என் மலர்
நீங்கள் தேடியது "audio launch"
விஜய் நடிப்பில், ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ஜன நாயகன். இப்படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு திரைக்கு வருகிறது. இதில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பிரியாமணி, பாபி தியோல், கவுதம் வாசுதேவ் மேனன், நரேன் ஆகியோர் நடித்துள்ளனர். அனிருத் படத்திற்கு இசையமைக்கிறார்.
அரசியலால் விஜய் நடிக்கும் கடைசிப் படம் இது என்பதால், ரசிகர்கள் மத்தியில் இதற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
சமீபத்தில் இப்படத்தின் முதல் பாடலான "தளபதி கச்சேரி" வெளியாகி அவரது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுக்கும் விதமாக புது அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது படக்குழு.
படத்தயாரிப்பு நிறுவனமான KVN புரொடக்ஷன்ஸ் இது சார்ந்த ஒரு வீடியோ பதிவை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளது.
அதில் மலேசியாவின் ட்வின் டவர்ஸ் இடம்பெற்றுள்ளது. இதனால் படத்தின் இசை வெளியீட்டு விழா அங்கு நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில், ஜனநாயகனின் இசை வெளியீட்டு விழா குறித்து முக்கிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.
அதன்படி, விஜயின் ஜனநாயகன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா டிசம்பர் 27ம் தேதி மலேசியாவில் நடைபெறவுள்ள அறிவிக்கப்பட்டுள்ளது.
ராதா ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் ஜி.ஆர். மதன்குமார் தயாரிப்பில் கருணாநிதி இயக்கத்தில் கிஷோர்- TTF வாசன், அபிராமி, குஷிதா ஆகியோரின் நடிப்பில் தயாராகி இருக்கும் படம் "ஐபிஎல்".
பிச்சு மணி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு அஸ்வின் விநாயகமூர்த்தி இசையமைத்திருக்கிறார். திரில்லராக தயாராகி இருக்கும் இப்படம் வரும் 28ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
இந்நிலையில், இத்திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
இவ்விழாவில் முத்திரை பதித்த இயக்குநர் கே. பாக்யராஜ் படத்தின் இசை மற்றும் முன்னோட்டத்தை வெளியிட, படக்குழுவினருடன் இயக்குநர்கள் ஆர். கே. செல்வமணி, ஆர். வி. உதயகுமார், பேரரசு ஆகியோர் இணைந்து பெற்றுக் கொண்டனர்.
இயக்குநர் ஆர். கே. செல்வமணி பேசுகையில்," நாயகன் டிடிஎஃப் வாசன் என்னிடம் என்னை மெருகேற்றிக் கொள்ள இன்னும் என்ன கற்றுக்கொள்ள வேண்டும் என கேட்டார். அவரிடம் எதையும் கற்றுக் கொள்ளாதே. நீ இப்போது எப்படி இருக்கிறாயோ, அப்படியே இரு. அனைவருடனும் நட்பாக இரு. ஹீரோ ஆனதுக்கு பிறகு மாறி விடாதே. இயல்பாக இருந்தால் போதும். மற்றவை அனைத்தும் தானாக நடக்கும். வாய்ப்புகள் வரும் போதும், வாய்ப்புகள் வழங்கும் போதும் தயாரிப்பாளர்களிடம் எவ்வளவு தூரம் நீங்கள் நட்பாக இருக்கிறீர்களோ, அதுவே உங்களை காப்பாற்றும்" என்றார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் கவின் அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். இவர் நடித்த லிப்ட், டாடா, ஸ்டார் உள்ளிட்ட படங்கள் நல்ல பெயர் வாங்கிக் கொடுத்தது. சமீபத்தில் வெளியான கிஸ் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.
கிஸ் படத்தை தொடர்ந்து, கவின் அறிமுக இயக்குனர் விகர்னன் அசோக் இயக்கும் மாஸ்க் என்கிற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் கவினுடன் ஆண்ட்ரியா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
தெலுங்கு நடிகையான ருஹானி சர்மா கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களை தவிர, சார்லி, பாலா சரவணன், விஜே அர்ச்சனா, சந்தோஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
மாஸ்க் திரைப்படம் வரும் நவம்பர் 21-ம் தேதி திரைக்குவரவுள்ள நிலையில் இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது.
டிரெய்லர் வெளியீட்டுக்கு பிறகு நடிகர் கவின் பேசியதாவது:-
எங்களை வாழ்த்த வந்த அனைவருக்கும் நன்றி. விஜய் சேதுபதி அண்ணாவுக்கு நன்றி. அவரின் பீட்சா படத்தில் தான் நான் அறிமுகமானேன். நாம் விரும்புவதை விருப்பத்துடன் செய்தால் அது நடக்கும் என நிரூபித்தவர்.
வெற்றிமாறன் சார் அவரெல்லாம் கூப்பிடுவார் என நான் நினைத்ததில்லை. அவர் ஆபிஸில் இருந்து கால் வந்தது. அவரே தான் கதை சொன்னார், அவரே கதை சொல்கிறார் என்றால் அவர் கதை மேல் வைத்திருக்கும் நம்பிக்கை எனக்கு முக்கியமாகப் பட்டது.
அவர் சொக்கலிங்கம் சார் பற்றி மிகப்பெருமையாக சொன்னார். இந்தப்படம் ஜெயித்தே ஆக வேண்டும் என்றார், அது ஆடுகளம் இண்டர்வெல் மாதிரி இருந்தது. கண்டிப்பாகப் பந்தயம் அடித்துவிடுவோம் சார். ஆண்ட்ரியா மேடம் தான் முதலில் கதை கேட்டார். அவர் நடிப்பு மிகச்சிறப்பாகப் பேசப்படும்.
ஜீவி சார் இத்தனை வேலைகளை எப்படிச் செய்கிறார் என ஆச்சரியமாக இருக்கும். சார் உடலை பார்த்துக்கொள்ளுங்கள். பவன் சார், ரெடின் சார் நடிப்பு கண்டிப்பாக பேசப்படும். படத்தில் வேலை பார்த்த அனைவருக்கும் நன்றி.
நவம்பர் 21 படம் திரைக்கு வருகிறது. அனைவரும் பார்த்து ரசிப்பீர்கள் என நம்புகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
அருவார் பிரைவெட் லிமிடட் சார்பில் சி.வெங்கடேசன் தயாரிப்பில், இயக்குநர் வி.கஜேந்திரன் இயக்கத்தில் விவசாயியின் வாழ்வியலை, விவசாய நிலத்தின் அவசியத்தை அழுத்தமாகப் பேசும் படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் மருதம்.
இப்படம், வரும் அக்டோபர் மாதம் 10 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் இசை மற்றும் டிரெயிலர் வெளியீட்டு விழா நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், திரை பிரபலங்கள் மற்றும் படக்குழுவினர் பலர் கலந்துகொண்டனர். இசை மற்றும் டிரெயிலர் வெளியிடப்பட்டது.
அப்போத, நடிகர் விதார்த் கூறியதாவது:-
இந்தப்படத்தில் நடிக்க நான் முதல் காரணம் அன்பழகன் அண்ணன். அவர் தான் கஜேந்திரன் சாரை அறிமுகப்படுத்தினார். கதை சொன்ன போது இது உங்களுக்கு நடந்ததா எனக்கேட்டேன் என் நண்பருக்கு நடந்தது என்றார்.
ஷூட்டிங்கில் அவரைச் சந்தித்தேன். இது இந்தியா முழுதும் விவசாயிகளுக்கு நடக்கிறது. இந்த விசயத்தை நீங்கள் கண்டிப்பாக நேரில் பார்த்திருப்பீர்கள்.
இந்தப்படத்தில் நடித்தது மிகுந்த சந்தோசம். மாறன் இப்படத்தில் முக்கியமான ரோல் செய்துள்ளார்.
ஜே பேபி படம் பார்த்து அவரிடம் நாமும் இணைந்து நடிக்க வேண்டும் எனச் சொன்னேன், இதிலும் காமெடி மட்டுமில்லாமல் கலங்க வைத்துவிடுவார். அருள் தாஸ் அண்ணா நல்ல ரோல் செய்துள்ளார். ரக்ஷ்னா ஒரு குழந்தைக்கு அம்மா.
யாரை நடிக்க வைக்கலாம் என்றார், திடீரென வந்து ரக்ஷனா நடிக்க வைக்கலாம் என்றார். அவர் ஒத்துக்கொண்டதே எனக்கு ஆச்சரியம் கதாப்பாத்திரம் தான் முக்கியம் எனும் அவரது கொள்கைக்கு என் நன்றிகள். குழந்தை நட்சத்திரம் இயக்குநரின் மகன் எங்கள் எல்லோரையும் விட நன்றாக செய்துள்ளான்.
கஜேந்திரன் மிக அழகாகப் படத்தை எடுத்துள்ளார். பட்ஜெட் போட்டு அவரே தயாரிப்பாளர் போல படத்தை எடுத்துள்ளார். என் படங்களில் தரமான படங்கள் லிஸ்டில் இப்படம் இருக்கும். வியாபார ரீதியாக இப்படம் ஜெயிக்க வேண்டும். படத்திற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி.
இவ்வாறு கூறினார்.
வரம் சினிமாஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் வெங்கடேசன் பழனிச்சாமி தயாரிப்பில் நடிகர் ரஞ்சித் நடிப்பில் இயக்குநர் வெங்கட் ஜனா இயக்கத்தில் உருவாகியுள்ள 'படம் இறுதி முயற்சி'.
இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் இயக்குநர்கள் ஆர். வி. உதயகுமார் - பேரரசு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
ரஞ்சித்துடன், மேகாலீ, விட்டல் ராவ், கதிரவன், ராஜா, சத்குரு, குணா, சதீஷ், மோனிகா, நீலேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
சூரிய காந்தி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சுனில் லாசர் இசையமைத்திருக்கிறார். வடிவேல் - விமல் ராஜ் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்ள, கலை இயக்கத்தை தாமு கவனித்திருக்கிறார்.
தற்கொலை குறித்த விழிப்புணர்வை மையப்படுத்தி எமோஷனல் திரில்லராக படம் தயாராகி உள்ளது.
இப்படம் வரும் அக்டோபர் 10ம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
இந்நிலையில், திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் படக்குழுவினருடன் இயக்குநர்கள் ஆர்.வி உதயகுமார் பேரரசு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு படத்தின் இசையை வெளியிட்டனர்.
இவ்விழாவில் நடிகர் ரஞ்சித் பேசுகையில்,'' சினிமாவை.. நிலாவை ரசிப்பது போல் இதயத்தில் வைத்து ரசித்துக் கொண்டிருப்பேன். அதனால் எனக்கு சினிமா மீது மிகுந்த மரியாதை இருக்கிறது.
இந்தத் தருணத்தில் தான் இயக்குநர் வெங்கட் ஜனா என்னை சந்தித்து இப்படத்தின் கதையை சொன்னார். முதலில் இதற்கு தயக்கம் தெரிவித்தேன். அதன் பிறகு இந்தக் கதையில் நான் ஏன் நடிக்க வேண்டும்? என கேட்டேன்.
இந்த கதையை திரைக்கதையாக எழுதி என்னிடம் வாசிக்குமாறு சொன்னார். அந்த கதையை படித்ததும் பிடித்துப் போனது. ஏனெனில் அந்த கதையின் வாழ்வியல் என்னை உலுக்கியது.
இந்தப் படத்தில் கமர்சியல் அம்சங்கள் எதுவும் இல்லை என்றாலும் கதைக்கு தேவையான உண்மைத் தன்மையை திரைக்கதையில் நம்பக தன்மையுடன் இயக்குநர் வழங்கி இருக்கிறார். இந்தப் படத்தை நான் பார்த்து விட்டேன். நன்றாக இருக்கிறது. எங்கும் போரடிக்கவில்லை. ஆனால் இந்த படம் வணிக ரீதியாக வெற்றியைப் பெறுமா..? என்றால்.. என்னால் உறுதி கூற இயலாது. படத்தின் கன்டென்ட் நன்றாக இருந்தால்... ரசிகர்களுக்கு பிடித்திருந்தால்... இந்தப் படம் வெற்றி பெறும் என நம்புகிறேன்" என்றார்.
- இட்லி கடை படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
- நாம் நம்முடைய வேர்களையும் வரலாறையும் எப்போதும் மறக்கக் கூடாது என்றார்.
சென்னை:
தனுஷ் இயக்கத்தில் 4-வது படமாக 'இட்லி கடை' உருவாகியுள்ளது. இது தனுஷ் நடிக்கும் 52-வது திரைப்படமாகும். தனுஷ் இயக்கி நடிக்கும் இத்திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
இந்த படத்தினை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. அருண் விஜய் இப்படத்தில் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் அக்டோபர் 1-ம் தேதி ரிலீசாகிறது.
இந்நிலையில், இட்லி கடை படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. அப்போது அவர் பேசியதாவது:
பொதுவாக படத்திற்கு நாயகனின் பெயரை தான் டைட்டிலாக வைப்பார்கள். என்னுடைய சின்ன வயது அனுபவங்களை வைத்தும் நான் பார்த்த நிஜ மனிதர்களை வைத்தும் ஒரு படம் எடுக்க வேண்டும் என ஆசைப்பட்டேன். அப்படி உருவானது தான் இட்லி கடை.
என் சின்ன வயதில் நான் பூக்களைப் பறித்து அதில் கிடைக்கும் காசில் வாங்கி சாப்பிட்ட இட்லியின் ருசி இன்று நான் எவ்வளவு பெரிய ரெஸ்டாரண்டில் சாப்பிட்டாலும் கிடைக்கவில்லை.
நாம் நம்முடைய வேர்களையும் வரலாறையும் எப்போதும் மறக்கக் கூடாது. இட்லி கடை படம் அதைப் பற்றிதான் பேசுகிறது. என்னை படங்களில் மட்டும் பார்த்து ரசியுங்கள். மற்ற நேரம் உங்கள் குடும்பத்தை கவனித்துக் கொள்ளுங்கள் என தெரிவித்தார்.
தனுஷ் இயக்கத்தில் 4-வது படமாக 'இட்லி கடை' உருவாகியுள்ளது. இது தனுஷ் நடிக்கும் 52-வது திரைப்படமாகும். தனுஷ் இயக்கி நடிக்கும் இத்திரைப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
இந்த படத்தினை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. அருண் விஜய் இப்படத்தில் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் அக்டோபர் 1-ம் தேதி ரிலீஸ் ஆகிறது.
கடந்த இரண்டு நாட்களாக இட்லி கடை படத்தின் கதாப்பாத்திர அறிமுக போஸ்டர்கள் வெளியிடப்பட்டு வருகிறது.
அந்த வகையில், இப்படத்தில் அருண் விஜய் அஷ்வின் என்கிற கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும், நடிகர் சத்யராஜ் விஷ்ணு வர்தன் என்கிற கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும், நடிகர் ராஜ்கிரன் சிவனேசனாக நடிப்பதாகவும் கதாப்பாத்திர அறிமுக போஸ்டர் வெளியாகி வருகிறது.
இந்நிலையில், ரசிகர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த இட்லி கடை படத்தில் இசை வெளியீட்டு விழா குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதன்படி, இட்லி கடை படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 14ம் தேதி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளதாக டான் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
- எச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் 'ஜன நாயகன்'.
- இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
எச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் 'ஜன நாயகன்'.இப்படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜூ, பிரியாமணி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
இத்திரைப்படம் குறித்து மக்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பு இருக்கிறது ஏனென்றால் இப்படமே நடிகர் விஜய் நடிக்கும் கடைசி திரைப்படமாக இருக்கும் எனவும் அதற்கு பின் முழுநேர அரசியலில் விஜய் ஈடுப்படபோவதாக கூறப்படுகிறது.
மேலும் இப்படம் அடுத்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9-ந்தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது.
இயக்குனர்கள் அட்லி, லோகேஷ் கனகராஜ் மற்றும் நெல்சன் ஆகியோர் ஜனநாயக்ன் படத்தில் கேமியோ ரோலில் ஒரு காட்சியில் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. அதாவது 3 இயக்குனர்களும் பத்திரிகையாளர்கள் கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக ஜனநாயகன் திரைபடத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆன்ந்த் நடித்துள்ளதாக தகவல் வெளியானது.
இந்நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி படத்தின் இசை வெளியீட்டு விழாவை மலேசியாவில் படக்குழு நடத்த திட்டமிட்டுள்ளது. அதில் தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களான ரஜினி, கமல், சூர்யா , அஜித் ஆகியோரை அழைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
- குற்றம் புதிது படம் ஆகஸ்ட் 29ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
- படம் முடிந்து வரும் பொழுது 'குட்'டாக ஃபீல் செய்வீர்கள்.
ஜி.கே.ஆர். சினி ஆர்ட்ஸ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் 'குற்றம் புதிது'. நோவா ஆம்ஸ்ட்ராங் எழுதி இயக்கி இருக்கும் இந்தப் படத்தில் தருண் விஜய் கதாநாயகனாக அறிமுகமாகிறார். கதாநாயகியாக சேஷ்விதா கனிமொழி நடிக்கிறார்.
இவர்களுடன் மது சூதனராவ், நிழல்கள் ரவி, ராமச்சந்திரன் துரை, பாய்ஸ் ராஜன், பிரியதர்ஷினி ராஜகுமார் உள்ளிட்டப் பலர் நடித்துள்ளனர்.
க்ரைம் த்ரில்லர் ஜானரில் உருவாகி இருக்கும் இந்தப் படம் ஆகஸ்ட் 29ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
இந்நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.
அப்போது நடிகர் தருண் விஜய் பேசுகையில்," சினிமா துறையில் இதுதான் என்னுடைய முதல் படம். இயக்குநர் நோவா ஆம்ஸ்ட்ராங் என்னுடைய முதல் படத்திலேயே வித்தியாசமான கதாபாத்திரம் கொடுத்துள்ளார். பொறுமையாக தொடங்கும் படம் போகப்போக ஆடியன்ஸை சீட்டின் நுனியில் அமர வைக்கும். கதிரேசன் என்ற ஃபுட் டெலிவரி பையனாக நடித்திருக்கிறேன். உடன் நடித்தவர்கள் எல்லோரும் அனுபவசாலிகள் என்பதால் கொஞ்சம் பதட்டம் இருந்தது. ஆனால், எல்லோரும் ஆதரவு கொடுத்தார்கள். கண்டிப்பாக மீடியாவும் பார்வையாளர்களும் எங்கள் படத்திற்கு ஆதரவு கொடுக்க வேண்டும்" என்றார்.
இயக்குநர் நோவா ஆம்ஸ்ட்ராங் பேசுகையில்," கதை சொல்ல போன முதல் நாளில் இருந்து தற்போது இந்த விழா சிறப்பாக நடப்பது வரை அதற்கு முதல் காரணம் கார்த்திகேயன் சார். தருணுக்கு மிகச் சிறப்பான எதிர்காலம் உள்ளது. கொரிலாவாக நடிக்க கடுமையான பயிற்சி எடுத்தார். நடிகர்கள் சேஷ்விதா, பிரியதர்ஷினி, நிழல்கள் ரவி, தினேஷ் என எல்லாருமே சிறப்பாக நடித்துக் கொடுத்திருக்கிறார்கள். அதுபோல தொழில்நுட்பக் குழுவும் சிறப்பாக பணிபுரிந்து இருக்கிறார்கள். இது திரில்லர் படமாக இருந்தாலும் நிறைய எமோஷன் உள்ளது. படம் முடிந்து வரும் பொழுது 'குட்'டாக ஃபீல் செய்வீர்கள்" என்றார்.
- "தலைவன் தலைவி" படம் வரும் ஜூலை 25ம் தேதி வெளியாகும் என அறிவிப்பு.
- "தலைவன் தலைவி" திரைப்படம் குடும்பங்கள் மற்றும் இளைஞர்கள் கொண்டாடும் விதமாக உருவாகியுள்ளது.
'பசங்க', 'வம்சம்', 'மெரினா', 'கடைக்குட்டி சிங்கம்', 'நம்ம வீட்டு பிள்ளை', 'எதற்கும் துணிந்தவன்' உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கிய பாண்டிராஜ் அடுத்ததாக விஜய் சேதுபதியின் 52-வது திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
இதில், கதாநாயகியாக தேசிய விருது பெற்ற நடிகை நித்யா மேனன், நடிகர் யோகி பாபு உட்பட பலர் நடிக்கின்றனர். இப்படத்தை சத்யஜோதி ஃபிலிம் தயாரிக்கிறது.
படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்த நிலையில், படத்தின் டைட்டில் டீசரை படக்குழு வௌியிட்டது. இந்த படத்திற்கு "தலைவன் தலைவி" என பெயரிடப்பட்டது.
இத்திரைப்படம் குடும்பங்கள் மற்றும் இளைஞர்கள் கொண்டாடும் விதமாக உருவாகியுள்ளது.
மேலும், விஜய் சேதுபதியும், இயக்குனர் பாண்டிராஜும் இணைந்துள்ள முதல் படம் இதுவே என்பதால், ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
'தலைவனின் தலைவி' படத்தின் 'பொட்டல முட்டாயே' பாடல் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
மேலும், அதன்படி, தலைவன் தலைவி படம் வரும் ஜூலை 25ம் தேதி வெளியாகும் என டைட்டில் டீசர் மூலம் படக்குழு அறிவித்துள்ளது.
இந்நிலையில் தலைவன் தலைவி படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறும் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.
அதன்படி, தலைவன் தலைவி படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் ஜூலை 12ம் தேதி மாலை 6 மணிக்கு சென்னை வர்த்தக மைத்தில் நடைபெறும் என ப்ரோமோ வீடியோ மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
- கூலி திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14 ஆம் தேதி வெளியாகிறது.
- கூலி படத்தின் ஓவர்சீஸ் வெளியீட்டை ஹம்சினி எண்டெர்டெயின்மண்ட் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் கூலி.
இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் அமீர் கான், சத்யராஜ், நாகர்ஜுனா, சௌபின் ஷாஹிர், சுருதிஹாசன், பகத் பாசில், ரெபா மோனிகா ஜான் மற்றும் உபேந்திரா ஆகியோர் நடித்துள்ளனர்.
இப்படத்தின் மீது மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது. படத்தின் டப்பிங் மற்றும் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. கூலி திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14 ஆம் தேதி வெளியாகிறது.
படத்தின் பாடலான சிக்கிடு பாடலின் வீடியோ அண்மையில் வெளியாகி மக்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. படத்தின் ஓவர்சீஸ் வெளியீட்டை ஹம்சினி எண்டெர்டெயின்மண்ட் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
இந்நிலையில், கூலி திரைப்படத்தின் ஆடியோ வௌியீடு வரும் ஜூலை 27ம் தேதி அன்று நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.
- பறந்து போ படம் வருகிற ஜூலை மாதம் 4-ம் தேதி வெளியாகிறது.
- பறந்து போ படத்திற்கு யுவன் பின்னணி இசையமைத்துள்ளார்.
கற்றது தமிழ், தங்க மீன்கள், பேரன்பு, தரமணி உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கியவர் இயக்குனர் ராம். இவர் தற்போது 'பறந்து போ' என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இதில், மிர்ச்சி சிவா கதாநாயகனாக நடித்துள்ளார்.
மேலும், அஞ்சலி, கிரேஸ் ஆண்டனி, அஜு வர்கீஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மலையாள நடிகரான அஜு வர்கீஸ் இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகிறார்.
இப்படத்திற்கு, யுவன் பின்னணி இசையமைத்துள்ளார். இப்படம் வருகிற ஜூலை மாதம் 4-ம் தேதி வெளியாகிறது.
இந்த படத்தின் 2 பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், அடுத்த பாடலான `கஷ்டம் வந்தா' பாடல் சமீபத்தில் வெளியானது. இந்த பாடலை யுவன் ஷங்கர் ராஜா பாடியுள்ளார்.
இந்நிலையில் பறந்து போ படத்தில் ஆடியோ மற்றும் டிரெயிலர் நாளை வெளியிடப்படுவதாக படக்குழு அறிவித்துள்ளது.
அதன்படி, நாளை மாலை 5 மணிக்கு பறந்து போ படத்தின் ஆடியோ- டிரெயிலர் வெளியிடப்படும் என்று படக்குழு போஸ்டர் வெளியிட்டுள்ளது.






