என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிவராஜ்குமார்"

    • விஜய் பிரசாரத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர்.
    • திருச்செந்தூரில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் முருகனை தரிசித்தார்.

    தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு தனது மனைவியுடன் வருகை தந்த கன்னட நடிகர் சிவராஜ்குமார் முருகனை தரிசித்தார்.

    அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சிவராஜ்குமார், "ஜெயிலர் 2'ல் ரஜினியுடன் நடித்து வருகிறேன். விஜய் அரசியலுக்கு வரும்போதே அவர் பேசியது எனக்கு பிடித்தது. விஜய் அரசியலுக்கு வந்ததை வரவேற்கிறேன். 41 உயிர் போனது கஷ்டமாக இருந்தது. விஜய் அரசியலில் நிதானமாக முடிவெடுக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.

    த.வெ.க. தலைவர் விஜய் கடந்த செப்டம்பர் 27-ந் தேதி கரூரில் பிரசாரம் மேற்கொண்டார். அந்த நேரத்தில், திடீர் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர். பலர் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. 

    • நடிகர் ரவி மோகன் தற்போது பராசக்தி மற்றும் கராத்தே பாபு திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
    • தொடக்க விழா தற்போது மிகவும் பிரம்மாண்டமாக நடைப்பெற்று வருகிறது.

    நடிகர் ரவி மோகன் தற்போது பராசக்தி மற்றும் கராத்தே பாபு திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் இவர் ரவி மோகன் ஸ்டூடியோஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்க இருக்கிறார்.

    இந்நிலையில் இந்த தொடக்க விழா பணிகளை ரவி மோகன் கடந்த சில வாரங்களாக செய்து வருகிறார். தொடக்க விழா தற்போது மிகவும் பிரம்மாண்டமாக நடைப்பெற்று வருகிறது.

     

     

    விழாவிற்கு பல திரைப்பிரபலங்கள் தமிழ் மட்டுமல்லாது பிற மொழி நட்சத்திர நடிகர்களும் கலந்து கொண்டுள்ளனர். அந்தவகையில் கன்னட சூப்பர்ஸ்டாரான சிவராஜ்குமார் இந்த விழாவில் கலந்துக் கொண்டார். அவரை ரவி மோகன் மரியாதையுடன் வணங்கி காலில் இழுந்து ஆசிர்வாதம் பெற்றார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    • தெலுங்கில் தேசிய விருது பெற்ற இயக்குநர் புச்சி பாபு சனா இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும் புதிய படம் பெத்தி.
    • கிரிக்கெட்டை மையமாக வைத்து அதிக பொருட்செலவில் இப்படம் உருவாகி வருகிறது.

    தெலுங்கில் தேசிய விருது பெற்ற இயக்குநர் புச்சி பாபு சனா இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும் புதிய படம் பெத்தி.

    ராம் சரணுடன் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார், ஜான்வி கபூர் ஆகியோர் நடிக்கும் இந்தப் படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைக்கிறார்.

    கிரிக்கெட்டை மையமாக வைத்து அதிக பொருட்செலவில் இப்படம் உருவாகி வருகிறது. சுகுமார் ரைட்டிங்ஸ், வ்ரிதி சினிமாஸ், மைத்ரி மூவி மேக்கர்ஸ் ஆகியவை இப்படத்தை இணைந்து தயாரிக்கின்றன.

    படத்தின் முதல் பார்வை க்ளிம்ஸ் வீடியோ சில மாதங்களுக்கு முன் வெளியானது. திரைப்படம் அடுத்தாண்டு மார்ச் 27 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இன்று பிறந்தநாள் கொண்டாடும் சிவராஜ்குமாருக்கு வாழ்த்து தெரிவித்து படக்குழு புதிய போஸ்டர் வெளியிட்டுள்ளனர். படத்தில் கவுர்நாயுடு என்ற கதாப்பாத்திரத்தில் சிவராஜ்குமார் நடிக்கிறார்.

    • திரையுலகில் 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள கன்னட நடிகர் சிவராஜ் குமாருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
    • இனியும் சாதிக்கக்கூடிய விஷயம் எனக்கு மிகுந்த சந்தோஷத்தை அளிக்கிறது.

    கன்னட மொழி குறித்து கமல்ஹாசன் கூறிய கருத்துக்கு கர்நாடகாவில் எதிர்ப்பு வலுத்துள்ள நிலையில், "கமல்ஹாசனை விமர்சிப்பவர்கள் கன்னட மொழிக்காக என்ன செய்தார்கள்?" என்று நடிகர் சிவராஜ்குமார் கேள்வி எழுப்பி கமல்ஹாசனுக்கு ஆதரவாக பேசியிருந்தார்.

    இந்த நிலையில், திரையுலகில் 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள கன்னட நடிகர் சிவராஜ் குமாருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், நடிகர் கமல்ஹாசன் கன்னடத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    கன்னடத்தில் வாழ்த்து தெரிவித்த வீடியோவை கமல்ஹாசன் வெளியிட்டுள்ளார்.

    வீடியோவில் பேசியுள்ள கமல்ஹாசன், சிவான்னாவுக்கு நான் சித்தப்பா மாதிரி. ராஜ்குமார் அண்ணா எனக்கு காட்டின அன்பு எதிர்பாராத அன்பு. சிவான்னாவை பொறுத்தவரை இந்த 40 வருஷம் எப்படி ஓடிச்சுன்னு எனக்கு தெரியல. இன்னிக்கு மாபெரும் நட்சத்திரமாக உயர்ந்து சாதித்துக்கொண்டிருக்கிற விஷயம்... இனியும் சாதிக்கக்கூடிய விஷயம் எனக்கு மிகுந்த சந்தோஷத்தை அளிக்கிறது என்று கூறியுள்ளார்.

    • தக் லைஃப் ஆடியோ ரிலீஸ் சென்னையில் நடைபெற்று வருகிறது.
    • கன்னட நடிகர் சிவ ராஜ்குமார் கலந்து கொண்டார்.

    கமல், சிலம்பரசன், திரிஷா உள்ளிட்டோர் நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்று வருகிறது. இதில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் கலந்து கொண்டார்.

    மேடையேறிய அவர், கமல்ஹாசனிடம் ஒரு பாடல் பாட அனுமதி கேட்டார். கமலும் தலையசைக்க, சிவராஜ்குமார் "ஒரே நாள் உன்னை நான் நிலாவில் பார்த்தது... உலாவும் உன் இளமைதான் ஊஞ்சல் ஆடுது. ஒரே நாள் உன்னை நான் நிலாவில் பார்த்தது..." என்ற பாடலை தமிழில் பாடி அசத்தினார்.

    இவ்வளவு இளமையாக இருப்பது ஏப்படி? என்று கமலிடம் கேட்பது போன்று பாடலை பாடினார். சிவராஜ்குமார் பாடியதை கமல் ரசித்து புன்னகைத்தார். இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். ஜூன் 5ஆம் தேதி இப்படம் வெளியாகிறது.

    • ஜெயிலர் 2' படத்திலும் நடிப்பதை நடிகர் சிவராஜ்குமார் உறுதி செய்துள்ளார்.
    • கமல் சார் கிட்ட உங்களை ஒரு முறை கட்டிப் பிடித்துக் கொள்ளலாமா என்று கேட்டேன்.

    நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் நெல்சன் கூட்டணியில் வெளியான திரைப்படம் "ஜெயிலர்." இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. மேலும், வசூலிலும் பல கோடிகளை குவித்தது. இந்த நிலையில், ஜெயிலர் வெற்றியைத் தொடர்ந்து இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு கோவை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நடைப்பெற்று வருகிறது.

    முதல் பாகத்தை போல 'ஜெயிலர் 2' படத்திலும் நடிப்பதை நடிகர் சிவராஜ்குமார் உறுதி செய்துள்ளார்.

    நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய சிவராஜ் குமார், "எனக்கு அமிதாப் பச்சன், கமல்ஹாசன் தான் மிகவும் பிடிக்கும். கமல்ஹாசன் என்றால் அழகு. நான் பெண்ணாக இருந்திருந்தால் நிச்சயமாக அவரை கல்யாணம் பண்ணி இருந்திருப்பேன். இதை நான் பல மேடைகளில் சொல்லி இருக்கிறேன்.

    ஒருமுறை அவர் வீட்டுக்கு வரப்போ நான் அவரை பார்த்துக்கொண்டே இருந்தேன். யார் இது என்று என் அப்பாவிடம் கமல் சார் கேட்க, என் பையன் தான் என்று சொன்னார். அப்போ கமல் சார் கிட்ட உங்களை ஒரு முறை கட்டிப் பிடித்துக் கொள்ளலாமா என்று கேட்டேன். அவரும் என்னை கட்டிப்பிடித்துக் கொண்டார். மூணு நாள் நான் குளிக்கவே இல்லை. ஏன்னா, அவருடைய ஆரா மற்றும் ஸ்மெல் என் மீது இருக்க வேண்டும் என்று நினைத்தேன். அந்த மாதிரி ஒரு ரசிகன் நான்" என்று தெரிவித்தார்.

    • கன்னட சூப்பர் ஸ்டாரான சிவராஜ்குமாரின் மகள் நிவேதிதா சிவராஜ்குமார் ஆவார்.
    • Firefly திரைப்படம் வரும் ஏப்ரல் 24 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

    கன்னட சூப்பர் ஸ்டாரான சிவராஜ்குமாரின் மகள் நிவேதிதா சிவராஜ்குமார் ஆவார். இவரது மகள் தற்பொழுது தயாரிப்பாளர் அவதாரம் எடுத்துள்ளார். இவர் கன்னடத்தில் Firefly என்ற படத்தை தயாரித்துள்ளார். இப்படத்தை அறிமுக இயக்குநரான வம்ஷி கிருஷ்ணா இயக்கியுள்ளார்.

    இத்திரைப்படம் வரும் ஏப்ரல் 24 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படம் தூங்க முடியாமல் கஷ்ட படும் கதாநாயகன் வாழ்க்கையில் மிகவும் குழப்பம் நிறைந்த மனநிலையில் இருக்கும் கதாநாயகனின் காட்சிகள் டிரெய்லரில் இடம் பெற்றுள்ளது.

    டிரெய்லர் காட்சி முடிவடையும் போது சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் பீசா டெலிவரி பாயாக வருவது டிரெய்லரின் ஹைலைட்டாக அமைந்துள்ளது. இதில் அவர் கவுரவ் வேடத்தில் நடித்ததை குறித்து "நான் என் மகள் தயாரிக்கும் முதல் படமான Firefly படத்தில் நடிப்பது மிகவும் ஸ்பெஷலாக இருக்கிறது" என கூறியுள்ளார்.

    படத்தின் கதாநாயகனாக வம்ஷி நடிக்க அவருடன் அச்யுத் குமார், சுதா ராணி மற்றும் பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்தின் இசையை பிரபல இசையமைப்பாளரான சரண் ராஜ் இசையமைத்துள்ளார்.

    டிரெய்லர் இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. திரைப்படமும் மக்களிடம் நல்ல வரவேற்பை பெறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    • இந்தப் படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைக்கிறார்.
    • கிரிக்கெட்டை மையமாக வைத்து அதிக பொருட்செலவில் இபபடம் உருவாகி வருகிறது.

    தெலுங்கில் தேசிய விருது பெற்ற இயக்குநர் புச்சி பாபு சனா இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும் புதிய படம் பெத்தி.

    ராம் சரணுடன் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார், ஜான்வி கபூர் ஆகியோர் நடிக்கும் இந்தப் படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைக்கிறார்.

    கிரிக்கெட்டை மையமாக வைத்து அதிக பொருட்செலவில் இபபடம் உருவாகி வருகிறது. சுகுமார் ரைட்டிங்ஸ், வ்ரிதி சினிமாஸ், மைத்ரி மூவி மேக்கர்ஸ் ஆகியவை இப்படத்தை இணைந்து தயாரிக்கின்றன.

    இப்படத்தின் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சில வாரங்களுக்கு முன் வெளியான நிலையில் இன்று படத்தின் முதல் பார்வை க்ளிம்ஸ் விடியோ வெளியாகியுள்ளது. இந்தப் படம் அடுத்தாண்டு மார்ச் 27 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. 

    • அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் கேப்டன் மில்லர் படத்தில் நடிக்கிறார்.
    • இப்படத்தில் பிரபல கன்னட நடிகர் சிவராஜ்குமார் தனுசுக்கு அண்ணனாக நடிக்கிறார்.

    தனுஷ் நடிப்பில் இந்த வருடம் மாறன், தி கிரே மேன், திருச்சிற்றம்பலம், நானே வருவேன் ஆகிய படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றன. தற்போது தமிழ், தெலுங்கில் தயாராகியுள்ள 'வாத்தி' படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் திரைக்கு வருகிறது.

     

    சிவராஜ்குமார்

    சிவராஜ்குமார்

    அடுத்து தனுஷ், கேப்டன் மில்லர் படத்தில் நடிக்கிறார். ராக்கி, சாணிக்காகிதம் ஆகிய படங்களை இயக்கி பிரபலமான அருண் மாதேஸ்வரன் இப்படத்தை இயக்குகிறார். இதன் முதல் கட்ட படப்பிடிப்பு ஏற்கனவே முடிந்து, 2-வது கட்ட படப்பிடிப்பு தொடங்கி உள்ளது. இந்த படத்தில் பிரபல கன்னட நடிகர் சிவராஜ்குமார் தனுசுக்கு அண்ணனாக நடிக்கிறார். தற்போது படப்பிடிப்பில் சிவராஜ்குமார் இணைந்துள்ளார். தனுசும், சிவராஜ்குமாரும் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. சிவராஜ்குமார் கூறும்போது, ''நான் தனுசின் மிகப்பெரிய ரசிகன். அவருடைய அனைத்து படங்களையும் பார்த்து இருக்கிறேன். இப்போது தனுசுடன் இணைந்து நடிப்பது மகிழ்ச்சியாக உள்ளது" என்றார்.

    ரஜினியின் ஜெயிலர் படத்திலும் சிவராஜ்குமார் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ’ஜெயிலர்’.
    • இப்படத்தில் திரைப்பிரபலங்கள் பலர் நடித்துள்ளனர்.

    இந்திய திரையுலகின் முன்னணி நடிகரான ரஜினி தற்போது 'ஜெயிலர்' திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கியுள்ளார். இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.


    இப்படத்தில் ரஜினி, முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்தில் ஜெயிலராக நடித்துள்ளார். அதிரடி சண்டை படமாக தயாராகி வரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். 'ஜெயிலர்' திரைப்படம் வருகிற 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.


    ஜெயிலர் போஸ்டர்

    இந்நிலையில், 'ஜெயிலர்' படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. ரஜினியும் சிவராஜ்குமாரும் நேருக்கு நேர் பார்த்துக் கொள்ளும் இந்த போஸ்டரை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் ட்ரெண்டாக்கி வருகின்றனர். இதற்கு முன்பு ரஜினியும் மோகன் லாலும் இடம்பெற்றிருந்த போஸ்டரை படக்குழு வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.


    • 'சித்தா' படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சிக்காக நடிகர் சித்தார்த் பெங்களூரு சென்றார்.
    • அங்கு வந்த கன்னட அமைப்பினர் இந்த புரொமோஷன் நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

    அருண்குமார் இயக்கத்தில் நடிகர் சித்தார்த் நடித்த 'சித்தா' திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் செப்டம்பர் 28-ஆம் தேதி வெளியானது. 'சித்தா' படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சிக்காக நடிகர் சித்தார்த் பெங்களூரு சென்றார். அங்கு நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்து கொண்டு நடிகர் சித்தார்த் பேசிக்கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு வந்த கன்னட அமைப்பினர் இந்த புரொமோஷன் நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். காவிரி விவகாரத்தில் கன்னட அமைப்பினர், தமிழ்நாட்டிற்கு கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் தமிழ் நடிகரான சித்தார்த்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    இதைத்தொடர்ந்து நடிகர் சித்தார்த்திற்கு ஆதரவு தெரிவித்து பிரகாஷ் ராஜ் தனது சமூக வலைதளத்தில், "நீண்ட காலமாக இருக்கும் பிரச்சனையை தீர்க்காமல் வைத்திருக்கும் அனைத்து அரசியல் கட்சிகளையும், மத்திய அரசை தலையிட வைக்க அழுத்தம் கொடுக்காத எம்.பி.க்களையும் கேட்பதற்கு பதிலாக, சாதாரண மக்களையும் , சித்தார்த் போன்ற கலைஞர்களையும் தொந்தரவு செய்வதை ஏற்றுக் கொள்ள முடியாது. ஒரு கன்னடராக அனைத்து கன்னட மக்களின் சார்பாக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்" என்று பதிவிட்டிருந்தார்.



    அடுத்து நடிகர் சிவராஜ்குமார் "மற்றவர்களின் உணர்வுகளை நாம் எந்த வகையிலும் புண்படுத்தக் கூடாது. கன்னட திரையுலகம் சார்பாக நாங்கள் மிகுந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறோம் சித்தார்த். இதைச் செய்தவர்கள் யார் என்று தெரியவில்லை. ஆனால், அதைக் கண்டு நாங்கள் மிகுந்த மன வருத்தம் அடைகிறோம். இனி இப்படி நடக்காது" என்று கூறினார்.

    இந்நிலையில், நடிகர் பிரகாஷ் ராஜ் மற்றும் சிவராஜ்குமாருக்கு வாழ்த்து தெரிவித்து பார்த்திபன் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "'ஜெயிலர்'படத்தில் கிளப்பிய Mass-ஐ விட,நிஜத்தில் இன்று கன்னடத்தில் கண்டனம் தெரிவித்து தெறிக்க விட்டு இருக்கும் நண்பர் திரு சிவராஜ்குமார் அவர்களுக்கும், சினிமாவில் மட்டுமே வில்லனாகவும் நிஜத்தில் முதல் ஹீரோவாகவும் குரல் எழுப்பிய நண்பர் திரு பிரகாஷ்ராஜ் அவர்களுக்கும் பாராட்டு !!!!

    எதற்கு?மனதில் உள்ளதை தில் உள்ள மனிதர்களாக நேர்மையாக சொல்லி இருக்கிறார்கள். நீண்ட(கால)காவேரி பிரச்சனையை அதன் நீள அகலங்களில் அரசுகள் அலசி ஆராய்ந்து இன்னும் நீண்ட காலம் தீரா பிரச்சனையாக்கி அரசியல் செய்வதை விட்டு விட்டு,ஒரு கலைஞனை காயப் படுத்தி ஆவதென்ன?

    அவர்கள் …. எதிரிகளாக நினைக்கும் நம்மிடமிருந்து எதிர்ப்பு எழுவதை விட,அவர்கள் தெய்வமென மதித்த மறைந்த திரு ராஜ்குமார் அவர்களின் வம்சாவழியும், அவர்கள் பெரிதும் நேசிக்கும் திரு சி.ரா.கு எதிர்ப்பையும் மன்னிப்பையும் வெளிபடுத்தும் போது, அநாவசியமாக அநாகரிகமாக நடந்துக் கொண்ட மிக சிலர் (அவர்கள் மட்டுமல்ல கர்நாடகா என்பது) திருந்த வாய்ப்புள்ளது" என்று பதிவிட்டுள்ளார்.


    • பலரும் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
    • சிவராஜ்குமார் விஜய்-இன் அரசியல் வருகை குறித்து கருத்து.

    இந்திய திரையுலகில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் விஜய். தமிழ் மட்டுமின்றி தென்னிந்திய மாநிலங்களிலும் நடிகர் விஜய்க்கு ரசிகர்கள் ஏராளம். இவர் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் கோட் படத்தில் நடித்து வருகிறார்.

    சினிமா மட்டுமின்றி அரசியலிலும் கால்பதிக்கும் நோக்கில் நடிகர் விஜய் பல்வேறு நலத்திட்ட பணிகளை பொதுவெளியில் செய்ய துவங்கியுள்ளார். நடிகர் விஜய் அரசியலில் களமிறங்குவது பற்றி பலரும் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வரிசையில், கன்னட நடிகர் சிவராஜ்குமார் நடிகர் விஜய் அரசியல் வருகை குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

     


    இது குறித்து பேசிய அவர், "எனது 100-வது படம் தொடர்பான விழாவில் நடிகர் விஜய் மற்றும் சூர்யா ஆகியோர் கலந்து கொண்டனர். விஜய்யின் படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். விஜய்யிடம் வித்தியாசமான ஸ்டைல் இருக்கு. அவர் மிகவும் கடினமாக உழைத்திருக்கிறார். அவர் ஒரே இரவில் ஸ்டார் ஆனவர் இல்லை. அவர் நிறைய கஷ்டப்பட்டிருக்கார்."

    "அவர் தனது தோற்றம், நடிக்கும் விதம், கதைகளை தேர்வு செய்யும் விதம் என அனைத்திலும் முழுமையாக தன்னை செதுக்கிக் கொண்டிருக்கிறார். இவ்வாறு முன்னேறுபவர்களை எங்களுக்கு மிகவும் பிடிக்கும். அவர் மாணவர்களுக்கு உதவி செய்து, அவர்களுடன் உரையாடும் வீடியோவை பார்த்தேன். அவரை பற்றி நல்ல விதமாக உணர்கிறேன்."

    "அரசியலுக்கு வருவதற்கான திறன் அவரிடம் இருக்கு. அவர் தன்னை மிகவும் நம்புகிறார். அந்த நம்பிக்கை மக்களுக்கும் பிடித்துள்ளது. நடிகர் அரசியலுக்கு வந்தால், ஏன் வரவேண்டும் என்பார்கள். மக்கள் அவரை ஏற்றுக் கொள்கிறார்கள். அவரிடம் அதற்கான ஆளுமை இருக்கிறது," என தெரிவித்தார். 

    ×