

2015 ஆம் ஆண்டு எஸ்.எஸ் ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா தகுபதி, அனுஷ்கா, நாசர், சத்யராஜ், ரம்யாகிருஷ்ணன் மற்றும் பலர் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து வெளியான திரைப்படம் பாகுபலி. இப்படத்தின் இசையை எம்.எம் கீரவானி மேற்கொண்டார். இப்படம் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்ற நிலையில், பாகுபலி படத்தின் இரண்டாம் பாகம் 2017 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.
பாகுபலி திரைப்படம் உலகளவில் 1800 கோடிக்கும் மேல் வசூலித்து இந்திய சினிமாவை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு சென்றது.
இந்நிலையில் திரைப்படம் வெளியாகி 10 வருடங்கள் முடிவடைந்துள்ளது. இதையொட்டி 'பாகுபலி' 2 பாகங்களை ஒரே படமாக 'பாகுபலி - The Epic' என்ற பெயரில் வரும் அக். 31ம் தேதி ரீ-ரிலீஸ் செய்யப்படும் என அப்படங்களின் இயக்குநர் ராஜமவுளி அறிவித்துள்ளார்.
Baahubali…The beginning of many journeys.Countless memories.Endless inspiration.It's been 10 years.Marking this special milestone with #BaahubaliTheEpic, a two-part combined film.In theatres worldwide on October 31, 2025. pic.twitter.com/kaNj0TfZ5g