இந்த வார ஓடிடி ரிலீஸ்

நானி மற்றும் ஸ்ரீநிதி ஷெட்டி நடிப்பில் சைலேஷ் கொலானு இயக்கத்தில் வெளியானது ஹிட் 3 திரைப்படம்.தருண் மூர்த்தி இயக்கத்தில் மோகன்லால் மற்றும் ஷோபனா முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து வெளியானது தொடரும் திரைப்படம்.
இந்த வார ஓடிடி ரிலீஸ்
Published on

திரையுலகில் ஒவ்வொரு வாரமும் பல புதிய படங்கள் ரிலீசாகி வருகின்றன. பல திரைப்படங்களுக்கு திரையரங்கிள் கிடைக்காத வெற்றி ஓடிடி தளத்தில் வெளியான பிறகு கிடைக்கிறது. அந்த வகையில், இந்த வாரம் எந்த திரைப்படங்கள் மற்றும் தொடர்கள் எந்தெந்த ஓ.டி.டி தளங்களில் வெளியாக உள்ளன என்பதைக் காணலாம்.

ஹிட் 3

நானி மற்றும் ஸ்ரீநிதி ஷெட்டி நடிப்பில் சைலேஷ் கொலானு இயக்கத்தில் வெளியானது ஹிட் 3 திரைப்படம். இப்படம் ஒரு அதிரடி ஆக்ஷன் திரைப்படமாக உருவாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. திரைப்படம் இன்று நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது.

ரெட்ரோ

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா மற்றும் பூஜா ஹெக்டே முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து வெளியானது ரெட்ரோ திரைப்படம். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். ஆக்ஷன் மற்றும் காதல் கதைக்களத்தில் இப்படம் உருவாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. திரைப்படம் நாளை நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீமாகிறது.

தொடரும்

தருண் மூர்த்தி இயக்கத்தில் மோகன்லால் மற்றும் ஷோபனா முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து வெளியானது தொடரும் திரைப்படம். மோகன்லாலுடன் 20 வருடங்களுக்கு பிறகு ஷோபனா இப்படத்தில் நடித்துள்ளார். இதுவரை அதிக வசூலித்த மலையாள திரைப்படமாக தொடரும் உருமாறியுள்ளது. திரைப்படம் நாளை ஜியோ ஹோட்ஸ்டாரில் வெளியாகிறது.

நிழற்குடை

தர்ஷன் பிலிம்ஸ் சார்பில் சிவா ஆறுமுகம் கதை திரைக்கதை எழுதி இயக்கியுள்ள படம் நிழற்குடை. தேவயானி முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்த படத்தில் விஜித் கதாநாயகனாகவும் கண்மணி கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். திரைப்படம் நாளை ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

"கேப்டன் அமெரிக்கா: பிரேவ் நியூ வேர்ல்ட்"

நடிகர் ஆண்டனி மெக்கீ கேப்டன் அமெரிக்கா நடித்துள்ள படம் "கேப்டன் அமெரிக்கா: பிரேவ் நியூ வேர்ல்ட்". மார்வெல் காமிக்ஸை அடிப்படையாகக் கொண்டு உருவான இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. திரைப்படம் நேற்று ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியானது

கிரிமினல் ஜஸ்டிஸ் சீசன் 4

பங்கஜ் ட்ரிபாதி, ஷ்வேதா பசு, முகமத் அய்யுப் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து உருவாகியுள்ளது வெப் தொடரான கிரிமினல் ஜஸ்டிஸ் சீசன் 4. இது ஒரு கோர்ட்ரூம் டிராமாவாக உருவாகியுள்ளது. இத்தொடர் இன்று ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியானது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com