என் மலர்
சினிமா

கே.ஜி.எஃப் 2 - யஷ் உடன் இணையும் சஞ்சய் தத்
பிராஷாந்த் நீல் இயக்கத்தில் யஷ் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற கே.ஜி.எஃப் படத்தின் இரண்டாவது பாகத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க சஞ்சய் தத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது. #KGF #Yash #SanjayDutt
பிராஷாந்த் நீல் இயக்கத்தில் ராக் ஸ்டார் யஷ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவான கே.ஜி.எஃப் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. கன்னட சினிமா மட்டுமின்றி, தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல்வேறு மொழிகளிலும் படம் வசூல் குவித்துள்ளது.
கன்னடத்தில் ரூ.100 கோடி வசூலை தாண்டிய முதல் படம் என்ற பெருமை கே.ஜி.எஃப் படத்திற்கு கிடைத்துள்ளது. இந்த படத்தின் தமிழ் பதிப்பை நடிகர் விஷால் தனது தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரி மூலம் வெளியிட்டார்.

இந்த நிலையில், கே.ஜி.எஃப் படத்தின் இரண்டாவது பாகத்திற்கான படப்பிடிப்பை விரைவில் துவங்கவிருக்கின்றனர். இந்த பாகத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்திடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. முன்னதாக கே.ஜி.எஃப் படத்தின் முதல் பாகத்தில் நடிக்கவே சஞ்சய் தத்திடம் பேசினார்கள். தேதி ஒதுக்க முடியாத காரணத்தால் முதல் பாகத்தில் சஞ்சய் தத்தால் நடிக்க முடியவில்லை.
இப்படி இருக்க இரண்டாவது பாகத்தில் ஒப்பந்தமாகிறாரா என்பது விரைவில் தெரிய வரும். சஞ்சய் ஒப்பந்தமாகும் பட்சத்தில் தென்னிந்திய சினிமாவில் அவர் அறிமுகமாகும் முதல் படமாக இது அமையும் என்பது குறிப்பிடத்தக்கது. #KGF #Yash #SanjayDutt
Next Story






