'படையப்பா' படம் குறித்து புது அப்டேட் கொடுத்த கே.எஸ்.ரவிக்குமார்

இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து இருந்தார்.இன்றுவரை ரசிகர்களால் கொண்டாடப்படும் படங்களில் ஒன்றாக ‘படையப்பா’ உள்ளது.
'படையப்பா' படம் குறித்து புது அப்டேட் கொடுத்த கே.எஸ்.ரவிக்குமார்
Published on

1999-ம் ஆண்டு கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த படம் 'படையப்பா'. இப்படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன், சௌந்தர்யா, ரம்யா கிருஷ்ணன் , நாசர், மணிவண்ணன், அப்பாஸ் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்து இருந்தனர். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து இருந்தார்.

இப்படம் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. மேலும் இப்படத்தில் இடம்பெற்று இருந்த அனைத்து பாடல்களும் ரசிகர்களை கவர்ந்தது. வசூலில் சாதனை படைத்த இப்படம் தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள் மற்றம் தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள் வென்று உள்ளது. இன்றுவரை ரசிகர்களால் கொண்டாடப்படும் படங்களில் ஒன்றாக 'படையப்பா' உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், 'படையப்பா' படம் ரீ-ரிலிஸ் செய்யப்படும் என அப்படத்தின் இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார் தெரிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com