என் மலர்
நீங்கள் தேடியது "ரஜினிகாந்த்"
- எஸ்.பி.வேலுமணியின் மகன் விஜய்விகாஸ் திருமணம் கடந்த மார்ச் 3 ஆம் தேதி மிகவும் கோலாகலமாக நடைபெற்றது.
- ரஜினிகாந்தால் திருமணத்தை நேரில் சென்று பங்கேற்க முடியவில்லை.
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரும், தொண்டாமுத்தூர் தொகுதி எம்.எல்.ஏ.வுமான எஸ்.பி.வேலுமணியின் மகன் விஜய்விகாஸ் திருமணம் கடந்த மார்ச் 3 ஆம் தேதி மிகவும் கோலாகலமாக நடைபெற்றது.
நடிகர் ரஜினிகாந்தை, எஸ்.பி. வேலுமணி நேரில் சந்தித்து தனது மகன் திருமணத்தில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்து அழைப்பிதழை வழங்கினார். ஆனால் படப்பிடிப்பு பணிகளில் தன்னை முழுமையாக ஈடுப்படுத்திவிட்டதால் ரஜினிகாந்தால் திருமணத்தை நேரில் சென்று பங்கேற்க முடியவில்லை.
அதனால் படப்பிடிப்பு முடிந்து வந்தவுடன் இன்று எஸ்.பி. வேலுமணி வீட்டிற்கு சென்று மணமக்களை வாழ்த்தி அவருக்கு மிகவும் பிடித்தமான ஸ்ரீ ராகவேந்திரா அவர்களுடைய உருவ படத்தை பரிசாக வழங்கினார். அப்போது எடுத்த வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.
- காஷ்மீரின் அமைதியான சூழலை கெடுக்க எதிரிகள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்.
- கடும் நடவடிக்கைகயை மத்திய அரசு எடுக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
ஜெயிலர் வெற்றியைத் தொடர்ந்து இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளதாக படக்குழு சமீபத்தில் ப்ரோமோ வீடியோவை வெளியிட்டு அறிவித்தனர்.
முதற்கட்ட படப்பிடிப்பு கோவை மற்றும் அட்டபாடி அதன் சுற்று வட்டார பகுதிகளில் நடைப்பெற்று வந்தது. இன்றுடன் அப்பகுதி படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து சென்னை திரும்பினார்.
அப்போது, சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த் பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் குறித்து பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
காஷ்மீரின் அமைதியான சூழலை கெடுக்க எதிரிகள் இதுபோன்ற செயல்பகளில் ஈடுபடுகின்றனர்.
பஹல்காம் பயங்கரவாதத்தில் ஈடுபட்டவர்களுக்கு கனவில் கூட நினைக்காத கடும் தண்டனை வழங்க வேண்டும்.
காஷ்மீரில் அமைதி திரும்பியிருப்பது எதிரிகளுக்கு பிடிக்கவில்லை. பஹல்காம் தாக்குதலின் பின்னணியில் உள்ளவர்களை விரைந்து கண்டுபிடித்து தண்டிக்க வேண்டும்.
கடும் நடவடிக்கைகயை மத்திய அரசு எடுக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. விரைவாக அதை செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் நெல்சன் கூட்டணியில் வெளியான திரைப்படம் "ஜெயிலர்.
- படப்பிடிப்பு கோவை மற்றும் அட்டபாடி அதன் சுற்று வட்டார பகுதிகளில் நடைப்பெற்று வந்தது.
நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் நெல்சன் கூட்டணியில் வெளியான திரைப்படம் "ஜெயிலர்." இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. மேலும், வசூலிலும் பல கோடிகளை குவித்தது. இந்த நிலையில், ஜெயிலர் வெற்றியைத் தொடர்ந்து இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளதாக படக்குழு சமீபத்தில் ப்ரோமோ வீடியோவை வெளியிட்டு அறிவித்தனர்.
முதற்கட்ட படப்பிடிப்பு கோவை மற்றும் அட்டபாடி அதன் சுற்று வட்டார பகுதிகளில் நடைப்பெற்று வந்தது. இன்றுடன் அப்பகுதி படப்பிட்ப்பு பணிகள் முடிவடைந்தது.
படப்பிடிப்பு முடிந்த பிறகு நடிகர் ரஜினிகாந்த் சென்னை திரும்ப கோயம்பத்தூர் விமான நிலையத்திற்கு வந்தார். அங்கு ரசிகர்கள் அவரை கோலாக்கலமாக வழிஅனுப்பி வைத்தனர். அந்த வீடியோ தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.
படத்தின் இசையை அனிருத் மேற்கொள்கிறார் மற்றும் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.
- நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் நெல்சன் கூட்டணியில் வெளியான திரைப்படம் "ஜெயிலர்
- கேரளாவில் உள்ள அட்டப்பாடி பகுதியில் 35 நாட்கள் ஜெயிலர் 2 படப்பிடிப்பு நடைப்பெறுகிறது.
நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் நெல்சன் கூட்டணியில் வெளியான திரைப்படம் "ஜெயிலர்." இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. மேலும், வசூலிலும் பல கோடிகளை குவித்தது. இந்த நிலையில், ஜெயிலர் வெற்றியைத் தொடர்ந்து இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளதாக படக்குழு சமீபத்தில் ப்ரோமோ வீடியோவை வெளியிட்டு அறிவித்தனர்.
தற்பொழுது படப்பிடிப்பு கோவை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நடைப்பெற்று வருகிறது. கேரளாவில் உள்ள அட்டப்பாடி பகுதியில் 35 நாட்கள் படப்பிடிப்பு நடைப்பெறுகிறது.
இந்நிலையில் படத்தில் தற்பொழுது நடிகர் ஃபகத் ஃபாசில் இணைந்துள்ளார். இதற்கு முன் ரஜினிகாந்த் மற்றும் ஃபகத் ஃபாசில் இருவரும் இணைந்து கடைசியாக வேட்டையன் திரைப்படத்தில் நடித்து இருந்தனர்.
இவர்கள் இருவரும் இடையே உள்ள காட்சிகள் மக்களால் கொண்டாடப்பட்டது.
ஜெயிலர் 2 திரைப்படத்தில் எம்மாதிரியான கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார் என தெரியவில்லை. இந்த காம்போ மீண்டும் ஒன்றாக சேர்ந்ததால் ரசிகர்கள் மத்தியில் எதிர்ப்பார்ப்பை அதிகரித்துள்ளது. படத்தின் இசையை அனிருத் மேற்கொள்கிறார் மற்றும் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இதுக்குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
- ஜெயிலர் 2' படத்திலும் நடிப்பதை நடிகர் சிவராஜ்குமார் உறுதி செய்துள்ளார்.
- கமல் சார் கிட்ட உங்களை ஒரு முறை கட்டிப் பிடித்துக் கொள்ளலாமா என்று கேட்டேன்.
நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் நெல்சன் கூட்டணியில் வெளியான திரைப்படம் "ஜெயிலர்." இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. மேலும், வசூலிலும் பல கோடிகளை குவித்தது. இந்த நிலையில், ஜெயிலர் வெற்றியைத் தொடர்ந்து இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு கோவை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நடைப்பெற்று வருகிறது.
முதல் பாகத்தை போல 'ஜெயிலர் 2' படத்திலும் நடிப்பதை நடிகர் சிவராஜ்குமார் உறுதி செய்துள்ளார்.
நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய சிவராஜ் குமார், "எனக்கு அமிதாப் பச்சன், கமல்ஹாசன் தான் மிகவும் பிடிக்கும். கமல்ஹாசன் என்றால் அழகு. நான் பெண்ணாக இருந்திருந்தால் நிச்சயமாக அவரை கல்யாணம் பண்ணி இருந்திருப்பேன். இதை நான் பல மேடைகளில் சொல்லி இருக்கிறேன்.
ஒருமுறை அவர் வீட்டுக்கு வரப்போ நான் அவரை பார்த்துக்கொண்டே இருந்தேன். யார் இது என்று என் அப்பாவிடம் கமல் சார் கேட்க, என் பையன் தான் என்று சொன்னார். அப்போ கமல் சார் கிட்ட உங்களை ஒரு முறை கட்டிப் பிடித்துக் கொள்ளலாமா என்று கேட்டேன். அவரும் என்னை கட்டிப்பிடித்துக் கொண்டார். மூணு நாள் நான் குளிக்கவே இல்லை. ஏன்னா, அவருடைய ஆரா மற்றும் ஸ்மெல் என் மீது இருக்க வேண்டும் என்று நினைத்தேன். அந்த மாதிரி ஒரு ரசிகன் நான்" என்று தெரிவித்தார்.
- கூலி படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்துள்ளது.
- கூலி படம் வருகிற ஆகஸ்டு 14-ந் தேதி திரைப்படம் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் கூலி. கூலி படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் சத்யராஜ், நாகர்ஜுனா, சௌபின் ஷாஹிர், சுருதிஹாசன், பகத் பாசில், ரெபா மோனிகா ஜான் மற்றும் உபேந்திரா ஆகியோர் நடிக்கின்றனர்.
கூலி படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்துள்ளது. இப்படம் வருகிற ஆகஸ்டு 14-ந் தேதி திரைப்படம் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், கூலி படத்தில் நடிகர் அமீர் கான் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார் என்று என்பதை நடித்துள்ள உபேந்திரா உறுதி செய்துள்ளார்.
நிகழ்ச்சி ஒன்றில் பேசிய உபேந்திரா, "நான் ஏகலவைன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனக்கு துரோணாச்சாரியார் போன்றவர்" என்று தெரிவித்தார். அப்போது அமீர் கான் கூலி படத்தில் நடித்துள்ளாரா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு ஆம் நடித்துள்ளார் என்று அவர் பதில் அளித்தார்.
- நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் நெல்சன் கூட்டணியில் வெளியான திரைப்படம் "ஜெயிலர்.
- படக்குழு சமீபத்தில் ப்ரோமோ வீடியோவை வெளியிட்டு அறிவித்தனர்.
நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் நெல்சன் கூட்டணியில் வெளியான திரைப்படம் "ஜெயிலர்." இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. மேலும், வசூலிலும் பல கோடிகளை குவித்தது. இந்த நிலையில், ஜெயிலர் வெற்றியைத் தொடர்ந்து இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளதாக படக்குழு சமீபத்தில் ப்ரோமோ வீடியோவை வெளியிட்டு அறிவித்தனர்.
தற்பொழுது படப்பிடிப்பு கோவை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நடைப்பெற்று வருகிறது. நேற்று ரஜினிகாந்த் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். மேலும் இன்று கேரளாவில் உள்ள அட்டப்பாடி மலைதொடரில் படப்பிடிப்பு நடைப்பெற்று வருகிறது. இதனை அப்படத்தில் ரஜினிக்கு மருமகளாக நடிக்கும் மிர்னா இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
ஜெயிலர் 2 படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்தப் படத்தையும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. முன்னதாக இந்தப் படம் தொடர்பான அறிவிப்பு வீடியோவாக வெளியிடப்பட்டது. இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.
- கூலி படம் ஆகஸ்ட் 14-ந்தேதி வெளி வருகிறது.
- ஜெயிலர் 2 ஆரம்பித்து உள்ளோம். முடிப்பது எப்போது என்று தெரியாது.
ஜெயிலர் 2 படப்பிடிப்பிற்காக கோவை செல்லும் நடிகர் ரஜினிகாந்த் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* மறைந்த காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் தூய்மையான அரசியல்வாதி. நல்ல மனிதர். அவரின் குடும்பத்தினருக்கு இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்
* கூலி படம் ஆகஸ்ட் 14-ந்தேதி வெளி வருகிறது.
* கூலி படம் நன்றாக போய்க்கொண்டு இருக்கிறது.
* ஜெயிலர் 2 ஆரம்பித்து உள்ளோம். முடிப்பது எப்போது என்று தெரியாது.
* ஜெயிலர் பாகம் 2 படப்பிடிப்பு நன்றாக செல்கிறது.
* 'குட் பேட் அக்லி' திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துகள்
இவ்வாறு அவர் கூறினார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- என்னால தான் இப்படி ஆனது என்று நினைத்து இரவு முழுவதும் தூக்கம் வரலை.
- ஜெயலலிதாவுக்கு எதிராக பேசுவதற்கு சில காரணங்கள் இருந்தாலும் கூட இந்த காரணம் முக்கியமானது.
பாட்ஷா படத்தை தயாரித்த முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பனின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி நடிகர் ரஜினிகாந்த், ஆர்.எம்.வீரப்பன் குறித்து பேசிய வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் ரஜினிகாந்த் பேசியதாவது:-
அனைவருக்கும் வணக்கம்.. ஆர்.எம்.வி. தி கிங் மேக்கர் தி டாகுமெண்டரி... இதுல அவரைப்பற்றி பேசுவதற்கு மிக்க மகிழ்ச்சி. என்னுடன் நெருங்கிய நெருக்கம், அன்பு, மரியாதை காட்டியவர்களில் மூன்று, நான்கு பேர். அதாவது, பாலசந்தர், சோ, பஞ்சு அருணாச்சலம், ஆர்.எம்.பி. சார். இவங்க எல்லாம் இல்லைங்கற போது சில நேரத்தில் ரொம்ப மிஸ் பண்றோம்.
'பாட்ஷா' 100-வது நாள் விழாவில் வெடிகுண்டு கலாச்சாரத்தை பேசினேன். அமைச்சர் மேடையில் இருக்கும் போது பேசியிருக்க கூடாது. அப்போ எனக்கு தெளிவு இல்லை. பேசிட்டேன். அ.தி.மு.க ஆட்சியில் அமைச்சராக இருந்த எம்.ஆர்.வீரப்பனை, புரட்சித்தலைவி பதவியில் இருந்து தூக்கிட்டாங்க.
எப்படி அது நீங்க அமைச்சர் மேடையில் இருக்கும் போது ரஜினி, அரசுக்கு எதிராக பேசினால் சும்மா இருக்க முடியும் என்று சொல்லி எம்.ஆர்.வீரப்பனை பதவியில் இருந்து தூக்கினாங்க. அது தெரிந்த உடனே எனக்கு ஆடிப்போச்சு. என்னால தான் இப்படி ஆனது என்று நினைத்து இரவு முழுவதும் தூக்கம் வரலை. போன் பண்ணா யாருமே எடுக்கலை. மறுநாள் காலையில் நேரில் போய் சாரி சார் என்னால தான் ஆனது என்று சொன்னார். அவர் எதுவுமே நடக்காத மாதிரி.. அதெல்லாம் விடுங்க... அதைப்பற்றி கவலைப்படாதீங்க... மனசுல வெச்சுக்காதீங்க... நீங்க விடுங்க. சந்தோஷமா இருங்க... எங்க ஷுட்டிங் என்று சாதாரணமா கேட்டார்.
எனக்கு அந்த தழும்பு எப்போதும் போகாது. போகலை. ஏன் என்றால் நான் தான் கடைசியா பேசினது. நான் பேசினதுக்கு பிறகு அவரு எப்படி வந்து பேச முடியும். மதிப்பிற்குரிய ஜெயலலிதாவுக்கு எதிராக பேசுவதற்கு சில காரணங்கள் இருந்தாலும் கூட இந்த காரணம் முக்கியமானது என்றார்.
- கூலி படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
- கூலி படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்துள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் கூலி. கூலி படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் சத்யராஜ், நாகர்ஜுனா, சௌபின் ஷாஹிர், சுருதிஹாசன், பகத் பாசில், ரெபா மோனிகா ஜான் மற்றும் உபேந்திரா ஆகியோர் நடிக்கின்றனர்.

கூலி படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்துள்ளது. இதனை படக்குழு கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். மேலும், படப்பிடிப்பு நிறைவடைந்ததையொட்டி ஒரு கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டது.
இந்நிலையில், கூலி படம் வெளியாகும் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி வருகிற ஆகஸ்டு 14-ந் தேதி திரைப்படம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இரண்டு வீடியோக்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன.
- கூலி படப்பிடிப்பு நிறைவடைந்ததையொட்டி ஒரு கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டது.
நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் கூலி.
இந்தப் படத்தின் டைட்டில் வீடியோ மற்றும் பாடல் க்ளிம்ப்ஸ் உள்ளிட்டவை ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளன. இரண்டு வீடியோக்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன.
கூலி படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்துள்ளது. இதனை படக்குழு கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். மேலும், படப்பிடிப்பு நிறைவடைந்ததையொட்டி ஒரு கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டது.
கூலி படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்தப் படத்தில் சத்யராஜ், நாகர்ஜுனா, சௌபின் ஷாஹிர், சுருதிஹாசன், பகத் பாசில், ரெபா மோனிகா ஜான் மற்றும் உபேந்திரா ஆகியோர் நடிக்கின்றனர்.
இந்தப் படத்திற்கு கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்தார். அன்பறிவ் சண்டைக் காட்சிகளை இயக்கினார்.
இந்நிலையில், கூலி படத்தின் புதிய அட்டேட் ஒன்றை நாளை வெளியிடப்படும் என்று படக்குகுழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.
- எந்திரன் திரைப்படத்தை இயக்குநர் ஷங்கர் இயக்கினார்.
- எந்திரன் படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான எந்திரன் திரைப்படத்தில் மனோஜ் பணியாற்றி இருப்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. எந்திரன் படத்தில் இயக்குநர் ஷங்கருக்கு உதவி இயக்குநராக மனோஜ் பணியாற்றி இருக்கிறார்.

அதன்படி எந்திரன் படத்தில் நடிகர் ரஜினிகாந்த்-க்கு மனோஜ் டூப்பாக நடித்துள்ளார். நேற்று (மார்ச் 25) மாலை மனோஜ் மாரடைப்பு காரணமாக உயிரிழந்த நிலையில், அவர் எந்திரன் படத்தில் பணியாற்றிய போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

இயக்குநர் ஷங்கர் மற்றும் நடிகர் ரஜினிகாந்த் கூட்டணியில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற திரைப்படம் எந்திரன். இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருந்தது. இந்தப் படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்து இருந்தார்.