'குண்டு மல்லி ரெண்டு ரூபாய்' பாடலுக்கு மனைவியுடன் நடனமாடிய ராஜமௌலி.

எபிக், ஆக்‌ஷன் மற்றும் ஃபேண்டசி கதைக்களத்தில் படம் இயக்குவதில் திறம் பெற்றவர் ராஜமௌலிராஜமௌலி இதில் குழந்தைப் போன்று முக பாவனைக் கொடுத்து மிக அழகாக ஆடியுள்ளார்.
'குண்டு மல்லி ரெண்டு ரூபாய்' பாடலுக்கு  மனைவியுடன் நடனமாடிய  ராஜமௌலி.
Published on

இந்திய சினிமாவை அடுத்தக்கட்டதிற்கு எடுத்துச் சென்ற பெருமை இயக்குனர் ராஜமௌலிக்கு உண்டு. எபிக், ஆக்ஷன் மற்றும் ஃபேண்டசி கதைக்களத்தில் படம் இயக்குவதில் திறம் பெற்றவர் ராஜமௌலி. 2009 ஆம் ஆண்டு வெளியான 'மாவீரன்' அதைத் தொடர்ந்து 'நான் ஈ' படத்தை இயக்கினார்.

'பாகுபலி' மற்றும் 'ஆர் ஆர் ஆர்' திரைப்படம் இவருக்கு மிகப் பெரிய வெற்றியை பெற்றுக் கொடுத்தது. இந்நிலையில் ராஜமௌலி அவரின் மனைவி ரமாவுடன் நடனமாடும் வீடியோ இணையதளத்தில் வெளியாகியுள்ளது.

அதில் தெலுங்கு பாடலான 'அந்தமைன்னா பிரேமரனி' பாட்டிற்கு நடனமாடியுள்ளனர். அவர்களின் குடும்ப திருமண நிகழ்ச்சியில் நடனமாடுவதற்கு பயிற்சி செய்த வீடியோவாகும் இது. ராஜமௌலி இதில் குழந்தைப் போன்று முக பாவனைக் கொடுத்து மிக அழகாக ஆடியுள்ளார். 

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com