வடிவேலு - பிரபுதேவா மீண்டும் இணைய காரணம் தெரியுமா?

14 வருடங்களுக்கு முன் இணைந்திருந்த பிரபுதேவா வடிவேலு கூட்டணி மீண்டும் ஒரு காரணத்திற்காக இணைந்துள்ளது.
வடிவேலு - பிரபுதேவா
வடிவேலு - பிரபுதேவா
Published on

இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் தயாராகி வரும் புதிய திரைப்படம் 'நாய் சேகர் ரிட்டன்ஸ்'. இதில் வடிவேலு கதையின் நாயகனாக நடிக்கிறார். இவருடன் 'குக் வித் கோமாளி' புகழ் சிவாங்கி, 'டாக்டர்' பட புகழ் நடிகர் ரெடின் கிங்ஸ்லி, ஆனந்தராஜ், விக்னேஷ்காந்த், லொள்ளு சபா சேஷு உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் இப்படத்தை தயாரிக்கிறார். 

வடிவேலு - பிரபுதேவா

சமீபத்தில் வெளியான படத்தின் மோஷன் போஸ்டர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. இந்நிலையில் இப்படத்தில் ஒரு பாடலுக்கு நடன இயக்குனராக பிரபுதேவா பணியாற்றியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இதற்காக பிரம்மாண்ட செட் அமைத்து சென்னையில் உள்ள ஸ்டூடியோவில் மும்பை நடன கலைஞர்கள் பங்கேற்று கோலகலமாக படமாக்கப்பட்டு வருகிறது. இந்த கூட்டணியின் படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

நாய் சேகர் ரிட்டன்ஸ்

வில்லு படத்தை தொடர்ந்து, 14 வருடங்களுக்கு பிறகு பிரபுதேவா மற்றும் வடிவேலு கூட்டணி மீண்டும் இப்பாடலின் மூலம் இணைந்து பணியாற்றுவது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com