என் மலர்
நீங்கள் தேடியது "Actor Shivarajkumar"
- தெலுங்கில் தேசிய விருது பெற்ற இயக்குநர் புச்சி பாபு சனா இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும் புதிய படம் பெத்தி.
- கிரிக்கெட்டை மையமாக வைத்து அதிக பொருட்செலவில் இப்படம் உருவாகி வருகிறது.
தெலுங்கில் தேசிய விருது பெற்ற இயக்குநர் புச்சி பாபு சனா இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும் புதிய படம் பெத்தி.
ராம் சரணுடன் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார், ஜான்வி கபூர் ஆகியோர் நடிக்கும் இந்தப் படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைக்கிறார்.
கிரிக்கெட்டை மையமாக வைத்து அதிக பொருட்செலவில் இப்படம் உருவாகி வருகிறது. சுகுமார் ரைட்டிங்ஸ், வ்ரிதி சினிமாஸ், மைத்ரி மூவி மேக்கர்ஸ் ஆகியவை இப்படத்தை இணைந்து தயாரிக்கின்றன.
படத்தின் முதல் பார்வை க்ளிம்ஸ் வீடியோ சில மாதங்களுக்கு முன் வெளியானது. திரைப்படம் அடுத்தாண்டு மார்ச் 27 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இன்று பிறந்தநாள் கொண்டாடும் சிவராஜ்குமாருக்கு வாழ்த்து தெரிவித்து படக்குழு புதிய போஸ்டர் வெளியிட்டுள்ளனர். படத்தில் கவுர்நாயுடு என்ற கதாப்பாத்திரத்தில் சிவராஜ்குமார் நடிக்கிறார்.
- மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள 'தக் லைப்' திரைப்படம் வரும் ஜூன் 5-ந்தேதி வெளியாக உள்ளது.
- கன்னடம் தமிழில் இருந்து பிறந்தது என்று கூறியதால் கமல் மீது கன்னட அமைப்புகள் கடுங்கோபத்தில் உள்ளன.
மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள 'தக் லைப்' திரைப்படம் வரும் ஜூன் 5-ந்தேதி வெளியாக உள்ளது.
அந்தவகையில் சென்னையில் நடந்த தக் லைஃப் பட புரொமோஷன் விழாவில் கன்னட நடிகர் சிவராஜ் குமார் கலந்துகொண்டார்.
இதில் பேசிய கமல், "உயிரின் உறவே தமிழே! எனது வாழ்க்கையும், குடும்பமும் தமிழ் மொழிதான். எனது குடும்பம் இங்கு இருக்கிறது. அதனால்தான் சிவராஜ்குமார் இங்கு வந்துள்ளார். அவரது மொழி (கன்னடம்) தமிழ் மொழியில் இருந்து பிறந்தது. அவரும் நமது குடும்பத்தில் ஒரு அங்கமாவார்" என்று தெரிவித்தார்.
கன்னடம் தமிழில் இருந்து பிறந்தது என்று கூறியதால் கமல் மீது கன்னட அமைப்புகள் கடுங்கோபத்தில் உள்ளன. இந்த விஷயத்தில் அம்மாநில காங்கிரஸ் மற்றும் பாஜக கைகோர்த்து கமலை விமர்சித்து வருகின்றன.
கர்நாடக முதல்வர் சித்தராமையா செய்தியாளர்களிடம் பேசுகையில், "கன்னட மொழிக்கு நீண்ட வரலாறு உண்டு. பாவம் கமல்ஹாசன், அவருக்கு அது தெரியாது" என்று தெரிவித்தார்.
இந்நிலையில் கமல்ஹாசனுக்கு ஆதரவு தெரிவித்து நடிகர் சிவராஜ்குமார் பேசியுள்ளார் அதில் " கன்னடம் தமிழில் இருந்து பிறந்தது என்று கமல்ஹாசன் பேசிய நிலையில் ஆதரவு. நீங்கள் கன்னட மொழிக்கு என்ன செய்துள்ளீர்கள்?" கண்டனம் தெரிவித்தவர்களுக்கு சிவராஜ்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்
"சர்ச்சை எழும்போது குரல் எழுப்பாமல் எப்போதும் கன்னட மொழியை ஊக்குவிக்க வேண்டும்" என கூறினார்.
இந்த விவகாரம் தொடர்பாக பெங்களூருவில் நேற்று நடிகர் சிவராஜ்குமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-
கன்னட மொழி குறித்து நடிகர் கமல்ஹாசன் பேசியதை நான் சரி என சொல்லவில்லை. கன்னடம், தமிழ் குறித்து பேசும் போது இசை வெளியிட்டு விழாவில் பங்கேற்ற நான் கைதட்டியது உண்மை தான். அந்த சந்தர்ப்பத்தில் கன்னட மொழி குறித்து அவர் என்ன பேசினார் என்பது எனக்கு தெரியவில்லை. கன்னட மொழி மீது எனக்கு மிகுந்த கவுரவம், மரியாதை உள்ளது. எனது தந்தை கன்னட மொழி மீது வைத்திருந்த பற்று குறித்து உங்களுக்கு நன்கு தெரியும்.
நடிகர் கமல்ஹாசன் பேசிய போது, மேடையில் அமர்ந்திருந்த நான், அங்கேயே இதுபற்றி பேசாதது குறித்து கேட்கிறீர்கள். அவர் பேசியது சரியாக கேட்கவில்லை. கன்னட மொழி குறித்து பேசியது குறித்து கமல்ஹாசனிடம் தான் நீங்கள் கேட்க வேண்டும். அவர் என்ன பேசினார் என்பதை 2-வது முறையாக கேட்ட போது தான் எனக்கே புரிந்தது. அவரது கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை." என கூறியுள்ளார்.
இப்படி நேற்று முந்தினம் ஒரு கருத்தும், இன்று ஒரு கருத்தும் கூறும் நடிகர் சிவராஜ்குமாரின் மீது நெட்டிசன்கள் அவர்களது கருத்தை முன்வைத்து வருகின்றனர். இதன் மூலம் கன்னட அமைப்பினர் எவ்வளவு நெருக்கடி மற்றும் சிக்கல்களை சிவராஜ்குமார் மீது சுமத்திருப்பர் என்பதை புரிந்துக் கொள்ள முடிகிறது.
- மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள 'தக் லைப்' திரைப்படம் வரும் ஜூன் 5-ந்தேதி வெளியாக உள்ளது.
- தக் லைஃப் பட புரொமோஷன் விழாவில் கன்னட நடிகர் சிவராஜ் குமார் கலந்துகொண்டார்.
மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள 'தக் லைப்' திரைப்படம் வரும் ஜூன் 5-ந்தேதி வெளியாக உள்ளது.
அந்தவகையில் சென்னையில் நடந்த தக் லைஃப் பட புரொமோஷன் விழாவில் கன்னட நடிகர் சிவராஜ் குமார் கலந்துகொண்டார்.
இதில் பேசிய கமல், "உயிரின் உறவே தமிழே! எனது வாழ்க்கையும், குடும்பமும் தமிழ் மொழிதான். எனது குடும்பம் இங்கு இருக்கிறது. அதனால்தான் சிவராஜ்குமார் இங்கு வந்துள்ளார். அவரது மொழி (கன்னடம்) தமிழ் மொழியில் இருந்து பிறந்தது. அவரும் நமது குடும்பத்தில் ஒரு அங்கமாவார்" என்று தெரிவித்தார்.
கன்னடம் தமிழில் இருந்து பிறந்தது என்று கூறியதால் கமல் மீது கன்னட அமைப்புகள் கடுங்கோபத்தில் உள்ளன. இந்த விஷயத்தில் அம்மாநில காங்கிரஸ் மற்றும் பாஜக கைகோர்த்து கமலை விமர்சித்து வருகின்றன.
கர்நாடக முதல்வர் சித்தராமையா செய்தியாளர்களிடம் பேசுகையில், "கன்னட மொழிக்கு நீண்ட வரலாறு உண்டு. பாவம் கமல்ஹாசன், அவருக்கு அது தெரியாது" என்று தெரிவித்தார்.
இந்நிலையில் கமல்ஹாசனுக்கு ஆதரவு தெரிவித்து நடிகர் சிவராஜ்குமார் பேசியுள்ளார் அதில் " கன்னடம் தமிழில் இருந்து பிறந்தது என்று கமல்ஹாசன் பேசிய நிலையில் ஆதரவு. நீங்கள் கன்னட மொழிக்கு என்ன செய்துள்ளீர்கள்?" கண்டனம் தெரிவித்தவர்களுக்கு சிவராஜ்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்
"சர்ச்சை எழும்போது குரல் எழுப்பாமல் எப்போதும் கன்னட மொழியை ஊக்குவிக்க வேண்டும்" என கூறினார்.
- கன்னட சூப்பர் ஸ்டாரான சிவராஜ்குமாரின் மகள் நிவேதிதா சிவராஜ்குமார் ஆவார்.
- Firefly திரைப்படம் வரும் ஏப்ரல் 24 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
கன்னட சூப்பர் ஸ்டாரான சிவராஜ்குமாரின் மகள் நிவேதிதா சிவராஜ்குமார் ஆவார். இவரது மகள் தற்பொழுது தயாரிப்பாளர் அவதாரம் எடுத்துள்ளார். இவர் கன்னடத்தில் Firefly என்ற படத்தை தயாரித்துள்ளார். இப்படத்தை அறிமுக இயக்குநரான வம்ஷி கிருஷ்ணா இயக்கியுள்ளார்.
இத்திரைப்படம் வரும் ஏப்ரல் 24 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படம் தூங்க முடியாமல் கஷ்ட படும் கதாநாயகன் வாழ்க்கையில் மிகவும் குழப்பம் நிறைந்த மனநிலையில் இருக்கும் கதாநாயகனின் காட்சிகள் டிரெய்லரில் இடம் பெற்றுள்ளது.
டிரெய்லர் காட்சி முடிவடையும் போது சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் பீசா டெலிவரி பாயாக வருவது டிரெய்லரின் ஹைலைட்டாக அமைந்துள்ளது. இதில் அவர் கவுரவ் வேடத்தில் நடித்ததை குறித்து "நான் என் மகள் தயாரிக்கும் முதல் படமான Firefly படத்தில் நடிப்பது மிகவும் ஸ்பெஷலாக இருக்கிறது" என கூறியுள்ளார்.
படத்தின் கதாநாயகனாக வம்ஷி நடிக்க அவருடன் அச்யுத் குமார், சுதா ராணி மற்றும் பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்தின் இசையை பிரபல இசையமைப்பாளரான சரண் ராஜ் இசையமைத்துள்ளார்.
டிரெய்லர் இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. திரைப்படமும் மக்களிடம் நல்ல வரவேற்பை பெறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
- கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி தேர்தல் பிரசாரம் தீவிரம் அடைந்துள்ளது.
- கன்னட திரைத்துறையின் முதன்மை குடும்பத்தின் ஆதரவு காங்கிரசுக்கு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பெங்களூரு :
கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி தேர்தல் பிரசாரம் தீவிரம் அடைந்துள்ளது. அத்துடன் கட்சி தாவல்களும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. திரை நட்சத்திரங்களும் தங்களுக்கு விருப்பமான கட்சிகள் மற்றும் தலைவர்களுக்கு ஆதரவாக பிரசார களத்தில் குதித்துள்ளனர். நடிகர் சுதீப் ஆளும் பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
இந்த நிலையில் கன்னட திரையுலகின் முதன்மை குடும்பமாக கருதப்படும் நடிகர் ராஜ்குமாரின் மருமகளும், நடிகர் சிவராஜ்குமாரின் மனைவியுமான கீதா சிவராஜ்குமார் ஜனதாதளம்(எஸ்) கட்சியில் இருக்கிறார். முன்னாள் முதல்-மந்திரி பங்காரப்பாவின் மகளான அவர், கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் சிவமொக்கா தொகுதியில் எடியூரப்பாவை எதிர்த்து ஜனதாதளம்(எஸ்) சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.
அதன்பிறகு அவர் கட்சியில் தீவிரமாக செயல்படவில்லை. கட்சி பணிகளில் இருந்து ஒதுங்கியே இருந்தார். அவரது சகோதரர் மது பங்காரப்பா கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜனதாதளம்(எஸ்) கட்சியில் இருந்து விலகி காங்கிரசில் சேர்ந்தார். அவர் தற்போது சொரப் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக களத்தில் இருக்கிறார். இந்த நிலையில் கீதா சிவராஜ்குமார் ஜனதாதளம்(எஸ்) கட்சியை விட்டு விலகி இன்று (வெள்ளிக்கிழமை) காங்கிரசில் சேருகிறார். இதன் மூலம் கன்னட திரைத்துறையின் முதன்மை குடும்பத்தின் ஆதரவு காங்கிரசுக்கு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. அவர் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.