என் மலர்

  நீங்கள் தேடியது "KS Ravikumar"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் `தர்பார்' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்புக்காக மும்பை செல்லும் ரஜினிகாந்தை போயஸ் கார்டன் இல்லத்தில் சந்தித்த இயக்குநர் சிறுத்தை சிவா அவரிடம் கதை கூறியிருப்பதாக கூறப்படுகிறது.
  `பேட்ட' படத்தில் ரஜினிகாந்தின் துள்ளலான நடிப்பு ரசிகர்களை கவர்ந்தது. அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் `தர்பார்' படத்தில் போலீஸ் அதிகாரியாக அதிரடி வேடத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் ரஜினிக்கு இரண்டு வேடங்கள் என்றும் கூறப்படுகிறது. இதன் முதல்கட்ட படப்பிடிப்பு மும்பையில் நடந்து முடிந்த நிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்பு மே 29-ந் தேதி துவங்குகிறது.

  இதற்காக ரஜினிகாந்த் இன்று மும்பை புறப்படுகிறார். இந்த நிலையில், விஸ்வாசம் படத்தின் இயக்குநர் சிவா, போயஸ் கார்டன் இல்லத்தில் ரஜினியை சந்தித்து பேசியுள்ளார். இவர்களது சந்திப்பு சுமார் 1 மணிநேரத்திற்கு மேலாக நடந்துள்ளது. எனவே ரஜினி - சிவா கூட்டணி விரைவில் இணைய வாய்ப்புள்ளது என்கிறார்கள்.  முன்னதாக ரஜினி - கே.எஸ்.ரவிக்குமார் சந்திப்பு நிகழ்ந்தது. தர்பார் படத்திற்கு பிறகு கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பார் என்றும் கூறுகிறார்கள். மேலும் பேட்ட இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், எச்.வினோத்திடமும் கதை கேட்டு வைத்திருக்கிறாராம்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வெங்கட் மோகன் இயக்கத்தில் விஷால் - ராஷி கண்ணா நடிப்பில் வெளியாகி இருக்கும் `அயோக்யா' படத்தின் விமர்சனம்.
  தாய், தந்தையை இழந்த விஷால் தனது சிறுவயதில் ஆனந்த
  ராஜ் சொல்லைக் கேட்டு சிறிய அளவில் திருடி வருகிறார். ஒருமுறை திருட்டு வழக்கில் சிக்கும் விஷாலை, ஆனந்த்ராஜ் வந்து மீட்டுச் செல்கிறார். அதுவரை ஆனந்த்ராஜ் தான் பெரிய ஆள் என்று நினைத்துக் கொண்டிருந்த விஷால், காவல் நிலையத்திற்கு சென்று வந்த பிறகு போலீஸாக இருந்தால் யாரும் கேள்வி கேட்க முடியாது என்று போலீசாக வேண்டும் என்று நினைக்கிறார்.

  பின்னர் ஆனந்த்ராஜிடம் இருந்து விலகி, படிப்பில் கவனம் செலுத்துகிறார். 10-வது வரை படித்து பின்னர், சில தில்லுமுல்லு செய்து போலீசாகி விடுகிறார். சென்னையில் ரவுடியாக இருக்கும் பார்த்திபன், தனது 4 தம்பிகளை வைத்து கடத்தல் தொழில் செய்து வருகிறார். இவர்களுக்கு போலீஸ் அதிகாரி ஒருவர் இடைஞ்சல் கொடுக்க, பிரச்சனை பண்ணாத போலீஸ் ஒருவரை அனுப்பும்படி பார்த்திபன், மந்திரியான சந்தானபாரதியிடம் கேட்கிறார்.  இதையடுத்து அந்த பகுதிக்கு போலீஸ் அதிகாரியாக விஷால் செல்கிறார். விஷால், பார்த்திபன் செய்யும் தவறுகளை கண்டுகொள்ளாமல், அவர்களிடம் கையூட்டு வாங்கி நலுவுகிறார். இது நேர்மையான போலீஸ் அதிகாரியான கே.எஸ்.ரவிக்குமாருக்கு பிடிக்கவில்லை. இதனாலேயே அவர் விஷாலுக்கு மரியாதை கொடுக்க மறுக்கிறார்.

  பார்த்திபன் கொடுத்த ஒரு வீட்டில் தங்கி வரும் விஷாலுக்கு, அவர் வீட்டிற்கு அருகே தங்கியிருக்கும் ராஷி கண்ணாவுடன் காதல் ஏற்படுகிறது. இந்த நிலையில், பூஜா தேவரியா தனது தங்கையை பலாத்காரம் செய்து கொலை செய்த பார்த்திபனின் தம்பிகளுக்கு தண்டனை வாங்கிக் கொடுக்க நினைக்கிறார். இதனால் அவரை கடத்தி கொலை செய்ய நினைக்கின்றனர். பூஜா தேவரியாவுக்கு பதில் ராஷி கண்ணாவை பார்த்திபனின் ஆட்கள் கடத்தி செல்கின்றனர்.  ராஷி கண்ணாவை விஷால் காப்பாற்றுகிறார். பின்னர் பார்த்திபனுக்கும், விஷாலுக்கும் இடையே மோதல் ஏற்படுகிறது.

  கடைசியில், விஷால் தனது போக்கை மாற்றிக் கொண்டு திருந்தினாரா? பார்த்திபனின் தம்பிகளுக்கு தண்டனை வாங்கிக் கொடுத்தாரா? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.

  விஷால் படம் முழுக்க காக்கிச்சட்டை அணியாத போலீஸ் அதிகாரியாகவே வலம் வருகிறார். முதல் பாதி முழுவதும் அயோக்யத்தனம் கொண்ட போலீஸ் அதிகாரியாகவும், பின்னர் தனது தவறை உணர்ந்து அவர் செய்யும் தியாகம், அவர் மீதான வெறுப்பை மாற்றும்படியாக அமைகிறது. ஆக்‌ஷன் காட்சிகளில் அனல் பறக்க வைத்திருக்கிறார். ராஷி கண்ணா அழகு தேவதையாக வந்து கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்.  பார்த்திபன் வில்லத்தனத்திலும், கே.எஸ்.ரவிக்குமார் நேர்மையிலும் அனுபவ நடிப்பை வெளிப்படுத்த, எம்.எஸ்.பாஸ்கர், பூஜா தேவரியா, சோனியா அகர்வால், ஆனந்த்ராஜ் அவர்களது கதாபாத்திரங்களை மெருகேற்றியிருக்கின்றனர். யோகி பாபு காமெடியில் ஆங்காங்கு சிரிக்க வைக்கிறார்.

  தெலுங்கில் வெளியான டெம்பர் படத்தின் ரீமேக்காக உருவாகி இருக்கும் இந்த படம், இளம்பெண் ஒருவருக்கு இளைக்கப்படும் கொடுமையால் தனது அயோக்யதனத்தை மாற்றிக் கொண்டு குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கிக் கொடுக்கும் கதையாக உருவாகி இருக்கிறது. தவறு செய்பவர்கள் தண்டிக்கப்பட வேண்டும், சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும் என்ற கருத்தை மையப்படுத்தி உருவாகி இருக்கிறது. வெங்கட் மோகன் இந்த படத்தின் மூலம் இயக்குநராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டிருக்கிறார். படத்தில் இடம்பெறும் வசனங்கள் மட்டும் மிகைப்படுத்தியிருப்பது போல தோன்றுகிறது.

  சாம்.சி.எஸ். இசையில் பாடல்களும், பின்னணி இசையும் அருமை. விஐ கார்த்திக்கின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளன.

  மொத்தத்தில் `அயோக்யா' குற்றம் குற்றமே.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வெங்கட் மோகன் இயக்கத்தில் விஷால் - ராஷி கண்ணா நடிப்பில் இன்று வெளியாக இருந்த `அயோக்யா' படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போயுள்ளது. #Ayogya #Vishal
  ஏ.ஆர்.முருகதாஸின் உதவியாளராக பணியாற்றிய வெங்கட் மோகன் இயக்குநராக அறிமுகமாகும் படம் `அயோக்யா'. விஷால் நாயகனாக நடித்துள்ள இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில், படம் இன்று (மே 10) திரைக்கு வர இருந்தது.

  ஆனால், சில தவிர்க்க முடியாத காரணங்களால் கடைசி நேரத்தில் படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளிவைத்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. தயாரிப்பாளரின் முந்தைய பட பாக்கியை செலுத்திய பிறகே படத்தை ரிலீஸ் செய்ய முடியும் என்றும், அதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.  இந்த படத்தில் விஷால் ஜோடியாக ராஷி கண்ணாவும், முக்கிய கதாபாத்திரங்களில் பார்த்திபன், கே.எஸ்.ரவிகுமார், ராதாரவி, ஆடுகளம் நரேன், வம்சி, சோனியா அகர்வால், சச்சு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.


  லைட் ஹவுஸ் மூவி மேக்கர்ஸ் சார்பில் பி.மது தயாரித்துள்ள இந்த படத்தின் வெளியீட்டு உரிமையை  ஸ்கிரீன் சீன் மீடியோ நிறுவனம் பெற்றுள்ளது. #Ayogya #Vishal #Raashikhanna

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வெங்கட் மோகன் இயக்கத்தில் விஷால் - ராஷி கண்ணா நடிப்பில் உருவாகி இருக்கும் `அயோக்யா' படத்தின் முன்னோட்டம். #Ayogya #Vishal #RaashiKhanna
  லைட் ஹவுஸ் மூவி மேக்கர்ஸ் சார்பில் பி.மது தயாரித்துள்ள படம் `அயோக்யா'.

  விஷால் நாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் ராஷி கண்ணா நாயகியாக நடித்திருக்கிறார். பார்த்திபன், கே.எஸ்.ரவிக்குமார், தேவதர்ஷினி, வம்சி கிருஷ்ணா, யோகி பாபு, எம்.எஸ்.பாஸ்கர், பூஜா தேவாரியா, சோனியா அகர்வால், சச்சு, அர்ஜய் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சனா கான் ஒரு பாடலுக்கு நடனமாடி இருக்கிறார்.

  இசை - சாம்.சி.எஸ்., ஒளிப்பதிவு - வி.ஐ.கார்த்திக், படத்தொகுப்பு - ரூபன், கலை - எஸ்.எஸ்.மூர்த்தி, சண்டைப்பயிற்சி - ராம்-லக்‌ஷ்மன், கதை - வக்கந்தம் வம்சி, ஆடை வடிவமைப்பு - உத்ரா மேனன், பாடல்கள் யுகபாரதி, விவேக், ரோகேஷ், இணை இயக்குநர் - துரை கண்ணன், நடனம் - சோபி, பாஸ்கர், ஒலி - உதயகுமார், நிர்வாக தயாரிப்பு - டி.முருகேசன், தயாரிப்பு மேற்பார்வை - அந்தோணி சேவியர், இணை தயாரிப்பாளர் - பிரவீண் டேனியல், தயாரிப்பு - பி.மது, எழுத்து, இயக்கம் - வெங்கட் மோகன்.  பூரி ஜெகந்நாத் இயக்கத்தில் தெலுங்கில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற டெம்பர் படத்தின் ரீமேக்காக இந்த படம் உருவாகி இருக்கிறது. 

  இதில் விஷால் எதிர்மறை போலீஸ் கதபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இளம்பெண் ஒருவருக்கு இளைக்கப்படும் கொடுமையால் தனது அயோக்யதனத்தை மாற்றிக் கொண்டு குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கிக் கொடுக்கும் கதையாக இந்த படம் உருவாகி இருக்கிறது.  படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படம் வருகிற மே 10-ந் தேதி திரைக்கு வருகிறது. #Ayogya #Vishal #RaashiKhanna

  அயோக்யா டிரைலர்:

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் `தர்பார்' படத்தில் நடித்து வரும் ரஜினிகாந்த், அடுத்ததாக 3 படங்களில் நடிக்க முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #Rajinikanth #Darbar
  `பேட்ட' படத்தில் ரஜினிகாந்தின் துள்ளலான நடிப்பு ரசிகர்களை கவர்ந்தது. அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் `தர்பார்' படத்தில் போலீஸ் அதிகாரியாக அதிரடி வேடத்தில் நடிக்கிறார். மும்பையில் இதன் படப்பிடிப்பு நடக்கிறது.

  மும்பை புறப்படுவதற்கு முன்பாக இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் ரஜினிகாந்தை அவசரமாக சந்தித்தார். ஏற்கனவே படையப்பா, முத்து, லிங்கா படங்களை ரஜினியை வைத்து இயக்கியுள்ள ரவிகுமார் மீண்டும் அவருக்காக புது கதை எழுதி இருக்கிறார். முருகதாஸ் படத்துக்கு பிறகு கேஎஸ்.ரவிகுமார் இயக்கத்தில் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டிலேயே தொடங்கப்பட உள்ளது என்கிறார்கள். இதையடுத்து எச்.வினோத் இயக்கத்தில் ஒரு படமும் நடிக்க இருக்கிறார்.  மேலும் பேட்ட இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் புதிய படத்திலும் நடிக்க சம்மதம் தெரிவித்து இருப்பதாக செய்தி வருகிறது. எனவே 2019, 2020 என 2 ஆண்டுகால கால்ஷீட்டை இப்போதே ரஜினி கமிட் செய்து வைத்திருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. #Rajinikanth #Darbar #KSRavikumar #HVinoth #KarthikSubbaraj

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தில் நடித்து வரும் ரஜினிகாந்தின் அடுத்த படத்திற்காக இரு இயக்குநர்கள் ரஜினியிடம் கதை கூறியிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #Rajinikanth #Darbar
  ரஜினிகாந்த் அரசியல் பிரவேசத்தை தள்ளி வைத்துவிட்டு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் ‘தர்பார்’ படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் ஐ.பி.எஸ். அதிகாரியாக வருகிறார்.

  படப்பிடிப்பு நேற்று பூஜையுடன் மும்பையில் தொடங்கியது. ரஜினிகாந்த், ஏ.ஆர்.முருகதாஸ் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். பின்னர் ரஜினிகாந்த் போலீஸ் உடை அணிந்து நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டன. கதை மற்றும் கதாபாத்திரங்களின் தோற்றங்கள் வெளியாவதை தடுக்க படப்பிடிப்புக்குள் செல்போன் கொண்டு செல்ல தடை விதித்துள்ளனர். ரசிகர்களுக்கும் கட்டுபாடுகள் விதிக்கப்பட்டன. படப்பிடிப்பை சுற்றிலும் பாதுகாப்புக்கு ஆட்கள் நிறுத்தப்பட்டு இருந்தார்கள். 3 மாதங்கள் தொடர்ச்சியாக அங்கு படப்பிடிப்பு நடக்கிறது.  நாடாளுமன்ற தேர்தலில் ஓட்டு போடுவதற்காக வருகிற 17-ந் தேதி சென்னை வரும் அவர் தேர்தல் நாளான மறுநாள் வாக்கை பதிவு செய்துவிட்டு உடனடியாக மும்பை திரும்பி படப்பிடிப்பில் பங்கேற்கிறார். படத்தில் ரஜினிகாந்த் மகளாக நிவேதா தாமஸ் வருகிறார். நயன்தாரா கதாநாயகியாக நடித்தாலும் ரஜினிகாந்த் ஜோடியாக அவர் வரவில்லை என்று கூறப்படுகிறது.

  இந்த நிலையில் இயக்குநர்கள் கே.எஸ்.ரவிக்குமார், எச்.வினோத் ஆகியோர் ரஜினிகாந்தை சந்தித்து கதை சொல்லி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. எனவே தர்பார் படத்தை முடித்துவிட்டு இவர்கள் படங்களில் அடுத்தடுத்து நடிப்பார் என்று தெரிகிறது. அடுத்த சட்டமன்ற தேர்தலில் தனது கட்சி போட்டியிடும் என்று ஏற்கனவே கூறியுள்ளார். எனவே சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு தர்பார் படத்தை தவிர்த்து மேலும் 2 படங்களில் நடிக்க ரஜினி திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. #Rajinikanth #Darbar #KSRaviKumar #HVinoth

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தில் சத்யா இயக்கத்தில் ஆண்ட்ரியா நடிப்பில் உருவாகி வரும் மாளிகை படத்தில் ஆண்ட்ரியாவுக்கு இரண்டு வேடங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. #Maaligai #AndreaJeremiah
  ஆண்ட்ரியா, ‘தரமணி’, ‘அவள்’, ‘விஸ்வரூபம் 2’, ‘வடசென்னை’ போன்ற படங்களில் வெவ்வேறு கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடித்தார். இதை தொடர்ந்து, தில் சத்யா இயக்கும் ‘மாளிகை’ படத்தில் இளவரசியாகவும், போலீசாகவும் நடிக்க இருக்கிறார்.

  ஆண்ட்ரியாவை முதன்மை கதாபாத்திரத்தில் வைத்து தில் சத்யா இயக்கிக்கொண்டிருக்கும் படம், ‘மாளிகை’. இந்தப் படத்தில், அவர் காவல் துறை அதிகாரியாகவும், கடந்த காலத்தின் இளவரசியாகவும் நடிக்க இருக்கிறார். படம்குறித்து தில் சத்யா அளித்துள்ள பேட்டியில், ’ஆக்‌‌ஷன், பேன்டசி, ஹாரர் என மூன்று ஜானர்களில் படம் தயாராகிக் கொண்டிருக்கிறது.  ஆண்ட்ரியா நடிக்கும் இளவரசி கதாபாத்திரம், பேன்டசி பகுதியில் இடம்பெறும். அது, 400 வருடங்களுக்கு முன்பு நடக்கும் கதை. போலீசாக நடிக்கும் ஆண்ட்ரியா, ஒரு மாளிகைக்கு விசாரணைக்காகச் செல்கிறார்.

  அங்கு, அவருக்கு கடந்த கால நினைவுகள் ஞாபகத்துக்கு வருவதில் இருந்து படம் அப்படியே போகும்“ என்று தெரிவித்திருக்கிறார். கன்னட நடிகர் கார்த்திக் ஜெயராம், இந்தப் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். மேலும், கே.எஸ்.ரவிகுமார், மனோ பாலா, ‘ஜாங்கிரி’ மதுமிதா போன்ற நடிகர்கள் இதில் நடிக்கிறார்கள். படத்தின் டீசரை விஜய் ஆண்டனி வெளியிட்டு வாழ்த்தினார். #Maaligai #AndreaJeremiah

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தில் நடிக்கும் ரஜினிகாந்த் படப்பிடிப்புக்காக மும்பைக்கு கிளம்புவதற்கு முன்பாக இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் ரஜினியை சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார். #Thalaivar168
  ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் தர்பார் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நாளை துவங்குகிறது. இதற்காக ரஜினிகாந்த் இன்று மும்பை புறப்பட்டு சென்றார்.

  அவர் மும்பை புறப்படுவதற்கு முன்பாக பிரபல இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் ரஜினிகாந்த் இடையே சந்திப்பு நிகழ்ந்துள்ளது. சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினியின் வீட்டிற்கு சென்ற கே.எஸ்.ரவிக்குமார், ரஜினியுடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.  ஏற்கனவே கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகி இருந்த நிலையில், அடுத்த படத்தில் இருவரும் மீண்டும் இணையவிருப்பதாக கூறப்படுகிறது. கே.எஸ்.ரவிக்குமார் கடைசியாக ரஜினியை வைத்து லிங்கா என்ற படத்தை இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. #Thalaivar168 #Rajinikanth #KSRaviKumar

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வெங்கட் மோகன் இயக்கத்தில் விஷால் - ராஷி கண்ணா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘அயோக்யா’ படத்தின் ரிலீஸ் தேதியை விஷால் உறுதிப்படுத்தியுள்ளார். #Ayogya #Vishal
  ஏ.ஆர்.முருகதாஸின் உதவியாளராக பணியாற்றிய வெங்கட் மோகன் இயக்குநராக அறிமுகமாகும் அயோக்யா படத்தில் விஷால் - ராஷி கண்ணா இணைந்து நடித்துள்ளனர். 

  படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. முன்னதாக படத்தை ஏப்ரல் 19-ல் வெளியிட முடிவு செய்திருந்தனர். தற்போது படம் வருகிற மே 10-ந் தேதி ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பார்த்திபன், ராதாரவி, கே.எஸ்.ரவிகுமார், ஆடுகளம் நரேன், வம்சி, சோனியா அகர்வால், சச்சு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

  லைட் ஹவுஸ் மூவி மேக்கர்ஸ் சார்பில் பி.மது தயாரித்துள்ள இந்த படத்தை ஸ்கிரீன் சீன் மீடியோ நிறுவனம் வெளியிடுகிறது. தெலுங்கில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற டெம்பர் படத்தின் தமிழ் ரீமேக்காக இந்த படம் உருவாகி இருக்கிறது. #Ayogya #Vishal #Raashikhanna

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அடங்கமறு படத்தை தொடர்ந்து ஜெயம் ரவி அடுத்ததாக நடிக்கவிருக்கும் புதிய படத்தில் தனிஒருவன் பட பிரபலம் ஒருவர் இணைந்துள்ளார். #JR24 #JayamRavi #HiphopTamizha
  அடங்கமறு படத்திற்கு பிறகு ஜெயம்ரவி நடிக்கும் புதிய படத்திற்கு இசையமைக்க ஹிப்ஹாப் ஆதி ஒப்பந்தமாகியிருக்கிறார். ஜெயம் ரவியின் 24-வது படமாக உருவாகும் இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பதாக முதலில் பேச்சு அடிபட்டது.


  இந்த நிலையில், படத்தின் இசையமைப்பாளராக ஆதி ஒப்பந்தமாகியிருப்பதாக ஜெயம் ரவி அவரது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். ஆதி முன்னதாக ஜெயம் ரவியின் தனிஒருவன் படத்திற்கு இசையமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பிரதீப் ரங்கநாதன் என்ற புதுமுக இயக்குநர் இயக்கும் இந்த படத்தில் ஜெயம் ரவி ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார்.  மேலும் யோகி பாபு, சம்யுக்தா ஹெக்டே, கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவிருக்கின்றனர். வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்கும் இந்த படத்தை ஜிவி பிலிம்ஸ் வெளியிடுகிறது. #JR24 #JayamRavi #KajalAggarwal #HiphopTamizha

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அயோக்யா படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில், விஷால் கையில் பீர் பாட்டில் இருந்ததற்கு ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அதற்கு விஷால் விளக்கம் அளித்துள்ளார். #AyogyaFL #Vishal
  விஷால் அடுத்து நடிக்கும் படம் அயோக்யா. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த வாரம் வெளியானது. இந்த போஸ்டரில் விஷால் பீர் பாட்டிலை கையில் வைத்திருந்தது சர்ச்சையானது. ராமதாஸ் உள்ளிட்ட சிலர் இதற்கு கண்டனம் தெரிவித்து இருந்தனர்.

  இந்த கண்டனங்களுக்கு விஷால் பதில் அளித்துள்ளார். ‘நான் பீர் பாட்டிலை கையில் வைத்திருந்தேனே தவிர குடிப்பதுபோல் இல்லை. கையில் வைத்திருப்பது குடிப்பதாக ஆகாது. இந்த படத்தில் நான் போலீசாக நடிக்கிறேன்.  நான் துப்பறியும் ஒரு குற்றத்தில் அந்த பாட்டில் ஒரு தடயமாக கிடைக்கிறது. அதை வைத்து நான் சண்டையிடுவதாக காட்சி அமைந்துள்ளது. இதைத் தான் அந்த போஸ்டரில் சொல்லி இருக்கிறோம்’ என்று கூறியுள்ளார். 

  வெங்கட் மோகன் இயக்கும் இந்த படத்தில் விஷால் ஜோடியாக ராஷி கண்ணா நடிக்கிறார். பார்த்திபன், கே.எஸ்.ரவிக்குமார், சச்சு, வம்சி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். #AyogyaFL #Vishal #Ramadoss

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print