ரஜினியுடன் இணையும் தேசிய விருது பெற்ற படத்தின் இயக்குநர்

ரஜினியின் புதிய படத்தை இயக்கப் போவது யார்? என்பது குறித்து மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.நடிகை சாய் பல்லவியிடம் பேச்சுவார்த்தை நடப்பதாக கூறப்படுகிறது.
ரஜினியுடன் இணையும் தேசிய விருது பெற்ற படத்தின் இயக்குநர்
Published on

கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் 173-வது படத்தை சுந்தர் சி இயக்கப்போவதாக இருந்தது. ஆனால் சில காரணங்களால் அப்படத்தில் இருந்து சுந்தர் சி விலகினார் . சுந்தர் சி விலகலுக்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டு வரும் நிலையில், அவர் தற்போது 'மூக்குத்தி அம்மன்-2' படத்தை இயக்குவதில் பிசியாக இருக்கிறார்.

இதற்கிடையில் ரஜினியின் புதிய படத்தை இயக்கப் போவது யார்? என்பது குறித்து மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதனிடையே, ரஜினிகாந்த் அவர்களுக்கு ஏற்றார் போல், பிடித்தார் போல் கதை அமைய வேண்டும். அதுவரை கதைக்கேட்டுக்கொண்டு இருப்போம் என கமல்ஹாசன் கூறியிருந்தார்.

இந்த நிலையில், 'பார்க்கிங்' படத்தை இயக்கி கவனம் ஈர்த்த ராம்குமார் பாலகிருஷ்ணன் தான், ரஜினி-கமல் கூட்டணி படத்தை இயக்கப்போவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. தற்போது சிம்பு நடிப்பில் புதிய படத்தை இயக்க இருந்த ராம்குமார் பாலகிருஷ்ணன், இப்படத்தை இயக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும், நடிகை சாய் பல்லவி மற்றும் நடிகர் கதிர் இப்படத்தில் முக்கிய நடிப்பது தொடர்பாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல் வெளியாக உள்ளது.

இதனால் இனிவரும் நாட்களில் 'தலைவர் 173' குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com