என் மலர்
நீங்கள் தேடியது "RK Selvamani"
ராதா ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் ஜி.ஆர். மதன்குமார் தயாரிப்பில் கருணாநிதி இயக்கத்தில் கிஷோர்- TTF வாசன், அபிராமி, குஷிதா ஆகியோரின் நடிப்பில் தயாராகி இருக்கும் படம் "ஐபிஎல்".
பிச்சு மணி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு அஸ்வின் விநாயகமூர்த்தி இசையமைத்திருக்கிறார். திரில்லராக தயாராகி இருக்கும் இப்படம் வரும் 28ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
இந்நிலையில், இத்திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
இவ்விழாவில் முத்திரை பதித்த இயக்குநர் கே. பாக்யராஜ் படத்தின் இசை மற்றும் முன்னோட்டத்தை வெளியிட, படக்குழுவினருடன் இயக்குநர்கள் ஆர். கே. செல்வமணி, ஆர். வி. உதயகுமார், பேரரசு ஆகியோர் இணைந்து பெற்றுக் கொண்டனர்.
இயக்குநர் ஆர். கே. செல்வமணி பேசுகையில்," நாயகன் டிடிஎஃப் வாசன் என்னிடம் என்னை மெருகேற்றிக் கொள்ள இன்னும் என்ன கற்றுக்கொள்ள வேண்டும் என கேட்டார். அவரிடம் எதையும் கற்றுக் கொள்ளாதே. நீ இப்போது எப்படி இருக்கிறாயோ, அப்படியே இரு. அனைவருடனும் நட்பாக இரு. ஹீரோ ஆனதுக்கு பிறகு மாறி விடாதே. இயல்பாக இருந்தால் போதும். மற்றவை அனைத்தும் தானாக நடக்கும். வாய்ப்புகள் வரும் போதும், வாய்ப்புகள் வழங்கும் போதும் தயாரிப்பாளர்களிடம் எவ்வளவு தூரம் நீங்கள் நட்பாக இருக்கிறீர்களோ, அதுவே உங்களை காப்பாற்றும்" என்றார்.
- தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் 23 சங்கங்களை உள்ளடக்கிய சங்கம்.
- 55 ஆண்டுகள் கடந்து இந்த சங்கம் செயல்பட்டு வருகிறது.
தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேனத்தின் தலைவர் ஆர்.கே. செல்வமணி அடையாள வேலை நிறுத்தம் தொடர்பாக அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் சென்னை வடபழநியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியிருப்பதாவது:-
தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் 23 சங்கங்களை உள்ளடக்கிய சங்கம்.
55 ஆண்டுகள் கடந்து இந்த சங்கம் செயல்பட்டு வருகிறது.
வரும் 14ம் தேதி ஒருநாள் அடையாள வேலைநிறுத்தமும், கண்டன ஆர்ப்பாட்டமும் நடத்த ஃபெப்சி முடிவு செய்துள்ளது.
தொழிலாளர்களின் வாழ்க்கையை முதலாளிகள் சிலர் அழிக்க முயற்சிக்கும் கொடுமைக்கு எதிராக வேலைநிறுத்தம் நடத்தப்படுகிறது.
ஆர்ப்பாட்டம் நடைபெறும் அன்று படப்பிடிப்புகள், Post Production, pre production உள்ளிட்ட எந்த பணிகளும் நடைபெறாது.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- திரைப்பட துறையில் ஒற்றுமையில்லை.
- பிரச்சனையை தவிர்க்கும் வகையில் அரசு தலையிட்டு தீர்வு காண வேண்டும்.
வரும் 8ம் தேதி முதல் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்களின் படங்களுக்கு ஃபெப்சி ஒத்துழைப்பு தராது என ஆர்.கே.செல்வமணி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், " திரைப்பட துறையில் ஒற்றுமையில்லை. பிரச்சனையை தவிர்க்கும் வகையில் அரசு தலையிட்டு தீர்வு காண வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, ஃபெப்சி அமைப்புடன் இணைந்து செயல்பட வேண்டும் என தயாரிப்பாளர் சங்கத்துக்கு நடப்பு தயாரிப்பாளர் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.
மலையாள சினிமா துறை போல VPF கட்டணங்களை கணிசமாக குறைக்க உடனடி முயற்சிகள் எடுக்க வேண்டும் என்று நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
மேலும், டிஜிட்டல்/ஓடிடி வியாபாரங்களில் நமது சங்கங்கள் உதவியாய் இருக்க தேவைப்படும் முயற்சிகள் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- இளையராஜாவை நேரில் அழைத்து பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.
- அரசியல் பிரமுகர்கள், பிரபலங்கள் எனப் பலரும் இளையராஜாவை பெருமையோடு வாழ்த்தி வருகின்றனர்.
இசைஞானி இளையராஜா தனது நீண்ட இசைப்பயணத்தில் சுமார் ஆயிரம் திரைப்படங்களுக்கு மேல் இசையமைத்து சாதனை படைத்துள்ளார்.
மேற்கத்திய இசை மீது மிகுந்த ஈடுபாடு கொண்டவரான இளையராஜா மொசார்ட் உள்ளிட்ட மேற்கத்திய இசை ஜாம்பவான்களின் சிம்பொனி இசைக் கூறுகளை தனது பாடல்களில் பயன்படுத்தி பாமர மக்களும் அவற்றை ரசிக்கும் வகையில் மெட்டுகளை அமைத்தார். அவரது இசையால் பல திரைப்படங்கள் வெற்றிப் படங்களாக மாறியுள்ளன. அவரது பாடல்கள் அனைத்தும் இன்றைய தலைமுறையையும் கவரும் வகையில் அமைந்துள்ளன.
சமீபத்தில் லண்டனில் 'வேலியண்ட்' (Valiant) சிம்பொனியை அரங்கேற்றம் செய்து இளையராஜா மற்றொரு சாதனையைப் படைத்தார்.
இளையராஜாவின் அரை நூற்றாண்டு கால திரை இசை பயணத்தை தமிழ்நாடு அரசின் சார்பில் கொண்டாட முடிவு செய்திருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார்.
இதையடுத்து இளையராஜாவை நேரில் அழைத்து பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து அரசியல் பிரமுகர்கள், பிரபலங்கள் எனப் பலரும் இளையராஜாவை பெருமையோடு வாழ்த்தி வருகின்றனர்.
நேற்று இளையராஜாவை நேரில் சந்தித்து நடிகர் சிவகுமார், அவருடன் அவரது மகனும் நடிகருமான சூர்யா மற்றும் மகள் பிருந்தா ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.
இந்நிலையில் இசைஞானி இளையராஜாவை நேரில் சந்தித்து இயக்குநர்கள் ஆர்.வி.உதயகுமார், பி.வாசு, கே.எஸ்.ரவிக்குமார், பேரரசு மற்றும் ஆர்.கே.செல்வமணி ஆகியோர் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இயக்குனர் ஆர்.கே.செல்வமணி, பைனான்சியர் முகுந்த்சந்த் போத்ரா குறித்து சில கருத்துகளை தெரிவித்திருந்தார்.
- செல்வமணிக்கு எதிராக ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் போத்ரா அவதூறு வழக்கை தாக்கல் செய்திருந்தார்.
கடந்த 2016-ஆம் ஆண்டு இயக்குனர் ஆர்.கே. செல்வமணி மற்றும் காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ. அருண் அன்பரசு ஆகியோர் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்திருந்தனர். அதில் பிரபல பைனான்சியர் முகுந்த்சந்த் போத்ரா குறித்து சில கருத்துகளை தெரிவித்திருந்தனர். இதனால் இவர்கள் இருவருக்கும் எதிராக சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் போத்ரா அவதூறு வழக்கை தாக்கல் செய்திருந்தார்.
அவர் மறைவிற்கு பிறகு போத்ராவின் மகன் இந்த வழக்கை நடத்தி வருகிறார். இந்த வழக்கின் விசாரணைக்காக இயக்குனர் ஆர்.கே. செல்வமணி ஆஜராகவில்லை. அதுமட்டுமல்லாமல் அவரின் சார்பில் வழக்கறிஞரும் ஆஜராகாததால் ஆர்.கே.செல்வமணிக்கு எதிராக ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்த ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் வழக்கின் விசாரணையை செப்டம்பர் 22-ஆம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டது.
- ஆர்.கே.செல்வமணிக்கு எதிராக சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் போத்ரா அவதூறு வழக்கை தாக்கல் செய்திருந்தார்.
- அவர் மறைவிற்கு பிறகு போத்ராவின் மகன் இந்த வழக்கை நடத்தி வருகிறார்.
கடந்த 2016-ஆம் ஆண்டு இயக்குனர் ஆர்.கே. செல்வமணி மற்றும் காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ. அருண் அன்பரசு ஆகியோர் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்திருந்தனர். அதில் பிரபல பைனான்சியர் முகுந்த்சந்த் போத்ரா குறித்து சில கருத்துகளை தெரிவித்திருந்தனர். இதனால் இவர்கள் இருவருக்கும் எதிராக சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் போத்ரா அவதூறு வழக்கை தாக்கல் செய்திருந்தார்.
அவர் மறைவிற்கு பிறகு போத்ராவின் மகன் இந்த வழக்கை நடத்தி வருகிறார். இந்த வழக்கின் விசாரணைக்காக இயக்குனர் ஆர்.கே. செல்வமணி ஆஜராகவில்லை. அதுமட்டுமல்லாமல் அவரின் சார்பில் வழக்கறிஞரும் ஆஜராகாததால் ஆர்.கே.செல்வமணிக்கு எதிராக ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்த ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் வழக்கின் விசாரணையை செப்டம்பர் 22-ஆம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டது.
இந்நிலையில், இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது இயக்குனர் செல்வமணி நேரில் சரணடைந்தார். மேலும் அவர் தனக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடிவாரண்டை திரும்ப பெற வேண்டும் என்று கோரி மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை ஏற்றுக்கொண்ட ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் அவருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடிவாரண்டை திரும்ப பெற உத்தரவிட்டுள்ளது.
- ஆந்திராவில் கிராமம் மற்றும் நகர்ப்புற மக்களுக்காக அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
- ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியில் ஆர்.கே. செல்வமணி பணியாற்ற தொடங்கியுள்ளார்.
திருப்பதி:
ஆந்திராவில் நடிகை ரோஜா முழு நேர அரசியலில் ஈடுபட்டுள்ளார். அவர் தற்போது ஆளும் ஒய். எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியில் சுற்றுலாத்துறை அமைச்சராக உள்ளார்.
செம்பருத்தி படத்தில் அவரை அறிமுகப்படுத்திய இயக்குனர் ஆர்.கே. செல்வமணி ரோஜாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
மனைவியின் அரசியல் வாழ்க்கைக்கு அவர் உறுதுணையாக இருந்து வருகிறார். தமிழ்நாட்டைச் சேர்ந்த இவர் ஆந்திர அரசியலில் நேரடியாக தலையிடுவது இல்லை.
இந்த நிலையில் இயக்குனர் ஆர்.கே. செல்வமணி ஆந்திர அரசியலில் நேரடியாக களமிறங்கியுள்ளார்.
ஆந்திர மாநிலம் நகரியில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி பொதுக்கூட்டம் நடந்தது. இதில் ஆர்.கே. செல்வமணி கலந்து கொண்டார்.
ஆந்திராவில் கிராமம் மற்றும் நகர்ப்புற மக்களுக்காக அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மக்கள் மகிழ்ச்சியோடு வாழ்கிறார்கள். மக்களின் மகிழ்ச்சி இப்படியே தொடர வேண்டுமானால் ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டி மீண்டும் முதல் மந்திரியாக வரவேண்டும் என்றார்.
இதன் மூலம் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியில் ஆர்.கே. செல்வமணி பணியாற்ற தொடங்கியுள்ளார். இது ஆந்திர அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- வீரப்பன் என்பதை வீர்பத்திரன் என்று மாற்றினேன்.
- இது கற்பனை என்கின்ற ஒரு கார்டைப் போட்டேன்.
நேசமுரளி இயக்கி தயாரித்திருக்கும் திரைப்படம் 'கற்பு பூமி'. முன்னணி நடிகர் நடிகைகள் பலர் நடித்திருக்கும் இப்படத்தின் கதை பொள்ளாச்சி சம்பவத்தை மையப்படுத்தி எழுதப்பட்டுள்ளது.
இப்படத்தின் பாடல் வெளியீடு நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது. அரசியல் பிரமுகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

அதில் கலந்து கொண்டு பேசிய தமிழ்நாடு திரைப்பட இயக்குநர் சங்கத்தின் தலைவர் ஆர்.கே.செல்வமணி, "ஒரு விஷயத்தை சொல்கிறேன். எதார்த்தத்தை புரிந்து கொள்ளுதல், வளைந்து போக கூடாது. புலன் விசாரணை மற்றும் கேப்டன் பிரபாகரன் படங்களில் இது கற்பனை என்கின்ற ஒரு கார்டை போட்டு, உண்மை சம்பவங்களில் இருந்து சில விஷயங்களை மாற்றி பயன்படுத்தினேன்."
"வீரப்பன் என்பதை வீர்பத்திரன் என்றும், ஆட்டோ சங்கர் என்பதை ஆட்டோ தர்மா என்றும் மாற்றி திரைப்படமாக எடுத்தேன். மக்கள் சரியாக நான் எதைப் பற்றி கூறுகிறேன் என்பதை புரிந்து கொண்டு ரசித்தார்கள். அந்தப் படங்கள் தந்த வெற்றியின் உற்சாகத்தில் நான் குற்றப்பத்திரிக்கை என்ற படத்தை எடுத்தேன். அப்பொழுது நான் புரிந்து கொண்ட உண்மை, உண்மையை பேசக்கூடாது என்பதே," என்று தெரிவித்தார்.
- சர்தார் 2 படப்பிடிப்பில் நடந்த விபத்தில் சண்டை கலைஞர்கள் சங்க உறுப்பினர் ஏழுமலை மரணம் அடைந்தார்.
- படப்பிடிப்பில் பணிபுரியும்போது நமது சங்க உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு கருவிகள் படப்பிடிப்பு நிலையங்களில் இருக்க வேண்டும்.
தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சங்க (பெப்சி) தலைவர் ஆர்.கே.செல்வமணி ஒரு அறிக்கை வெளியிட்டு உள்ளார். அதில், "கடந்த 17-ம் தேதி சர்தார் 2 படப்பிடிப்பில் நடந்த விபத்தில் சண்டை கலைஞர்கள் சங்க உறுப்பினர் ஏழுமலை மரணம் அடைந்தார்.
படப்பிடிப்பில் பணிபுரியும்போது நமது சங்க உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு கருவிகள் படப்பிடிப்பு நிலையங்களில் இருக்க வேண்டும். ஆம்புலன்சுடன் கூடிய மருத்துவ வசதிகள் அளிக்க வேண்டும் என்று பலமுறை தொடர்ச்சியாக தயாரிப்பாளர் சங்கத்துக்கும் தயாரிப்பு நிறுவனங்களுக்கும் வேண்டுகோள் விடுத்த வண்ணம் இருக்கிறோம். சில நிறுவனங்கள் தவிர பெரும்பாலான தயாரிப்பு நிறுவனங்கள் இந்த பாதுகாப்பு விதிகளை பின்பற்றுவது இல்லை. எனவே நமது இணைக்கப்பட்ட சங்கங்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வருகிற 25-ம் தேதி வடபழனி கமலா தியேட்டரில் காலை 9 மணிக்கு சிறப்பு கூட்டம் நடைபெறும். அதில் அனைத்து சங்க உறுப்பினர்களும் கலந்து கொள்ள ஏதுவாக 25-7-24 அன்று சென்னை நகரில் சின்னத்திரை, பெரிய திரை படப்பிடிப்புகள் நடைபெறாது.
வெளியூரில் நடக்கின்ற அனைத்து படப்பிடிப்புகளிலும் காலை 9 மணி முதல் 10 மணிவரை அனைத்து உறுப்பினர்களையும் படப்பிடிப்பு தளத்துக்கு வரவழைத்து பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்துவது என்று முடிவு செய்யப்பட்டு உள்ளது'' என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.









