே சுந்தர்.சி இயக்கிய ‘அரண்மனை 3’ படத்தில் ஹீரோயினாக நடித்த ராஷி கண்ணா தற்போது மீண்டும் அவருடன் கூட்டணி அமைக்க உள்ளார். 
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  விஷால் ஜோடியாக அயோக்யா படத்தில் நடித்துள்ள ராஷி கண்ணா, இந்த படத்தில் தனக்கு குரல் கொடுத்த டப்பிங் கலைஞரான ரவீனா ரவியிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.
  சமீபத்தில் வெளியான `அயோக்யா’ படத்தில் விஷாலுக்கு ஜோடியாக ராஷி கண்ணா நடித்திருந்தார். தெலுங்கு படங்களில் நடித்து வந்த ராஷி பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர்.

  ‘அயோக்யா’ அவர் நடிப்பில் வெளியாகியிருக்கும் மூன்றாவது தமிழ்ப் படம் என்பதால் படத்தில் அவருக்கு டப்பிங் குரல்தான். ‘அயோக்யா’ படத்தில் ராஷிக்கு பின்னணி குரல் கொடுத்தது பிரபல டப்பிங் கலைஞரும் நடிகையுமான ரவீனா ரவி.


  இந்தப் படத்தை பார்த்து, டப்பிங் பேசியதற்காகத் தன் பெயர் டைட்டிலில் இல்லை என மிகுந்த வேதனையுடன் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். மேலும், டிரைவர், கார்பென்டர், மெஸ் அண்ணா பெயர்களைப் போட்டிருக்காங்க ரொம்ப நல்லது. இருப்பினும் டப்பிங் கலைஞர்களின் பெயர்கள் மட்டும் இல்லை. இது நடப்பது வருத்தத்துக்குரிய வி‌ஷயம். காத்திருப்போம் எனப் பதிவிட்டிருந்தார். 

  ரவீனா ட்விட்டை பார்த்த ராஷி கண்ணா, இதுகுறித்து மன்னிப்புக் கேட்டும், தன் நடிப்புக்கு ரவீனா குரல் அழகு சேர்த்துள்ளது எனவும் பதில் ட்விட் பதிவிட்டார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  விஜய் சந்தர் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து வரும் `சங்கத்தமிழன்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்தில் விஜய் சேதுபதி இரட்டை வேடத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. #SangaTamizhan #VijaySethupathi
  ‘வாலு’, `ஸ்கெட்ச்‘ ஆகிய படங்களை இயக்கிய விஜய் சந்தர் தற்போது விஜய் சேதுபதியை வைத்து `சங்கத்தமிழன்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது. இதில் முறுக்கு மீசையுடன் வித்தியாசமான தோற்றத்தில் விஜய்சேதுபதி உள்ளார்.

  இந்த படத்தின் படப்பிடிப்பு தென்காசி, குற்றாலம் உள்ளிட்ட இடங்களில் நடந்து வருகிறது. இந்த படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக ராஷி கண்ணா, நிவேதா பெத்துராஜ் நடிக்கும் நிலையில், விஜய் சேதுபதி இந்த படத்தில் இரட்டை வேடத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இது உண்மையாகும் பட்சத்தில், இரட்டை கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் முதல் படமாக இது இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.  நாசர், சூரி, நாசர், அசுதோஷ் ராணா, ரவி கிஷான், மொட்டை ராஜேந்திரன் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். விஜயா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் பி.பாரதி ரெட்டி தயாரிக்கும் இந்த படத்திற்கு விவேக் மெர்வின் இசையமைக்கின்றனர். #SangaTamizhan #VijaySethupathi #VijayChander #RaashiKhanna #NivethaPethuraj

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  விஷால் ஜோடியாக ராஷி கண்ணா நடித்துள்ள அயோக்யா படம் விரைவில் திரைக்கு வரவிருக்கும் நிலையில், அஜித் தான் தனது முதல் காதலர் என்றும், அவர் சிரிப்பு அசத்தலாக இருக்கும் என்றும் கூறியுள்ளார். #RaashiKhanna
  நயன்தாராவின் இமைக்கா நொடிகள் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் ராஷி கண்ணா. ஜெயம் ரவியுடன் அடங்கமறு, விஷாலுடன் அயோக்யா படத்தில் நடித்துள்ளார். இளம் கதாநாயகர்கள் விரும்பும் நடிகையாக மாறி வருகிறார்.

  தமிழ் தவிர தெலுங்கு திரையுலகிலும் அவரின் மார்க்கெட் நன்றாக உள்ளது. எனவே இரு மொழிகளில் தயராகும் படங்கள் அவருக்கு குவிகின்றன. இவர் தன்னுடைய முதல் காதல் பற்றி கூறியுள்ளார். ‘எனக்கு சிறு வயதில் ஏற்பட்ட முதல் கிரஷ் என்றால் அது பாலிவுட் நடிகர் ஷாருக்கான் தான்.  கோலிவுட்டில் எனது முதல் கிரஷ் அஜித் சார். அவரின் சிரிப்பு அசத்தலாக இருக்கும். அவரின் படம் பார்க்கும்போது அவர் எப்படா சிரிப்பார் என்று காத்திருப்பேன். அஜித் சார் நடித்த விஸ்வாசம் படம் பார்த்திருக்கிறேன்’ என்று கூறியுள்ளார். #RaashiKhanna #AjithKumar

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  விஜய் சேதுபதி - விஜய் சந்தர் இணையும் புதிய படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. #Sangatamizhan #VijaySethupathi
  `சூப்பர் டீலக்ஸ்' படத்திற்குப் பிறகு விஜய் சேதுபதி நடிப்பில் தற்போது ‘சிந்துபாத்’ திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

  தற்போது வாலு, ஸ்கெட்ச் படங்களை இயக்கிய விஜய் சந்தர் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து வருகிறார். விஜயா புரொடக்க்ஷன்ஸ் சார்பில் பி.பாரதி ரெட்டி தயாரிக்கும் இந்த படத்திற்கு சங்கத்தமிழன் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதன் பர்ஸ்ட்லுக் போஸ்டர் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.


  இந்த படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக ராஷி கண்ணா மற்றும் நிவேதா பெத்துராஜ் நடிக்கிறார்கள். காமெடி வேடத்தில் சூரி நடிக்க முக்கிய கதாபாத்திரங்களில் நாசர், அசுதோஷ் ராணா, ரவி கிஷான், மொட்டை ராஜேந்திரன், மாரிமுத்து, ஜான் விஜய் மற்றும் ஸ்ரீமான் உள்ளிட்ட பலரும் நடிக்கிறார்கள். #Sangatamizhan #VijaySethupathi #VijayChandar 
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வெங்கட் மோகன் இயக்கத்தில் விஷால் - ராஷி கண்ணா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘அயோக்யா’ படத்தின் ரிலீஸ் தேதியை விஷால் உறுதிப்படுத்தியுள்ளார். #Ayogya #Vishal
  ஏ.ஆர்.முருகதாஸின் உதவியாளராக பணியாற்றிய வெங்கட் மோகன் இயக்குநராக அறிமுகமாகும் அயோக்யா படத்தில் விஷால் - ராஷி கண்ணா இணைந்து நடித்துள்ளனர். 

  படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. முன்னதாக படத்தை ஏப்ரல் 19-ல் வெளியிட முடிவு செய்திருந்தனர். தற்போது படம் வருகிற மே 10-ந் தேதி ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பார்த்திபன், ராதாரவி, கே.எஸ்.ரவிகுமார், ஆடுகளம் நரேன், வம்சி, சோனியா அகர்வால், சச்சு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

  லைட் ஹவுஸ் மூவி மேக்கர்ஸ் சார்பில் பி.மது தயாரித்துள்ள இந்த படத்தை ஸ்கிரீன் சீன் மீடியோ நிறுவனம் வெளியிடுகிறது. தெலுங்கில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற டெம்பர் படத்தின் தமிழ் ரீமேக்காக இந்த படம் உருவாகி இருக்கிறது. #Ayogya #Vishal #Raashikhanna

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தமிழ் சினிமாவில் பிசியான நடிகராக வலம் வரும் விஜய் சேதுபதி - விஜய் சந்தர் இணையும் புதிய படத்திற்கு சங்கத்தமிழன் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #Sangathamizhan #VijaySethupathi
  விஜய் சேதுபதி நடிப்பில் `சூப்பர் டீலக்ஸ்' படம் வருகிற மார்ச் 29-ந் தேதி திரைக்கு வருகிறது. விஜய் சேதுபதி தற்போது வாலு, ஸ்கெட்ச் படங்களை இயக்கிய விஜய் சந்தர் இயக்கத்தில் நடித்து வருகிறார்.

  விஜயா புரொடக்க்ஷன்ஸ் சார்பில் பி.பாரதி ரெட்டி தயாரிக்கும் இந்த படத்திற்கு சங்கத்தமிழன் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

  இந்த படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக ராஷி கண்ணா மற்றும் நிவேதா பெத்துராஜ் நடிக்கிறார்கள். காமெடி வேடத்தில் சூரி நடிக்க முக்கிய கதாபாத்திரங்களில் நாசர், அசுதோஷ் ராணா, ரவி கிஷான், மொட்டை ராஜேந்திரன், மாரிமுத்து, ஜான் விஜய் மற்றும் ஸ்ரீமான் உள்ளிட்ட பலரும் நடிக்கிறார்கள்.  இளம் இசையமைப்பாளர்களான விவேக்-மெர்வின் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்கள். வேல்ராஜ் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்க, எம்.பிரபாகரன் கலை பணிகளையும், அனல் அரசு சண்டைக்காட்சிகளையும், பிரவீன்.கே.எல். படத்தொகுப்பையும் கவனிக்கின்றனர்.

  இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் சமீபத்தில் முடிந்த நிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் நடைபெற இருக்கிறது. #Sangathamizhan #VijaySethupathi #VijayChander #RaashiKhanna #NivethaPethuraj

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பொள்ளாச்சியில் பெண்கள் பலர் பாலியல் பாதிப்புக்குள்ளாகியிருக்கும் சம்பவம் குறித்து நடிகைகள் ஆவேசமாக கருத்து கூறியிருக்கிறார்கள். #PollachiAbuseCase #PollachiCase
  பொள்ளாச்சியில் பெண்கள் பலர் பாலியல் பாதிப்புக்குள்ளாகியிருக்கும் சம்பவத்தில் பல பிரபலங்கள் தங்களுடைய ஆதங்கத்தையும், கண்டனத்தையும் தெரிவித்து வருகின்றனர்.

  நடிகை அதுல்யா ரவி வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது:-

  ‘பாதிக்கப்பட்ட பெண்கள் இனிதான் தைரியமாக இருக்க வேண்டும். இந்த வி‌ஷயத்தை தாண்டி வரவேண்டும். ஒரு சிலர் செய்யும் தவறால் நாம் நல்ல ஆண்களையும் தவறாக பார்க்க வேண்டியிருக்கிறது.

  மற்ற நாடுகளில் இது மாதிரி வி‌ஷயங்களுக்கு என்ன தண்டனை கொடுப்பார்களோ அதைக் கொடுத்தால்தான் அடுத்து பண்ணணும்னு நினைக்கிறவர்களும் பயப்படுவார்கள். இதை அரசியலாக மட்டும் மாற்றி விடாதீர்கள். இவர்களுக்குப் பெரிய தண்டனை கொடுக்காமல் விட்டு விடாதீர்கள்.  யாரையும் நம்பாமல் நம்மால் வாழ முடியாது தான். அதேநேரம் நீங்கள் நம்புகிற, காதலிக்கற யாராக இருந்தாலும் சரி, அவருடன் பைக்கிலோ, காரிலோ தனியாக போவதை தவிர்த்து விடுங்கள். சந்திக்கிற இடம் பொது இடமாக இருப்பதுபோல் பார்த்துக்கொள்ளுங்கள்.

  உங்கள் பையில் ஒரு தற்காப்பு பொருளை வைத்துக்கொள்ளுங்கள். பாதிக்கப்பட்ட பெண்கள் 200-க்கும் மேற்பட்டோர் எனக் கேட்கும்போது பதறுகிறது. இன்னும் நீங்கள் மனதளவில் உறுதியுடன் இருக்க வேண்டும்.

  காளி, இஸ்பேட் ராஜாவும் இதயராணியும் படங்களின் கதாநாயகி ஷில்பா மஞ்சுநாத் கூறியதாவது:-

  நட்பான குடும்பம் அமையாததே, பல பெண்கள் வெளியில் அன்பைத் தேட காரணம். வீட்டில் மனம் விட்டுப் பேசி, நட்பாய் பழக ஆட்கள் இருந்தால், எந்தப் பெண்ணிற்கும் வெளியில் அதனைத் தேட வேண்டிய தேவை இருக்காது.  வரலட்சுமி சரத்குமார் கூறும்போது,

  ‘பெண்ணை வைத்து விளையாடுகிறீர்களா? மீண்டும் மீண்டும் அதே கொடூர குற்றம். அப்புறம் ஒரு பக்கம் மகளிர் தினம் வேறு. இந்த சமூகத்திற்கு பெண் என்றால் இதுதான் அர்த்தமா? பொள்ளாச்சி பலாத்காரர்களை தோலுரித்துக் கொல்ல வேண்டும்.

  இந்த மாதிரியான உலகத்தில்தான் நாம் வாழ்கிறோமா? பலாத்காரத்துக்கு மரண தண்டனை. இது மட்டும்தான் ஒரே வழி.

  நடிகை ராசிகன்னா கூறும்போது:-

  பொள்ளாச்சி பாலியல் வழக்கு என்னை மிகவும் பாதிக்கிறது. நடந்தது எல்லாம் மிகவும் கொடூரமாக இருக்கிறது. அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.  அவர்களுக்கு வழங்கப்படும் தண்டனை அவர்கள் முதுகெலும்பை நொறுக்குவதாக இருக்க வேண்டும். இந்த அரசாங்கம் பாதிக்கப்பட்டவர்களுக்கு முழு ஆதரவு கொடுக்க வேண்டும்.

  ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்டுள்ள பதிவில் ‘இனியும் நாம் மவுனம் காக்கத்தான் வேண்டுமா? பதில் சொல்ல வேண்டியவர் யார் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  விஜய் சேதுபதி அடுத்ததாக நடிக்க இருக்கும் புதிய படத்தில், அவருக்கு ஜோடியாக இரண்டு கதாநாயகிகள் நடிக்க இருக்கிறார்கள். #VijaySethupathi
  சிம்பு நடித்த வாலு, விக்ரம் நடித்த ஸ்கெட்ச் ஆகிய படங்களை இயக்கியவர் விஜய்சந்தர். இவர் தற்போது தனது மூன்றாவது படத்தை விஜய் சேதுபதியைக் கதாநாயகனாக வைத்து இயக்கவுள்ளார். இந்தப் படத்தில் ராஷி கண்ணா கதாநாயகியாக நடிப்பது ஏற்கெனவே படக்குழுவால் அறிவிக்கப்பட்டிருந்தது. 

  தற்போது நிவேதா பெத்துராஜ் மற்றொரு கதாநாயகியாக நடிப்பது உறுதியாகியுள்ளது. விஜயா புரொடக்‌‌ஷன்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்குத் தற்காலிகமாக ‘விவிவி’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. விவேக், மெர்வின் இணைந்து இசையமைக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் தொடங்க உள்ளது.   விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி இருக்கும் சூப்பர் டீலக்ஸ் திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print