என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தக் லைப்"

    • கன்னட மொழி தமிழில் இருந்துதான் பிறந்தது என்று கமல் பேசியது தீயாக பரவி கர்நாடகாவில் போராட்டம் வெடித்தது.
    • கன்னடத்தைவிட தமிழ் சிறந்தது போன்ற கருத்துகளும் தெரிவிக்க தடை.

    மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள படம் 'தக் லைஃப்'. சிம்பு, திரிஷா, அசோக் செல்வன், அபிராமி, நாசர், சின்னி ஜெயந்த் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரித்த இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

    இப்படம், கர்நாடகாவை தவிர்த்து உலகம் முழுவதும் வெளியானது. கன்னட மொழி தமிழில் இருந்துதான் பிறந்தது என்று கமல் பேசியது தீயாக பரவி கர்நாடகாவில் போராட்டம் வெடித்தது. இதனால் படத்தை கர்நாடகாவில் தடை செய்யப்படவில்லை.

    இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பான விசாரணை இன்று பெங்களூரு சிவில் நீதிமன்றத்தில் வந்தது.

    அப்போது, கன்னட மொழியை அவமதிக்கும் வகையில் கருத்து தெரிவிக்க கமல்ஹாசனுக்கு பெங்களூரு சிவில் நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டது.

    கன்னடத்தைவிட தமிழ் சிறந்தது போன்ற கருத்துகளும், கன்னட மொழி, கலாசாரம், நிலம் மற்றும் இலக்கியம் குறித்து கருத்து தெரிவிக்க கமல்ஹாசனுக்கு தடை விதித்துள்ளது.

    • மூர்க்க போக்கிரி குண்டர்களுக்கு ஒரு முகவரியை ஏற்படுத்தக் கூடாது.
    • Thugs & Pindaris அவர்களுக்கென்று நல்ல கொள்கையோ, கோட்பாடோ, ஒழுக்கமோ, பண்போ கிடையாது.

    புதிய தமிழக தலைவர் கிருஷ்ணசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    Thug Life" எனும் பெயரில் புதிய திரைப்படம் விரைவில் வெளிவர உள்ளதாக தெரிகிறது. மிகவும் தவறான பொருள் கொண்ட Thug" எனும் பெயர் நடிகர் கமல்ஹாசன் அவர்களால் பெருமிதப்படுத்தப்பட முயற்சிக்கப்படுகிறது. அப்பெயர் கிஞ்சிற்றும் பிரபல்யப்படுத்துவதற்கோ, பெருமைப்படுத்துவதற்கோ உரியதல்ல. ஏனெனில் Thuge என்றால் பொறுக்கிகள் மூர்க்கர்கள் போக்கிரிகள் என்று வரலாற்று ஆசிரியர்களால் சித்தரிக்கப்பட்டு இருக்கிறது.

    இந்திய வரலாற்றை ஆழமாகப் படித்தவர்கள் 18 மற்றும் 19.ஆம் நூற்றாண்டுகளில் Thugs & Pindaris என்ற மூர்க்கப் போக்கிரிக் கூட்டம் எந்த அளவிற்கு ஒட்டுமொத்த இந்தியச் சமூகத்திற்கு அச்சுறுத்தலாக இருந்தார்கள் என்பதை நன்கு அறிவார்கள். Thugs & Pindaris என்பவர்கள் ஒளரங்கசீப்பின் ஆட்சிக்குப் பிறகு இந்திய அளவில் நிலவிய நிலையற்ற தன்மையைப் பயன்படுத்திக்கொண்டு மத்திய இந்தியாவில் துவங்கி இந்தியாவெங்கும் பரவிய வழிப்பறி கொள்ளை கூட்டம் ஆகும். அவர்கள் மத ரீதியாகவோ, இன மொழி ரீதியாகவோ அடையாளப்படுத்த முடியாத நாடோடி கும்பலாவர். அவர்களுக்கென்று நல்ல கொள்கையோ, கோட்பாடோ, ஒழுக்கமோ, பண்போ கிடையாது.

    வழிப்போக்கர்களோடு வழிப்போக்கர்களாக அண்டிப் பழகி அவர்களை மயிரக்கம் இன்றி கொலை செய்துவிட்டு அவர்களின் உடைமைகளைக் கொள்ளை அடிப்பது தான் அவர்களின் வாழ்வியல் முறை. அதில் பல குழுக்கள் கூட்டம் கூட்டமாக குதிரைகளில் வந்து மத்திய மற்றும் உத்திரப் பிரதேச சாம்பல் பள்ளத்தாக்குகளில் நடைபெற்ற கொள்ளைச் சம்பவங்களைப் போல கொள்ளையடித்தும் செல்வார்கள்.

    ஏறக்குறைய நூறாண்டுகளுக்கு மேலாக இவர்களின் அட்டகாசங்கள் இந்தியாவெங்கும் கோலோச்சியது. பின் அவர்கள் கடுமையான போருக்குப் பின்னரே ஒடுக்கப்பட்டார்கள். எனினும் அவர்களின் மிச்சச் சொச்சங்களாக சமூகத்தில் பரவியும். பதுங்கியும் விடக்கும் மூர்க்க போக்கிரித்தனம் கொண்டவர்களின் அடாவடி செயல்களை இச்சமூகம் இன்னும் எதிர்கொண்டு தான் வருகிறது.

    அதன் வெளிப்பாடுகளாகவே தனித்து வீடுகளில் வசிக்கும் வயதானவர்களைக் குறி வைத்து கொலை செய்து, நகை உடையைகளைக் கொள்ளையடித்துச் செல்வது, கல்லூரி பல்கலைக்கழக வளாகங்களில் நுழைந்து பெண்களை பாலியல் பலாத்காரம் செய்வது, அதிகாரிகளையே கொன்றுவிட்டு கனிமக் கொள்ளைகளில் ஈடுபடுவது, நில மோசடிகளில் ஈடுபடுவது. கெளரவ சாதியக் கொலைகள் செய்வது, அரசாங்கத் துறைகளைக் கைப்பற்றிக் கொண்டு ரவுடி ராஜ்ஜியம் செய்வது எல்லாமே அவர்களின் மிச்ச சொச்சங்கள் தான். அம்மூங்கப் போக்கிரி வழிப்பறி குண்டர்களின் அட்டகாசங்களை ஒழிக்கவே காவல்துறையே உருவாக்கப்பட்டது.

    Thugs & Pindars இந்தியச் சமூகத்தையே அச்சுறுத்திய, இன்றும் அச்சுறுத்தி வருகிற ஒரு சமூக விரோத செயல்களில் ஈடுபடும் ஒரு தவறான வாழ்வியல் முறை. அது போன்ற நெறியற்றவர்களின் வாழ்வியலைப் பெருமைப்படுத்தும் விதமாக அவர்களுக்கு ஒரு அடையானத்தை ஏற்படுத்தித் தரும் வகையில் திரைப்படங்களுக்கு பெயரிடுவது கூட சமூகத்திற்கும் நல்லதல்ல. நாட்டுக்கும் நல்லதல்ல!

    எனவே, மூர்க்க போக்கிரி குண்டர்களுக்கு ஒரு முகவரியை ஏற்படுத்தும் விதத்தில் தனது திரைப்படத்திற்கு Thug life" எனும் பெயரைத் தவிர்க்க வேண்டும் என நடிகர் கமலை வலியுறுத்துகிறேன்.

    • மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள 'தக் லைப்' திரைப்படம் வரும் ஜூன் 5-ந்தேதி வெளியாக உள்ளது.
    • தக் லைஃப் பட புரொமோஷன் விழாவில் கன்னட நடிகர் சிவராஜ் குமார் கலந்துகொண்டார்.

    மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள 'தக் லைப்' திரைப்படம் வரும் ஜூன் 5-ந்தேதி வெளியாக உள்ளது.

    அந்தவகையில் சென்னையில் நடந்த தக் லைஃப் பட புரொமோஷன் விழாவில் கன்னட நடிகர் சிவராஜ் குமார் கலந்துகொண்டார்.

    இதில் பேசிய கமல், "உயிரின் உறவே தமிழே! எனது வாழ்க்கையும், குடும்பமும் தமிழ் மொழிதான். எனது குடும்பம் இங்கு இருக்கிறது. அதனால்தான் சிவராஜ்குமார் இங்கு வந்துள்ளார். அவரது மொழி (கன்னடம்) தமிழ் மொழியில் இருந்து பிறந்தது. அவரும் நமது குடும்பத்தில் ஒரு அங்கமாவார்" என்று தெரிவித்தார்.

    கன்னடம் தமிழில் இருந்து பிறந்தது என்று கூறியதால் கமல் மீது கன்னட அமைப்புகள் கடுங்கோபத்தில் உள்ளன. இந்த விஷயத்தில் அம்மாநில காங்கிரஸ் மற்றும் பாஜக கைகோர்த்து கமலை விமர்சித்து வருகின்றன.

    கர்நாடக முதல்வர் சித்தராமையா செய்தியாளர்களிடம் பேசுகையில், "கன்னட மொழிக்கு நீண்ட வரலாறு உண்டு. பாவம் கமல்ஹாசன், அவருக்கு அது தெரியாது" என்று தெரிவித்தார்.

    இந்நிலையில் கமல்ஹாசனுக்கு ஆதரவு தெரிவித்து நடிகர் சிவராஜ்குமார் பேசியுள்ளார் அதில் " கன்னடம் தமிழில் இருந்து பிறந்தது என்று கமல்ஹாசன் பேசிய நிலையில் ஆதரவு. நீங்கள் கன்னட மொழிக்கு என்ன செய்துள்ளீர்கள்?" கண்டனம் தெரிவித்தவர்களுக்கு சிவராஜ்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்

    "சர்ச்சை எழும்போது குரல் எழுப்பாமல் எப்போதும் கன்னட மொழியை ஊக்குவிக்க வேண்டும்" என கூறினார்.

    • 'நீ சிங்கம்தான்' பாடலை விரும்பிக் கேட்பதாக விராட் கோலி தெரிவித்தார்.
    • "நீ சிங்கம் தான்" என்று விராட் கோலிக்கு சிம்பு புகழாரம் சூட்டினார்.

    நடப்பு ஐபிஎல் தொடரில் ஆர்.சி.பி. அணி வீரர் விராட் கோலி சிறப்பாக விளையாடி வருகிறார். அவரின் சிறப்பான ஆட்டத்தால் ஆர்.சி.பி. அணி டாப் 4-க்குள் இடம்பெற்றுள்ளது.

    இந்நிலையில், "சமீபத்தில் சிம்பு நடிப்பில் வெளியான பத்து தல படத்தில் இடம்பெற்ற 'நீ சிங்கம்தான்' பாடலை விரும்பிக் கேட்கிறேன்" என்று விராட் கோலி தெரிவித்தார்.

    அண்மையில் கொடுத்த பேட்டி ஒன்றில் பேசிய விராட் கோலி,"தற்போது எனக்கு மிகவும் பிடித்த பாடல், இதை கேட்டால் நீங்கள் அதிர்ச்சியடைவீர்கள், நீ சிங்கம் தான் பாடலை விரும்பிக் கேட்கிறேன்" என்று தெரிவித்தார்.

    இந்த வீடியோவை ஆர்.சி.பி. அணி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

    இதனையடுத்து இந்த விடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த சிம்பு, "நீ சிங்கம் தான்" என்று விராட் கோலிக்கு புகழாரம் சூட்டினார்.

    இந்நிலையில் முதல்முறையாக கோலியை சந்தித்தது குறித்து சிம்பு பேசியுள்ளார். 'தக் லைப்' படத்தின் புரமோசனின்போது பேசிய சிம்பு, "கோலி தான் அடுத்த சச்சின் என நான் முன்பே கணித்தேன். அதுபோலவே அவர் பெரிய ஆளாக வந்தார். ஒருநாள் நேரில் சந்தித்தபோது அவரிடம் Hi சொன்னேன். நீங்கள் யார் என என்னிடம் அவர் கேட்டார். சிம்பு என்றேன். தெரியாது என்றார். அப்போது 'ஒருநாள் என்னை யார்னு தெரியவரும். அப்போ பாத்துக்கிறேனு' நினைத்துக் கொண்டேன். சமீபத்தில் கோலிக்கு 'நீ சிங்கம் தான்' பாடல் பிடிக்கும் என்றார். அதில் தான் நடித்திருப்பது அவருக்கு தெரியுமா? என்று சொல்ல முடியாது. ஆனால் அதுவே எனக்கு வெற்றி தான்'' என்று தெரிவித்தார்.

    • சிம்பு அவரது 50- வது திரைப்படத்தை அவரே தயாரித்து நடிக்கிறார்.
    • இந்தப் படத்தை இயக்குநர் தேசிங்கு பெரியசாமி இயக்குகிறார்

    தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் சிலம்பரசன். நடிப்பு மட்டுமின்றி திரைத்துறையில் பல்வேறு பிரிவுகளில் இயங்கி வருகிறார். தற்போது தக் லைஃப் என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து முடித்துள்ளார். திரைப்படம் வரும் ஜூன் 5 ஆம் தேதி வெளியாகிறது.

    சிம்பு அவரது 50- வது திரைப்படத்தை அவரே தயாரித்து நடிக்கிறார்.

    அந்த வகையில், அட்மேன் சினி ஆர்ட்ஸ் தயாரிக்கும் முதல் படத்தில் நடிகர் சிம்பு முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தை இயக்குநர் தேசிங்கு பெரியசாமி இயக்குகிறார். இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

    ஒளிப்பதிவு பணிகளை மனோஜ் பரமஹம்சா மேற்கொள்ள, படத்தொகுப்பு பணிகளை பிரவீன் மேற்கொள்கிறார். கலை இயக்க பணிகளை மூர்த்தி மேற்கொள்கிறார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சில மாதங்களுக்கு முன் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

    தக் லைஃப் ப்ரோமோஷன் நிகழ்ச்சியின் போது STR 50 திரைப்படத்தில் இரு வேடங்களி நடிக்கிறார். மேலும் அதில் ஒரு கதாப்பாத்திரம் பெண்ணியல் சாயல் அதிகம் இருக்கும் கதப்பாத்திரம். அந்த கதாப்பாத்திரத்திற்காக நான் கமல் சாரிடம் கலந்துரையாடியுள்ளேன் என கூறியுள்ளார்.

    • மணிரத்னம் இயக்கத்தில் கமல் மற்றும் சிலம்பரசன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள படம் 'தக் லைஃப்'.
    • இத்திரைப்படம் வரும் ஜூன் மாதம் 5-ந்தேதி வெளியாகவுள்ளது.

    பிரபல இயக்குனர்மணிரத்னம் இயக்கத்தில் கமல் மற்றும் சிலம்பரசன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள படம் 'தக் லைஃப்'. இப்படத்தில் திரிஷா, ஜோஜு ஜார்ஜ், அசோக் செல்வன், நாசர், அபிராமி மற்றும் பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

    இத்திரைப்படம் வரும் ஜூன் மாதம் 5-ந்தேதி வெளியாகவுள்ளது. படத்தின் டிரெய்லரை படக்குழு சமீபத்தில் வெளியிட்டது. தக் லைஃப் படத்தில் இடம் பெற்ற ஜிங்குச்சா மற்றும் ஷுகர் பேபி பாடல்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

    படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. கொச்சியில் நடந்த ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கமல்ஹாசன் " நான் ஏற்கனவே ஒருமுறை கூறியுள்ளேன். நடிப்பில் இருந்து என்றும் ஓய்வு பெற மாட்டேன் அப்படி நான் ஓய்வு பெற்றால் அன்று நான் இறந்திருப்பேன்" என கூறினார். இந்த வயதிலும் கமல்ஹாசன் நடிப்பின் மீது எவ்வளவு பற்றோடு இருக்கிறார் என இந்த நிகழ்வு எடுத்து காட்டுகிறது.

    • மணிரத்னம் இயக்கத்தில் கமல் மற்றும் சிலம்பரசன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள படம் 'தக் லைஃப்' (Thug Life).
    • இத்திரைப்படம் வரும் ஜூன் மாதம் 5-ந்தேதி வெளியாகவுள்ளது.

    பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் மற்றும் சிலம்பரசன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள படம் 'தக் லைஃப்' (Thug Life).

    மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் வரும் ஜூன் மாதம் 5-ந்தேதி வெளியாகவுள்ளது. படத்தின் டிரெய்லரை படக்குழு நேற்று வெளியிட்டது. டிரெய்லர் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    சிரெய்லர் வெளியாகி 24 மணி நேரத்திற்குள் யூடியூபில் 10 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது. படத்தில் அப்பா மகன் இடையே உள்ள போர் குணத்தை பற்றி டிரெய்லரில் காட்சிகள் அமைந்துள்ளது.

    இவர்களுடன் திரிஷா, ஜோஜு ஜார்ஜ், அசோக் செல்வன், நாசர், அபிராமி மற்றும் பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    • 'தக் லைப்' திரைப்படத்தின் முதல் பாடலான 'ஜிங்குச்சா' பாடல் வெளியிடப்பட்டது.
    • 'தக் லைப்' படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது.

    பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் மற்றும் சிலம்பரசன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள படம் 'தக் லைஃப்' (Thug Life). மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் வரும் ஜூன் மாதம் 5-ந்தேதி வெளியாகவுள்ளது.

    'தக் லைப்' திரைப்படத்தின் முதல் பாடலான 'ஜிங்குச்சா' பாடல் வெளியிடப்பட்டது. பாடல் வெளியாகி மக்களிடையே பெறும் வரவேற்பை பெற்றது.

    அதில், கமல் மற்றும் சிம்பு நடனமாடும் காட்சிகள் ஹைலைட். படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது.

    'தக் லைஃப்' படத்தின் இசை வெளியீட்டு விழா தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக பட தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது.

    இசை வெளியீட்டு விழா, சென்னையில் மே 16ம் தேதி நடைபெறுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

    ஆனால், எல்லையில் நிலவி வந்த போர் பதற்ற சூழல் காரணமாக இந்நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டு, தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், 'THUG LIFE' படத்தின் இசை வெளியீட்டு விழா மே 24ம் தேதி சென்னையில் நடைபெறும் என பட நிறுவனம் அறிவித்துள்ளது. வரும் 17ம் தேதி படத்தின் ட்ரெய்லர் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    • இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் மற்றும் சிலம்பரசன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள படம் 'தக் லைஃப்' (Thug Life).
    • இத்திரைப்படம் வரும் ஜூன் மாதம் 5-ந்தேதி வெளியாகவுள்ளது.

    பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் மற்றும் சிலம்பரசன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள படம் 'தக் லைஃப்' (Thug Life). மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் வரும் ஜூன் மாதம் 5-ந்தேதி வெளியாகவுள்ளது.

    இந்நிலையில், 'தக் லைப்' திரைப்படத்தின் முதல் பாடலான 'ஜிங்குச்சா' பாடல் வெளியிடப்பட்டது. பாடல் வெளியாகி மக்களிடையே பெறும் வரவேற்பை பெற்றது. அதில் கமல் மற்றும் சிம்பு நடனமாடும் காட்சிகள் ஹைலைட்.

    சமீபத்தில் நடந்த ப்ரோமோஷனுக்கான நேர்காணலில் படக்குழு கலந்துக் கொண்டனர் அதில் நடிகர் சிலம்பரசன் திருமணத்தை பற்றி அவருடைய கருத்தை கூறியுள்ளார் " திருமணம் இங்கு பிரச்சனை இல்லை. பிரச்சனை இங்கு யாரை நாம் திருமணம் செய்கிறோம் என்பது தான். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை நம்மிடம் குறைந்துக் கொண்டே வருகிறது. நீ இல்லன்னா இன்னொருத்தன், நீ இல்லன்னா இன்னொருத்தி... இது என்ன மனப்பான்மை. நீ இல்லன்னா இன்னொருத்தி வந்துகிட்டே தான் இருப்பா அதுக்காக அவங்க கூடலாம் போயிட முடியாதுல.. நமக்கான நேரம் வரும் போது நமக்கான ஒருவர் கண்டிப்பாக வருவார் அப்போது எல்லாம் நடக்கும்" என கூறியுள்ளார்.

    • மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது.
    • தக் லைப் திரைப்படம் வரும் ஜூன் மாதம் 5-ந்தேதி வெளியாகவுள்ளது.

    பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடித்துள்ள படம் 'தக் லைஃப்' (Thug Life). மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இப்படத்தில் சிம்பு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்

    படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகளும் கிட்டதட்ட முடியும் தருவாயில் உள்ளது. இத்திரைப்படம் வரும் ஜூன் மாதம் 5-ந்தேதி வெளியாகவுள்ளது.

    இந்நிலையில், 'தக் லைப்' திரைப்படத்தின் முதல் பாடலான 'ஜிங்குச்சா' பாடல் வெளியீட்டு நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இந்த பாடல் வெளியிடப்பட்டுள்ளது.

    • கமல்ஹாசன் தற்பொழுது தக் லைஃப் திரைப்படத்தில் நடித்துள்ளார்.
    • நடிகர் கமல்ஹாசன் லாஸ் வேகாசில் நடந்த NAB Show இல் கலந்துக் கொண்டார்.

    கமல்ஹாசன் தற்பொழுது தக் லைஃப் திரைப்படத்தில் நடித்துள்ளார். திரைப்படம் வரும் ஜூன் 5 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் லாஸ் வேகாசில் நடந்த NAB Show இல் கலந்துக் கொண்டார். அப்போது எடுத்துக் கொண்ட புகைப்படத்தை அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

    NAB Show என்பது வருடத்திற்கு ஒருமுறை லாஸ் வேகாசில் 1991 ஆம் ஆண்டில் இருந்து நடைப்பெற்று வருகிறது. இதில் கலைத்துறை மற்றும் கலைத்துறையில் வளர்ந்து இருக்கும் தொழில்நுட்பங்கள் என பல விஷயங்களை பற்றி அங்கு தெரிந்துக் கொள்ளலாம்.

    அடுத்து கலைத்துறையில் ஏ.ஐ தொழில் நுட்பங்கள் எவ்வாறு செயல்படவுள்ளது. அதைப்பற்றி இந்தாண்டு நிகழ்ச்சியில் இடம் பெற்றது குறிப்பிடத்தக்கது.

    • கமல்ஹாசன் - மணிரத்னம் இணைந்த இந்த படத்தின் ஆரம்பகட்ட படப்பிடிப்புகள் சென்னையில் 5 நாட்கள் நடந்தது. 
    • படத்தில் நடிகர் கமல்ஹாசன் தற்காப்பு கலைத்திறன்களை வெளிப்படுத்துகிறார்.

    பிரபல திரைப்பட இயக்குனரும் தயாரிப்பாளருமான மணிரத்னம் 36 ஆண்டு இடைவெளிக்குப்பின், நடிகர் கமல்ஹாசனுடன் இணைந்து 'தக் லைப்' என்ற புதிய ஆக்ஷன் படத்தை இயக்கி வருகிறார். திரிஷா, ஜெயம் ரவி, துல்கர் சல்மான், ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, கௌதம் கார்த்திக் ஆகியோர் நடிக்கின்றனர். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் படத்துக்கு இசையமைக்கிறார்.

    கமல்ஹாசன் - மணிரத்னம் இணைந்த இந்த படத்தின் ஆரம்பகட்ட படப்பிடிப்புகள் சென்னையில் 5 நாட்கள் நடந்தது.  இந்நிலையில் நடிகர் ஜெயம் ரவி, ஒரு பேட்டியின் போது இந்த படம் குறித்த தகவலை பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

    மணிரத்னம் சார் எனக்கு இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு தர அழைக்கும் போது அது எந்த படமாக இருந்தாலும் 'நோ' சொல்ல முடியாது. அதனால் இந்த படத்தில் நடிக்கிறேன். 'தக் லைப்' படத்தில் நான் கேமியோ ரோலில் நடிக்கிறேன். எனது காட்சி தொடர்பான படப்பிடிப்பு மார்ச் மாதம் தொடங்குகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.


    ஐரோப்பிய செர்பியா நாட்டில் விரைவில் நடைபெற உள்ள இதன் படப்பிடிப்பில் நடிகர் ஜெயம் ரவி கலந்து கொண்டு நடிக்கிறார். இந்த படத்தில் நடிகர் கமல்ஹாசன் தற்காப்பு கலைத்திறன்களை வெளிப்படுத்துகிறார். பழங்கால வரலாற்று ஆயுதங்களுடன் எதிரிகளுடன் மோதும் பயங்கர சண்டை காட்சிகள் அதிர்வை வெளிப்படுத்தும் வகையில் அமைய இருக்கின்றன.

    ×