என் மலர்

  நீங்கள் தேடியது "Prabhudeva"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மீனா கடந்த 2009-ஆம் ஆண்டு வித்யாசாகரை திருமணம் செய்து கொண்டார்.
  • நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் நேற்று இரவு இவர் காலமானார்.

  தமிழ் திரையுலகின் பிரபலமான நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் நேற்று இரவு இவர் காலமானார். அவருக்கு வயது 48. மீனா, கடந்த 2009-ஆம் ஆண்டு வித்யாசாகரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நைனிகா என்ற மகள் உள்ளார். நைனிகாவும் குழந்தை நட்சத்திரங்களாக 'தெறி', 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்' உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.

  பிரபுதேவா - சரத்குமார்

  பிரபுதேவா - சரத்குமார்

  அவரது உடல் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அவரது வீட்டில் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இன்று காலை நடிகர்கள் சரத்குமார், பிரபுதேவா உள்ளிட்ட பலர் நேரில் சென்று வித்யாசாகர் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். பின்னர் நடிகை மீனா மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறியுள்ளனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நடன இயக்குனர், இயக்குனர், நடிகர் என தென்னிந்திய சினிமாவில் வலம் வரும் பிரபுதேவாவின் புதிய படம் ஒன்று நேரடியாக ஓட்டி தளத்தில் வெளியாகி இருக்கிறது.
  பிரபுதேவா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘பொன் மாணிக்கவேல்’. நேமிசந்த் ஜபக் தயாரிப்பில் ஏ.சி.முகில் இயக்கத்தில் உருவாகி வரும் இதில் பிரபுதேவா முதல்முறையாக போலீசாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடித்துள்ளார். மேலும் முக்கிய கதாபாத்திரங்களில் சுரேஷ் மேனன், முகேஷ் திவாரி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

  பொன் மாணிக்கவேல்

  டி.இமான் இசையமைத்துள்ள இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது பின்னணி வேலைகள் நடைபெற்று வந்தது. இப்படம் கடந்த வருடமே வெளியாக இருந்தது. இந்நிலையில், இப்படத்தை நேரடியாக ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். 
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தேவி படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய் இயக்கத்தில் பிரபுதேவா, தமன்னா நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘தேவி 2’ படத்தின் விமர்சனம்.
  தேவி படத்தின் முதல் பாகத்தின் தொடர்ச்சியாக படம் ஆரம்பிக்கிறது. ரூபி பேயிடம் போட்ட ஒப்பந்தம் காரணமாக இரண்டு வருடங்களுக்கு மேலாக வீட்டிற்குள்ளேயே தமன்னாவை வைத்திருக்கிறார் பிரபுதேவா. மீண்டும் பேய் தொல்லை இல்லாமல் இருப்பதற்காக ஜோசியர் ஒருவர் அறிவுரையின் படி தமன்னாவை மொரிசியஸ் அழைத்து சென்று வேலை பார்த்து வருகிறார் பிரபுதேவா.

  அங்கு ரூபி மீண்டும் தமன்னா உடம்பில் இருக்கிறதா என்று சில சோதனைகளை பிரபுதேவா செய்கிறார். ஆனால், ஏதும் இல்லாததால் மகிழ்ச்சியாக வாழ்க்கை சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் பிரபுதேவாவை இரண்டு பேய் பிடிக்கிறது. இதையறிந்த தமன்னா, பிரபுதேவாவை எப்படி காப்பாற்றினார்? பேயின் நோக்கம் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.  படத்தின் நாயகனாக நடித்திருக்கும் பிரபுதேவா, தனக்கே உரிய பாணியில் நடிப்பு, காமெடி, நடனம் என அசத்தி இருக்கிறார். குறிப்பாக, பேய் தன்னுள் புகுந்தவுடன், அதற்கேற்ப அவர் காட்டும் உடல் மொழி அசத்தல்.

  நாயகியாக வரும் தமன்னா, மாறுபட்ட நடிப்பால் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். குறிப்பாக பாடல் காட்சிகளில் ரசிகர்களை சீட்டிலேயே கட்டி வைத்திருக்கிறார். அவருடைய நடிப்புக்கு தீனி போடும் படமாக அமைந்திருக்கிறது. அதுபோல், மற்ற கதாநாயகிகளாக வரும் நந்திதா சுவேதா, டிம்பிள் ஹயாதி ஆகியோரும் கொடுத்த வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார்கள். கோவை சரளா மற்றும் ஆர்.ஜே.பாலாஜி இருவரும் ஆங்காங்கே ரசிகர்களை சிரிக்க வைத்திருக்கிறார்கள்.   தேவி படத்தின் வெற்றி கொடுத்த உற்சாகத்தில், 2வது பாகத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் விஜய். ஆனால், முதல் பாகம் அளவிற்கு இரண்டாம் பாகம் வெற்றி பெறுமா என்பது சந்தேகம் தான். படத்தை ஆரம்பத்தில் இருந்து இறுதிவரை காமெடி படமாகவே எடுத்திருக்கிறார். ஆனால், பார்க்கிற நமக்குத்தான் ஏனோ சிரிப்பு வரவில்லை. கதாபாத்திரங்களை சிறப்பாக கையாளத் தெரிந்த விஜய், திரைக்கதையில் கவனம் செலுத்த மறந்திருக்கிறார்.   அயனன்கா போஸின் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து படைத்திருக்கிறது. சாம் சி.எஸ்.-யின் இசை படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. பின்னணி இசையிலும் அதிக ஸ்கோர் செய்திருக்கிறார்.

  மொத்தத்தில் ‘தேவி 2’ மிரட்டல் குறைவு.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  விஜய் இயக்கத்தில் பிரபுதேவா - தமன்னா - நந்திதா நடிப்பில் உருவாகியிருக்கும் `தேவி 2' படத்தின் முன்னோட்டம்.
  ஜி.வி.பிலிம்ஸ் லிமிடெட் சார்பில் டாக்டர் ஐசரி கே.கணேஷ் மற்றும் ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் தயாரித்துள்ள படம் `தேவி 2'.

  பிரபுதேவா - தமன்னா நடிப்பில் கடந்த 2016-ஆம் ஆண்டு வெளியான தேவி படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி இருக்கிறது. முதல் பாகத்தில் நடித்த பிரபுதேவா - தமன்னா இரண்டாவது பாகத்திலும் இணைந்து நடித்துள்ளனர். நந்திதா, கோவை சரளா, டிம்பிள் ஹயாட்டி, ஜெகன், ஆர்.ஜே.பாலாஜி, சதீஷ், யோகி பாபு, குரு சோமசுந்தரம், முரளி சர்மா, சஞ்சய் பாரதி, நாசர், சோனு சூட் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

  ஒளிப்பதிவு - அயனங்கா போஸ், இசை - சாம்.சி.எஸ்., படத்தொகுப்பு - லெவ்லின் அந்தோணி கான்சால்வ்ஸ், சங்கீத் சத்யநாதன், சண்டைப்பயிற்சி - ஸ்டன்ட் சில்வா, மனோகர் வர்மா, பாடல்கள் - பிரபுதேவா & கார்கி, வசனம் - கிரேஸி மோகன், விஜய், தயாரிப்பு - டாக்டர் ஐசரி கே.கணேஷ் & ரவீந்திரன், எழுத்து, இயக்கம் - விஜய்.  படம் குறித்து இயக்குனர் விஜய் கூறும்போது,

  "நல்ல விஷயங்கள் எப்போதும் சரியான நேரத்தில், சரியான இடத்தில் நடக்கும் என்ற ஒரு கூற்று உள்ளது. அது இப்போது தேவி 2 படத்தில் நடக்கிறது என்பதால் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். தேவி 2 படம் குடும்ப ரசிகர்களை ஈர்க்கும் விதத்தில் அவர்களை மனதில் வைத்து எடுக்கப்பட்டிருக்கும் படம் தான். காமெடி, எமோஷன், காதல், இசை மற்றும் பொழுதுபோக்கு ஆகிய கூறுகள் படத்தில் உள்ளன. இந்த கோடையில் அனைத்து தரப்பு ரசிகர்களையும் ஈர்க்கும் படமாக நிச்சயம் இருக்கும் என உறுதியாக நம்புகிறேன்" என்றார்.

  படம் வருகிற மே 31-ந் தேதி திரைக்கு வர இருக்கிறது.

  தேவி 2 படத்தின் டிரைலர்:

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சினிமா பிரபலங்கள் மோகன்லால், பிரபுதேவா, ஷங்கர் மகாதேவன் உள்ளிட்டோருக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பத்ம விருதுகளை வழங்கி கவுரவித்தார். #PadmaAwards #Mohanlal #Prabhudeva
  ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு மத்திய அரசு உயரிய விருதான பத்மஸ்ரீ, பத்ம விபூஷண், பத்மபூஷண் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டிற்கான பத்ம விருது பெறுபவர்கள் பட்டியல் சமீபத்தில் வெளியிடப்பட்டது.

  திரைத்துறை சார்பில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலுக்கு பத்மபூஷன் விருதும், நடிகர் பிரபுதேவா, மனோஜ் பாஜ்பய், மறைந்த நடிகர் காதர்கான், பாடகர் ஷங்கர் மகாதேவன், டிரம்ஸ் சிவமணி, நார்த்தகி நடராஜ் உள்ளிட்டோருக்கு பத்மஸ்ரீ விருதும் அறிவிக்கப்பட்டிருந்தது.  இந்த நிலையில், இன்று (11.3.19) டெல்லியில் நடந்த விருது வழங்கும் விழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பத்ம விருதுகளை வழங்கி கவுரவித்தார். மோகன்லால், பிரபுதேவா, ஷங்கர் மகாதேவன், டிரம்ஸ் சிவமணி உள்ளிட்ட திரைத்துறையை சேர்ந்த பலரும் பத்ம விருதுகளை பெற்றுக் கொண்டனர். #PadmaAwards #Padmashri #PadmaBhusan #KaderKhan #Mohanlal #ManojBajpayee #PrabhuDeva #ShankarMahadevan

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  விஜய் இயக்கத்தில் பிரபுதேவா - தமன்னா - நந்திதா நடிப்பில் உருவாகியிருக்கும் `தேவி 2' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. #Devi2 #Prabhudeva
  விஜய் இயக்கத்தில் பிரபுதேவா - தமன்னா நடிப்பில் கடந்த 2016-ஆம் ஆண்டு வெளியான தேவி படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி இருக்கிறது. முதல் பாகத்தில் நடித்த பிரபுதேவா - தமன்னா இரண்டாவது பாகத்திலும் இணைந்து நடித்துள்ளனர். 

  நந்திதா, கோவை சரளா, டிம்பிள் ஹயாட்டி, ஜெகன், ஆர்.ஜே.பாலாஜி, சதீஷ், யோகி பாபு, குரு சோமசுந்தரம், முரளி சர்மா, சஞ்சய் பாரதி, நாசர், சோனு சூட் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


  ஜி.வி.பிலிம்ஸ், டிரைடண்ட் ஆர்ட்ஸ் இணைந்து தயாரித்துள்ள இந்த படம் வருகிற ஏப்ரல் 12-ந் தேதி திரைக்கு வர இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சாம்.சி.எஸ் இசையமைக்க, அயனன்கா போஸ் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார். #Devi2 #Prabhudeva

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அர்ஜுன்.எம்.எஸ். இயக்கத்தில் பிரபுதேவா - லக்‌ஷ்மி மேனன் நடிப்பில் உருவாகி வரும் `யங் மங் சங்' படத்தின் முக்கிய சண்டைக்காட்சிகள் சீனாவில் படமாகி இருக்கிறது. #YangMangChang #Prabhudeva
  பிரபுதேவா நடித்த சார்லி சாப்ளின் 2 படத்திற்கு போதிய வரவேற்பு கிடைக்காத நிலையில், அவர் தற்போது `யங் மங் சங்', `பொன் மாணிக்கவேல்', `தேவி 2' உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

  இதில் `யங் மங் சங்' படத்தை அர்ஜுன்.எம்.எஸ். இயக்கி வருகிறார். இதில் பிரபுதேவா ஜோடியாக லக்‌ஷ்மி மேனனும், வில்லனாக பாகுபலி வில்லன் பிரபாகரும் நடிக்கின்றனர். முக்கிய கதாபாத்திரங்களில் தங்கர்பச்சான், ஆர்.ஜே.பாலாஜி, சித்ரா லட்சுமனன், கும்கி அஸ்வின், காளி வெங்கட், முனீஸ்காந்த், மாரிமுத்து, வித்யா உள்ளிட்ட பலரும் நடிக்கிறார்கள்.  தமிழகம், ஆந்திரா, கர்நாடகாவை தொடர்ந்து சீனாவில் டெங் லெங் என்ற இடத்தில் அதிக பொருட்செலவில் அரங்குகள் அமைத்து படப்பிடிப்பை நடத்தினார்கள். இதில் பிரபுதேவா வில்லன்லளுடன் மோதும் சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டது. குங்பூ மற்றும் சைனீஸ் ஸ்டண்ட் பற்றிய காட்சிகள் கொண்டு 1980களில் நடப்பது போன்ற கதையாக யங் மங் சங் உருவாகி வருகிறது.

  வாசன் விஷுவல் வென்சர்ஸ் சார்பாக கே.எஸ்.சீனிவாசன், கே.எஸ்.சிவராமன் தயாரிக்கும் இந்த படத்திற்கு அம்ரீஷ் இசையமைக்கிறார். குருதேவ் ஒளிப்பதிவு செய்ய, பாசில், நிரஞ்சன் படத்தொகுப்பை கவனிக்கின்றனர். #YangMangChang #Prabhudeva #LakshmiMenon

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மத்திய அரசு சார்பில் பத்ம விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சினிமா பிரபலங்கள் மோகன்லால், பிரபுதேவா, ஷங்கர் மகாதேவன் உள்ளிட்ட பலரது பெயர்கள் இடம்பெற்றுள்ளன. #PadmaAwards #Mohanlal #Padmabushan
  ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு மத்திய அரசு உயரிய விருதான பத்மஸ்ரீ, பத்ம விபூஷண், பத்மபூஷண் விருதுகளை வழங்கி கவுரவப்படுத்தி வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டிற்கான பத்மஸ்ரீ, பத்ம பூஷண், பத்ம விபூஷண் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

  அதன்படி மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலுக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் அதேபோல் நடிகர் பிரபுதேவா, மனோஜ் பாஜ்பய், மறைந்த நடிகர் காதர்கான் உள்ளிட்டோருக்கும் பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. பாடகர் ஷங்கர் மகாதேவன், டிரம்ஸ் சிவமணி, நார்த்தகி நடராஜ் உள்ளிட்டோருக்கு பத்மஸ்ரீ விருது பெறுகின்றனர்.  பத்ம விருதுகள் வென்ற பிரபலங்களுக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. #PadmaAwards #Padmashri #PadmaBhusan #KaderKhan #Mohanlal #ManojBajpayee #PrabhuDeva

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சக்தி சிதம்பரம் இயக்கத்தில் பிரபுதேவா - நிக்கி கல்ராணி நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘சார்லி சாப்ளின் 2’ படத்தின் விமர்சனம். #CharlieChaplin2 #Prabhudeva #NikkiGalrani #CharlieChaplin2Review
  மேட்ரிமோனி நடத்தி வரும் பிரபுதேவா, தனக்கு ஏற்ற பெண்ணையும் தேடி வருகிறார். அரவிந்த் ஆகாஷ், சந்தனா இருவரும் இவரின் நண்பர்கள். கையில் ஏற்பட்ட சிறிய காயம் காரணமாக மருத்துவரான பிரபுவை சந்திக்க செல்லும் இவருக்கு, நிக்கி கல்ராணி 15 நாளில் இறந்து விடுவார் என்று தெரிய வருகிறது.

  இதையடுத்து நிக்கி கல்ராணியை திருமணம் செய்வதற்கான முயற்சியில் பிரபுதேவா இறங்க, ஒரு கட்டத்தில் நிக்கி கல்ராணிக்கு ஒன்றும் இல்லை என்பது தெரியவருகிறது. அத்துடன் நிக்கி கல்ராணி பிரபுவின் மகள் என்பதையும் அறிந்து கொள்கிறார். இதையடுத்து இரு குடும்பத்தாரும் பேசி இவர்களது திருமணத்தை நடத்த திட்டமிடுகிறார்கள்.  இதற்கிடையே நிக்கி கல்ராணி வேறு ஒருவருடன் நெருக்கமாக இருக்கும் வீடியோ ஒன்றை பார்த்து அதிர்ச்சியடையும் பிரபுதேவா, நிக்கியை கேவலமாக திட்டி வாட்ஸ்அப்பில் வீடியோ ஒன்றை அனுப்பிவிடுகிறார். பின்னர், நிக்கி மீது தவறில்லை என்பது அறிந்த பிரபுதேவா, அந்த வீடியோவை நிக்கி கல்ராணி பார்த்தவிடுதற்கு முன்பாக அதை அழிக்க நினைக்கிறார்.

  கடைசியில் நிக்கி அந்த வீடியோவை பார்த்தாரா? பிரபுதேவா - நிக்கி கல்ராணி திருமணம் நடந்ததா? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.  பிரபுதேவா தனது வழக்கமான கலகலப்பான நடிப்பால் கவர்கிறார். நிக்கி கல்ராணியை, அந்த வீடியோவை பார்க்க விடாமல் பண்ண பிரபுதேவா எடுக்கும் முயற்சிகள் பழைய பிரபுதேவாவை நினைவுபடுத்துகின்றன. நிக்கி கல்ராணி படம் முழுக்க மாடர்னான குடும்ப பெண்ணாக வருகிறார். அடா சர்மா, அரவிந்த் ஆகாஷ், சந்தனா உள்ளிட்டோரும் அவர்களது கதாபாத்திரங்களை மெருகேற்றி இருக்கிறார்கள். பிரபு, டி.சிவா முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். விவேக் பிரசன்னா, அமித் பார்கவ், சமீர் கோச்சார் கொடுத்த கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

  சார்லி சாப்ளின் என்ற முழுநீள காமெடி படத்தை கொடுத்த சக்தி சிதம்பரம், சார்லி சாப்ளின் 2 படத்தில் ரசிகர்களை திருப்திபடுத்தவில்லை என்று தான் சொல்ல வேண்டும். சக்தி சிதம்பரம் இயக்கிய படமா இது என்று யோசிக்கும்படி படம் இருக்கிறது. திரைக்கதை ஓரளவுக்கு வேகமாக நகர்ந்தாலும், அது படத்திற்கு பலமாக அமையவில்லை. குறிப்பாக காமெடி காட்சிகளில் சிரிக்க முடியவில்லை. ஜி.சசிகுமாரின் படத்தொகுப்பு ஓரளவுக்கு படத்திற்கு கைகொடுத்திருக்கிறது.  அம்ரிஷ் கணேஷ் இசையில் சின்ன மச்சான் பாடலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. மற்ற பாடல்களும் கேட்கும் ரகம் தான். செளந்தர்ராஜன் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளன.

  மொத்தத்தில் `சார்லி சாப்ளின் 2' ஏமாற்றம். #CharlieChaplin2 #Prabhudeva #NikkiGalrani #CharlieChaplin2Review

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மெர்குரி படத்தில் பிரபுதேவாவுடன் இணைந்து நடித்த போது கிசுகிசுக்கப்பட்ட இந்துஜா, பிரபுதேவா எனது குரு போன்றவர் என்று கூறியுள்ளார். #Magamuni #Indhuja #Prabhudeva
  மேயாத மான் படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமான இந்துஜா தொடர்ந்து முன்னணி கதாநாயகர்களுக்கு ஜோடியாகி வருகிறார். விக்ரம் பிரபுவை தொடர்ந்து தற்போது ஆர்யாவுக்கு ஜோடியாகி இருக்கிறார்.

  ‘மெளன குரு’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் சாந்தகுமார், ஆறு வருடங்கள் கழித்து தன் இரண்டாவது படத்தை இயக்க இருக்கிறார். இந்தப் படத்தில், ஆர்யா ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக இந்துஜா, மஹிமா நம்பியார் நடிக்கின்றனர். ஜுனியர் பாலையா, ஜெயபிரகாஷ், அருள்தாஸ், ஜி.எம்.சுந்தர், காளி வெங்கட் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.  அருண் பத்மநாபன் ஒளிப்பதிவு செய்ய, எஸ்.எஸ்.தமன் இசையமைக்கிறார். ‘மகாமுனி’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். 

  இந்துஜா மெர்குரி படத்தில் நடித்தபோது பிரபுதேவாவை காதலிப்பதாக கிசுகிசுக்கள் வந்தன. ஆனால் இதை இந்துஜா மறுத்துள்ளார். பிரபுதேவா தனது குரு போன்றவர் என்று தெரிவித்துள்ளார். #Magamuni #Indhuja #Prabhudeva

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளுள் ஒருவரான நந்திதா, விஜய் இயக்கத்தில் உருவாக இருக்கும் தேவி 2 படத்தில் பிரபுதேவா ஜோடியாக நடிக்கவிருக்கிறார். #Devi2 #Prabhudeva #Nandita
  `அட்டகத்தி' படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நந்திதா. தொடர்ந்து `எதிர்நீச்சல்', `முண்டாசுபட்டி' படங்களில் நடித்தவர் சமீபத்தில் வெளியான `அசுரவதம்' படத்தில் சசிகுமார் ஜோடியாக நடித்து இருந்தார்.

  முன்னணி கதாநாயகர்கள் படங்களில் நடிக்காமல் இருந்த நந்திதா, முதன்முறையாக பிரபுதேவா நடிக்கும் தேவி 2 படத்தில் நடிக்க உள்ளார். நடிப்பதற்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரம் என்பதால் நந்திதா மகிழ்ச்சியாக இருக்கிறார். தேவி படத்தின் முதல் பாகத்தில் பிரபுதேவா ஜோடியாக தமன்னா இந்த படத்திலும் தொடர்கிறார். மேலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க நித்யா மேனன் மற்றும் ஏமி ஜாக்சனுடனும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.  சமீபத்தில் `தேவி 2' படத்தின் படப்பிடிப்பு மொரீசியசில் தொடங்கியதாக பிரபுதேவா அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். பிரபுதேவாவுடன் மூத்த நடிகை கோவை சரளாவும் உடன் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தேவி படத்தின் இரண்டாவது பாகமாக உருவாகும் இந்த படத்தையும் இயக்குநர் விஜய் இயக்குகிறார். 

  இது தவிர வைபவ்வுக்கு ஜோடியாக `டாணா' என்ற படத்திலும் நந்திதா நடித்து வருகிறார். இது ஒரு பேண்டசி போலீஸ் படமாக உருவாகி வருகிறது. #Devi2 #Prabhudeva #Nandita

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print